Monday, April 5, 2010

வலைத் திரை விமர்சனங்கள்....படிப்பதில்லை?!

வலைத் திரை விமர்சனங்கள்....படிப்பதில்லை ஆனால் படிக்கிறேன்.(????)பொதுவாக ரொம்ப ரொம்ப ரொம்ப ஊன்றிப் படிப்பதில்லை.தொலைக்காட்சியும் அஃதே.

பத்திரிக்கைகளிலும் இதேயே பின்பற்றுகிறேன்.காரணங்கள் பல இருக்கின்றன.படம் பார்க்கும்போது பின் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்(ஏற்கனவே பார்த்துவிட்டு இப்போது அல்டுபவர்) முன்னோட்டம் விட்டுக்கொண்டே வந்தால் எப்படி இருக்கும்.அதே பீலிங்தான்.

1.கதைத் தெரிந்து பார்க்கும்போது சுவராஸ்யம் போய்விடும்
2.விமர்சகரின் பார்வை மண்டையில் தேங்கி சொந்தப்புத்தி மழுங்கும்
3.பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவரும் படங்களின் விமர்சனத்தை தொடுவதில்லை
4.வேண்டாத விஷயங்கள் பொழுதுபோக்கு வால்யூவைக் குறைக்கும்
5.வேண்டாத விஷயங்கள், பார்க்கும்போது ஹைலைட் ஆகும்.
6.என் சொந்த ரசனையில் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம்தான் முக்கிய காரணம்.

”ஆனால் படிக்கிறேன்” எப்படி? அதற்கு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறேன்.ஒரு பறவைப் பார்வை(bird"s eyeview)பார்ப்பது.கதை விவரித்தலோ,நுண்ணரசியலோ,காட்சி விவரித்தலோ,படத்தின் மெயின் பாயிண்ட் பற்றியோ,குறை நிறைகள் பற்றியோவரும் வரிகளை மாஸ்க்(mask)அல்லது மைம்(mute/mime) செய்து படிப்பது.அதாவது ”சர்ரென்று தாவி” அடுத்த அல்லது கடைசிக்கு வந்துவிட வேண்டும்.

எல்லா விமர்சனமும் இது மாதிரி படித்து சக்கையாக பிழிந்தால் “ஓகே அல்லது நாட் ஓகே” தெரிந்துக் கொள்ளலாம்.

இதற்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

விமர்சனம் படிக்கமாலேயே சில படங்களைசுலபமாக நாடி பிடித்துவிடலாம்.அதிக அளவில் வரும் விமர்சனம்.”சர்ரென்று தாவி”படிக்கும் டெக்னிக்லிலும் கண்டுகொண்டேன்.

(ஈரம்,ஆ.ஒ.,வி.தா.வ,உ.போ.ஒ).உதாரணமாக ”ஈரம்” படத்திற்கு நிறைய விமர்சனங்கள். படம் ”சங்கர் தயாரிப்பு” என்ற பில்ட் அப் தவிர அதற்கு வேறு ஒன்றும் இருந்தார் போல் தெரியவில்லை.ஆனால் படம் சூப்பர்.

தீராத விளையாட்டு பிள்ளை,ஜக்குபாய்,போர்களம்,மாத்தியோசி,தம்பிக்கு இந்த ஊரு,அசல்,மற்றும் கேபிள் சங்கர் மட்டும் பார்க்கும் படங்கள்.இதெல்லாம் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை என்பது  விமர்சன எண்ணிக்கையில் தெரிந்தது.

சில படங்களின் விமர்சனங்களை தொடுவது கூட இல்லை.

சினிமா தவிர மற்ற பதிவுகளையும் ஒரு ஸ்பீட் ஸ்கேன் செய்தால் சிலது “வெத்து” பதிவு என்று தெரிந்துவிடும்.எஸ்கேப் ஆகிவிடலாம்.சில பதிவுகள் முதல் இரண்டு வரிகளிலேயே சாயம் வெளுக்கும்.

படம் பார்த்தவுடன் ”சில” விமர்சனங்கள் மட்டும் ”ஊன்றி” படிப்பதுண்டு.பார்வையை மேம்படுத்திக்கொள்ள.

படிக்க திரை விமர்சனம்:நாகேஷ்-சோப்பு, சீப்பு,கண்ணாடி-சிரிப்பு

12 comments:

  1. ரவி என்ன கூற விழைகிறாய் - மொக்கை தாஙலை

    ReplyDelete
  2. வணக்கம் திரு.ரவி, நீங்கள் கூறிய அதே மின்னஞ்சல் தான். உங்களது குழந்தை பற்றிய பதிவு

    http://raviaditya.blogspot.com/2009/06/blog-post_8967.html

    மிக நன்று.

    நன்றிகளுடன்,
    ராம்

    ReplyDelete
  3. radhu said...

    // ரவி என்ன கூற விழைகிறாய் - மொக்கை தாஙலை//

    சேட்டு...! இவ்வளவு பெரிய பதிவு போட்டு மொக்கையா?பதிவுலேயே இருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  4. Blogger ரெண்டு said...

    // வணக்கம் திரு.ரவி, நீங்கள் கூறிய அதே மின்னஞ்சல் தான். உங்களது குழந்தை பற்றிய பதிவு//

    நன்றி ராம்.

    ReplyDelete
  5. பயிற்சியில் நான் கொஞ்சம் தேறிட்டேன் தல...ஏற்கெனவே அப்படித்தான்...

    அதிகம் உலாத்துவதும்,நிரம்ப படிச்சு குழம்புவதும் தேவையற்றவை...

    இந்த கருத்துக்கள் எப்படி உங்களுக்கு தெரிஞ்சது...?

    ReplyDelete
  6. நானும் இந்தமாதிரி பலதடவை அனுபவப் பட்டாலும், திருந்த மாட்டேன்கிறேன்...
    சமீபத்திய சூடு... அங்காடித் தெரு...
    இது பற்றிய உங்கள் பார்வையை எதிர்பார்க்கிறேன்...கம்ப்பேர் செய்ய...

    ReplyDelete
  7. நன்றி கும்க்கி.

    ReplyDelete
  8. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  9. நான் பெரும்பாலும் திரைப்பட விமர்சனங்களை படிப்பதில்லை

    ReplyDelete
  10. Blogger Sugumar (சுகுமார்) said...

    //நான் பெரும்பாலும் திரைப்பட விமர்சனங்களை படிப்பதில்லை//

    வாங்க சுகுமார்.படிக்காம இருக்கிறது இதுவும் ஒரு வகையில் ரொமப நல்லதுதான்.

    நன்றி.

    ReplyDelete
  11. //என் சொந்த ரசனையில் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம்தான் முக்கிய காரணம்.// சரியாச்சொன்னீங்க. நானும் அதே ரகம் தான். சில விமர்சனங்களின் தாக்கத்தால் நமது ஒரிஜினாலிட்டியை இழந்து விடுகிறோம். நல்ல ஆராய்ச்சி.
    இதுக்கு தான் நான் சுருக்கமா விமர்சனம் எழுதறேன். மொத்தமே 4 வரி தான் எழுதுவேன். பிடிச்சிருந்தா மட்டும் மேல ரெண்டு வரி இருக்கும். மத்தபடி சினிமா விமர்சனம் எழுதற அளவுக்கு எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறவ நான். நீங்க சொல்ற bird's eye view மாதிரி தான் இருக்கும். ஆனா பாருங்க, முக்கால் வாசி மலையாளப்படங்கள் தான் இங்கே வரும். தமிழ் எல்லாமே பாடாவதியா இருக்கறதுனால அந்த விமர்சனங்கள் இடம் பெறாது. ஹீ ஹீ

    ReplyDelete
  12. //மத்தபடி சினிமா விமர்சனம் எழுதற அளவுக்கு எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறவ நான்.//

    எழுத எழுத தானே வரும்.முயற்சி செய்யுங்கள்.நன்றி அநன்யா மஹாதேவன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!