முப்பதுமூன்று(1978) வருடங்களுக்கு முன் வந்த மலையாளப் படமான “ரதிநிர்வேதம்”(A) மீண்டும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.ஒரு விடலைப் பருவத்து சிறுவன் பருவக்கோளாறால் தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணிடம் காதல்+காமம் கொள்ளுதல்தான் கதை.
பழைய ரதிநிர்வேதம் கதை-பத்மராஜன் இயக்கம்-பரதன். பரதன் தமிழில் சாவித்திரி,ஆவரம்பூ,தேவர்மகன், தலைவாசல் போன்ற படங்களை இயக்கியவர்.
கிரேதயுகம்,திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் மாதிரி அப்போது மலையாள A பட செக்ஸ் யுகம் நடந்துக்கொண்டிருந்தது தமிழ்நாட்டில்.இந்த யுகத்தை மலையாளப் பட போஸ்டர்கள் காட்டும்.அதற்கென்றே சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.அதைக் கட்டாயமாக எல்லா படங்களும் கடைப்பிடிக்கும்.கிழ் உள்ள போஸ்டர் சாட்சி. இதில் பெரிய”A”வைக் காணோம்.
முதல் தடவை 1978ல் பார்க்கும்போது soft porno ஆகத்தான் பார்த்தோம்.அதுதான் வேண்டி இருந்தது அப்போது(???).மொழி தெரியாது.தாய்மொழி தமிழ்.
சேச்சி ஜெயபாரதியைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை.கொஞ்ச காலம் கழித்து மீண்டும் பார்க்கும்போது சதை மறைந்து கதையும் மற்றவர்களும் குறிப்பாக சிறுவனும் தெரிய ஆரம்பித்தான்.டைரக்டரின் உண்மையான நோக்கமும் புரிபட ஆரம்பித்தது.பிட்டுப் பட திரிசமன் இதில் இல்லை.
எனக்கு ஒரு வயதில் ”பிட்டு”படமாகவும் வேறு வயதில் ”குட்டு”(good) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது இப்படம்.
இது உண்மையிலேயே சிம்பிளாக சொல்லப்பட்ட ஒரு நல்ல படம்.அப்போது இது ஒரு trend setter என்று சொல்லுவார்கள்.இதன் பாதிப்பில்தான் பாலு
மகேந்திராவின் “அழியாதகோலங்கள்” படம் வந்ததாக பேசிக்கொள்வார்கள்.இதில் நடித்த இன்னோரு கண்ணாடி அணிந்தப் பையன் அழியாதகோலங்களில் வருவான்
வியாபார காரணங்களுக்காக வலிந்து திணித்த கட்டாய செக்ஸ் காட்சிகளும் உண்டு.ஆனால் பிட்டுபடம் என்று முத்திரைக் குத்திவிடாமல் படத்தின் மற்ற அம்சங்களிலும் டைரக்டரின் கவனம் இருந்தது.கூர்ந்து கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம்.முக்கியமாக நகைச்சுவை.
படத்தில் சிறுவனாக (அப்பூஸ்)வரும் கிருஷ்ணசந்திரன் அட்டகாசம். பள்ளியிலிருந்து “கோலேஜ்” செல்லும் விடலைப் பருவத்துக்குண்டான பால் வடியும் முகம், பூனை மீசை,அரை டிராயர், சில சமயம் வேட்டி. இவனை ஆர்டர் கொடுத்த செய்தார் போல் பொருந்துகிறார்.
நடிப்பும் உடல் மொழியும் அபாரம். அவார்ட் கொடுக்கலாம்.அடுத்து ஜெயபாரதி (ரதி)சேச்சி.இந்த மாதிரி பாத்திரமெல்லாம் பின்னியெடுப்பார்.நல்ல நடிகையும் கூட.
இந்தப் படத்தின் இசை(ஜி.தேவராஜன்) படு சுமார்.ஆல் இந்தியா ரேடியோவில் கேட்ட நிலைய வித்வான்கள் மெல்லிசை மாதிரி இருக்கும்.
சரி... ரீமேக்குக்கு வருவோம். எந்த தைரியத்தில் இதை ரீமேக்குகிறார்கள். அதேதான் கதை என்கிறார்கள். 2011-1978 = 33 வருடம் ஆகிவிட்டது.எவ்வளவோ மாறி என்னென்னவோ ஆகி எங்கோ வந்துவிட்டோம்.இப்போது எடுபடுமா ?10 வருடத்திற்கு ஒரு முறை மக்களின் ரசனை, மனோபாவம்,பார்வை மாறும் என்று கேள்வி.
முக்கியமாக ஒரிஜனலின் கட்டமைப்பு (structure) ரெண்டுகெட்டான் சிறுவன் vs அவனைவிட வயது முதிர்ந்த பெண்.இதில்தான் திரைக்கதைக் கட்டப்படுகிறது.ஆனால் ரீமேக்கின் போட்டோவைப் பார்த்தால் இரண்டுபேரும் ஒத்தவயதுடையவராகத் தோற்றம் அளிக்கிறது.மற்ற ஸ்டில்களும் அதைத்தான் சொல்கிறது.
ஒரிஜனலில் அப்புவின் வெகுளித்தனம் ஜெயபாரதியின் முதிர்தோற்றம்தான் ஜீவநாடி.
இப்படித்தான் தமிழில் பாலைவனச்சோலை என்ற படத்தை ரீமேக் என்ற பேரில் ரிவிட் அடித்து ஊத்தி மூடினார்கள்.
ரீமேக்கில் நடிப்பவர்கள் ஸ்ரீஜித் விஜய் -ஷ்வேதா மேனன்.
இதைத்தவிர விளம்பர(promo)ஸ்டில்களில் ரீமேக் ரதி சேச்சி தாவணி போடாமல்
பழைய படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி :
ரதி, பப்புவிடம் சைக்களில் கடைக்குப்போய் தனக்கு வளையல் வாங்கிவரச்சொல்லும்போது வரும் வசனங்கள்:
ரதி: ரண்டு டசன் வாங்கிக்கோ.இதானு சைசு. அர டசன் கருப்பூ.அர டசன் பச்சா.அர டசன் கருஞ்செவப்பூ.பின்னே...அர டசன் பப்புவின் இஷ்டமுல்லதா..ஏது நெறம் பப்புவோட இஷ்டம்...?
பப்பு: (இன்ப அதிர்ச்சியில் சற்று திகைத்து,யோசித்து, பூரித்துப்போய் )ஏ(என்) சேச்சியோட நெறம்
______________________________________________________
எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்.”ரதிநிர்வேதம்” கிருஷ்ணசந்திரன் இப்போது. இவர் ஒரு பாடகர். “ஏதோ மோகம் ஏதோ தாகம்”(படம்-கோழிகூவுது) பாட்டைப் பாடியவர்.இதை ரதிநிர்வேதத்திற்குப் பாடி இருக்கலாமோ?
இவரின் மனைவி நடிகை வனிதா.
டெயில் பீஸ்: இந்த ஸ்ரீஜித் விஜய் பாசில் எடுக்கும் “லிவிங் டூகெதர்” என்றப் படத்திலும் நடிக்கிறார் என்கிறது ஒரு செய்தி.

- அம்மியில் சட்னி அரைக்கிறார்
- குத்துக்காலிட்டு மாவாட்டுகிறார்
- குனிந்து வடாம் காயப்போடுகிறார்
- மாட்டின் காம்பில் பால் கறக்கிறார்
பழைய படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி :
ரதி, பப்புவிடம் சைக்களில் கடைக்குப்போய் தனக்கு வளையல் வாங்கிவரச்சொல்லும்போது வரும் வசனங்கள்:
ரதி: ரண்டு டசன் வாங்கிக்கோ.இதானு சைசு. அர டசன் கருப்பூ.அர டசன் பச்சா.அர டசன் கருஞ்செவப்பூ.பின்னே...அர டசன் பப்புவின் இஷ்டமுல்லதா..ஏது நெறம் பப்புவோட இஷ்டம்...?
பப்பு: (இன்ப அதிர்ச்சியில் சற்று திகைத்து,யோசித்து, பூரித்துப்போய் )ஏ(என்) சேச்சியோட நெறம்
______________________________________________________
எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்.”ரதிநிர்வேதம்” கிருஷ்ணசந்திரன் இப்போது. இவர் ஒரு பாடகர். “ஏதோ மோகம் ஏதோ தாகம்”(படம்-கோழிகூவுது) பாட்டைப் பாடியவர்.இதை ரதிநிர்வேதத்திற்குப் பாடி இருக்கலாமோ?
ஓ... பப்புவோ! எத்தர பெரிய மனுஷனாயி! |