Saturday, April 17, 2010

அனானிவாலா,தொகுப்பாளினி,கொலை,சுஜாதா

அசோக் நகர் கொலை மர்மம் விடுபட்டுவிட்டது.”நிஜங்கள், புனைவுகளை விட வினோதமானவை”என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

”டாமின்” அதிகாரி,அவர் மனைவி,பணிப்பெண் மூன்று பேரையும் கொன்றவர்களில்(நவம்பர்-2008) ஒருவர் ஒரு வருடம் அமுக்காக போலீஸ் கூடவே இருந்திருக்கிறார்.அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கம்புயூட்டர் சர்வீஸ் டெக்னிஷியனாக.


சொந்த கார் இருந்தும் கொலையாளி நடத்திய டிராவல்சில்தான் கார் வாடகைக்கு அந்த அதிகாரி எடுப்பாராம்.அவருடன் நட்பாகி அவரின் பணம்,நகை விவரங்களை தெரிந்துக்கொண்டு இந்த கொலையை நடத்தி இருக்கிறார்கள்.

நீதி: வெளியாட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவும்.
_________________________

கிரிக்கெட்டில் பாரூக் ”என்ஜினியர்”, நாரி “காண்டராக்டர்” போன்ற பெயர்கள்  சிறு வயதில் கேட்கும்போது வினோதமாக இருக்கும்.ஏன் தொழில் சார்ந்த பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள் என்று. பிறகாலத்தில்தான் தெரிந்தது இவர்கள் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் என்று. இவர்களுக்கு பெரிய வரலாறே இருக்கிறது.தங்கள் முப்பாட்டனார் செய்த தொழிலை பெயரோடு சேர்த்துக்கொள்வது.

டாட்டா,காத்ரெஜ்,வாடியா,ஹோமி பாபா,சூபின் மேத்தா போன்றவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

சில சுவராஸ்யமானபார்சி பெயர்கள்; காஸ்வாலா,கீதா டாக்டர்,டயர்வாலா,காண்டீன்வாலா,ரோன்னி ஸ்குரூவாலா,சோடா-மூடி-ஒப்பனர்வாலா,
டாரூவாலா,ஒயின்வாலா. இதில தவுசண்ட் வாலா சேருமா?

இவர்களின் மூப்பாட்டனர் காலத்தில் பிளாக் இருந்திருந்தால் “பிளாக்வாலா” “பின்னூட்டம்வாலா” “அனானிவாலா” இருந்திருப்பார்கள்.
_________________________

தொலைக்காட்சிகளில் ஆளுமைகளைப் பேட்டி எடுக்கும் தொகுப்பாளினிகள் எடுக்கப்போகும்
துறையைப் பற்றி ”ஹோம் வொர்க்” செய்வது மாதிரி தெரியவில்லை.ஆளுமையை பார்த்து”கெக்கே பிக்கே” என்று இளித்துக்கொண்டு அல்லது கையை ஆட்டிக்கொண்டு ‘ஏனோதானோ” என்று எதையாவது கேட்டுக்கொண்டு எதற்கும் உதவாமல் வேஸ்ட் செய்கி்றார்கள்.

“ கேள்வி கேட்பவர்கள்(பேட்டியில்)  என் பதிலைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படுவதில்லை.அதன் சடுதியில்,விரலின் நகப்பூச்சை வருடியபடியே  அடுத்த கேள்வியை யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்”.
-  சுஜாதா

10 comments:

  1. //இவர்களின் மூப்பாட்டனர் காலத்தில் பிளாக் இருந்திருந்தால் “பிளாக்வாலா” “பின்னூட்டம்வாலா” “அனானிவாலா” இருந்திருப்பார்கள்.//

    ஃப்யூச்சரில் வந்தாலும் வரும். நல்ல கற்பனை சார்!

    -
    DREAMER

    ReplyDelete
  2. அனானிவாலா, பின்னூட்டம் வாலா மேட்டர் சூப்பர்... ரொம்ப பிஸியா சார்...

    ReplyDelete
  3. சுஜாதா சொன்னவற்றில் மறக்க முடியாதவைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  4. தமிழ்ப்பறவை said...
    //அனானிவாலா, பின்னூட்டம் வாலா மேட்டர் சூப்பர்... ரொம்ப பிஸியா சார்../

    பிசியெல்லாம் இல்லை.சிறுகதை வந்து ரொம்ப நாளாச்சு.ஒரு ஐடியாவும் வரவில்லை.கடுப்பாக இருக்கிறது.பாதி வந்து அதுவும் சரியில்லை.

    நன்றி.

    ReplyDelete
  5. பார்சி இனத்தவர்கள் யாரவது இறந்தால், அந்த உடலை புதைக்காமல் எரிக்காமல் Tower of Silence http://en.wikipedia.org/wiki/Tower_of_Silence

    என்ற கட்டிடத்தின் உச்சியில் கிடத்திவிடுவார்கள் என்றும் அவைகளை வல்லூறுகள் உணவாக உட்கொள்ளும் என்றும் படித்துள்ளேன். அது உண்மையா சார். நமது ரத்தன் டாட்டாவும் பார்சி இனத்தை சேர்ந்தவர் என்றும் படித்துள்ளேன்.

    ReplyDelete
  6. ரெண்டு said...
    //பார்சி இனத்தவர்கள் யாரவது இறந்தால், அந்த உடலை புதைக்காமல் எரிக்காமல் Tower of Silence என்ற கட்டிடத்தின் உச்சியில் கிடத்திவிடுவார்கள் என்றும் அவைகளை வல்லூறுகள் உணவாக உட்கொள்ளும் என்றும் படித்துள்ளேன். அது உண்மையா சார்.//

    நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    இப்பொழுது அது சாத்தியமா என்று என்று தெரியவில்லை.

    நன்றி

    ReplyDelete
  7. சுஜாதா இம்மாதிரி நிறைய விஷயங்களை அள்ளிவிட்டு போயிருக்கிறார்..:)

    ReplyDelete
  8. Blogger Cable Sankar said...

    // சுஜாதா இம்மாதிரி நிறைய விஷயங்களை அள்ளிவிட்டு போயிருக்கிறார்..:)//

    ஆமாம்.நக்கல் மன்னன் நல்லசிவம் ஆச்சே அவரு.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!