Saturday, October 16, 2010

சினிமா இசை மேதைகளின் Romantic Interludes

 படத்தில் பாட்டு வந்தால்,தமிழ் நாட்டு ரசிகர்கள்  “தம்” அடிக்க தியேட்டருக்கு வெளியே போய் விடுகிற  பாரம்பரியம் இருந்தது ஒரு காலத்தில்.ஆனால் பாதி கதவின் வழியே “தம்” அடித்தப்படி பாட்டைப் பார்ப்பார்கள்.

லாஜிக்  இல்லாவிட்டாலும் இந்திய  சினிமாக்களில் பாடல்கள் என்பது  தவிர்க்க முடியாத அம்சம் ஆகிவிட்டது. அதுவும் காதல் டூயட் கட்டாயம் இருக்கும்.டூயட் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?


இந்த டூயடின் முன்னோடி சங்கஇலக்கியங்கள்,புராணங்கள்,கிராம கதைகள்,தெருக் கூத்துக்கள்,குறவஞ்சிப் பாடல்கள்,பாணர்கள் இதில் குறத்தி குறவன்/தலைவி/தலைவன் அல்லது நாயகி/நாயகன்,God/Goddessகளின் காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக பாட்டுக்கள் புனையப்படும். 

பின்னணியில் மெலிதான இசையும் உண்டு.


இப்போதும் அதே காதல் உணர்ச்சிகள்தான்.ஆனால் அதன் பின்னணி இசை?

சினிமா விஷூவல் மீடியம் ஆதலால் காதலர்களை விட்டுவிட்டு புறக் காட்சிகளுக்கு ஏற்ப இசையும் கொடுக்க வேண்டும். அதுவும் பாடும் காதலர்களின் காதல் உணர்ச்சிகளை பிரதிபலிக்க வேண்டும்.
 
பின்னணியில் இருந்த மெலிதான இசை இப்போது பலவித உருமாற்றம் அடைந்து தாளத்தோடு மற்ற இசைக்கருவிகளும் இசைந்து பாட்டிற்கு ஒரு romantic moodஐ கொடுக்கிறது. சில சமயம் காதலர்கள் ஒரு மூடில் பாட இடையிசை வேறு மூடில் இருக்கிறது. 


எதற்கு இடையிசை(interlude) ?

 காதலர்கள் மூச்சு விடாமல்  பாடிக்கொண்டிருந்தால் எப்படி?அவர்கள் ஆசுவாசிப்படுத்திக்கொண்டு முதல் பல்லவி இரண்டாம் பல்லவி முதல் சரணம் இரண்டாவது சரணம் என்று இடைவெளி விட்டு அதன் சடுதியில்
 “ஸ்டார்ட் மியூஜிக்”.அதிலும் romantic moodஐ கொண்டுவர வேண்டாமா?

நம்ம பழைய இசை மேதைகள் எப்படி இந்த romantic moodஐ  காதலர்கள் அவர்கள் பார்ட் முடிந்து ஆசுவாசுப் படுத்திக்கொண்டிருக்கும் இடைவெளியில் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்?


ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லாம்  எம் எஸ் வி போட்ட templateல் வரும்.இருந்தாலும் எல்லாம்  very simple orchestration.சிக்கலே கிடையாது.

அடுத்து வரப்போவதை யூகிக்கலாம்.

டூயட் இல்லாமல் காதலி அல்லது காதலன் ஒருவரை ஒருவர் வர்ணித்துப் பாடும்  பாட்டுக்களும் உண்டு. பின் வரும் romantic interludeகளில் 90% புல்லாங்குழல் நாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இதை அதிகம காணலாம்.ஏன்? காதல் ரசம்? வேணுகானம்?

பின் வரும் ஆடியோக்களில் பாடல் வராது. வெறும் இடையிசைதான் (Interlude)வரும்.இவைகள் மிஞ்சி மிஞ்சிப் போனால்ஒரு நிமிடத்திற்க்குள் முடிந்துவிடும். சிரமப்படாமல் கேட்கலாம்.

படம்:சொல்லத்தான் நினைக்கிறேன் (1974) பாடல்: சொல்லத்தான் நினைக்கிறேன் இசை:MSV

கிடார்+வயலின்+புல்லாங்குழல் காம்பினேஷன் அற்புதம்.முடிவில் கொஞ்சும் புல்லாங்குழல் அருமை.

 

படம்:வீர அபிமன்யூ(1965) பாடல்: பார்த்தேன் ரசித்தேன்:கே.வி.மகாதேவன்

இதில் வீணையில் சஹானா ராகத்தில் ரொமாண்டிக் மூட் மீட்டெடுக்கப்பட்டுப் புல்லாங்குழல் நாதம் அதை வாங்கி முடிக்கிறது. புராண கால ரொமன்ஸ் என்பதால் வீணை நாதம் நிறைய வரும்
 
 
 படம்:ஆலயமணி (1962)பாடல்: கல்லெல்லாம் இசை:MSV


 ”உண்டென்று சொல்வது உன் கண்ணல்லவா... இல்லையென்று சொல்வது உன் இடையல்லவா?”


எல்.ஆர்.ஈஸ்வரி  ஹம்மிங் soul stirring.புல்லாங்குழல் எல்.ஆர்.ஈஸ்வரி நாதத்தின் முன் ஒன்றுமில்லாமல் ஆகிறது.இது முடிந்ததும் take offக்கு ரெடியாக நிற்கிறார் TMS.



படம்:அவளுக்கென்று ஓர் மனம் (1971)பாடல்: உன்னிடத்தில் என்னை இசை:MSV
  

பாட்டின் நாயகியின் காதல் உணர்ச்சிகளுக்கு இதமாக வயலினும் நாகஸ்வரமும் (ஷெனாய்?)உருகுகிறது.அட்டகாசம்.

படம்:நந்தா என் நிலா(1977) பாடல்: நந்தா  நீ என் நிலா இசை:வி.தட்சிணாமூர்த்தி 
 
இது காதலன்  காதலாகி கசிந்து உருகி பாடும் பாடல்.வீணையும் வயலினும் புல்லாங்குழலும்  very very romantic mood.

வாழ்வு  முடிவதற்கு முன் இந்தப் பாடலைக் கேட்டே ஆக வேண்டும்.
 
 
படம்:மதன மாளிகை(1976) பாடல்: ஏரியிலே ஒரு இசை:எம்.பி.ஸ்ரீனிவாசன்
  
 அமீர் கல்யாணி ராகம்?

 இதுவும் ஒரு அருமையான ரொமாண்டிக் கானம்.ஆனால் சுசீலாவின் குரலில் வசீகரம்/ரொமான்ஸ் இல்லை.ஜானகி ஹம்மிங் கொடுத்திருந்தால் இன்னும்  ரொமாண்டிக் பீலிங் கொண்டு வந்திருப்பார்.

 

படம்:தூண்டில் மீன்(1977) பாடல்: உன்னோடு என்னென்னவோ இசை:வி.குமார்

இசையில் கொஞ்சம் நவீனம் தெரிகிறது.பாடல் ரொம்ப ஸ்டைலாக ஆரம்பிக்கும். ரொமான்ஸ் கொஞ்சம் கம்மிதான்.

இந்தப் பட டைரக்டர் யார் தெரியுமா? ரா.சங்கரன்.”மெளன ராகம்” படத்தில் ரேவதிக்கு அப்பாவாக வருபவர்.



படம்:எங்கம்மா சபதம் (1973) பாடல்: அன்பு மேகமே இசை:விஜய பாஸ்கர்


விஜய பாஸ்கர்? சம்சாரம் என்பது வீணை( மயங்குகிறாள் ஒரு மாது) பாட்டைக் கம்போஸ் செய்தவர்.

இதுவும் ஒரு அருமையான காதல் இடையிசை.0.12-0.19 வித்தியாசமான எமோஷன்.அதில் 0.12 -0.13யும் அருமை.





படம்:கண்ணன் என் காதலன் (1968)பாடல்: பாடுவோர் பாடினால்இசை:MSV



இதில் பியானோவும் வயலினும் ஒரு romantic chat.அடுத்து 0.15-0.19ல் ட்ரம்ஸ்ஸும் பியானோவும்  romantic chat.



  எம். எஸ். விஸ்வநாதான் சார்..!  0.15-0.19  ட்ரம்ஸ் stunning!



படம்:மீண்ட சொர்க்கம் (1960) பாடல்: கலையே என் வாழ்க்கை இசை:டி.சலபதி ராவ்
 தேவதாஸ் டைப் புலம்பல் காதல் பாடல். இதுவும் சிம்பிள் ஆபோகி ராக ரொமாண்டிக் இண்டர்லூட்.




படம்:திருடாதே(1961)  பாடல்: என்னருகே நீ இருந்தால் இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

ஒரு ஒற்றை வயலினும் ஒரு புல்லாங்குழலும் அந்தக் காலத்திற்கு ஏற்றார் போல்.அருமை.




படம்:பொண்ணுக்கு தங்க மனசு(1973)  பாடல்: தேன் சிந்துதே வானம் இசை:ஜி.கே.வெங்கடேஷ்

ரொம்ப மென்மையான இசைக்கோர்ப்பு.பின் வரப் போகும் பாடலும் ரொம்ப மென்மை அண்ட் சிம்பிள். ராஜாவின் 0.07-0.08ல் டச் தெரியும்.அடுத்து 0.09-0.17க்குள்  விணையில் பலவித  நாதம் .   


விரைவில் “இளையராஜா King of Romantic Interludes"

ஒரு சாம்பிள்  stunning romantic interlude






22 comments:

  1. அருமை சார் கேட்டேன் ரசித்தேன் ...மயங்கினேன்

    உங்கள் ப்ளோகில் வந்தவுடனுமே ....சொல்லத்தான்.... ஓர் வார்த்தை இல்லைன்னு ..
    மனதில் ஒரு பின்னணி இசை வருகிறது ..:)

    ReplyDelete
  2. பத்மா said...

    //அருமை சார் கேட்டேன் ரசித்தேன் ...மயங்கினேன்
    உங்கள் ப்ளோகில் வந்தவுடனுமே ....சொல்லத்தான்.... ஓர் வார்த்தை இல்லைன்னு ..
    மனதில் ஒரு பின்னணி இசை வருகிறது ..://

    நன்றி பத்மா.

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் ... ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ...
    நல்ல பாடல் தெரிவுகளும் கூட ......

    இதையும் கொஞ்சம் வாசிப்போம் ...
    http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

    ReplyDelete
  4. நிறைய பாடல்களை (tunes/interlude) முதல் முறையாக கேட்கிறேன். ரசித்து, தொகுத்து தந்து இருக்கீங்க. நன்றி.


    அதில் தூண்டில் மீன் படத்தில் வரும் tune - கொஞ்சம் ஹிந்தி படம் ஒன்றில் வரும் பாடல் ஒன்றை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
  5. S.Sudharshan said...

    // நல்ல விளக்கம் ... ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ... நல்ல பாடல் தெரிவுகளும் கூட ......//

    நன்றி சுதர்ஷன்.

    // இதையும் கொஞ்சம் வாசிப்போம் ...
    http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html//

    படித்தேன்.பின்னூட்டமும் போட்டுவிட்டேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. Chitra said...

    // நிறைய பாடல்களை (tunes/interlude) முதல் முறையாக கேட்கிறேன். ரசித்து, தொகுத்து தந்து இருக்கீங்க. நன்றி.//

    ஆமாங்க சித்ரா இதெல்லாம் ரொம்ப நாளா என் இதயத்தின் அருகில் இருந்த interludeஸ்.

    ஓல்ட் இஸ் கோல்ட்.

    //அதில் தூண்டில் மீன் படத்தில் வரும் tune - கொஞ்சம் ஹிந்தி படம் ஒன்றில் வரும் பாடல் ஒன்றை நினைவு படுத்துகிறது//

    ஆமாம். கண்டுபிடிச்சிட்டீங்களே...!சொல்ல வேண்டாம்னுதான் இருந்தேன். இது “ஜூலி” என்று நினைக்கிறேன். டக்கென்று ஞாபகம் வரவில்லை.

    ReplyDelete
  7. ரவி விருந்து படைச்சீட்டிங்க.. போங்க... கொஞ்சம் பொறுமையா எல்லாவற்றையும் கேட்டுட்டு .. பின்னூட்டம் இடுகிறேன் ரவி..

    ReplyDelete
  8. அருமை அருமை, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்

    ReplyDelete
  9. எங்கள் தலை இசைராஜாவின் தொகுப்பு போட்டவுடன் சொல்லி அனுப்பவும் முதல் ஆளாக வருகின்றேன். அருமையான தொகுப்பு. மெல்லிசை மன்னரின் இசை ஒரே மாதிரி இருந்தாலும் அவ்வளவும் அருமையான பாடல்கள்.

    ReplyDelete
  10. இளையராஜாவின் சாம்பிள் மியூசிக்கே மயக்குது வெயிட்டிங் சார்...

    ReplyDelete
  11. மிக பிரமாதமாக தொகுத்து இருக்கிறீர்கள் ரவி.. எல்லா விதமான இசையமையப்பாளர்களையும் கவுரவித்து இருக்கிறீர்கள்.. அதற்கு மிக்க நன்றி
    கர்ணன் படத்தில் இரவும் நிலவும்... பாடலில் 3 ஷெனாய்கள் இன்டர்லுடாக வந்து இசைக்கும் வாழ்வில் மறக்கமுடியாத இசைவடிவம் அது.. அதற்கு பிறகு மிக கவனமாக எம்.எஸ்.வி அவர்களின் இசைவடிவங்களை கேட்டுவருகிறேன். இளையராஜா மிக அற்புதமாக உள்வாங்கி பெரிய சகாப்தத்தை ஏற்படுத்திவிட்டார் தமிழ் திரையிசையில். எம்.எஸ்.வி பற்றி நீங்கள் தனியான ஒரு தொகுப்பை போடவேண்டும் எனபது எனது வேண்டுகோள். அவ்வண்ணமே.. தட்சினாமூர்த்தி,எஸ்.வி.வெங்கட்ராம்,சுப்பையா நாயுடு, ஷ்யாம் போன்றவர்கள் பற்றியும் நீங்கள் எழுதவேண்டும் என்பது மற்றுமொரு வேண்டுகோள்.

    ReplyDelete
  12. //எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் soul stirring.//
    உண்மை.மறக்க முடியாத எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.நல்ல பதிவு.

    ReplyDelete
  13. //raja said...

    ரவி விருந்து படைச்சீட்டிங்க.. போங்க... கொஞ்சம் பொறுமையா எல்லாவற்றையும் கேட்டுட்டு .. பின்னூட்டம் இடுகிறேன் ரவி..//

    வாங்க.ரொம்ப நன்றி.இப்பத்தான் நானும் கம்புயூட்டர்கிட்ட வந்தேன்.

    ReplyDelete
  14. கானா பிரபா said...

    //அருமை அருமை, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்//

    நன்றி கானா பிரபா.

    ReplyDelete
  15. வந்தியத்தேவன் said...

    // எங்கள் தலை இசைராஜாவின் தொகுப்பு போட்டவுடன் சொல்லி அனுப்பவும் முதல் ஆளாக வருகின்றேன். அருமையான தொகுப்பு. மெல்லிசை மன்னரின் இசை ஒரே மாதிரி இருந்தாலும் அவ்வளவும் அருமையான பாடல்கள்.//

    மெல்லிசை மன்னரின் பாடல்கள் நிறைய இருக்கிறது.சில பைல்கள் வேலைச் செய்யவில்லை.

    ஆடியோவிற்காக நான் சிஸ்டத்தை (விஜயதசமி ஸ்பெஷல்)மாற்றி உள்ளேன்.இனி எப்படி என்று பார்க்கலாம்.

    //இசைராஜாவின் தொகுப்பு போட்டவுடன் சொல்லி அனுப்பவும் //

    நிச்சியமாக நன்றி.

    ReplyDelete
  16. raja said...

    // மிக பிரமாதமாக தொகுத்து இருக்கிறீர்கள் ரவி.. எல்லா விதமான இசையமையப்பாளர்களையும் கவுரவித்து இருக்கிறீர்கள்.. அதற்கு மிக்க நன்றி//

    நன்றி. ”எல்லா விதமான” இன்னும் சில பேர் மிஸ்ஸ்ங். சங்கர் கணேஷ்/வேதா/ரவீந்த்ரன்/ஆதி நாராயணராவ்.ஆடியோ நிறைய சதி செய்துவிட்டது.சிஸ்டம் மாற்றி உள்ளேன் பார்க்கலாம்.


    // இளையராஜா மிக அற்புதமாக உள்வாங்கி பெரிய சகாப்தத்தை ஏற்படுத்திவிட்டார் தமிழ் திரையிசையில். எம்.எஸ்.வி பற்றி நீங்கள் தனியான ஒரு தொகுப்பை போடவேண்டும் எனபது எனது வேண்டுகோள். அவ்வண்ணமே.. தட்சினாமூர்த்தி,எஸ்.வி.வெங்கட்ராம்,சுப்பையா நாயுடு, ஷ்யாம் போன்றவர்கள் பற்றியும் நீங்கள் எழுதவேண்டும் என்பது மற்றுமொரு வேண்டுகோள்.//

    எனக்கும் ஆசைதான்.ஆனால் ரொமப பெரிய பொறுப்பு ராஜா அவர்களே.முடிந்த அளவு செய்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  17. ப்ரியமுடன் வசந்த் said...

    // இளையராஜாவின் சாம்பிள் மியூசிக்கே மயக்குது வெயிட்டிங் சார்...//

    நன்றி. கேட்ட இண்டர்லூட் என்ன படம் தெரியுமா?கண்டுபிடியுங்கள்?

    ReplyDelete
  18. ராஜாவின் almost எல்லா டூயட்களிலும் interlude-இல் counter point உபயோகித்திருப்பார்! நாயகனுக்கு ஒரு instrument, நாயகிக்கு ஒரு instrument என்று! கலக்குங்க! ராஜாவின் interlude பற்றிய பதிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும்.....

    ReplyDelete
  19. ரவிஷா said...

    //ராஜாவின் almost எல்லா டூயட்களிலும் interlude-இல் counter point உபயோகித்திருப்பார்! நாயகனுக்கு ஒரு instrument, நாயகிக்கு ஒரு instrument என்று! கலக்குங்க! ராஜாவின் interlude பற்றிய பதிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும்....//

    ஆமாம். நன்றி.

    ReplyDelete
  20. கை கொடுங்க சார்... பாட்டுக்கு யூட்யூப் லிங்க் கொடுக்க ஆரம்பிச்சு, அப்புறம் திரைப்பாடல் லின்க் போய், பாட்டு மொத்தமும் கொடுத்து, இப்போ ட்விட்டர் லெவலுக்கு குறு இசை கொடுக்கிறீங்க. வாழ்த்துக்கள்...

    எல்லா இசையும் கேட்டேன் சார். கொஞ்சம் முன்னாடிப் போனா எல்லா இண்டர்லூடும் ஒண்ணாவே தெரியுது. எம்.எஸ்வி டைப். தனியா இண்டர்லூட் கேட்டா பாட்டு சொல்ல முடியாது.
    கொஞ்சம் பின்னாடி வந்து குமார், விஜயபாஸ்கர் கேட்டா ராஜாதான் வந்து நிற்கிறார்.(மஞ்சள் காமாலைக் காரன் கண்ணு அப்படித்தான் தெரியும்).
    இருந்தும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பாடல் என்னோட ஃபெவரைட் ஒண்ணு. அந்தப் படத்துல இன்னும் சில பாடல்களும் இருக்கும். நல்லா இருக்கும். மாடர்னைஸான எம்.எஸ்.வி...
    பழையதில் ஆரம்பித்து ராஜா பின்னணியாக இயங்கிய ‘பொண்ணுக்கு தங்க மனசு’வில் வந்து, கடைசியில் என்னோட ஃபேவரைட் சாங்(உன் எண்ணம் இங்கே) பிஜிஎம்மில் கொடுத்த ட்ரைலர் கலக்கல்...
    சன் டிவியே தோத்துப் போயிடணும் ட்ரைலர் விஷயத்துல... ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...

    ReplyDelete
  21. தமிழ்ப்பறவை said...

    //கை கொடுங்க சார்...//

    நன்றி

    // எல்லா இசையும் கேட்டேன் சார். கொஞ்சம் முன்னாடிப் போனா எல்லா இண்டர்லூடும் ஒண்ணாவே தெரியுது. எம்.எஸ்வி டைப். தனியா இண்டர்லூட் கேட்டா பாட்டு சொல்ல முடியாது.
    கொஞ்சம் பின்னாடி வந்து குமார், விஜயபாஸ்கர் கேட்டா ராஜாதான் வந்து நிற்கிறார்.(மஞ்சள் காமாலைக் காரன் கண்ணு அப்படித்தான் தெரியும்).//

    எம்எஸ்வி திறமையான ஆளு.நான் கொடுத்த விஜயபாஸ்கர் இசை பிட் ரொம்ப அருமையான பீஸ்.
    பாட்டும் அருமை. வாணி பாடுகிறார்.

    //இருந்தும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பாடல் என்னோட ஃபெவரைட் ஒண்ணு//

    ஜானகியின் வசீகரமான குரல் அள்ளுகிறது.
    கவனியுங்கள் சுசிலாவைத் தவிர்த்து பாட்டை ஜானகிக்குக் கொடுத்துள்ளார் எம் எஸ் வி.
    .
    // சன் டிவியே தோத்துப் போயிடணும் ட்ரைலர் விஷயத்துல... ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...//

    ச்ன் டிவியா...?

    நன்றி

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!