Friday, October 22, 2010

இளையராஜா- King of Romantic Interludes

போன பதிவில் முன்னாள் மேதைகளின் Romantic Interludes   பார்த்தோம்.

டூயட்டுகளில் வரும் romantic interlude களை ராஜா எப்படி கையாள்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் எல்லாம் வைக்கப்படுகிறது. தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

போவதற்கு முன்................

அவரின் ஆரம்ப கால பாடல்கள்தான் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.அவரும் தன் முந்தைய /சம கால இசையமைப்பாளர்கள் போல் ரொம்ப சிம்பிளாகத்தான் இடை இசையை (interlude) கொடுத்திருக்கிறார்.ஆனால்?

வழக்கமாக முன்னணியில் ஒரு இசைக்கருவியின் நாதத்தை(ரிதம்) வாசித்து பின்னணியில் தாளக்கட்டும் குறைந்த அளவில் வேறு இசைக்கருவிகளின் நாதமும் தொடர்ந்துக்கொண்டே போகும்.சில சமயம் நாதங்களை சிக்கல் இல்லாமல் அடுக்கிக்கொண்டேவருவார்கள்.
இனிமையாக இருக்கும்.ஆனால் இது ஒரு stereotype இசையாகி அலுத்துப்போய்விடும்.இசையின் தொடர் ஓட்டம் ஆகிவிடும்.

இளையராஜாவை உன்னிப்பாக  கேட்க ஆரம்பித்ததும் இந்த வேறுபாடுகள் தெரிய ஆரம்பித்தது.துவக்கத்தில் இவர் இசையிலும் நாதங்கள் அடுக்கப்படுவதுண்டு. பின்னாளில் மாறிவிட்டது.

உதாரணம்: எம் எஸ்வியின்.... “சொல்லத்தான் நினைக்கிறேன்”

இதில் கிடார்,புல்லாங்குழல்/வயலின்/புல்லாங்குழல் வரிசையாக வருகிறது.ஒரு pattern தெரிகிறது.ஆனால் சில விதிவிலக்கான பாடல்களும் உண்டு.





      (முதன் முதலில் romantic interlude (அம்பு) விட்ட காமதேவன்)

ஆனால் மேஸ்ட்ரோ இதில் வித்தியாசம் காட்டுகிறார்.  எப்படி?
1.அடுக்குவது தெரியாமல் அடுக்குவது (ஒட்டுப்போட்டது தெரியாமல்)
2.துரித கதியில் இசைத்துளிகளை  ஒன்றோடு ஒன்று பின்னுவது
3. ஒவ்வொரு இசைத்துளியிலும் உணர்ச்சிகளை தெளித்துக்கொண்டே பின்னுவது
4.இசை நாதங்களின் இடையே எமோஷனல் உரையாடல்கள்
5.முதல் இடையிசையை இரண்டாவது இடையிசையில் காபி பேஸ்ட் செய்வதில்லை..ராஜாதான் இதில் முன்னோடி என்று நினைக்கிறேன்.
6.அசட்டுத்தனம் இல்லாமல் கூடும் நாதங்கள்.(நான் அடிக்கடி பிரமிக்கும் விஷயம்)
7. எல்லா இசைத்துளிகளையும் “கட்டி மேய்க்கும்” திறமை
8.உச்சரிக்கப்படும் பாடல் வரிகளின் பின்னே இசையால் வருடுவது
9.இசைத்துளிகள் கெடாமல் புது முயற்சிககள் செய்வது
10.அடுத்து என்ன வரப்போகிறது யூகிப்பது கஷ்டம்
11.சூப்பர் பாஸ்ட்டாக பின்னும்போது மூடு கலையாமல் இருப்பது
12.பல பாடல்களில் அழகாக ஒரு finishing touch
13.இசைக்கருவிளின் நாதத்தை கட்டுப்பாடு இல்லாமல் நுனி முதல் அடி வரை எங்கு வேண்டுமானுலும் சொருகுவது

14.இது அது என்று இல்லாமல் சகல இசைக்கருவிகளையும் மாக்சிமம் பயன்படுத்துக்கிறார்.15.எல்லாவித இசைகளையும் கையாள்கிறார். 

ராஜாவின் நாதங்கள் உணர்வுபூர்வமானவை அதே சமயம் புத்திசாலித்தனம் நிறைந்தவை. He puts his heart & soul in   his compositions.

கிழ் வரும் பாடல்களில் மேலுள்ள பாயிண்டுகளைப் பார்க்கலாம்.


படம்: பாலூட்டி வளர்த்த கிளி- 1976 பாடல்:நான் பேச வந்தேன்
முன்னோடிகளின் பாதிப்பு. ரொம்ப சிம்பிளான இசை.இதய துடிப்பை முன் வைத்து ஒரு இசை.



படம்: தீபம் - 1977 பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
 இரு சந்தன தேர்கள்(???) அசைவிற்கு வீணையில் ஒரு வருடல்,0.07-0.13 வயலின் - வீணை உரையாடல் அருமை. கடைசியில் ஒட்டுத்தெரியாமல் வீணை நாதம் தலை நீட்டுகிறது.

எனக்குத் தெரிந்து வீணையின் நாதத்தை left & right பயன்படுத்திய ஒரே இசையமைப்பாளர் மேஸ்ட்ரோதான்.
 


படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்  - 1978 பாடல்:என் கல்யாண வைபோகம்

துறு துறுவென இசை.ஜிகு ஜிகு ஜிகுவென சூப்பர் பாஸ்டில்  இசைப் பின்னல்.0.35-0.49 கவுண்டர் பாயிண்ட்(இரண்டு வெவ்வேறு மெட்டுக்கள் இசைக்கப்படுவது).

0.22-0.35 முன்னணியில் புல்லாங்குழல் பின்னணியில் துறு துறு தாளம். தாளத்தினூடேயே இன்னோரு நாதமும் தொடர்ந்து வருகிறது.மத்யாமவதி ராகத்தில் புனையப்பட்ட பாட்டு.

கவுண்டர் பாயிண்ட் முடிந்ததும் ஒரு புல்லரிக்கும்0.50ல் finishing touch.மிஸ் செய்யாமல் கேளுங்கள்



 படம்: சக்களத்தி - 1979 பாடல்:வாட வாட்டுது

இசையில் ஏதோ புது முயற்சி தெரிகிறது.இரவு+காமம்+காதல் என்று அலைபாயும் உணர்வுகள் வெளிப்படுகிறதோ? அருமை.ராஜாவுக்கு பொருத்தமான பாட்டு.

 

படம்: கிழக்கே போகும் ரயில் - 1978 பாடல்:கோயில் மணி ஓசை
இனிமை..இனிமை..!வெஸ்டர்ன் கிளாசிகலில் ஆரம்பிக்கும் இசைத்துளிகள் ஒட்டுத்தெரியாமல் நழுவி finishing touchல் ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார். 0.06லிருந்த நாதம்(வயலின்) 0.07ல்(சிந்த்?) வேறு நாதத்திற்கு மாறுகிறது.

 28 வினாடிகளில் எவ்வளவு நாதங்களை பின்னுகிறார்.



படம்: ஆறிலிருந்து அறுபதுவரை - 1979 பாடல்:கண்மணியே

லட்சணம் பொங்கும் வீணை நாதம் மோகன ராக சாயலில்.0.22 வினாடிகள்தான் இசை. அதையே  கடைசி வரை நீட்டாமல் இடையில் சிந்த் அண்ட் வயலின் இசையை புகுத்தி அழகுப்படுத்தி மீண்டும் வீணை நாதம்.


படம்: உறவாடும் நெஞ்சம் - 1976 பாடல்:ஒரு நாள் உன்னோடு

டிஸ்கவரி சேனலில் பாம்புகள் வாலில் நின்றபடி காதல் புரிவதை காட்டுவார்கள். அதே மாதிரி வயலினும் புல்லாங்குழலும் ரொமாண்டிக் மூட்.

வெஸ்டர்ன் கிளாசிகல் டைப். புது முயற்சி. பினிஷிங் டச் கவனியுங்கள்.


படம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982 பாடல்:இளம் மனதினில் எழும்

மிகப் பெரிய பாட்டு.நம்மூர் கிளாசிகலோடு 0.30-0.37ல் வெஸ்டர்ன் கிளாசிகளை இணைக்கிறார். இது மாதிரி பளிச் பளிச்சென்று மிருதங்கத்தை வாசிப்பது ராஜா ஒருவர்தான்.



படம்: மஞ்சள் நிலா - 1982 பாடல்: பூந்தென்றல் காற்றே வா

அருமையான மேற்கத்திய (சாக்ஸ்?)இசை. கிடார் உரையாடலுக்குப்( 0.38-0.41) பிறகு வரும் பதில் உரையாடல் absolutely divine. 0.55 ல் எதிர்பார்க்க முடியாத யூ டர்ன் அடித்து வேறு திசைக்கு போய் லோகல் மெட்டு வருகிறது.ராஜா ஒரு இசை Uturnist.


படம்: கடவுள் அமைத்த மேடை - 1979 பாடல்: மயிலே மயிலே

ஹம்சத்வனி ராக சாயலில் இண்டர்லூட்.வித்தியாசமான prelude.கிடாரையே புல்லாங்குழலுக்கு தாளமாக வைத்துள்ளார்.ஜென்சி என்ற ஒரு இசைக்கருவியும் இதில் உண்டு.

படம்: புதிய வார்ப்புகள் - 1979 பாடல்: தம் தனனம்

நாதங்களில் எலெக்ட்ரானிக் உணர்ச்சிகள் இல்லை. ஏன்? வீணை மீட்டப்படுகிறது. புல்லாங்குழல் ஊதப்படுகிறது. வயலின் வாசிக்கப்படுகிறது.பெண்கள் வாயால் கானம் இசைக்கிறார்கள்.
பின்னாளில் வேறு வழி இல்லாமல் எலெக்ட்ரானிக் கலந்து இசைத்துளிகள் சற்று செயற்கையாகிவிட்டது. மாசு படிந்துவிட்டது.


பின் ஒரு சமயம் High premium romantic interludes பற்றி பார்ப்போம்.

ஒரு சாம்பிள்: (என்ன ஒரு மலர்ச்சியான prelude!)



டெயில் பீஸ்: இது என்னுடைய 25வது இளையராஜா பதிவு


35 comments:

  1. பாடல்களின் இனிமை போலவே ..இது மாதரியான interludes கிளர்த்தும் உணர்வுகளே தனி ..enjoyed ..thanks for sharing ..

    ReplyDelete
  2. அந்த தேருக்கு பின் வரும் வீணையின் வருடல் எத்தனை முறை ரசித்திருப்பேன் ..class

    ReplyDelete
  3. வாங்க பத்மா.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. கலக்கல் சார். இளையராஜா வெள்ளிவிழாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. முரளிகண்ணன் said...

    // கலக்கல் சார். இளையராஜா வெள்ளிவிழாவுக்கு வாழ்த்துக்கள்//

    வாங்க முரளி.ரொம்ப நாளா கணோம்.நன்றி முரளிகண்ணன்.

    ReplyDelete
  6. ரவி ஆழ்கடலில் சென்று மிக அற்புதமாக முத்துகளை அள்ளி வந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.. இயற்கை போல நமக்கு இளையராஜா வாய்த்திருக்கிறார். நாதமும் தாளமும் ஒரு காற்றைபோல் வீசிச்செல்கிறது.. சக்களத்தி பிரிலுட் நான் இதுவரை கேட்டதில்லை.. அவர் சில நேரங்களில் சில ஒலிகளை கண்டுபடித்து பயன்படுத்தியிருப்பார் அது இசைகருவியின் குணத்தை ஒற்றியதாக இருக்காது.. இயற்கையில் காணக்கூடிய ஒன்றாக இருக்கும் உ.ம். அடர் மழையில் வீசும் காற்றின் சத்தம்.. தூரக்காடுகளில் வீசும் ஒங்காரம் இப்படியாக.. அல்லது நாம் நம் நிணைவின் கீறலில் எப்போதோ வந்து போன பெரு ஒலிகள், ஆழ்குளத்தில் தளும்பும் நீரோசை இப்படியாக மிக நுணுக்கமாக இயற்கையை தன்னையறியமால் உள்வாங்கி இருக்கிறார்.. அவர் எடுத்ததெல்லாம் இயற்கையிலிருந்துதான்.. அவரது படைப்புலகில் படைப்புஊற்றுக்கு பஞ்சமில்லை. ஒயாமல் சுரந்துகொண்டேயிருக்கும்...அதைகணக்கிட்டு அமைப்பதுதான் அவரது சாமர்த்தியமும்,புத்திசாலித்தனமும் பங்கு போடும் என்று நிணைக்கிறேன். நாம் மிக அதிர்ஷடக்காரர்கள் ரவி.. நம் வாழ் நாளில் மிக குறைந்த செலவில் கடவுளின் அருகாமைக்கு சென்று வருவது. உனக்கென தானே இன்னெரமா எனும் பாடலை காற்று அலைபாய்வது போன்றே பதிவுசெய்து, பாடலையும் இரவில் ஏங்கி தவிக்கும் மன அலைச்சலை மிக பிரமாதமாக பாட்டாக வடித்தெடுத்திருப்பார்.. நன்றி.. ரவி நன்றி ... பின்னூட்டம் நீண்டுகொண்டயிருக்கிறது....உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் இசைப்பற்றி மட்டுமே உங்கள் பதிவு வரவேண்டும் எனும் ஆசையில் இராஜா.

    ReplyDelete
  7. இசை ராஜாவைப் பற்றி 25 என்ன 100 பதிவு கூடப் போடலாம்.எல்லா பாடல்களும் நான் ரசிப்பவை.குறிப்பாக மயிலே மயிலே (ஜென்சியின் குரலும் இசைக் கருவிதான்),என் கல்யாண வைபோகம்,ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்,அந்தப்புரத்தில் ஒரு மகாராணி ஆகியவை.நல்ல பதிவு.மறந்து விட்ட சில பாடல்களையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  8. நன்றி ராஜா.

    //உனக்கென தானே இன்னெரமா எனும் பாடலை காற்று அலைபாய்வது போன்றே பதிவுசெய்து, பாடலையும் இரவில் ஏங்கி தவிக்கும் மன அலைச்சலை மிக பிரமாதமாக பாட்டாக வடித்தெடுத்திருப்பார்..//

    எனக்கு ரொம்ப பிடித்த்ப்பாட்டு.

    ReplyDelete
  9. ஸ்ரீ said...

    // இசை ராஜாவைப் பற்றி 25 என்ன 100 பதிவு கூடப் போடலாம்.//
    சத்தியமாக. அள்ள அள்ள வரும் அட்சயபாத்திரம் இது.

    // நான் ரசிப்பவை.குறிப்பாக மயிலே மயிலே (ஜென்சியின் குரலும் இசைக் கருவிதான்),என் கல்யாண வைபோகம்,ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்,அந்தப்புரத்தில் ஒரு மகாராணி ஆகியவை.நல்ல பதிவு.மறந்து விட்ட சில பாடல்களையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.//

    இதெல்லாம் இளையராஜாவின் முதல் கட்ட பாய்ச்சல்.

    ReplyDelete
  10. 25வது இளையராஜா பதிவுக்கு வாழ்த்துக்கள் ரவி சார்...
    பின்னி இருக்கீங்க...எல்லாம் பின்னிசை மட்டும்தான். இந்த ஒரு கேட்டகரில ராஜாவை அடிச்சுக்க, ராஜாவால கூட இப்ப முடியாது. அப்படியொரு ஏரியா.
    ‘லலிதகமல’த்திற்குப் பின் வரும் சிறு ரொமான்ஸ் ஏரியா க்யூட்.
    ’பாலூட்டி வளர்த்த் கிளி’ இப்போதுதான் கேட்கிறேன். சிம்பிள்தான். அழகு.
    தீபத்தில் வரும் ‘வயலின் வீணை’ உரையாடல் செம டூயட்.
    ’என் கல்யாண வைபோகமே’- பின்னணி கவுண்டர் பாயிண்ட் நல்லா இருந்தது. கடைவீதி செல்கையில் கைப்பிடித்து வரும் மகன் அவ்வப்போது துள்ளிக் குதிப்பது போல அழகான துறுதுறு தாளம். :)

    ’வாட வாட்டுது’ இது ஒரு தனியான பாட்டு. இதுக்கு தனிப்பதிவே போடலாம். அந்த கிராமத்து சூழல்ல கயிற்றுக்கட்டில்ல படுத்துக்கிட்டு நாமே பாடுற மாதிரி கிராமத்து ராத்திரி ரகசியம் சொல்லிப் போகும் பாடலிது.

    ’கோயில் மணி ஓசை’ பாடல் ஏனோ ஒலிப்பதிவு சரியில்லையோ என்னவோ, எப்போது கேட்டாலும் ஒரு இரைச்ச்ல் போல் எனக்குத் தோன்றும். விரும்புவதில்லை. எனது ரகசிய ப்ளேலிஸ்ட்களில் நாசூக்காகத் தவிர்த்துவிடுவேன்.

    ‘கண்மணியே’- இனிமை. வீணை நல்ல பொருத்தம்.

    ’ஒரு நாள் உன்னோடு ஒருநாள்’- பிரமாதமான ஆர்கெஸ்ட்ரைசேஷன். ரசித்தேன்...

    ’நிழல் தேடும் நெஞ்சங்கள்’ பாடல் இப்போதுதான் கேட்கிறேன். அவரது தனியான ஆல்பம் கேட்ட உணர்வு வருகிறது. விரைவில் பாடலை முழுக்கக் கேட்க வேண்டும். நன்றி...

    பூந்தென்றல் காற்றே- கேட்டதில்லை. ரசித்துவிட்டுச் சொல்கிறேன் சார்.

    ‘மயிலே மயிலே’ தான் டாப் கிளாஸ் பாட்டு இந்தப் பதிவுல, (excluding prelude sample)...செம சாங் அது.

    ‘தம்தனதம்தன’ -இதிலும் எனக்கு ஆர்கெஸ்ட்ரைசேஷன் பிடிக்கவில்லை. நல்ல பாடல் அவ்வளவே...:(

    உங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் சார்...

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. ராஜாவின் பின்னிசையையும், ராஜாவின் பின்னூட்டத்தையும் ரசித்தேன். :)

    ReplyDelete
  13. தமிழ்ப்பறவை நன்றி.(சுருக்கமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க.நேரில் பேசி சுவராசியத்தைக் கூட்டுவோம்)

    ReplyDelete
  14. நண்பரே ராஜா ராஜாதான்.பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  15. ரொம்ப ரசித்தப் பதிவு.நன்றி. குறிப்பாக `என் கல்யாண வைபோகம்`,`வாட வாட்டுது` நீண்ட நாட்களுக்குப் பிற்கு கேட்கிறேன்.உட்கார்ந்த இடத்திலிருந்து நம்மை எங்கோ கூட்டிச் செல்லக்கூடிய சக்தி ராஜாவின் பின்னணி இசைக்குண்டு.

    நன்றி.

    ReplyDelete
  16. நந்தா ஆண்டாள்மகன் said...

    // நண்பரே ராஜா ராஜாதான்.பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே//

    நன்றி நந்தா ஆண்டாள்மகன்.

    ReplyDelete
  17. சென்ஷி said...

    // சூப்பர் :))//

    நன்றி சென்ஷி.

    ReplyDelete
  18. ரா.கிரிதரன் said...

    // ரொம்ப ரசித்தப் பதிவு.நன்றி. குறிப்பாக `என் கல்யாண வைபோகம்`,`வாட வாட்டுது` நீண்ட நாட்களுக்குப் பிற்கு கேட்கிறேன்.//

    வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    //உட்கார்ந்த இடத்திலிருந்து நம்மை எங்கோ கூட்டிச் செல்லக்கூடிய சக்தி ராஜாவின் பின்னணி இசைக்குண்டு.//

    சரியாக சொன்னிங்க.ராஜாவின் இசை அப்படிப்பட்டதே.

    நன்றி.

    ReplyDelete
  19. Hi....

    Nice songs...Lovely descriptions!

    ReplyDelete
  20. தல இசைதெய்வத்தின் 25வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

    எல்லோரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க..அனைவரின் பின்னூட்டத்தையும் வழிமொழிக்கிறேன் ;))

    தல ராஜா அவர்களின் பின்னூட்டத்துக்கு ஒரு ஸ்பெசல் ரீப்பிட்டே ;))

    உங்கள் உழைப்புக்கு எல்லாம் நன்றி எப்போதும் உண்டு ;))

    அப்புறம் நான் எக்ஸாமுக்கு ரெடியாகிட்டேன் ;))

    ReplyDelete
  21. Amazing Sir!

    ரொம்பவும் நுணுக்கமா இசையை ரசிப்பவர்களாலே இம்மாதிரியான விமர்சனம் முடியும் விநாடிகளில் விமர்சனம் செய்ய எப்படி முடிகிறது உங்களால்?

    அத்தனையும் அருமை அதிலும் தந்தனம் தந்தனம் செம!

    High premium romantic interludes

    முதல் செலக்சன் முத்தமிழ் கவியே வருக அசத்தல் தொடரட்டும்!

    ReplyDelete
  22. ராஜா ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர் அனால் உங்களைபோல் இவ்வளவு சிரத்தை எடுத்து செய்ய சிலர் மட்டுமே உள்ளனர்
    25க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. KK said...

    // Hi.... Nice songs...Lovely descriptions!
    October 22, 2010 9:07 PM//

    வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. கோபிநாத் said...

    //தல இசைதெய்வத்தின் 25வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி.

    // அப்புறம் நான் எக்ஸாமுக்கு ரெடியாகிட்டேன் //

    புரிஞ்ச மாதிரி இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.

    ReplyDelete
  25. ப்ரியமுடன் வசந்த் said...

    // Amazing Sir!//

    Raja is amazing so I am amazed!

    // ரொம்பவும் நுணுக்கமா இசையை ரசிப்பவர்களாலே இம்மாதிரியான விமர்சனம் முடியும் விநாடிகளில் விமர்சனம் செய்ய எப்படி முடிகிறது உங்களால்?//

    சிம்பிள்..!கேட்டு கேட்டு பழகுங்கள். பாடல்கள்களோடு வாழுங்கள்.அடுத்து எல்லா வித இசையும் கொஞ்சமாவது கேளுங்கள்.


    ஞாபகம் வைத்து பதிவுக்கு வந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  26. Thekkikattan|தெகா said...

    // Thank you so much!//

    நன்றி தெகா.

    ReplyDelete
  27. மரா said...

    // arumai arumai.//

    நன்றி.

    ReplyDelete
  28. பாலாஜி சங்கர் said...

    //ராஜா ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர் அனால் உங்களைபோல் இவ்வளவு சிரத்தை எடுத்து செய்ய சிலர் மட்டுமே உள்ளனர் 25க்கு வாழ்த்துக்கள்//

    உங்களை மாதிரி ராஜாவின் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதால் ஒரு தெம்பு வருகிறது.

    நன்றி.

    ReplyDelete
  29. ஒவ்வொரு பாட்டா சொல்லி சொல்லி இப்போ உடனே கேட்டாகனும்ன் கற நிலைக்கு என்னை தள்ளி விட்டுடீங்க.நம்தனனம் கேட்டுகிட்டு இருக்கேன் இப்போ
    பேசாம நீங்க ராஜா இசையை ஆராய்ச்சி பண்ணி ph.d பட்டம் வாங்கிடலாம்.நிச்சயம் கிடைக்கும்.இவ்வளவு நுணுக்கமா ஆராய்ச்சி பண்ண முடியுமா?வியக்க வைக்கின்றீர்கள்.ராஜா இது வரை தன்னை பற்றி பேசியதில்லை.அவர் இசை பேசுகின்றது.உங்களை போன்றவர்களையும் பேச வைக்கின்றது.அவர் பாடல்களின் ஊடே போடுகின்ற ஹம்மிங் கே தனி ரசிகர் மன்றம் வைக்கலாம்.பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்...அந்த பாடல் கேட்டா அப்படியே மோக நிலையில் உள்ள பெண்ணின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக பதிவு செய்திருக்கும் அந்த இசை.அதிலும் காற்று வீசும் அந்த காற்றின் பாதிப்பை ஹம்மிங் காட்டி இருக்கும்.அப்பாடா எத்தனை எத்தனை பாடல்கள் அப்படி.

    ReplyDelete
  30. நன்றி உமாகிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!