Saturday, May 7, 2011

கன்னித்தீவை தேடி சலூனில்- கவிதை




சி-18072



கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள் 
கண்ணாடி கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள்
கண்ணாடி கன்னித்தீவு போய்கொண்டே இருக்கிறது

வாடிக்கையாளர்களும்  நேர் கண்ணாடி எதிர் கண்ணாடி
கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள் 
கண்ணாடி கண்ணாடிக்குள் கண்ணாடி கண்ணாடிக்குள்
கண்ணாடி மாறி மாறி தொலைகிறார்கள்

கன்னித்தீவு கதை மாந்தர்கள் 
எங்கு முடி வெட்டிக்கொள்கிறார்கள்
என்று யாருக்கும் தெரிவதில்லை

சலூன் உரிமையாளர்கள் 
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
முடிவெட்டிக்கொண்டே இருக்கிறார்கள் 




5 comments:

  1. கன்னித்தீவு...எதை நோக்கி போகுதோ..?

    ReplyDelete
  2. ஒன்றிற்குள் ஒன்று இதுதான் உலகம்...

    ReplyDelete
  3. அசைக்க வைத்தது உங்களின் பார்வை

    ReplyDelete
  4. நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

    நன்றி செளந்தர்

    நன்றி சங்கர்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!