போன வாரம் என் பையன் ஒரு கேள்வி கேட்டான்.”என்ன சின்ன வயசுல தூங்க வைக்க அம்மா ஒண்ணு சொல்லி பயமுறுத்துவாங்களே தெரியுமா?”
”தெரியுமே. அது “ மியாவ்... மியாவ்... தூங்கு இல்லேன்ன பூன வரும்”
”அதெல்லாம் எங்கப்பா இப்போ?”
”தெரியலப்பா” என்றேன்(நாயகன் கமல் ஸ்டைலில்)
ஆமாம். பாத்து ரொமப நாளாச்சுல்ல.அப்போதுதான் யோசித்தேன். கடைசியா பூனையப் பார்த்தது எப்போது?மெத்துமெத்தென்ற உடலமைப்போடு மற்றும் அழகான கண்களை உடைய குட்டி பிராணி.ஆனால் கருப்பாக இருக்கும் அந்தக் கடுவன் பூனைக்கு ஒரு டெரர் லுக் இருக்கும்.
நகரங்களில் முன்பு போல் பூனைகள் இப்போது அதிகம் கண்ணில் தென்படுவதில்லை.( கிட்டத்தட்ட 90% அழிந்துவிட்டது?)எதிர்பார்க்காத தருணங்களில்"மியாவ்” என்று மீட்டர் பாக்ஸ் அடியிலும், துள்ளிக்குதித்தபடி அல்லது தாவியபடி, மதிலில்(cat walk) நடந்தபடி ரோடை(குறுக்கே?) கிராஸ் செய்தபடி வழக்கமான சாம்பல் அல்லது பிரெளன் நிறப் பூனைகள் கண்ணில் தட்டுப்படும்.இப்போது?
கார்டூன்களிலும் அனிமேஷன் படங்களிலும் தான் இருக்கிறது பூனை.பேஷன் ஷோக்களில் cat walk இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வில்லன் மடியில் ஒரு பூனையை வைத்திருப்பார்.
கிராமங்களில் எலித்தொல்லையினால் பூனை வளர்ப்பார்கள்.அடுத்து காத்து கருப்பு,பூனை இருக்கும் இடத்தில் அண்டாது என்பார்கள். அது இருக்கும் இடத்தில் வினை வைக்க முடியாது என்பது ஒரு நம்பிக்கை.அதே கிராமத்தில் பூனைக்குப் பிடித்த பாலை அதற்கு வார்க்காமல் பாம்பு புற்றிற்கு வார்ப்பார்கள்.
ஏன் குறைந்துவிட்டது? அதற்கான இடங்கள் இல்லை. மனிதனால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தனி வீடுகளில் அதற்கான இடங்கள் நிறைய இருந்தன.பிளாட்டுகளில் இல்லை.அதன் முக்கிய உணவான எலி,ஓணான்,அரணை எல்லாம் அழிந்ததால் உணவு சங்கிலி அறுபட்டு பூனையும் அழிய ஆரம்பித்துவிட்டது.நீர் நிலைகளும் மறைந்துவிட்டது.
குட்டிகளைப் பிரசவிப்பதற்கு மறைவு இடம் தேவை.அது சற்று குளிர்ச்சியாகவும் உணவுகளைக் கொண்டு வர வசதியாக இருக்க வேண்டும்.அது எங்கு நகரத்தில் இருக்கிறது.
நாய்கள் பெருக்கமும் பூனைக்கு அழிவுக்குக் காரணம்.மக்களுக்கு இதையெல்லாம் போஷித்து வளர்ப்பதில் இம்மியளாவும் ஆர்வம் இல்லை.
அதிகமாக இருந்தக் காலத்தில் இவைகள் செய்த அட்டகாசங்கள் சொல்லிமாளாது.நடு ராத்திரியில் பாத்திரங்களை உருட்டும். இதுகள் “காதல்”(mating) செய்யும் சமயத்தில் வரும் ஓசை கர்ணகடூரமானது.அதே ஓசைப்படாமல் எவ்வளவு நாள் பாலைக் குடித்திருக்கிறது.நாங்கள் இரண்டு பேர் வேலைக்குப் போகும்போது இண்டு இடுக்கு விடாமல் வீட்டை மூடிவிட்டுச்செல்லவேண்டும்.(இதற்காக கிராமத்தில் உரிப்பானையில் பாலை வைப்பார்கள்).
Cat will steel any kind of milk except breast milk என்பார்கள்.
பூனையினால் வரும் நோய்களால் செல்லப்பிராணியாக வளர்ப்பதும் குறைந்துவிட்டது.முக்கியமாக ஆஸ்துமா.
”பூனையை கொல்லக்கூடாது.அதற்கு ஒன்பது ஜென்மம் உண்டு.பிழைத்துப் பிழைத்து ஒன்பது ஜென்மம் வரை உயிரோடிருக்கும்”.
இந்தக் கட்டுக்கதையை வைத்துப் பேசி சிறு வயதில் பல நேரங்கள் ஓட்டி இருக்கிறோம்.எங்கிருந்து குதித்தாலும் தன் உயிருக்கு ஒன்றும் நேராமல் சாமாத்தியமாக தன் கால் குஷன் மற்றும் உடலமைப்பு வைத்து குதித்துப் பிழைக்கும் என்பதுதான் அந்த ஒன்பது ஜென்ம புனைவின் மூலம்.
பூனைகள் அதைப் பற்றிய பழமொழிகளில் இன்னும் உயிரோடு இருக்கிறது.
பூனையைப் பற்றிய பழமொழிகள்/சொல்வழக்குகள்:

- பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது
- பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
- மதில் மேல் பூனை(எந்த பக்கம் குதிக்கும் என்பதில் பெட் வைத்து சூதாட்டம் நடக்குமாம் வட இந்தியாவில்)
- ருத்ராட்ச பூனை
- புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
- Cat "O" nine tails(இது ஒரு மாதிரியான சவுக்கு)
- Let the cat out of the bag
- பூனைய மடில கட்டிகிட்டு சகுனம் பாக்கிறது
- பூனைக்கு யாரு மணி கட்டுவது
- பூனை போலமெதுவாக அடி எடுத்து வைப்பது
- பூனை அடுப்புல தூங்குது(வறுமை)
- பூனைக் கண் அதிர்ஷ்டம்
- யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம்
- Cat walk
- எலிகளுக்குக் கொண்டாட்டம் பூனைகள் வெளியே இருக்கும்போது(மானேஜர் சற்று வெளியே போனால் அலுவலர்களுக்குக் கொண்டாட்டம்)
- Curiosity killed the cat
- பூனை முடி
ஆஹா அருமை இதுநாள் வரை பூனையை ஒரு சாதாரண உயிராகத்தான் பார்த்திருக்கிறேன் . ஆனால் உங்களின் பதிவை வாசித்து முடித்தவுடன் . பூனைகளைத் தேடத் துடங்கிவிட்டேன்
ReplyDeletearumai
ReplyDeleteThiyagarajan
நன்றி பனித்துளி சங்கர்.
ReplyDeleteநன்றி தியாகராஜன்
ReplyDeleteI have worried about sparrow population nearing extinction. Never thought of house cats as we never lived in urban area. That's a sad news. Its been a long time since i left south. A cat made an old neighbour's house as its maternity home as they loved cats & fed them milk. Have seen Generations of kittens like woollen balls used to roll over in their house. i wonder what happened to that cat generaton! As you rightly said, the eco system has got disturbed. But cats are cruel animals too. ha.ah.... they hunt for pleasure. Here they run behind pigeons and one can see pigeon feathers scattered here and there. I have see some cats missing! But i don't think they are short of hiding place in our area as it is just under development and has lot of hideouts and natural environment for them as every society has a garden inside it or atleast a community garden near by which are huge to cater that area with good vegetations.
ReplyDeleteநல்ல பகிர்வு சார்... ஆனால் நீங்கள் சொல்லுமளவுக்கு பூனைகள் வழக்கொழிந்து போகவில்லையென நினைக்கிறேன்.
ReplyDeleteMira said...
ReplyDelete// I have worried about sparrow population nearing extinction.//
சத்தியமான உண்மை.முதலில் இதைப்பற்றித்தான் எழுதலாம் என்று நினைத்து மாறிவிட்டது.
குருவிகள் இல்லாத வீட்டுத்தாழ்வாரம் சோகமானது.
நன்றி.
தமிழ்ப்பறவை said...
ReplyDelete// நல்ல பகிர்வு சார்... ஆனால் நீங்கள் சொல்லுமளவுக்கு பூனைகள் வழக்கொழிந்து போகவில்லையென நினைக்கிறேன்.//
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என் (குறுக்கே?) எதிர்பட்ட பூனைகள் குறைந்துக்கொண்டே வருகிறது. என் உறவுக்காரர்(த்னி வீடு)சொன்னதும் இதுதான்.
நன்றி.
I am doing my best to help some birds especially sparrows and i am very much happy to have my winged friends visiting me daily. http://my-hobby-lounge.blogspot.com/2011/01/my-winged-visitors.html
ReplyDeleteYou are writing nice thoughtful articles. Keep sharing.