Monday, July 11, 2011

சமசீர் கல்வியும் இரண்டு துண்டான பெண்ணும்...

கல்வி என்பது அறிவை வளர்க்கும் ஒரு கருவி.அதனால்
சிந்தனை கூடுகிறது.மக்களிடமிருந்து மாக்களை(விலங்குகள்) வேறுபடுத்திக்காட்டுகிறது.கூடவே ஒழுக்கத்தைக் (படிச்சவனா நீ?)கற்றுக்கொள்ளுகிறோம்.சமுதாயத்தின் பல தளங்களில் முட்டி மோதி முன்னேற அல்லது சந்திக்க அல்லது கடத்த அல்லது எதிர்க்க  நமக்கு இந்தக் கல்வி ஆற்றல்கொடுக்கிறது. கூடவே வரும் அனுபவங்களும் கல்வியின்  பங்களிப்புதான்.

இந்த கல்வி இல்லாதவரை “கைநாட்டு”கேஸ் என்கிறது சமூகம்.

பெறப்படும்  கல்வியை  அப்படியே “டப்பா” (உரு ஏற்றி)அடித்து மண்டைக்குள் திணித்து  அதை விழாமல் இறுத்திப்பிடித்தபடி  தேர்வு எழுதும் டெஸ்க்கிற்கு சென்று  வாந்தி எடுத்து  வெற்றி  பெற்று வேலைக்குப்போவதுதான் கல்வியின் குறிகோள் ஆகிவிட்டது.

வெறும் புத்தகக் கல்வி.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா? அதனால்தான் செய்முறை கல்வித் திட்டமும் சில இடங்களில் கற்றுவிக்கப்படுகிறது.சிந்தனையை வளர்க்க  தேர்வு கேள்விகள் டிவிஸ்ட் பண்ணி கேட்கும் வழக்கமும் உண்டு.

வேலைக்குப்போனால்  “இது பிட் அடிச்சு  டிகிரி வாங்கி இருக்கு”  “ இது டப்பா அடிச்சு டிகிரி வாங்கி இருக்கு” அதான் தடுமாறுது என்கிறார்கள்.கைநாட்டில் கொஞ்சம் உசத்தி அவ்வளவுதான்.

கொடுக்கப்படும் கல்வியில் பல சீர்கேடுகள் இருப்பதால் அதைக் களைவதற்கு கடந்த வந்த ஆண்டுகளில் பலவித சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது.அதில் முக்கியமான ஒன்றுதான்  லேட்டஸ்ட் சமச்சீர்கல்வி. எல்லோர்க்கும் சமமான பாட திட்டம்.

இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல. சரி எதைப் பற்றி? அது....

எந்தக் கல்வியானலும் அது கல்வியின் அடிப்படையான
அறிவைக்
கொடுத்து மாணவர்களின் சிந்தனையை தூண்டுகிறதா?வாழ்வின் பல தளங்களில் இதை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா? 

ஏதோ ஒரளவுக்குதான்.

நான்காவது வகுப்பில்(தமிழ் மீடியம்) எனக்கு பூகோளம்( geography) எடுத்த ஆசிரியருக்கு  மேஜிக்கும் தெரியும்.அடிக்கடி செய்து காட்டுவார்.

ஒரு நாள் “இடது கையின் ஆள்காட்டி விரலை துண்ட ஒடிச்சி, ஒடஞ்ச துண்ட தனியா ஆட்டிக்காட்டிட்டு மறுபடியும் ஒட்ட வைச்சுடுவேன்”  சொல்லி அதன்படி செய்துக் காண்பித்தார்.உடையும் போது ஒரு சத்தமும் வரும்.

டிரிக்கென்று தெரிந்தாலும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அதைப் பார்த்து பரவசமடைந்தோம்.

அடுத்து அவர் “ இது டிரிக்தான்.உண்மையா பண்ணா முடியாது? ஏன்னு யாருக்காவது தெரியுமா?யோசிச்சுச் சொல்லுங்க”

47 பேரும் முழித்தோம்.(சரியாக யோசித்து ஒன்றிரண்டு பேர் பயத்தில் சொல்லாமலும் இருந்திருக்கலாம்)

”அறிவு கொழுந்துகளா.. நம்ம உடம்புல எதுனா துண்டாச்சு இல்ல அடிப்பட்டதுன்னா உடனே என்ன வரும்?”

”ரத்தம் வரும்” முக்கலும் முனகலுமாக குரல் வந்தது.

“அப்புறம்?”

பதில் இல்லை.

 ”வலி உயிர் போய் கத்துவேன்ல”

”ஆமாங்கயயா”

”எனக்கு வந்ததா? யோசீங்கடா தரித்தரம் புடிச்சப் பசங்களா”.

எல்லோரும் அவரவர் தலையில் நங்கென்றுக் குட்டிக்கொண்டோம்.

ஏன் சிந்திக்கவில்லை.”பெரிய்ய சைண்டிஸ்டு ...இதெல்லாம் தேவையா?” என்ற நினைப்புதான் எல்லோருக்கும் அப்போது.இரண்டு தரப்பிலும் குற்றம் இருக்கிறது.

இது மாதிரி நிறைய கேட்பார். தடுமாறுவோம்.அடுத்த வகுப்பு போனவுடன்  இவரை மறந்துவிட்டோம்.அவர் வகுப்பாசிரியராக இருக்கும் வகுப்பில் இது மாதிரி அடிக்கடி பின்னி எடுப்பார்.

ஒரு பெண்ணை இரண்டுதுண்டாக்கும் மேஜிக்.எங்கே ரத்தம்?
எட்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியருகே இருந்த மிக ஆழமான பாழடைந்த கிணற்றில்  (தண்ணிர் இல்லை) அந்த ஊரை சார்ந்த ஒருவர் தவறி விழுந்து இறந்து விட்டார். மாடு மேய்க்கும் சிறுவன் சாட்சி.

அடுத்த வாரம் அதே ஆசிரியர் எங்களுக்கு moral instructions
வகுப்பு எடுக்க வந்தார்.அடிவயிற்றில் கிலி.

”டேய்  போன வாரம் செத்தாரே ஒருத்தரு.அவரு அடிப்பட்டும் சாவல. பாம்பு கடிச்சும் சாவல. எப்படி செத்தார் தெரியுமா?”

நான்கு பேர்(நானும் ஒருவன்) கைத்தூக்கினார்கள்.நான்கு பேரிடமும் தனித்தனியாக காதில் ரகசியமாக வாங்கிக்கொண்டார்.நாலு பேரும் பதிலும் ஓகே என்றார்.

 நாலில் ஒரு  மாணவன் கையைக் கட்டிக்கொண்ட்டு கத்தி பதில் சொன்னான்:

“உல்ல விலுவந்தவரு மூச்சு திணறி செத்துட்டாரு.உல்லார மூச்சுப்பிடிக்க காத்துல ஆக்சிசன் இல்ல.பயர் இஞ்சின்காரங்க உல்லார இறங்கம்முன்னே ஒரு விளக்க(lamp) உல்லார காட்னப்போ விளக்கு டப்ன்னு அணைஞ்ச்சிடுச்சு”

மற்ற மாணவர்களை திட்டு திட்டென்று திட்டித்தீர்த்தார்.தலையில் குட்டிக்கொண்டார்கள்.

படிப்பு வழியாக சிந்தித்தக்க தலைப்பட்டாலும்  நம் சிந்தனையை மழுங்கடிக்க  நம் பாரம்பரியத்தில் நிறைய விஷயங்கள் உண்டு.

இப்படியே உயர் வகுப்பு மற்றும்  கல்லூரி முடிந்து வேலைக்குப் (accounts) போன முதல் இரண்டு நாளில் எனக்கு கொடுத்த பல வேலைகளில் திணறி  முட்டி மோதி நானே சிந்தித்து (???) இரண்டு  சின்ன வேலையை நானே கற்றுக்கொண்டேன்.

1.Bank Reconciliation Statement. இது நாம்  மெயிண்டெயின் செய்யும் வங்கி கணக்கும் வங்கியின் கணக்குத் தொகையும் சரி செய்தல்.திணறியது ஏன்? கல்லூரியில் இதைத் தியரியாக படித்தக்காரணம். செய்முறை கல்வி இல்லை.அப்போது DD  commission, Telegarphic Transfer, OD என்றால் என்னவென்றே தெரியாது.

2.ஒரு காலத்தில் வீட்டு  மின்சார கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு என்று flat rateஆக கணக்குப்போட்டு கார்டில் பதிக்கும் முறை போய்  slab rate வந்தது. இதை  நான் அரை நாள் ரூம் போட்டு யோசித்து  விடைக் கண்டுப்
பிடித்தது ரொம்ப ஓவர்.ஏன் திணறினேன்.டிவிஸ்ட் பண்ணிக்கேட்ட மாத்தி யோசிக்கனும்.

எந்தக் கல்வியானலும் டப்பா அடிக்காதே.யோசி. அந்த
வயசில யோசிக்கிறதாவது மண்ணாங்கட்டியாவது.ஆசிரியர்கள் தூண்ட வேண்டும்.இங்குதான் concept based learning வருகிறது.

டெயில் பீஸ்: என் பாட்டி இறந்தபோது என் பெரியப்பாவிற்கு தந்தி கொடுக்க பணித்து, தந்தியில் சொற்கள் குறைவாக இருந்தால் காசு கம்மியாகும் என்று (தன் பெயரில்)அப்பா சொல்லி அனுப்பினார்.

எல்லோரும் வழக்கமாக கொடுப்பது: MOTHER DIED START IMMEDIATELY.

நான் கொடுத்தது:  MOTHER DIED COME FAST 

8 comments:

 1. சிறந்த இசை ரசிகரான உங்களுக்கு என் நண்பனை அறிமுகம் செய்கிறேன். அவன் இளையராஜாவின் இசையை ரீமிக்ஸ் செய்ததை பார்க்கவும்
  http://minmalar.blogspot.com/2011/02/parvayil-padatha-padal.html

  ReplyDelete
 2. நன்றி மனசாலி.அங்கேயே கமெண்ட் போட்டுவிட்டேன்.

  ReplyDelete
 3. Very true. Now-a-days everyone is concentrating on winning the mad race in getting seats and settling in a job. The quality of education has come down as the schools, teachers and parents look only into the numbers more than the knowledge. That's why only few shines among the toppers.

  ReplyDelete
 4. really true.-selvarani

  ReplyDelete
 5. ரொம்ப சரி சார். 6-ஆம் கிளாஸ் படிக்கும் பொது எங்க பைபிள் வாத்தியார் உலகம் உருவானதை பத்தி எழுதி வர சொன்னார். என்னை தவிர எல்லா பயலுவலும் பைபிள்-லில் உள்ளதை கொண்டுவந்தார்கள். நான் Library-லாம் போய் எத்தனையோ புத்தகங்கள் வாசிச்ச பிறகு தான் Big Bang-தியரி பத்தி தெரிஞ்சு எழுதி வந்தேன். அதுக்கு நிறைய பாராட்டு கிடைச்சது.

  இப்போ இருப்பது போன்ற வசதிகள் அப்போது இல்லை. பசங்களுக்கு இப்போ நிறைய Options இருக்கு.

  ReplyDelete
 6. நன்றி ரெண்டு.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!