Tuesday, May 10, 2011

ஐபிஎல்லும் இலவசமும் இளையராஜாவும் மற்றும் ஸ்ரீதரும்

சென்னையில் நடக்கும் ஐபில்  கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிராக நீதி மன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதன் விவரம்:-
  1. கேளிக்கை வரி வசூலிக்காமல் தமிழ்நாடு அரசு சும்மா இருக்கிறது
  2. அதிக விலைக்கு டிக்கெட்டுக்கள் விற்க்கப்படுகிறது
  3. இரவில் நடப்பதால் நிறைய மின்சாரம் செலவாகிறது.பவர் கட் நேரத்தில் இது தேவையா?பகல் நேரத்தில் நடத்த வேண்டும்.
இது தவிர பொது புலம்பல்கள்:
  1. டிவி சீரியல்கள் அடி வாங்குகிறது
  2. தியேட்டர் வசூல் பாதிக்கப்படுகிறது
  3. தூக்கம் கெடுகிறது 
  4. உப்புசப்பு இல்லாமல் இருக்கிறது
  5. எதிரி இல்லாமல் friendlyஆக இருக்கிறது
  6. விசுவாசத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.டெண்டூல்கரை விசுவாசிக்கும்  சென்னை ரசிகர்கள் அவர் சென்னைக்கு எதிராக ஆடும்போது விசுவாசத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.இது  மாதிரி விசுவாசம் மாறி மாறி வரும்.எல்லா அணிக்கும் /விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.
________________________________________________


போன வாரம்  ஒரே எரிச்சலான வாரம்.கத்திரி வெயில்? இல்லை. என் இளையராஜா பதிவுகளில் பதிந்திருக்கும் "மிதக்கும் ஆடியோ பிளேயர்" எதுவும் வேலை செய்யவில்லை. யாஹூ தளம் கொடுக்கும் அற்புதமான பயனுள்ள floating media player.அதில் பிரச்சனை இல்லை.பிரச்சனை  Fileden.com என்ற  தளம்.இங்குதான் mp3  கோப்புகள் சேமிக்கப்பட்டு,தொடர்பு கொண்டு,  யாஹூ ஆடியோ பிளேயரில் பிளே ஆகிறது.

பங்களூரு நண்பர்/பதிவர் பரணி ராஜன்(தமிழ்ப்பறவை) அவர் கணினியிலிருந்தும் வேலை செய்யவில்லை என்றார்.பிரச்சனை கணினி இல்லை என்பது தெரிந்தது.

பதிவிற்காக உழைக்கும் உழைப்புக்காக ஒவ்வொரு தடவையும்  படிப்பவர்களால் மனமுவர்ந்து  எப்போதும் பாராட்டப்படுவதில் ஒரு திருஷ்டி.

புது பார்வையாளர்கள் நிறைய பேர் ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பார்கள்.
 
அலைவரிசை(spectrum?) பிரச்சனை

நான் இலவசத் திட்டத்தின் பயனாளர். bandwidth ன் அளவு நிரம்பிவிட்டது காரணம் என்று தெரிகிறது.தளமும் சொல்கிறது. ஓகே ...ஏன் பழைய பைலகள் வேலை செய்யவில்லை.

இலவசமாக பெற்றுக்கொண்டால் சில துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த bandwidth,பதிவு படிப்பவர்கள் தரவிரக்கம் செய்தால் அளவு குறைய ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.சில சமயம் போலியாக காட்டுகிறது.

பைல்களின் பெயரயோ அல்லது போல்டர் மாற்றுதலோ (பதிவு போட்டவுடன்) இருந்தால் தரவிரக்கம் செய்யமுடியாது என்று FAQ சொல்கிறது. போல்டர் மாற்றம் செய்தேன். ஒவ்வொரு பைலையும்(350 பைல்கள்) பெயர் மாற்றம் செய்வது என்பது பைத்தியம் பிடிக்கும் வேலை.அதற்கு திகார் ஜெயிலில் இருக்கலாம்.பெட்டர்.மாற்றி வேலை செய்யாவிட்டால்??????????

”இதுதான் காரணமா?” என்று கேள்விக்கு வாடிக்கையாளர் உதவியில் புகார் கொடுத்தும் ஒன்றும் பயனில்லை.வேறு இருவரின் தளங்கள் வேலை செய்கிறது. FAQல் அலைவரிசை மீறினால் ஆடியோ இயங்காது என்று தெரிவித்தால் எவ்வளவு நல்லது.

இலவசக்காரர்களுக்கு முன்னுரிமை கிடையாதோ?

Fileden.com தளம்.கேட்டறிந்தவகையில்  மற்றும் அனுபவத்தில் அது reliable  தளம் இல்லை என்று உணர்ந்தேன்.ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் வந்தது.நித்ய கண்டம் பூர்ண ஆயிசு என்பதற்கு உதாரணம் Fileden.com.

வலை நிர்வாக கோளாறுகள் உள்ளத் தளம்.Professionalஆக நிர்வாகிக்கப்படவில்லை.பட்டால் சூப்பராகிவிடும்.

கடைசி செய்தி:

என்னுடைய bandwidthஐ மாற்றம் செய்திருக்கிறார்கள்.ஆனால் மீண்டும் பிரச்சனை. மீண்டும் போல்டர் மாற்றினேன்.நல்லவேளை பைல்கள் பெயரை மாற்றவில்லை. இப்போது வேலை செய்கிறது.

பின்ணணியில்  ராஜாவின் கோரஸ் வயலின்/ஹம்மிங்/கிடார் /வீணை இசைக்க மகிழ்ச்சி பிரவாகம்.
____________________________________________

அந்தக்கால  பெரிய டைரக்டர்களின் சில பழைய படங்களைப் பார்க்கும் போது மகா மட்டமாக இருக்கிறது.இவ்வளவு பெரிய டைரக்டர்கள்  ஏன் சினிமாவில் கதைச் சொல்லும் முறையின் அடைப்படை விதிகளைக் கூட கடைப்பிடிப்பதில்லை.

இவர்கள் எடுப்பது எல்லாம் வெகுஜன ரசனை சார்ந்ததுதான்.தியேட்டரில் பார்க்கும்போதும் வெகுஜன ரசனையே இல்லை.டிவியில் சகிக்கவில்லை.

படம்:வைரநெஞ்சம் -1975-டைரக்டர் ஸ்ரீதர்-கிரைம் த்ரில்லர்

”செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரில் வந்தது கண்ணே... தான்” It is come by the chariot, dear! என்று வந்தக் காற்று சப்டைட்டிலில் நிற்கிறது.

படம்:உன்னை தேடி வருவேன் -1985 -டைரக்டர் ஸ்ரீதர்-கிரைம் த்ரில்லர்

இதில் பாத்ரூம் காட்சி  ஒன்று வரும். இதை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்று பல வருடமாக ரூம் போட்டு யோசித்ததுண்டு.

8 comments:

  1. //பின்ணணியில் ராஜாவின் கோரஸ் வயலின்/ஹம்மிங்/கிடார் /வீணை இசைக்க மகிழ்ச்சி பிரவாகம். //


    உங்களுக்கு மட்டுமல்ல... எங்களுக்கும் தான்.

    ReplyDelete
  2. நன்றி ஜெய்சக்திராமன்

    ReplyDelete
  3. 'உன்னைத் தேடி 'வருவேன்' படத்தில் 'என் அன்பே அன்பே' மற்றும் 'ஒரு நாளில்' பாடல்களைக் கேளுங்கள்.'பாத்ரூம்' காட்சியோ இல்லை 'பெட்ரூம்' காட்சியோ வைத்துவிட்டு போகட்டும்.இதுபோன்ற தேன்சொட்டும் பாடல்களை நாம் கேட்பதற்கு திருஷ்டிப் பரிகாரமாக எது வந்தாலும் நாம் சகித்துக்கொள்ளலாம்..

    ReplyDelete
  4. பல்சுவை பதிவு.

    ReplyDelete
  5. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அந்த subtitles செம காமெடியாக இருக்கும். யார் தான் மொழி மாற்றம் செய்வார்களோ? "தூள்" படத்தில் "குண்டு ...குண்டு..." என்று ஒரு பாடல் வரும். அதில், "அத்தை வைத்த பேரென்ன? " என்று இருக்கும். அதை ஆங்கிலத்தில், " I am Aunt's grandson" என்று போட்டு இருந்தார்கள்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Raj said...
    //உன்னைத் தேடி 'வருவேன்' படத்தில் 'என் அன்பே அன்பே' மற்றும் 'ஒரு நாளில்' பாடல்களைக் கேளுங்கள்.'//

    கேட்டிருக்கிறேன் சார்.”ஒரு நாளில்” எனக்குப் பிடித்தப் பாட்டு.ராஜாவிற்குத்தான் இந்த படமே அப்போது பார்த்தோம்.

    ஒரு த்ரில்லர் படத்தில் த்ரில் இல்லாத படம் என்று எழுத வந்தேன்.

    ReplyDelete
  8. நன்றி சித்ரா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!