தமிழ் சினிமாவில் பல வித ரசங்களில் சோகம் ஒரு ரசம்.ஆனால் கடந்த 15 (20?)வருடங்களில் இந்த ரசம் மிகவும் குறைந்துவிட்டது.பழைய படங்களில் சோகத்தை பாட்டில்தான் அதிகம் வெளிப்படுத்துவார்கள்.அதுவும் பயங்கர தாடியுடன்,தத்துவங்களுடன்,இருமலுடன்,பாட்டிலுடன்.
இருமலில் பாட்டு பாதியில் நின்றாலும் மீதிப் பாட்டை காதலி எடுத்துக்கொடுப்பாள்.
சோகத்திற்கு ஏற்ற லோகேஷேன் பாழ் அடைந்த வீடு,பட்ட மரம்,கடல்அலைகள், சுடுகாடு,குப்பைத்தொட்டி... என்று விதவிதமாக.
ஜகமே மாயா.., பிராதுகே மாயா..(தேவதாசு) |
காதல் ”happy” பாடல்களே “sad"ஆக டியூன் போட்டு சோகமாக மாறும் ஒரு டிரெண்ட் இருந்தது.இப்போது சுத்தமாக காணவில்லை.
இளையராஜா சோகத்தின் இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினார். இவருக்கு சவாலான வேலை.
காரணம்?
சிவாஜி சோகம்,விஜயகாந்த் சோகம்,கமல் சோகம்,ரஜினி சோகம், ராமராஜன் சோகம், மோகன் சோகம்,முரளி சோகம்,பிரபு சோகம்,கார்த்திக் சோகம்,சுரேஷ் சோகம்,பாக்யராஜ்சோகம்,பாண்டியன்,பாண்டியராஜன் சோகம்,பார்த்திபன் அடுத்து ராதா,ஸ்ரீதேவி,அம்பிகா,சரிதா,ஸ்ரீப்ரியா,லதா,சுஜாதா,ஷோபா.சீதா இன்னும் பெயர் தெரியாத புதுமுக சோகங்கள்.
எப்படி தாக்குப்பிடித்தார். மகா சோகமான விஷயம்.அதிலும் முக்கால்வாசி காதல் சோகங்கள்!
எப்படி ?
- முக்கியமாக ஷெனாய்/வயலின்/வயோலா வீரியங்கள் காலத்திற்கேற்ப குறைக்கப்பட்டது.
- பல வித இசைக்கருவிகளின் கலவைகளில் சோகம் தோய்க்கப்பட்டது
- வெஸ்டர்ன் கிளாசிகளில் சோகம் வாசிக்கப்பட்டது
- நவீன மோஸ்தரில் வித்தியாசமாகக்கொடுக்கப்பட்டது.
- சோகத்திற்கு தோதான சிவரஞ்சனி,சிந்துபைரவி, மாயமாளவ கெளள ஹம்சா நந்தி என்று பலவித கலவைகள் வருகிறது
- ஸ்டிரியோ டைப் இல்லாத சோகம்.சாயல் சதவீதம் குறைந்தது.
- சோதனை முயற்ச்சிகள்
- முக்கியமாக முன்னணி(lead) இசைக்கருவியின் நாதத்திற்க்குத் தோதாக மற்ற உபரி இசைக்கருவிளின் நாதங்களை மூட் கலையாமல் பிணைப்பது இளையராஜாவின் மிகப் பெரிய பலம்.பாட்டிற்கு வர்ணங்கள் சேர்க்கிறது.உணர்ச்சிகளை வாரி இறைக்கிறது.
ஆடியோ தகராறு செய்தால் ஒரு தடவை ஓடவிட்டு பிறகு கேட்கவும்.
முதல் படம்.சம்பிராதயமான சோகம் இருந்தாலும் சில வித்தியாசம் உள்ளது.
Pathos-Annakkili-76-Sonthamillai.mp3
Pathos-Rajapaarvai-81-Vizheoorathu.mp3
0.05-0.15 சோகம் அருமை.
Pathos-NallavanukkuNallavan84-ChittukkuChella.mp3
குரல் சோகம்.ஆண் குரல் அருமை.”ஒ.. சின்னப் பூமேனி அழுமோ” பெண் கோரஸ் சோக குரல்கள் 0.46ல் சேர, பின்னணியில் “மெட்டி... மெட்டி...”இதயம் உடைந்து உச்சரிப்பது அருமை.இசைஞானி அழகாக இழைத்து இருக்கிறார். 0.30-0.46 தாளத்தைக் கவனியுங்கள்.
எனக்கு நெருக்கமான பாட்டு.
Pathos-Metti-82-Raagam Engeyo.mp3
சிவரஞசனி ராகத்தில் பிழியும் சோகம்.0.27-0.34 புல்லாங்குழலின் சோகம் மென்மையாக வயலினில் எதிரொலிப்பது அருமை.0.45-0.57ல் திடீரென்று ஷெனாயில் தபலா பின்னணியில் சோகம் தீவிரமடைகிறது.இந்துஸ்தானி டைப் நாதம் அபாரம்.
Pathos-EnUyirkannamma88-yaaraikettu.mp3
மோஸ்மேஸ்ட்ரோவின்ஆரம்பகால மேதமை.இசைக்கருவிகளின் வீரியத்தை மட்டுப்படுத்தி ஒரு வித நவீன தொனியில் வெஸ்டர்ன் கிளாசிகளில் கொடுக்கப்பட்ட சோகம்.ஒரு வித அமானுஷ்யம் இருக்கும்.இந்த இசைக்கோர்ப்பு பேசும் மொழி வித்தியாசமானது.
ஆழ்ந்துக்கேட்டால் மனதைப் படுத்தும். (ஒரு ஆடியோ சரியாக வேலை செய்யவில்லை.அதனால் இரண்டு).
இளையராஜாவின் இசையில் ஒரு மைல் கல்.
24Pathos-Jhonny-79-Kaatril Enthem Geetham.mp3முதல் படத்திலிலேயே கலக்கலான சோகம்.கிடாரில் வாசிப்பும் அருமை.
Pathos-AnnakiliUnnai76TMS-Sad.mp3
Pathos-Meera-93-Oh Butterfly (Patho).mp3
வீணையில் சோகம் அருமை.
Pathos-Achchani-78-Maatha Un Kovil-SAD.mp3
”கானல் நீர் போல் எந்தன் காதல்.....” ஜானகி உருக்கும் குரல் பிறகு வயலின் பிறகு புல்லாங்குழல்.
Pathos-Ninaivellam Nithya-82-kaanalneer.mp3
கிராமத்து சோகம்.
Pathos-Chinnathayee-92-Naan Erikkarai (Sad).mp3
டிஎம்எஸ் டிஎம்எஸ்தான்.
Pathos-Bairavi-78-Nandooruthu.mp3
Pathos-Geethanjali-85-OruJeevans-SAD.mp3
Pathos-Karakattakaran-89-KudaguMalai.mp3
Pathos-NallavanukkuNallavan84-Unnaithane (Pathos).mp3
Pathos-Nayagan-87-ThenpandiSeemaiyile2.mp3
Pathos-Neethiyin Marupakkam-85-MaalaiKaruSad.1.mp3
நல்ல மனம் உள்ள மச்சான்....! |
சோக பின்னணி இசை:
BGM-Flute-86-Kadalora Kavithaigal.mp3
BGM-85-Mmuthal Mariyathai.mp3
____________________________________________________________
Pathos-Raasavey Unnai Nambi-88-RaasaththiSad.mp3
Pathos-Vanna Vanna Pookkal-92-Chinna Mani Koyilile.mp3
Pathos-Anandakummi-83-Thindaduthey.mp3
அருமையான வெஸ்டர்ன் கிளாசிகலில் மென்மையான சோகம்.
Pathos-Anand-87-Poovukku.mp3
ஸ்வர்ணலதா சோகத்தைப் பிழிகிறார்.அவரை இழந்ததும் சோகம்.
Pathos-Idhu Namma Bhoomi- 92-AaradiChuvarthan.mp3
Pathos-Ingeyum Oru Gangai -84- Solai Pushpangale.mp3
Pathos-Pandithurai-92-Enna Marantha Pozhuthum.mp3
Pathos-Oruvar Vazhum Aalayam-88-UyireUyire.mp3
Pathos-Anandakummi-83-Thindaduthey.mp3
டெயில் பீஸ்:
விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் “மலருக்கு தென்றல் பகையானல்”சுசீலா-எல்.ஆர்.ஈஸ்வரி(எங்க வீட்டு பிள்ளை) நான் எப்போதும் ரசிக்கும் பாகேஸ்வரி ராகத்தில் மென்மையான சோகம்.
ஸ்வர்ணலதா சோகத்தைப் பிழிகிறார்.அவரை இழந்ததும் சோகம்.
Pathos-Idhu Namma Bhoomi- 92-AaradiChuvarthan.mp3
Pathos-Ingeyum Oru Gangai -84- Solai Pushpangale.mp3
Pathos-Pandithurai-92-Enna Marantha Pozhuthum.mp3
Pathos-Oruvar Vazhum Aalayam-88-UyireUyire.mp3
Pathos-Anandakummi-83-Thindaduthey.mp3
டெயில் பீஸ்:
விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் “மலருக்கு தென்றல் பகையானல்”சுசீலா-எல்.ஆர்.ஈஸ்வரி(எங்க வீட்டு பிள்ளை) நான் எப்போதும் ரசிக்கும் பாகேஸ்வரி ராகத்தில் மென்மையான சோகம்.
சோக ரசத்தைப் பிழிந்து பின்னியெடுத்திட்டீங்க!
ReplyDeleteநன்றி மிடில்கிளாஸ்மாதவி
ReplyDeleteSpeechless anna...
ReplyDeleteநன்றி ஆனந்தி.
ReplyDeleteஅருமையானதொரு தொகுப்பு.
ReplyDeleteநன்றி முகில்
ReplyDeleteசனிக்கிழமை சோகரசமா... பதிவிலுள்ள படங்கள் அருமை. இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளேன். ‘சொந்தமில்லை பந்தமில்லை’.....:(
ReplyDeletethanks for your time and effort! love it... keep it going...
ReplyDeleteஒவ்வொரு முறையும் தனித்தனியாக ப்ளே பண்ண வேண்டியிருக்கிறது சார்...:(
ReplyDeleteஎப்போதும் உங்க உழைப்புக்கு என்னோட நன்றிகள் ;))
ReplyDeleteகலக்கல் தொகுப்பு ;)
\\ஆழ்ந்துக்கேட்டால் மனதைப் படுத்தும். (ஒரு ஆடியோ சரியாக வேலை செய்யவில்லை.அதனால் இரண்டு).\\
தல இது ரெண்டுமே எனக்கு வரல ;(
நன்றி தெகா.
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//ஒவ்வொரு முறையும் தனித்தனியாக ப்ளே பண்ண வேண்டியிருக்கிறது சார்...:(//
என் பிளாக்கில் வேலை செய்கிறது.சில சமயம் மக்கர் செய்கிறது.
கோபிநாத்:
ReplyDelete//தல இது ரெண்டுமே எனக்கு வரல ;( //
இங்கு வேலை செய்கிறது.
ஆடியோவிற்கு சில வலைகளின் தயவை நாடி அடிமைப் போல் இருக்கவேண்டிய கட்டாயம்.அதனால் ஆடியோ பிரச்சனை.
ReplyDeleteராசாவின் சோகங்களை கேட்பதில் இருக்கும் சந்தோஷமே தனிதான். அருமையான தொகுப்பு.
ReplyDeleteநன்றி வந்தியத்தேவன்.
ReplyDeleteஅன்பின் நண்பருக்கு வணக்கம்,
ReplyDeleteஉங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!