Friday, July 29, 2011

கணவன் ரெடியா?

என் வயது* ____ நான் _________ ஜாதியை சேர்ந்தவள். கருப்பு நிறம். நல்ல இடத்தில் வேலை.ஒளிவு மறைவு இல்லாத,சுயசார்ப்பு மற்றும் உலகத்தில் எல்லாவற்றையும் சமமாக மதிப்பவள்.குடும்பம் ,மனித உறவுகளை மிகவும் மதிப்பவள். மேலும் நகைச்சுவை உணர்வும் குழந்தைகளை நேசிக்கும் குணம் உள்ளவள். அடுத்தவர்  உணர்வுகள் பற்றிய புரிதலும் மதிப்பும் என்னிடம் உண்டு.என்னை மதிப்பது, என் குணாதிசயம் அல்லது சுபாவத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும்.

 எனக்கு நண்பர்களையும் அவர்களுடன் பொழுதுபோக்குவது பிடிக்கும்.படம் பார்ப்பதும் வெளியே போய் பொழுதுப்போக்குவதும் பிடித்தமானது. என் சொந்தகாலில் நின்று  சுயமாக சம்பாதிப்பதும் செய்யும் வேலையை நேசிப்பதும் ரொம்ப பிடிக்கும்.நான் நம்புவது “ நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும்”.நான் ஒரு  நல்ல வாழ்க்கை துணைவராக இருந்து  நல்ல மற்றும் கஷ்ட காலத்தில் உறுதுணையாகவும் உந்துதல் சக்தியாகவும் இருப்பேன்.

எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் மேல் உண்டு.

மேற்சொன்ன அனைத்து பண்புகளையும்/மதிப்பீடுகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டு, அன்பும் நட்பும் என் மேல் கொண்டு ,நான் நானாகவே இருக்க விரும்புவதை ஏற்றுக்கொள்ளும் ஒருவரை மணக்க விரும்புகிறேன்.

மேற்கண்ட விளம்பரம்  ஒரு தினசரியில் திருமண விளம்பர பகுதியில் வந்திருந்தது.

இவர் நினைப்பது போல் வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள்!

99% திருமண விளம்பரத்தில் கோத்ரம்,நட்சத்திரம்,ஜாதி,பிரிவு,வயது,
வேலை,உயரம்,சம்பளம்,நிறம் முக்கியமாக கொடுப்பார்கள்.

இவர்  தன் மனசில் உள்ள மற்றவற்றையும் மறைக்காமல்
கொடுத்துள்ளார்.கிட்டத்தட்ட blogger profile.
 
இது போல் ஐடியல் எண்ணங்களை மனதில் இளமை காலத்தில் வைத்திருப்போம்.“நீங்கள் எல்லாம் என்ன” நான் வாழ்ந்துக் காட்டுகிறேன் பார் என்ற ஒரு துடிப்பு இருக்கும்.

திருமணத்திற்குப் பிறகு  வாழ்க்கை அவ்வளவு சுலபமானதா?

பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள விஷயங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தில்  குறுக்கிட்டு உரசக் கூடியவை.தாக்குப்பிடித்தால் சாம்பியன்.

எல்லோரும் ஒரே அலைவரிசையில் இருந்தால் வாழ்க்கையில் சுவராஸ்யம் இருக்குமா?

என் யூகம் & டிஸ்கி:

தான் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இவ்வளவு கொடுத்திருக்கிறாரோ?


    *திருமண வயதுதான்.

    10 comments:

    1. வித்தியாசமான விளம்பரம்தான்... ஏற்ற துணை கிடைக்க என் வாழ்த்துக்களும்

      ReplyDelete
    2. very rarely all the qualities will get matched. most of the marriage will succeed if there is love, trust and commitment to each other and how quickly they get along after a fight considering that as a part of life. One of them should act maturedly to handle a situation & avoid conflicts this can happen only when one is not giving importance to ego and keeps his/her cool.

      ReplyDelete
    3. :)

      //தான் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இவ்வளவு கொடுத்திருக்கிறாரோ?//

      I don't think so! It looks like she dared to place what is it that she wanted out in her partner :)... hope she runs into the right one.

      ReplyDelete
    4. நன்றி ஷீ-நிசி

      ReplyDelete
    5. Mira said

      //One of them should act maturedly to handle a situation & avoid conflicts this can happen only when one is not giving importance to ego and keeps his/her cool.//

      Maturity comes after seven years of marriage.

      ReplyDelete
    6. //very rarely all the qualities will get matched. most of the marriage will succeed if there is love, trust and commitment to each other and how quickly they get along after a fight considering that as a part of life. One of them should act maturedly to handle a situation & avoid conflicts this can happen only when one is not giving importance to ego and keeps his/her cool.//

      Golden words.

      ReplyDelete
    7. நன்றி இந்தியன்.

      ReplyDelete
    8. ///என் யூகம் & டிஸ்கி:

      தான் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இவ்வளவு கொடுத்திருக்கிறாரோ?///

      என்னங்க இது..எது செய்தாலும் குத்தம் கண்டுபிடிக்கிறீங்க :-((( இப்பம் அந்த பொண்ணு கருப்பாக இருக்கிறேன் அப்படின்னு சொல்லாம இருந்திருந்தா என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க...............

      அந்த பொண்ணை பொண்ணு பார்த்துட்டு வர்ரவங்க இப்படிதான் பேசிருப்பாங்க (அது நீங்களாயிருந்தாலும், நானாயிருந்தாலும்)

      ''டேய் மச்சான், அது சப்ப பிகர்டா, அதுனாலதான் அது இந்த பேச்சு பேசியிருக்கு''

      ஆண்டவா :-(((((((((((((((

      #ஆண்டவன் இல்லடா கொமாரு

      ReplyDelete
    9. பெம்மு குட்டி

      //அந்த பொண்ணை பொண்ணு பார்த்துட்டு வர்ரவங்க இப்படிதான் பேசிருப்பாங்க (அது நீங்களாயிருந்தாலும், நானாயிருந்தாலும்) //

      இதுதான் யதார்த்தம். சரியா சொன்னீங்க. நன்றி.

      ReplyDelete

    எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!