Tuesday, April 12, 2011

வடிவேல் கட்டிங்கும் தேர்தல் இழுபறியும்

நாங்கதான் அடுத்த ஆட்சியும் என்று தி.மு.க.வும்  இல்லை இல்லை நாங்கதான் என்று அ.தி.மு.க.வும் உச்சக் குரலில் கத்தி பிரசாரம் ஓய்ந்துவிட்டது.இந்தக் கத்தலின் நடுவே நடந்த   டிங் டிங் டிங் என்ற சொந்த ”கட்டிங்” சண்டை வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும்.இரண்டு பேருடைய வண்டவாளங்கள் வெளியே வந்து ஊரே சிப்பா சிச்சிது.

வடிவேலுவுக்கு இதனால் (தி.மு.க.விற்கு ஆதரவாக) சினிமாவில் மாக்சிமம் டேமேஜ்.ஆனால் நிறைய சம்பாதித்து விட்டதாலும் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்துவிட்டதாலும் கவலைப்படவில்லை.ஜெயலலிதாவைப் பற்றி லைட்டாக டச்சிங்தான்.பயம்தான்.வச்சுடுவாங்கல்ல ஆப்பு.

 தேர்தல் முடிவு இழுபறி நிலை. இருந்தாலும் ஜெவுக்கு சாதமாக இருக்கிறது.ஆனால் ஜெவும் அடுத்தவர் உதவியை நாட வேண்டிய நிலை.இவருக்கும் ஆப்பு.

ஏன் இந்த இழுபறி? பலவித காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இலவசம். வோட்டுக்குப் பணம்.இதுதான் அடித்தட்டு மக்களைக் குழப்பிவைத்திருக்கிறது
என்பது என் யூகம்.

ஏற்கனவே  திமுகவின்இலவசம் அனுபவித்து சப்புக்கொட்டியாகிவிட்டது. அடுத்து பணம். மீண்டும் திமுக தரும் இலவசங்கள்.இந்தப் பக்கம் அ.தி.மு.க. தரும் இலவசங்கள் ப்ளஸ் ஆட்டுக்குட்டி. மற்ற மிக முக்கியமானப் பிரச்சனைகள் மண்ணாங்கட்டியாகிவிட்டன.

எவன் எக்கேடு கெட்டுப்போகட்டும்.கிரைண்டர், மிக்சி,மின்விசிறி,20 கிலோ அரிசி  ஆட்டுக்குட்டிக் கனவுகளுடன் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டு  மக்கள்.

பணம் கொடுக்கும் பெரியார் வழி கட்சிகள் ஓட்டுக்கு உத்தரவாதமாக வாக்காளர்களின் குலதெய்வத்தின் மேல் சத்தியம் வாங்கிக்கொள்கிறது.கடவுள் எப்படியெல்லாம் உதவுகிறார் பகுத்தறிவு கட்சிகளுக்கு.

கடவுளே!

6 comments:

  1. என்ன செய்தால் மக்கள் மற்ற பிரச்சனைகளை மறப்பார்கள் என்று தெரிந்து வைத்திருக்கின்றன இந்த கழகங்கள்... பார்ப்போம் முடிவுகளை...

    ReplyDelete
  2. "பணம் கொடுக்கும் பெரியார் வழி கட்சிகள் ஓட்டுக்கு உத்தரவாதமாக வாக்காளர்களின் குலதெய்வத்தின் மேல் சத்தியம் வாங்கிக்கொள்கிறது.கடவுள் எப்படியெல்லாம் உதவுகிறார் பகுத்தறிவு கட்சிகளுக்கு."


    சூப்பர்..

    ஆத்திகனுக்கு பல கடவுள்..
    பெரியார் வழி வந்த நாத்திகனுக்கு ஒரே கடவுள் "பணம்" தான் : )

    ReplyDelete
  3. நன்றி ஸ்வர்ணரேகா

    நன்றி கபிலன்

    நன்றி மிடில்கிளாஸ்மாதவி

    ReplyDelete
  4. vadivelu is a good actor in cinema but not in politics,
    Hope people vote for change
    Thiyagarajan

    ReplyDelete
  5. நன்றி தியாகராஜன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!