Monday, April 18, 2011

180 டிகிரி படம், மாப்பிள்ளையும் வாக்கு எண்ணிக்கையும்

 ”180 டிகிரி ரூல்ஸ் கிடையாது” என்ற தலைப்பில் ஒரு  படத்திற்கு விளம்பரம் வருகிறது.இந்தப் படம் சத்யம் தியேட்டரின் தயாரிப்பு.

அது என்ன 180 டிகிரி ரூல்ஸ் கிடையாது?

இது சினிமாவில் கேமரா ஆங்கிளைப் பற்றியது.அது ஒரு விதி.காட்சி அமைப்பில் இடது, வலம் பார்வையாளரை குழப்பாமல் இருக்க அந்த விதி அமைக்கப்பட்டுள்ளது.


கேமரா பச்சை வண்ணத்திற்குள்தான் நகர வேண்டுமாம். ரோஸ் வண்ணத்திற்குள் கேமரா வந்தால் இடது- வலது  என்பது வலது-இடது ஆகி பார்வையாளரைக் குழப்புமாம்.இதைப் பற்றி வீடியோவும் நிறைய உள்ளது யூ டூப்பில்.

நன்றி: விக்கிப்பீடியா

சத்யம் தியேட்டர் வளாகத்தில் “ six degree" என்ற தியேட்டர் இருக்கிறது.
________________________________________________

விதவிதமான விரல்களால் அழுத்தப்பட்ட முடிவு CPUல் உறங்கிக்கொண்டிருக்கிறது.மே பதிமூணு வெட்டவெளிச்சமாகிவிடும்.வாக்கு எண்ணிக்கை பள்ளி இறுதித் தேர்வு முடிவு போல ரொம்ப தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அபத்தமாக இருக்கிறது இந்தத் தள்ளிவைப்பு.தேர்தல் ஆணையத்திற்கு எவ்வளவு டென்ஷன்.எவ்வளவு பண விரயம்.அரசியல் கட்சிகளுக்கும் தினமும் டென்ஷன்.

ஆனால் இது பரவாயில்லை. ஒரு தேர்தலில் காகிதத்தில் குத்தி ஓட்டுப்போட்டதின் ரிசல்ட் பல நாட்களுக்குப் பிறகு வந்ததது.மை இருக்குமா அழிந்துவிடுமா என்று ஒரே குய்யோ முய்யோ அப்போது.

________________________________________________


வரமாட்டேன் என்று சொல்லியும் கட்டாயப்படுத்தி ”இஸ்திக்கினு” போனார்கள் “மாப்பிள்ளை” படத்திற்கு என் இல்லாளும் மகனும்.பிடிக்காவிட்டால் கண்ணில் கர்சீப் கட்டிக்கொண்டு தூங்கச்சொன்னார்கள்.சிவகாசிப் படத்திற்கு அப்படித்தான் செய்தேன்.

ஒரளவுக்கு காமடியாக இருக்கும் என்று ரொம்ப தைரியமாகப்போனேன்.

”ங்கொய்யால”  தெலுங்கு டப்பிங் படத்தை விட மட்டமான படம்.கர்சீப் கட்டக்கூடாது உடம்பு முழுவதும் பேண்டேஜ் போட்டு மறைத்துத் தூங்கவேண்டும் தியேட்டரில்.சில பேர் எழுந்துப்போய்விட்டார்கள்.

லாஜிக் என்பது மருந்துக்குக்கூட இல்லை.விவேக்தான் ஓகே. அதுகூட அவரின் வழக்கமான புளித்துப்போன அப்பாவை திட்டும் காமடி மற்றும் பிகர்களிடம் அடிவாங்கும் “அடப்பாவிகளா” காமடி.பின் பாதியில் ஓகே காமடி.

காமடி நடிகர் சோ இந்த “அப்பாவை மட்டம் தட்டும்” காமெடி நிறைய செய்து இருக்கிறார்.
________________________________________________


9 comments:

  1. கர்சீப் கட்டக்கூடாது உடம்பு முழுவதும் பேண்டேஜ் போட்டு மறைத்துத் தூங்கவேண்டும் தியேட்டரில்


    ....ha,ha,ha,ha,ha,ha,ha,ha....

    ReplyDelete
  2. அந்த கூட்டம் எடுக்கற படத்தையும் நம்பிப்ப்ப்ப்ப் போய் பாத்திருக்கீங்களே!!!! ரொம்ப தைரியம் உங்களுக்கு....

    ReplyDelete
  3. நன்றி செளந்தர்

    நன்றி சித்ரா

    நன்றி ஸ்ரீ

    நன்றி ஸ்வர்ணரேகா

    ReplyDelete
  4. //உடம்பு முழுவதும் பேண்டேஜ் போட்டு மறைத்துத் தூங்கவேண்டும் தியேட்டரில்.சில பேர் எழுந்துப்போய்விட்டார்கள்.//

    ரொம்ம்ம்ம்ம்ம்ப அடி வாங்கிருக்கீங்க போல....:)

    ReplyDelete
  5. அண்ணா...தங்கள் இளையராஜா பதிவகள் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..

    http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_19.html

    ReplyDelete
  6. தமிழ்ப்பறவை said...

    // ரொம்ம்ம்ம்ம்ம்ப அடி வாங்கிருக்கீங்க போல....:)//

    அடி பின்னிட்டாங்க. நன்றி.


    நன்றி அஷோக்

    ReplyDelete
  7. நன்றி ஆனந்தி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!