Tuesday, June 7, 2011

ரஜினியின் ராணாவும் “இன்” செய்த புகையும்

சினிமாவில் ரஜினி சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடித்து பல்லால் கடித்தவாறே சிரிக்கும்  ஸ்டைல் அப்போது நல்லாத்தான் இருந்தது.“காயத்ரீ” படத்திற்கு  கைத்தட்டலும் விசிலும் பறக்கும். நானும் ரசித்திருக்கிறேன். மற்றொரு ஸ்டைல்  குடி கிளாஸை ஸ்டைலாகப் பிடித்து அதில் கட்டிங்கை ஊற்றுவது மற்றும் அதில் மோதிரத்தை இரு விரலால் ஸ்டைலாக போடுவது.

சிகரெட் ஸ்டைலுக்காக காயத்ரீ படத்தை இரண்டு முறைப் பார்த்தோம்.

இந்த ஸ்டைல்கள்  புகழ் ரேட்டிங்கை ஏற்றியது. அதே ஸ்டைல் இப்போது சிங்கப்பூருக்கு செல்ல வைத்து ரேட்டிங்கை இறங்கவும் வைத்துவிட்டது. 
ரஜனியின் ராணா படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி ஆரம்பித்துவிட்டது.உடல் நிலையின் ஸ்டைல் மாறிவிட்டது.

ரசிகர்கள் இறைவன் அருளால் நலம் பெற்று திரும்பிவிடுவார் என்று நம்புகிறார்கள்.நம்பினார் கெடுவதில்லை.எம்ஜியார் குண்டடிப்பட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்து வெற்றிப்படங்கள் கொடுத்தார்.ஆனால் ரஜினியின் உடம்பு உபாதை வேறு.


படத்தில் நடிப்பது இருக்கட்டும் .முதலில் உடல் நலம் பெற்று சந்தோஷமாக வீடு திரும்பட்டும் என்று மனம் பிராத்தனை செய்கிறது.

எப்படி இருந்தாலும்  மருத்துவர்கள் நீண்டமாத ஓய்வு வேண்டும் என்று சொல்லுவார்கள்.ஓய்வுக்குப் பிறகு தன்னை வருத்திக்கொள்வாரா? ரஜினி பாதுகாப்பாகத்தான்(safe game) இருக்க விரும்புவார்.நடித்தாலும் பழைய கெத்து வருமா? சந்தேகம்தான்.

சினிமா ஒரு அவுட் அண்ட் அவுட் வியாபார  உலகம்.ஓடும் குதிரைகள்தான் மீதுதான பணம் கட்டப்படும்.

டெயில் பீஸ்: விடலைப் பருவத்தில் சிகரெட் பிடிப்பதில் ஒரு பந்தயம் இருக்கும். அது “இன்” செய்வது. அதாவது புகையை  இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று உள்ளே இழுத்து புகையை  மார்பில் ”இன்” செய்து(அடக்கி) சிறிது நேரம் கழித்து ஊதினால் புகை வரக்கூடாது. செய்தால் அவன் பிஸ்தா அல்லது பருப்பு.

இப்படி “ இன்” பழக்கமாகி நண்பர் ஒருவர் 30 வயதிலேயே பூமிக்குள் “இன்” ஆகிவிட்டார்.

3 comments:

  1. அமிதாப் மாதிரி ரஜினியும் மீண்டு மீண்டும் வரட்டும்!

    ReplyDelete
  2. நன்றி மிடில்கிளாஸ்மாதவி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!