Tuesday, April 26, 2011

கவனகர் அல்லது அவதானி

ஆந்திராவைச் சேர்ந்த திருப்பதி வேங்கட கவிகள் என்பவர்கள் திவாகர்ல திருப்பதி சாஸ்திரி(1872-1920), செள்ளப்பிள்ள வேங்கட சாஸ்திரி(1870-1950) என்னும்  இருவர்கள். இவர்கள் தெலுங்கு, சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை மிகுந்தவர்கள்.பக்தி இலக்கியம், நாடக காவியங்கள்,ஆசு கவிதைகள்,எள்ளல் நடை கவிதைகள் இயற்றுவதில் விற்பன்னர்கள்.

முக்கியமாக இவர்கள் அவதானக் கலையில்
தேர்ச்சிப்பெற்றவர்கள்.இதில்அஷ்டாவதானம்(எட்டு),சதாவதானம்(நூறு),சகஸ்ராவதானம்(ஆயிரம்) என்று பலவகைகள் உண்டு.

”அஷ்டாவதானம்” இது ஒரு சமயத்தில் பல வேலைகளை( multi tasking) செய்வது என்று மொழிப் பெயர்க்கலாம். அவதானம் என்றால் மனம் ஒன்றுதல்/கவனம்/சமாதி என்று பொருள் கொள்ளலாம்.

மொத்தத்தில் இது நினைவாற்றல் கலை. கவனகம் அல்லது அவதானம்.

சதாவதானம்:

ஒரு சபையில் ஒரு அவதானியின் முன் நூறு பேர் இருப்பார்கள்.அவர்களின் ஒவ்வொருவரின் கேள்வி, பாடுபொருள் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு கவிதையின் முதலடியை இயற்றுவர். இதில் யாப்பு இருக்க வேண்டுமாம். முதல் சுற்று முடிந்ததும் இரண்டாவதில் எல்லோருக்கும் இரண்டாவது அடியை இயற்றுவர். இப்படியே மூன்று நான்கு என்று இயற்றி முடிப்பார்.

முடிந்ததும் எல்லோருக்கும் கோவைப்படுத்தி வரிசை மாறாமல் கூற வேண்டும்.இப்படி கூறும் போது கவனமாக இருத்தல் வேண்டும், சிலர் வரிசை மாறி உட்கார்ந்திருப்பார்கள்.இவரின் கவனத்தைக் கலைக்க பேச்சுக்கொடுப்பார்கள். சிரிப்பார்கள். கொசுவின் காலைப் பற்றி ஒரு கவிதை எழுதச் சொல்வார்கள்.

இது தவிர இவரின் முதுகின் தூவப்படும் பூக்களை எண்ணுதல், இடையில் ஒலிக்கும் மணியோசைகள், தும்முதல் போன்றவற்றை கணக்கெடுத்தல்  வேண்டும்.

அவதானத்தில் ரொம்ப கஷ்டமானது அஷ்டாவதானம்தானாம்.

நம் தமிழ்நாட்டிலும் சபாபதி முதலியார்,பூவை கல்யாண சுந்தர முதலியார் என்று அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்கள்.

ரொம்ப வருடத்திற்கு முன் தூர்தர்ஷனில் தசாவதானி ( தமிழில் “பதின் கவனகர்”) திருக்குறள் ராமையா பிள்ளை என்பவர்
இதைச் செய்திருக்கிறார்.ஒரு சமயத்தில் பத்துவிதமான செயல்களில் கவனம் கொண்டு அதை வரிசைப்படுத்திச் சொல்வார்.


உதாரணமாக முக்கால் மணி நேர நிகழ்ச்சியில் கவிதை இயற்றுவார். இயற்றும்போது பார்வையாளர்கள்.....

(தோராயமான ஞாபகத்திலிருந்து.கவனம் இல்லை)

  1. ஒருவர் முதுகைத் தொடுவார்
  2. எண் வரிசைப் பற்றி ஒருவர் கேட்பார்
  3. குறளின் பாதியை சொல்லுவார் ஒருவர்
  4. வலது பக்கம் மணி அடிப்பார்/இடைவெளியில் மீண்டும்
  5. இரண்டு பேர் இடம் மாறுவார்கள்
  6. ஒருவர் அவர் இயற்றும் கவிதைக்கு இரண்டாவது வரி கொடுப்பார்
  7. ஒருவர் தண்ணீர் கொடுத்து பெயர் சொல்லுவார்
  8. பாட்டுக்கு ராகம் கேட்பார்கள்
  9. எதற்காகவோ விளக்கம்  கேட்பது
  10. வரலாறு பற்றி
இது மாதிரி விஷயங்கள்  நிகழ்ச்சி முழுவதும் நிறைய நடக்கும். முடிவில் அஷ்டாவதானி எல்லாவற்றையும்  கவனத்தில் வரிசைப்படுத்தி சொல்லி அசத்துவார்.

திரு ராமையா பிள்ளை காலமாகி பல வருடம் ஆகிவிட்டது. இவரின் மகன் திரு கனக சுப்புரத்தினம் இதைப் பயின்று பதினாறு கவனகர் ஆகிவிட்டார்.

12 comments:

  1. Thanks for reminding these Tamil terminology and techniques

    ReplyDelete
  2. அறியாத ஒன்று பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி அனானி


    நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு சார்...
    எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர், ஓரளவுக்குக் கவனகர்தான். பள்ளியிலேயே நிகழ்ச்சி நடத்தினார். அத்தனை குறள்களும் தெரியும். எந்த வரிசையில் கேட்டாலும் சொல்வார்.அதே நேரம் போர்டில் மாய எண் கட்டங்களும் நிரப்பினார். தொலைபேசி எண்களும் ஞாபகமாய்ச் சொன்னார்...

    ReplyDelete
  5. ராமையா நாடார் என்பவர் பேரையூர் என்ற கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் இருந்தவர்.தன்னுடைய மத்திம வயதில் கண்பார்வை தெரியாமல் போனதற்கு பிறகு பதினாறு கவனகராகி இருக்கிறார். இன்று இவருடைய மகன் இராம.கனகசுப்புரத்தினம் என்பவர் பதினாறு கவனகராக இருக்கிறார்.ராமையா நாடாரின் மகள் மனோன்மணி என் அம்மாவின் பள்ளி தோழியாவார்.திருக்குறள் கனகசுப்புரத்தினம் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார்.கவனகர் முழக்கம் என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார்.

    ReplyDelete
  6. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  7. அமுதா கிருஷ்ணா said...

    //ராமையா நாடாரின் மகள் மனோன்மணி என் அம்மாவின் பள்ளி தோழியாவார்.//

    மகிழ்ச்சி.மீதி விவரங்கள் தெரிந்தவை.பதிவிலும் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  8. நான் படித்த பள்ளியில் திரு ராமையாவின் நிகழ்ச்சி நடந்து நானுமொரு திருக்குறள் கேள்வி கேட்டிருக்கிறேன்!!

    ReplyDelete
  9. middleclassmadhavi said...

    //நான் படித்த பள்ளியில் திரு ராமையாவின் நிகழ்ச்சி நடந்து நானுமொரு திருக்குறள் கேள்வி கேட்டிருக்கிறேன்!!//

    ஆஹா.. சூப்பர் போங்க. எந்தப் பள்ளி அது?

    நன்றி.

    ReplyDelete
  10. http://trichisundar.blogspot.com/2009/04/blog-post_12.html

    ஆஹா தலைவா... இதை பற்றி நான் சிலாகித்து எழுதியது ...உங்கள் பார்வைக்கு

    ReplyDelete
  11. அது ஒரு கனாக் காலம் said...

    //ஆஹா தலைவா... இதை பற்றி நான் சிலாகித்து எழுதியது ...உங்கள் பார்வைக்கு//

    பார்த்தேன் தலைவா. நல்ல பதிவு.

    நன்றி.

    ReplyDelete
  12. சிறிய திருத்தம்... உயர்திரு.இராமையா பிள்ளை அல்ல... இராமையா நாடார் என்பதே சரி... மாற்றிக்கொள்ளவும்...நன்றி...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!