Thursday, April 28, 2011

கார்த்திக் ராஜாவின் மெலடி/சாய்பாபா/ஜான் டேவிட்

கார்த்திக்ராஜாவின் பாடல்கள் மெலடி நிறைந்தது.யுவன் பாடல்கள் மாதிரி இல்லாமல் வெஸ்டர்ன் கிளாசிகல் டைப்.அதிகம் சத்தம் கிடையாது.ஆத்மா நிறைந்திருக்கும். அப்பா மாதிரி மெலடிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

”ரைட்டா தப்பா” என்ற படத்தில் “யாரிடம் சொல்வேன்” ஒரு பாட்டு. ஹரிணி பாடியது. அருமையான பாட்டு.

இது 2005ல் ரிலீஸ் ஆன படம். இது ஈவ் டீசிங் பற்றிய கதை.சென்னையில் நடந்த உண்மை சம்பவம்.




________________________________________

மக்கள் எப்போதுமே சித்து/மாய வேலைகள் செய்யும் சாமியார்/மத குருமார்களை ரொம்பவும் விரும்புவார்கள்.தங்களின் சொந்த முயற்ச்சியால் அல்லது விஞ்ஞான ரீதியில் தீர்க்கப்படுவதை விட மாயமந்திர விபூதி/லிங்கம் போன்றவற்றால் பிரச்சனைகள் தீருவது மக்களுக்குப்
பிடித்தமான ஒன்று.புல்லரித்துப்போவார்கள்.

சத்யபாபா அந்த சைக்காலஜியை தெரிந்துக்கொண்டு “அற்புதங்கள்” நிகழ்த்தி மக்களை தன் வசம் வைத்திருந்தார். வானூலகில் இருந்து மக்களின் துயரங்களை தீர்க்க வந்த messiahவாக பார்க்கப்பட்டார்.ஏசு கிறிஸ்துவைத்தான் messiah என்று சொல்லுவார்கள்.


எழுத்தாளர் சுஜாதா பாபாவைப் பற்றி எழுதும்போது “விஞ்ஞானத்தை மீறி எந்த அற்புதங்களும் நிகழ்ந்துவிடாது. இருந்தாலும் இவருக்கு இருக்கும் மிகவும் படித்த மேல் மட்டத்து பக்தர்களை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்..பிரமிக்கிறேன்” என்று ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தார்.நானும்தான்.

இந்த நூற்றாண்டில் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தில் பாபாவிற்கு இருக்கும் பக்தர்கள் வேறு யாருக்கும் கிடையாது.அவரைக் காப்பியடித்து சிலர் புறப்பட்டார்கள். ஒன்றும் போனியாகவில்லை.He is very rare phenomenon.அற்புதங்கள் நிகழ்த்தி மக்களைக் கவர்ந்ததில் இவர்தான் முன்னோடி.

வீட்டிலும் பாபா பக்தர்கள் உண்டு.சாதா பக்திதான்.(வீட்டில் சாமிபடங்களில் விபூதி கொட்டுவது இல்லை)எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால பாபா பக்தன் அல்ல.

இவர் செய்த சமூக சேவைகள் எண்ணில் அடங்காதவை.

இவரின் டிரஸ்டின் சொத்துக்கள் பல கோடியாம். நல்ல வேளை இவருக்கு குடும்பம் கிடையாது. இருந்திருந்தால்?
________________________________________
ஜான் டேவிட்:

நாவரசுவை துண்டு துண்டாக வெட்டிப்போட்டு கொன்ற வழக்கில் சென்னை நீதி மன்றம் கடலூர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து விடுதலை செய்தது.காரணம் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை.

எல்லோரும் அதிர்ந்தார்கள்.ஜான் டேவிட் மகிழ்ச்சியானார்.கடவுளுக்கு ஊழியம் செய்து வாழ்க்கையை கடத்த்ப்போவதாக பேட்டிக்கொடுத்தார்.ஆனால் வேறு பெயரில் பிபிஓவில் ஊழியம் செய்தார்.

ஆனால் போனவாரம் சுப்ரீம் கோர்ட் கடலூர் நீதி மன்றத்தின் தீர்ப்பை சரி என்று சொல்லி சென்னை நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளி வைத்தது. 

ஜான் டேவிட் மீண்டும் ஜெயிலில்.

அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.


14 comments:

  1. பாபாவிற்கு மருமகன் மற்ற சொந்தம் இருப்பதால் தான் கேள்விக்குறியே! A B C என்று எல்லா கிளாஸ் பக்தர்களும் இருந்தாலும் அவரின் சமூகச் சேவை பாராட்டப் பட வேண்டிய ஒன்று!
    ஜான் டேவிட் -//கடவுளுக்கு ஊழியம் செய்து வாழ்க்கையை கடத்த்ப்போவதாக பேட்டிக்கொடுத்தார்.ஆனால் வேறு பெயரில் பிபிஓவில் ஊழியம் செய்தார்.//
    //அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.//!!

    ReplyDelete
  2. இந்தப்படம் எம்மொழியில் வந்தது இதுவரை கேள்விப்படவில்லை பாடல் இருந்தால் ஒலியேற்றுங்கள்!கார்த்திக்ராஜா நல்ல மென்மையான பாடல் போடுவதால்தான் சோபிக்கவில்லையோ!

    ReplyDelete
  3. அறியப்படாத இந்த படப்பாடல் இனிமையாக உள்ளது.மேலும் இதுபோன்ற அறியப்படாத மெலடிகளை அறிமுகப்படுத்துங்கள். :)

    ReplyDelete
  4. Saibaba - oru fake baba....!!!
    itha parkum pothu thaan oru Kamal dialog gnyabathukku varuthu..
    "Kadavul irukkan'nnu solraan paru..avana nambalaam...kadavule illa'nnu solraan paaru...avanayum nambalaam...aana naan thaan kadavul'nnu solraan paru..avana mattum namba koodathu..."

    Intha puttaparthy saibaba senja ella fraud'm youtube'laye pottu kili kili'nnu kilikkiraan...!!

    ReplyDelete
  5. சுஜாதா சொன்னது சரிதான் நன்பா.....

    ReplyDelete
  6. ஓஹ்.... க்ரேட் சாங்...வெகுநாட்களுக்கு முன் நீங்கள்தான் அறிமுகப் படுத்தினீர்கள்...மறுபடியும் இப்போது. இனி இப்பாடலை விடமாட்டேன். கார்த்திக்ராஜா ஸ்டைல் தனித்துத் தெரிகிறது. நன்றாக வர வேண்டியவர். இன்னும் காலங்கள் இருக்கிறது. வாழ்த்துவோம்...

    நன்றி சார்...
    இந்த இரவில் இப்பாடல் சுகமே...:)

    ReplyDelete
  7. ஆல்பம் படப்பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவே இசையமைத்தாரோ என்ற எண்ணம் தோன்றாமலிருக்காது. அப்படியே ராஜாவின் பாணி இம்மியும் பிசகாது இருக்கும்.

    ReplyDelete
  8. நன்றி மிடில்கிளாஸ்மாதவி.

    Nesan said...

    //இந்தப்படம் எம்மொழியில் வந்தது இதுவரை கேள்விப்படவில்லை பாடல் இருந்தால் ஒலியேற்றுங்கள்!//

    நெட்டில் கிடைக்கிறது சார். நன்றி நேசன்.

    நன்றி சேலம் தேவா.

    ReplyDelete
  9. நன்றி கிரன்

    நன்றி Mohamed Faaique

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  10. ndian said...

    //ஆல்பம் படப்பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவே இசையமைத்தாரோ என்ற எண்ணம் தோன்றாமலிருக்காது. அப்படியே ராஜாவின் பாணி இம்மியும் பிசகாது இருக்கும்.//

    கேட்டிருக்கிறேன். கமல், இளையராஜா பாடி இருக்கிறார்கள். “வீசும் காற்றுக்கு” பிடித்தப்பாட்டு.

    நன்றி.

    ReplyDelete
  11. //கேட்டிருக்கிறேன். கமல், இளையராஜா பாடி இருக்கிறார்கள். “வீசும் காற்றுக்கு” பிடித்தப்பாட்டு.//
    கமல் இளையராஜா பாடியது உல்லாசம்.

    ஆல்பம் படத்தில் வரும் பாடலும் நல்ல மெல்லோடி ” செல்லமே செல்லம் என்றாயடா”.

    ReplyDelete
  12. நான் சொன்னது தவறு.மாற்றிச் சொல்லிவிட்டேன்.

    //செல்லமே செல்லம் என்றாயடா//

    வித்தியாசமான பாடல்.பிடித்தப் பாடல்.

    நன்றி முகில்.

    ReplyDelete
  13. //வேறு பெயரில் பிபிஓவில் ஊழியம் செய்தார்.//

    இது எப்படி முடியும்னு தெரியலையே!

    இந்த ஆளோட அப்பா கிறித்துவனாக ஆனதற்காகச் சொல்லும் கதை ரொம்ப interesting!!

    ReplyDelete
  14. தருமி said...

    //இது எப்படி முடியும்னு தெரியலையே!//

    பெயரை மாற்றிக்கொண்டு வேலைப்பார்த்தார்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!