Wednesday, September 14, 2011

நாம அவங்க மாதிரி சந்தோஷமா இருக்கமா?


நான் ஒரு விஷயத்தை அடிக்கடி யோசித்து பொறாமைப்-
படுவதுண்டு.

நம் தாத்தாக்கள், பாட்டிகள் நம்மை விட சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்று.அவர்களுக்கும் குறைகள் இல்லாமல் இல்லை.அதையும் மீறி சிறுகக் கட்டி பெரு வாழ்வு வாழ்ந்தார்கள்.அடுத்த தலைமுறைக்கு சொத்து விட்டு சென்றார்கள்.இத்தனைக்கும் வசவசவென்று புள்ளைக்குட்டிகளுடன்.

வாழ்க்கையில் அமைதியும் ஆரோக்கியமும் இருந்தது.காரணம் நிதானமான வாழ்க்கை.தேவைகள் குறைவு. மிக மிக குறைவான விஞ்ஞான வளர்ச்சி.

முப்பாட்டன் பாட்டிகளை விடுங்கள்.  பின்னாடிக் கூட நிதானமான வாழ்க்கை இருந்தது.
நான் சிறுவனாக 1970-80களில் சென்னை நகரம் இரவு 10 அல்லது 10.30 மணிக்கு ஜில்லோவென்று ஆகி பஸ்கள் ஷெட்டுக்குத் திரும்பும்.அதுவும் நாங்கள் இருந்த குரோம்பேட்டை 8.30-9 மணிக்கு அடங்கிவிடும்.ஊரே அடங்கிவிட்ட சில மணி நேரம் கழித்து ஜன்னல் வழியாக தெருவைப்பார்த்தால் வெறிச்சோடி கிடக்கும். ”பொழச்சு கடந்த பாத்துக்கலாம்” என்று தயிருக்கு உறைக் குத்தி,மீந்த சாதத்தில் நீர் ஊற்றி விட்டு ஊர் தூங்கி இருக்கும்.

 ”அட நாம ஒண்டி ஏன் முழுச்சிட்டு இருக்கோம்” என்ற குற்ற உணர்ச்சியில் நமக்கும் தூக்கம் வந்துவிடும்.

ஊர் அடங்கியதில் ஒரு ஆரோக்கியம் தெரியும். அமைதி இருக்கும். நிம்மதியை உணரலாம்.

இப்போது அவசரமான வாழ்க்கை. அவசர சாப்பாடு.அவசர ஆபிஸ்.அவசர இன்பம்.அவசர சாவு.பல பேர் இதெல்லாம் தெரியாமலேயே இதுதான் வாழ்க்கை என்று வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியால தேவைகள் அதிகமாகிவிட்டது.
அடிமையாகி நுகர்வு கலாச்சாரம் வந்துவிட்டது.சுயநலம்.விலைவாசி.
முக்கியமாக வீட்டு வாடகை.80/90களில் வீடு வாங்கியவர்கள் பாக்கியசாலிகள்.இளைஞர்கள் திருமணம் செய்ய பயப்படுகிறார்கள். என்னமோ ஏதோ என்று வாழ்க்கை ஓடுகிறது.

உண்மையான தேவைகளின் விலை அதிகமாகிவிட்டது.

கணவன் மனைவி இரண்டு பேர் வேலைப் பார்க்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு கிழ் உள்ளவை அவசியமாகிவிட்டது.ஒரு காலத்தில் இதெல்லாம் டாம்பீகம்(luxury).

கிரைண்டர்,மிக்ஸி,செல்போன்,வாஷிங்
மெஷின்,பைக்,கணினி,வாட்டர்கேன்,டிவி,கேஸ்,மஸ்கிட்டோ மேட்,ஏசி,EMI.

டிஸ்கி: மந்தார இலை,அலுமினியம், எவர்சில்வர்,பிளாஸ்டிக் டப்பா,ஹாட் பேக் எல்லாம் போய் இப்போது Tupperware  டிபன் பாக்சில் டிபன் எடுத்து வந்தால்தான் கெளரவம்.

10 comments:

 1. உண்மைதான் நண்பா..

  அவசரம்
  வேகம்
  விரைவு
  பரபரப்பு
  ஓட்டம்

  நகரத்துக்குச் சென்றால் நமக்கும் இந்த பரபரப்பு பற்றிக்கொள்கிறது.

  ReplyDelete
 2. நாம் மகிழ்ச்சியா இருப்பது போல நடிக்கிறோம்!!

  உலகத்திலேயே அதிகமாகச் சொல்லப்படும் பொய்???


  நான் நல்லாயிருக்கேன்!!

  என்பதுதானே நண்பா.

  ReplyDelete
 3. கண்ணதாசன் ஒருமுறை ஒரு கூட்டத்துக்குச் செல்ல காலதாமதமாகிவிட்டதாம்..

  ஓட்டுநர் மிக விரைவாக ஓட்டினாராம்.

  அதற்கு கவிஞர்..

  ஏனப்பா இவ்வளவு விரைவா ஓட்டுறன்னு கேட்டாராம்.

  ஓட்டுநரோ..
  ஐயா விரைவாகப் போனால் தானே கூட்டத்துக்குச் சரியாகப் போகமுடியும் என்றாராம்.

  அதற்குக் கவிஞர்..


  “10 நிமிடம் காலதாமதமா போனால் தப்பில்ல
  10 வருடம் முன்னாடியே போயிடக்கூடாதுல்லப்பா“

  என்றாராம்.

  இந்த செய்திதான் எனக்குத் தங்கள் இடுகையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது நண்பா.

  என்னை கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தங்கள் இடுகை இருந்தது

  மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. இன்னும் விரிவா நிறைய எழுதுங்களேன்.. இதை படிக்கும்போதே பொறாமையா இருக்கு.. அதுவும் அந்த 9.30 மணி தூக்கம், கிளாஸ்!

  ReplyDelete
 5. முனைவர்.இரா.குணசீலன் said...

  //நகரத்துக்குச் சென்றால் நமக்கும் இந்த பரபரப்பு பற்றிக்கொள்கிறது. //உலகத்திலேயே அதிகமாகச் சொல்லப்படும் பொய்???//

  சத்தியமான வார்த்தை குணசீலன்.

  //“10 நிமிடம் காலதாமதமா போனால் தப்பில்ல
  10 வருடம் முன்னாடியே போயிடக்கூடாதுல்லப்பா“//

  படித்திருக்கிறேன்.நினைவு படுத்தியதற்கு நன்றி.

  நன்றி

  ReplyDelete
 6. நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. நன்றி அதிஷா

  //இன்னும் விரிவா நிறைய எழுதுங்களேன்..//

  நிறைய எழுதினேன். ஆனால் சுருக்கி விட்டேன்.சுய புராணம் ஆகிவிடுமோ என்று.

  ReplyDelete
 8. நன்றி குடிமகன்.

  ReplyDelete
 9. இன்றைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத நிலை இருப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் கூறிய டாம்பீக பொருட்கள்தான். இவைகளினால் மகிழ்ச்சியான வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் அறியாமலே.....

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!