Thursday, June 16, 2011

ஆரண்ய காண்டம்-விமர்சனம்

"தர்மம் எது?” என்ற கேள்விக்கு “எது தேவையோ அதுவே தர்மம்” என்று ஏதோ ஒரு(400 கி.மு.) காலத்தின்  குருட்டாம்போக்கு(loose moral) ஒழுங்கைக் காட்டி படத்தை ஆரம்பிக்கிறார்கள்.அதன்படி இதில் வரும் கதாபாத்திரங்கள் பின்பற்றப்போகின்றன என்று ஒரு இரண்டு வரி கோனார் நோட்ஸ் அது.

அந்த கி.மு.400 வருடத்தின்  முழு வரலாறு  என்ன?


”அம்மா இல்லாத பையன தலைல கொ(கு)ட்டக்கூடாது ” என்று பள்ளி படிக்கும் காலத்தில் குருட்டாம்போக்கு ஒழுங்கு வைத்து கொ(கு)ட்டமாட்டோம்.ஆனால் முதுகில் அறைவோம். அதுதான் ஞாபம் வந்தது. இதே மாதிரி ஆட்டோ சங்கரும்” அண்ணான்னு கூப்பிட்ட பொண்ணுங்க மேல சுண்டு விரல் கூட படாது”. ஆனா பிடிக்காத ஆளுங்கள கொன்னுட்டு செவுத்துல வச்சி சிமெண்ட் பூசிடுவாரு.

அச்சுபிச்சுத்தனமான கிரிமினல் மாரல்.

பவுடர்(cocaine) கடத்தும் இருட்டு உலக கிரிமினல் கும்பல்களுக்கு இடையே ஒரு நாளில் நடக்கும்  டபுள் கிராஸ்/மோதல்/துரோகம்/காமம்/பொறாமைதான் கதை.
வட சென்னை பாஷையில் சொன்னால்” பவுட்ரு கடத்தி அது ரெளடி கேங்குங்க கைல வருதுகுள்ள நடக்கிற  மேட்டர்தான் ஸ்டோரி.”
 
 ஒரு நாளில் நடக்கிறது என்று ஏதாவது குறியீடு காட்டி(suggestive shots) இருக்கலாமே? ஒரு வேளை  குறியீட்டின் அடுத்தக்கட்டத்தை தாண்டி விட்டார்களோ?.

ஆரண்யம் என்றால் காடு அதான் தாதாவுக்கு சிங்கபெருமாள்(சிங்கம்),கஜேந்திரன், கஜபதி என்று மிருகப்பெயர்களோ?.

ஒரு படத்தின் விதியை முதல் அரைமணி நேரம் நிர்ணயிக்கும் என்பார்கள். இப்படம் அந்நேரத்தில் மனதில் ஒட்டாமல் ரொமப அன்னியப்படுகிறது.என்னவோ இருட்டில் (mood lighting)பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.அது தவிர அன்று ”பந்த்” இவர்கள்(கேரக்டர்ஸ்) மட்டும்தான் தெருவில்  உலாத்துகிறார்கள் என்ற படம் நெடுக ஒரு உணர்வு வந்துக்கொண்டே இருக்கிறது.படத்தின் கதாபாத்திரங்களின் உணர்வுதளங்கள் பார்வையாளனோடு இழைத்துப்பின்னப்படவில்லை.ஆழமும் இல்லை.

(நான் மகான் அல்ல படமும் வட சென்னை ரெளடிகள் பற்றிய படம்தான்.படத்தோடு பொருந்தி வந்து ஒட்டினார்கள்.இவர்கள் ஒட்டவில்லை.ஏன்?)

இரண்டாவது பாதி முதல் பாதியைவிட சற்று கன்வின்சிங்காக போகிறது.என்று சொல்லலாம்.ஜாக்கி ஷெராப் பாத்திரம் ஒன்றும் அவ்வளவு புதுமையாக இல்லை.ரொம்ப யதார்த்தமாக தாதா அம்மணத்தோடு  எண்ணெய் தேய்த்துக்கொண்டு குளிக்கக்கிளம்புகிறார்.அதே யதார்த்தமாக பாத்ரூமில் இருக்கும்போது செல் அடிப்பது கேட்கிறது. ஆனால் காட்ரேஜ் பீரோ திறக்கும் ஓசை கேட்கவில்லை. அவருக்கு.

பையனிடம் இருந்து பவுடர் பையை வாங்குவதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார் சம்பத்.

படத்தில் ரொம்ப பிடித்தது யுவனின் இசை.அட்டகாசம்.அடக்கி வாசித்திருக்கிறார்.வித்தியாசமான பின்னணி.

படத்தில் நம்மை ஈர்ப்பவர்கள். சப்பை, சிறுவன்,சிறுவனின் அப்பா மற்றும் சம்பத். கடைசியில் திடீர் திருப்பமும் ரசிக்க முடிகிறது.நாங்களும் ஆம்பிளைக்கு சமமான ரெளடிங்கதான்னு.அடுத்து ரசித்தது உலகத்தரம் என்பதற்காக பாசாங்குத்தனமான மிஷ்கின் காட்சிகள்/கோணங்கள் இல்லை.

உடை,காமிரா, பின்னணி எல்லாம் நன்று.ரெண்டு மூன்று இடங்களில் வசனம் ஷார்ப்.மேக்கிங் ஓகே ஆனா சரக்கு கன்வின்சிங்க சொல்லலியே?கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நாமும் உணரவேண்டும்.

கிராண்ட் ஜூரி அவார்ட் வாங்கிவிட்டால்  அதற்காக வலியப்போய் படத்தோடு பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்ள முடியமா?


டெயில் பீஸ்:

பாசிட்டிவ் கதாபாத்திரங்களை வைத்து உலகத் தரம் படம் எடுக்க முடியாதா? எப்பவுமே காட்ஃபாதர் டைப்புதானா?


6 comments:

 1. நல்ல பார்வை...
  ஆனால் படம் எனக்குப் பிடித்திருந்தது சார்...
  அப்பா-பையன் பாத்திரங்கள், வசனம் சூப்பர்...!

  ReplyDelete
 2. நன்றி தமிழ்ப்பறவை.

  ReplyDelete
 3. Nice post. To increase your Website Traffic submit your cinema news Here http://news.incake.com/

  ReplyDelete
 4. சறுக்கிட்டீங்க...சில விஷயங்கள்ல :)

  ReplyDelete
 5. boss.. Better try to see world movies and write comments.... I started stopped reading your review after U comapred aaranya kaandam with "Naan Mahan Alla"... Ungal rasanai avalavuthaan endru arinthavudan.... Better learn abt black Humor and Black Movies....

  ReplyDelete
 6. //"Naan Mahan Alla"... Ungal rasanai avalavuthaan endru arinthavudan.... Better learn abt black Humor and Black Movies.... //

  I talked how the dark north Chennai rowdies portrayed better than AK not entire movie.

  There was a black movie named "தப்புத்தாளங்கள்” in 80"s by Balachander. Have you seen this movie?

  There are so many people liked (AK) the movie which did not like. It happens. I can"t help it.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!