Wednesday, April 7, 2010

அங்காடித் தெரு - விமர்சனம்

எப்படித்தான்  அவ்வளவு ரகத்துணிகளையும் காட்டி, கஸ்டமர்களுக்கு எதுவும் பிடிக்காமல் போய்,மீண்டும்  பொறுமையாக (திட்டிக்கொண்டே)அழகாக அடுக்கி வைத்து , மறுபடியும் அடுத்த கஸ்டமருக்கு......? என்று பல முறை யோசித்ததுண்டு.

இதுக்குத்தான் சம்பளம் கொடுக்கிறாங்க என்று கஸ்டமர்கள் சொல்வதுண்டு.ஆனால் இந்த குத்தலுக்கு மேல்  இவர்களுக்கு சொல்ல முடியாத ரணங்கள் இருக்கிறது.

நடிகைகளின் விளம்பர சிரிப்பில் பளபளக்கும் பிரம்மாண்ட அடுக்குமாடி துணி கடைகளில் வேலைப் பார்க்கும்(நீல காலர் தொழிலாளர்கள்?) விற்பனைப் பெண்/ஆண் வர்க்கத்தின் வேலையில் சந்திக்கும் அவலங்களை நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளாக அண்ணாச்(சீ)ங்காடித் தெருவில் (ஆவணத்)திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.

இங்கு வேலை பார்க்கும் சேல்ஸ்பிரிவு பெண்/ஆண்களை ஒரு முறையாவது  உற்று பார்க்க வைத்துவிட்டா இயக்குனர்.

ஆரம்பத்தில் ஒரு அண்ணாச்சி கடைக்கு நன்றி சொல்லிவிட்டு,அண்ணாச்சி வட்டாரவழக்கே பேசவிட்டு, மெயின் அண்ணாச்சி அங்காடித் தெருவிலே நடப்பதாகக் காட்டி,ஒரு அண்ணாச்சியே நடிக்க விட்டு, அண்ணாச்சி வட்டரா பெயர்களேயே சூட்டி“இதில் வரும் நிகழ்ச்சிகளும், கதா பாத்திரங்களும் கற்பனையே” என்கிறார் இயக்குனர்.படம் முழுவதும் அண்ணாச்சிகள்,அக்காச்சிகள்தான்.

நெம்ப தெகிரியம் ஜாஸ்தி அண்ணாச்சி.



இந்த மாதிரி சென்னையில் அடுக்கு மாடி செந்தில் முருகன் துணிக்கடையில் கவுண்டர் சேல்ஸ் வேலைப் பார்க்க்கிறார்கள் ஜோதிலிங்கம், கனி. இங்கு இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் முதலாளிகளால் நடக்கும் தொல்லைகள் ஒரு(பல?) பக்கம்.இந்த தொல்லைக்ளுனூடே ஜோதிலிங்கம், கனிக்கும் காதல் மலர்கிறது.

பிறகு காதலுக்கும் கடையே எதிரியாகி பல வித ரணங்களுக்கு பிறகு  கடையை விட்டு வெளியேறுகிறார்கள்.இந்த மெயின் கதையோடு சில கிளை கதைகளூம்.

வழக்கமான காதலாக சொல்லாமல் பணியிட தொல்லைச்சார்ந்து  அதனுடன் பின்னிப்பிணைந்து love-hate ஆகச் சொல்லி இருப்பது அற்புதம்..எல்லா காட்சிகளுமே இப்படி ஒட்டி வரும்படி செய்த இயக்கனருக்கு பாராட்டுக்கள்.
குழப்பமில்லாமல் தெளிவாகப் போகும் திரைக்கதை.யதார்த்தமான வசனங்கள்.சென்னையில் கதை நடந்தாலும் முக்கால்வாசி “அண்ணாச்சி” மொழிதான்.

அச்சு அசலாக காட்சியின்  பின்னணிகளூம்.

அஞ்சலி(கனி), மகேஷ் (ஜோதிலிங்கம்) ரொம்ப யதார்த்தமாக வந்து தாக்குகிறார்கள். மகேஷுக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்.அஞ்சலியும் அச்சு அசலாக அப்படியே இருக்கிறார்.இதில் வரும் அஃறிணை உயர்திணை எல்லாமே உயிரோட்டத்துடன் உலாவ விடுகிறார் கேமரா மேன் ரிச்சர்ட் நாதன்.நண்பனாக வரும் பாண்டி,சூப்பர்வைசர் வெங்கடேஷ் இருவரும் மனதில் நிற்கிறார்கள்.

முதலில் வரும் சென்னை இரவு காட்சிகள் ரொம்ப யதார்த்தம்.

நடுவில் ”காதல்” படம் நினைவு வருகிறது.மகேஷின் முகம் நடிகர் பரத்தை வேறு நினைவுப்படுத்துகிறது.இந்த மாதிரி  ரெண்டு அல்லது மூன்று நாள் தாடி “பாண்டிபயல்கள்’ படத்திற்கு படம் தோன்ற ஆரம்பித்துவிட்டதால் ஸ்டிரியோடைப் ஆகி விட வாய்ப்பு இருக்கிறது. இனி வரும் படங்களில் தவிர்க்க வேண்டும்.

சரி... இவ்வளவு யதார்த்தமாக இருக்கும் படம்  நிறைவு  தருகிறதா?

படத்தின் நீள............ம்.வேண்டாத  ஒரு பக்க கதைச் சொருகல்கள் பல. முதலில் நெஞ்சில் அறைந்த வந்த பணியிட அவலக்காட்சிகள் ஒரு கட்டத்தில் ஓவர் டோசாகி நீர்க்கிறது. ஒரு கட்டத்தில் இயக்குனருக்கும் அண்ணாச்சிக்கும் ” பெர்சனல் வெஞ்சன்ஸ் போல” என்றும் எண்ணும்படி வைக்கிறார்

அடுத்து பழைய கால படம் போல ஓடினார்கள்,ஓடினார்கள் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினார்கள் என்றபடி சோகத்தைப் ரெடிமேட் பீஸ் போல் அடுக்கித் தாக்குகுகிறார் வசந்தபாலன்.ஓவர் மெலோடிராமா. யதார்த்தம் நீர்க்கிறது. “நறுக்” என்று சொல்லி அறைந்திருக்கலாம்.

வெட்டி ஒட்டி இருந்தால் படத்திற்குப் படமும் அவர்களின் அவலங்ளைச் சொன்ன மாதிரியும் பளிச்சென்று இருந்திருக்கும்.

இப்படத்தில் இரண்டு பேர் இசையமைத்திருக்கிறார்கள்.விஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ்.

”அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்ற கல்யாணி ராகத்தில் போடப்பட்டமெலடி இனிமை."உன் பெயரை சொல்லும்” ஓகே ரகம்.”கண்ணில் தெரியும்” அப்பட்டமான ரஹுமான் சாயல் பாட்டு.

பின்னணி இசை: விஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ். இரண்டு பேரையும் அதே அண்ணாச்சி கடையில் சேல்ஸ் பிரிவில் ஒரு வருடம் வேலை பார்க்கச் செய்ய வேண்டும். பின்னணி படு மட்டம்.காட்சியின் உணர்ச்சிகளைப் வெளிப்படுத்தாமல் ”“டொட்டொய்ங் டொட்டொய்ங்”வாசிக்கிறார்கள்.அற்புதமாக மூட் லைட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சியின் செத்து சவமாகிறது.

உதாரணமாக கடை முதலாளி பிள்ளையாரை கும்பிடும் காட்சிப்பின்னணியில்,வயலினில் வெஸ்டர்ன் கிளாசிகல்.பொருந்தவே இல்லை.

படத்தில் கும்பல் கும்பலாக கேரக்டர்கள் வருவதால் இசைக்கும் கும்பலா?நான் வலது பக்கம் நீ இடது பக்கம் என்று பிரித்து அடித்திருக்கிறார்கள்.


டெயில் பீஸ்:

படத்தின் இடைவேளையில் “நந்தலாலா” வின் முன்னோட்டம் காட்டப்பட்டது.அதில் ஒரு லாங்க் ஷாட் காட்சியில், highwayல் மோட்டாபைக் ஒன்று வருகிறது.அதன் பின்னணி இசையை கேட்க வேண்டிவிஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

உடனே சங்கம் தியேட்டர் செல்லவும்.

இசை யார் ??????????

27 comments:

  1. //இசை யார் ??????????//

    இசையராசாவை தவிர வேறு யாராக இருக்கும்?

    ReplyDelete
  2. பின்னணி இசை: விஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ். இரண்டு பேரையும் அதே அண்ணாச்சி கடையில் சேல்ஸ் பிரிவில் ஒரு வருடம் வேலை பார்க்கச் செய்ய வேண்டும். பின்னணி படு மட்டம்.காட்சியின் உணர்ச்சிகளைப் வெளிப்படுத்தாமல் ”“டொட்டொய்ங் டொட்டொய்ங்”வாசிக்கிறார்கள்.அற்புதமாக மூட் லைட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சியின் செத்து சவமாகிறது.
    மிகவும் ரசித்த வரிகள். அர்புதமான விமர்சனம்.
    அது ஏன் சங்கம் தியேட்டர் ? கமலா கூடாதா? “நந்தலாலா” மிக அருமையான படம் எண்று பார்தவர்கள் கூற அறிகிரேன்.

    ReplyDelete
  3. வாட் ஏ கோ இன்சிடன்ஸ்

    ReplyDelete
  4. Blogger யுவகிருஷ்ணா said...

    //இசையராசாவை தவிர வேறு யாராக இருக்கும்?//

    ஆஹா....! ராசா....வா? எஸ்.எம்.சுப்பையா நாயுடுன்னு நெனச்சேன்(அன்னையின் ஆணை)

    ReplyDelete
  5. Blogger radhu said...

    //அர்புதமான விமர்சனம்.//

    நன்றி.சேட்டு படம் பாத்திட்டியா?

    //அது ஏன் சங்கம் தியேட்டர் ? கமலா கூடாதா? “நந்தலாலா” மிக அருமையான படம் எண்று பார்தவர்கள் கூற அறிகிரேன்.//

    அவங்க வீட்டுப் பக்கத்துல என்ன தியேட்டர் இருக்கோ அங்கபோய் பாக்கட்டும்.பெட்ரோல் செலவு மிச்சம்.

    ReplyDelete
  6. Blogger அதிஷா said...

    //வாட் ஏ கோ இன்சிடன்ஸ்//

    எதுல கோ இன்சிடென்ஸ் அதிஷா?

    ReplyDelete
  7. Blogger Karthick Krishna CS said...

    // nandalala music ilaiyaraja//

    ஆஹா! ரசிகனுக்கு மேஸ்ட்ரோ இசை தெரியாமல் இருக்குமா?

    நன்றி கார்த்திக்.

    ReplyDelete
  8. ஒரெ அழவாச்சி படம் என்று னினைததால் இது வரை பார்க்கவில்லை
    உன் பதிவை பார்தபின்பு ஆவல் உண்டாகிறது

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம் ரவி. படம் ஆரம்பிச்சு அந்த ஆக்சிடெண்ட் சீனும்,
    அந்த கேண்டின் சீனும் பாத்து முடிக்கற்துகுல்லயே எனக்கு சோகம் ஒவர் டோஸ் ஆய்டுச்சு. படம் நல்ல படந்தான் ஆனா பாக்க முடியல.

    ReplyDelete
  10. இராமசாமி கண்ணண் said...

    //நல்ல விமர்சனம் ரவி. படம் ஆரம்பிச்சு அந்த ஆக்சிடெண்ட் சீனும்,
    அந்த கேண்டின் சீனும் பாத்து முடிக்கற்துகுல்லயே எனக்கு சோகம் ஒவர் டோஸ் ஆய்டுச்சு. படம் நல்ல படந்தான் ஆனா பாக்க முடியல//

    நிறைய எடிட் பண்ணி இருக்கலாம்.

    ReplyDelete
  11. நல்ல விமர்சனம் ரவி.விஜய்ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ் இயலாமை இயக்குனர் வசந்த பாலனின் தவறு ,விட்ரலாம் பாவம் சின்ன பசங்க.100 தடவை ராஜா பிஜிம் பாத்தாலும், அவங்க அப்படித்தான் அடிப்பாங்க - by
    thangalin arukil amarnthu padam partha rasigan seat no c7, remember me?

    ReplyDelete
  12. sakthi said...
    sakthi said...

    //- by
    thangalin arukil amarnthu padam partha rasigan seat no c7, remember me?//

    வாங்க சக்தி.வருகைக்கு நன்றி.மறக்க முடியுமா? என்னுடைய இரண்டு பேனாக்களும் மக்கர் செய்ய, உங்கள் பேனாவில்தான் குறிப்பு எடுத்தேன்.
    குறிப்புதான் விமர்சனம் எழுத முடிந்தது.

    //நல்ல விமர்சனம் ரவி.விஜய்ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ் இயலாமை இயக்குனர் வசந்த பாலனின் தவறு //

    ஆமாம வசந்தபாலனின் தவறுதான்.

    ReplyDelete
  13. என்ன ரவி “பையா” விமர்சனம் எப்போது?

    ReplyDelete
  14. படத்தோட நிறைய ஒன்றி விட்டீர்கள் போல் தெரிகிறது சார்,...
    ஆனால் நிறைய காட்சிகள் என்னை ஒன்றவிடவில்லை.காட்டப் படும் கஷ்டங்களில் 90 சதம் உண்மை இருப்பினும்கூட, அவற்றைக் காட்டிய விதம் ஒரு வித சீரியல் தொனியிலேயே இருந்தது. இதே படத்தை பி. வாசு எடுத்திருந்தால் பாராட்டி இருக்கலாம். வசந்தபாலனும் அதே போல் காட்டி இருக்கிறார். அதுதான் சோகம். துணிச்சலான கதைக் களனில் இறங்கிய வசந்தபாலன் அதனைச் செல்லுலாய்டில் செதுக்குவதில் நிறையவே கோட்டை விட்டாற்போல்தான் தெரிகிறது.
    //வெட்டி ஒட்டி இருந்தால் படத்திற்குப் படமும் அவர்களின் அவலங்ளைச் சொன்ன மாதிரியும் பளிச்சென்று இருந்திருக்கும்.
    //
    சரியான கருத்து,...
    யுவகிருஷ்ணாவின் விமர்சனமும் படித்துவிடுங்கள்... அதே கருத்துக்கள்தான் என்னுடையதும்.

    ‘பையா’ பார்த்தாச்சா...? லாஜிக் எல்லாம் பார்க்காம பார்த்தா க்ளீன் எண்டர்டெயினர்...சாங்க்ஸ் கலக்கல்.

    ReplyDelete
  15. ரவி உனது இளயராஜா(15)ல் எப்படி பொன்மாலை பொழது (நிழல்கள்) இல்லாமல் போனது. என்னை பொருத்த வரை கடந்த ணூற்ராண்டின் சிறந்த பாடல். (Song of the Last Century) அப்பா! உனது ஆராய்ச்சி உடனடி தேவை.

    ReplyDelete
  16. Blogger radhu said...

    //என்ன ரவி “பையா” விமர்சனம் எப்போது?//

    ”பையா” பார்ப்பதாக ஐடியா இல்லை.
    எல்லாப் படமும் பார்ப்பதும் இல்லை.பார்க்கின்ற எல்லா படமும் விமர்சனம் எழுதுவதில்லை.

    அஜித்,விஜய்,சூர்யா போன்றவர்களின் மசாலா படங்கள் என் பையனுக்காகப் சில் சமயம் போவதுண்டு.

    Cost factor is also a reason.

    ReplyDelete
  17. // படத்தோட நிறைய ஒன்றி விட்டீர்கள் போல் தெரிகிறது சார்,...
    ஆனால் நிறைய காட்சிகள் என்னை ஒன்றவிடவில்லை.//

    ரசனை மாறும்.யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

    //காட்டப் படும் கஷ்டங்களில் 90 சதம் உண்மை இருப்பினும்கூட, அவற்றைக் காட்டிய விதம் ஒரு வித சீரியல் தொனியிலேயே இருந்தது.//

    100% சரியான கருத்து.அதான் என் விமர்சனத்தில் நிறைய ஒரு பக்க கதைகள் சைடில் சொல்லுகிறார் என்றேன்.

    // துணிச்சலான கதைக் களனில் இறங்கிய வசந்தபாலன் அதனைச் செல்லுலாய்டில் செதுக்குவதில் நிறையவே கோட்டை விட்டாற்போல்தான் தெரிகிறது.//

    இதுவும் 100% சரி.
    // யுவகிருஷ்ணாவின் விமர்சனமும் படித்துவிடுங்கள்... அதே கருத்துக்கள்தான் என்னுடையதும்//

    படித்ததாக ஞாபகம். பார்க்கிறேன்.

    // ‘பையா’ பார்த்தாச்சா...? லாஜிக் எல்லாம் பார்க்காம பார்த்தா க்ளீன் எண்டர்டெயினர்...சாங்க்ஸ் கலக்கல்//

    "radhu"போட்ட பின்னூட்டத்தைப் பார்க்க.

    நன்றி.

    ReplyDelete
  18. Blogger radhu said...

    ”ரவி உனது இளயராஜா//

    அடேய்... அனந்து ”நம்ம” ராஜாடா!

    இது ராஜாவின் எந்த பதிவின் கமெண்ட்என்று தெரியவில்லை.நீ போடும்போது அந்த பதிவின் கிழேயே போடு.எனக்கு வந்துவிடும்.

    தயவு செய்து உறுதி (தலைப்பை கோட் செய்)செய்யவும்.பிறகு பதில் சொல்லுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  19. Blogger radhu said...

    // ரவி உனது இளயராஜா(15)ல் எப்படி பொன்மாலை பொழது (நிழல்கள்) இல்லாமல் போனது//

    இது எந்த பதிவின் கமெண்ட் என்று தெரியவில்லை.எப்போதும் அந்தந்த பதிவின் கிழே கமெண்ட் போடவும். எனக்கு தெரிந்துவிடும்.

    கன்பார்ம் செய்யவும்.(தலைப்பை கோட் செய்)

    நன்றி.

    ReplyDelete
  20. /என்ன ரவி “பையா” விமர்சனம் எப்போது?//

    ”பையா” பார்ப்பதாக ஐடியா இல்லை.
    எல்லாப் படமும் பார்ப்பதும் இல்லை.பார்க்கின்ற எல்லா படமும் விமர்சனம் எழுதுவதில்லை.

    அஜித்,விஜய்,சூர்யா போன்றவர்களின் மசாலா படங்கள் என் பையனுக்காகப் சில் சமயம் போவதுண்டு.

    Cost factor is also a reason.

    நல்ல வேளய சாரு நிவேதிதா போல் டிக்கட் அனுப்ப சொல்லாமல் விட்டதற்கு நண்றீ.

    ReplyDelete
  21. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  22. என்ன சார். ஒரு வாரமா கடைபக்கமா காத்தாடுது.....

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  23. www.bogy.in said...

    //தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    நன்றி.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ரெண்டு said...

    //என்ன சார். ஒரு வாரமா கடைபக்கமா காத்தாடுது.....//

    புல்லரிக்குது.நம்மளகூட ஒருத்தரு கேட்கிறாரே.இதில irony என்னென்னா
    போடாத பதிவுக்கு பின்னூட்டம் வருது.

    நன்றி ரெண்டு(ராம்).

    //தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    நானும் யோசிக்கிறேன் ஒண்ணும் மைண்டல வரல.ஒரு சிறுகதையும் பாதில நிக்குது.

    ReplyDelete
  25. //பழைய கால படம் போல ஓடினார்கள்,ஓடினார்கள் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினார்கள் என்றபடி சோகத்தைப் ரெடிமேட் பீஸ் போல் அடுக்கித் தாக்குகுகிறார் வசந்தபாலன்.ஓவர் மெலோடிராமா. யதார்த்தம் நீர்க்கிறது. “நறுக்” என்று சொல்லி அறைந்திருக்கலாம்.// ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  26. கருத்துக்கு நன்றி அநன்யா மஹாதேவன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!