Sunday, April 3, 2011

தோனி பின்னிட்ட!

வெற்றியிலும்  வெற்றி ஸ்டைல் வெற்றி. ”சொல்லி அடிப்பேன்” என்று 271 லிருந்து 277க்கு ஒரு ஆறு.What a magic  SIX!இந்தியா புல்லரித்தது. மூன்று நாளைக்கு பசி இருக்காது.

தோனிக்கு வாழ்க்கையில்  இது உன்னதமானத் தருணம்.
  • அவுட் ஆகாமல் கடைசிவரை விக்கெட்டைக் காத்தது
  • கேப்டனாக தானே வெற்றிக்கானப்  பந்தை அடித்தது
  • அதுவும்  ராயலாக ஆறாக அடித்து வென்றது 
  • முதுகு வலியுடன் வேறு ஆடியது
அக்கடச் சூடு!
கனவு மெய்ப்பட்டுவிட்டது. உலகக்கோப்பை கைவசமாகிவிட்டது.கனவின் பகுதி -1 ஆஸ்திரேலியாவை வென்றது. பகுதி-2 பாகிஸ்தானை தோற்கடித்தது. பகுதி -3(பெருங்கனவு) உலகக் கோப்பையை வென்றது.

உலகக் கோப்பை பையன்களா தூள் கிளப்பிட்டீங்க!  Hats off to you boys!    

உண்மையிலேயே கனவு மாதிரிதான் இருக்கிறது.சற்றுத் தொலைத் தூரமாகத் தெரிந்த 275ஐ விடாது பொறுமையாகத் துரத்திப்(chase) பிடித்து விட்டோம்.கடினமான உழைப்புக்கிற்குப் பரிசு. No pain. No gain.வீரர்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும்   வியர்வை சிந்தி களத்தில் விளையாடி ஜெயித்தார்கள்.கிரிக்கெட் ஆட்டத்தின் ஆன்மா சாகவில்லை.

இந்த சுகப்பிரசவம் ஆவதற்குள் எவ்வளவு வலிகள்?.

மும்பாயில் என்றுமில்லாமல் வெய்யில் சூடு."பூவா தலையா”வில் குழப்பம்.குருவிக் கூடு தலையன் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வாரி வழங்கியது.ஸ்ரீலங்கா கடைசி ஓவர்களில் அருமையாக ஆடி 275 என்ற பெரிய சுமையை சுமத்தி கன்னா
பின்னாவென்று ஒரு சஸ்பென்சில் நிறுத்திவிட்டுப்போய்விட்டார்கள்.

நியா?நானா ?மீண்டும் ஒரு திரில்லர். தொடரப்போகும் திகில்.

ஜெயவர்த்தனேவின் அபார ஆட்டம்-103
ஷேவாக் வழக்கமாக டான்ஸ் ஆடி  ஊத்தி மூடிக்கொண்டார்.அருமையாக ஆடிக்கொண்டிருந்த மும்பாய் பையன் டெண்டுல்கரை( what a superb strokes!) இழுந்தோம்.டெண்டுல்கர் கனவு தற்காலிகமாக நொறுங்கி சுக்கல் சுக்கல் ஆனாது.இந்தியாவிற்கு மரண அடி.சவக்களை தட்டியது இந்தியாவிற்கு.

திகிலா இருக்கு ... என்ன நடக்கப்போவுதோ?
”பால் வடியும்” முக  கம்பீரும் விராத்தும் குருவி போல் ரன் சேர்த்து அடித்தளம் உறுதியாக்கி  வயிற்றில் பாலை வார்த்தார்கள்.விராத் போனவுடன் கலவரமானோம்.அடுத்து சூப்பர் ஸ்டார் தோனி தன்னை ஐந்தாவதாக உயர்த்திக்கொண்டு(யுவராஜிற்கு முன்) “இந்தியாவையும் உயர்த்தினார்.

(இதில்(ஐந்தாவதாக வந்ததில்) இன்னொரு உள்குத்தும்  இருக்கிறது.தோனி வலதுகை ஆட்டக்காரர்,கம்பீர் இடதுகை. பந்து வீச்சாளர்களுக்கு வீச்சில்  சுருதி  தடுமாற வைப்பதற்கு. தடுமாறியதா?)
டெண்டுல்கர் அவுட் ஹை! க்யா போல்ரா...
இதற்கிடையில் ஸ்ரீலங்காவின் கைப்பிடி மெதுவாக தளர ஆரம்பித்தது.பிட்ச் ஒன்றும் அவ்வளவாக உழைக்கவில்லை.fieldingகில் தேவினார்கள்.
overthrowவில் இந்தியாவிறகு உதவினார்கள்.அகலப் பந்தில்(wide)இந்தியாவை ஆறுதல்படுத்தினார்கள்.இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல் கேப்டன் சங்ககாரா “ங்கே” என்று விழித்துக்கொண்டிருந்தார். (நாமும் இதையே செய்தோம் அவர்கள் விளையாடும்போது )

இப்படி சுகமாக போய்க்கொண்டிருக்கும்போது review வில் இதயத் துடிப்பை எகிற வைத்து தோனியும் கம்பீரும் சாவின் விளிம்பிறகுப் போய் ரெண்டு தடவை உயிர் பிழைத்தார்கள்.

final decision வரும் வரை ஸ்டேடியத்தில் ஒரு இதயத் துடிப்பு BGM கலக்கல்.
 
இந்த review இப்போது necessary evil ஆகிவிட்டது. எல்லாம் நல்லதிற்கே!சில சமயம் ரசிகர்களை “குபீர்” ஆக்கிவிடுகிறது.

கவுதம் கம்பீரின் 97 இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம்.பொறுமையாக ஆடி சேர்த்தார்.துரத்திப் பிடித்ததில் கவுதம் கம்பீர் முக்கியமான ஆட்டக்காரர்.
சில ஹைலைட்ஸ்:
  • முத்தைய்யா முரளிதரன் கனவு பொசுங்கிவிட்டது
  • இந்தியாவின் பீல்டிங் முதல் 10 ஓவர்களில் பிரமாதம்
  • ஷேவாக் பிடித்த தரங்காவின் கேட்ச் அற்புதம்
  • யுவராஜின் ஆனந்த அழுகை
  • ஒரு இந்தி மற்றும் ஆங்கில வர்ணையாளரின்(நேஷனல்) குரல் தாங்க முடியவில்லை.திண்ணைப் பேச்சு மாதிரி இருந்தது. நரோத்தம் புரி சூப்பர்.
  • ஓவ்வொரு வீட்டிலும் ஸ்டேடியம் மாதிரி கொண்டாட்டம்


டெயில் பீஸ்: பூனம் பாண்டே என்னும்”கிங் பிஷ்ஷர்” மாடல் “இந்தியா ஜெயித்தால் நான் நிர்வாணமாக தெருவில் ஓடுவேன்” என்றாராம்.இந்தியா ஜெயித்த அடுத்த நிமிடம் அம்மணி செல்போனை ஸ்விச் ஆஃப் செய்துவிட்டராம். காரணம் அம்மணி மேல் எப் ஐ ஆர்.


4 comments:

  1. Congrats Team India! You made all of us proud!

    Reliving the moments... Again and again....

    ReplyDelete
  2. நொறுக்ஸா தொகுத்து இருக்கீங்க... வாழ்நாள்ல சந்தோஷமான தருணமது :)

    ReplyDelete
  3. நன்றி அஷோக்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!