Wednesday, April 20, 2011

ஷரத்தின் 180 இசை மற்றும் ”பொட்டு”ன்னு சொன்னா.....

போட்டோவில் இருக்கும் ஷரத் என்பவர் மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளர்.முறையாக சங்கீதம் படித்தவர்.நிறைய மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.நல்ல குரல் வளம்.

இவர் “ஹரியுடன் நான்” ஜெயா டிவி நிகழ்ச்சியில் நகைச்சுவையாகப் பேசி கலகலக்க வைப்பார்.இசையின் டெக்னிகல் விஷயங்களை ஆழமாக அலசுவார்.ஜுன் ஆறு என்ற தமிழ்ப் படத்திற்க்குக் கூட இசையமைத்து உள்ளார்.

சமீபத்தில் இவர் இசையமைத்த  ”180 டிகிரி ரூல்ஸ் இதுக்குக் கிடையாது” என்ற தமிழ் படத்தின் இசைத் தொகுப்பைக் கேட்டேன்.

இனிமையானப் பாடல்கள் சில.சுமாரானது சில.”சிறுசிறு”அப்படியே ரஹ்மான் சாயல்.

அதில் இரண்டு பாடல்கள்:

”நீ கூறினால்”-ஸ்வேதா மோகன் - கார்த்திக்

இனிமையான பாட்டு.அருமையான குரல்கள்.
 
இந்தப் பாட்டில்  சுவராசியமான விஷயம்.
ராஜா, ரஹ்மான்,யுவன் எல்லா மணங்களும் கலந்து வருகிறது.0.32-0.59 இசைத்துளிகள் சரியாகத் தொடுக்கப்படாமல் ஒரு மாதிரி “தனி”யாக இருக்கிறது.முழுமை இல்லை.

”கேஜே”-விது பிரபாகர்-ரம்யா


இதுவும் இனிமை.வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணி.முக்கால் ராஜா, கால் ரஹ்மான்.இதிலும் முழுமை இல்லை.

பல வருடமாக முக்கால்வாசிப் பாடல்கள் ”யூத்”தை குறிவைத்து இசைக்கப்படுவதால் கருவிகளின் ஆதிக்கத்தின் நடுவில் மெலடியைக் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்.
___________________________________

துபாயில் பின்னணிப் பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் முழ்கி இறந்துப் போனது மகா சோகம்.கவனமாக இருந்திருக்கலாமோ? இதைப் பற்றிய சில ஞாபகங்கள்.

பல  வருடங்களுக்கு முன் வெளியூரில் ஒரு திருமணத்திற்குச்
சென்றிருந்தோம்.மண்டபத்தின் பின்  மூடப்படாமல் ஒரு பெரிய கிணறு.கைப்பிடிச்சுவர் உயரம் கம்மி. யாவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வசீகரமான கிணறு.ஆழம் அதிகம்.

குழந்தைகளும் சிறுவர்களும்  அதைச் சுற்றி ஓடி விளையாடுவதும் எட்டிப்பார்ப்பதுமாக இருந்தார்கள். பெரிசுகள் மண்டபத்தின் உள்ளே. ஒரு பெரிய பெரிசு விபரீதத்தை உணர்ந்து  மற்ற பெரிசுகளிடம் சொன்னார்.யாரும் காதில் வாங்கவில்லை.காரணம் ” நம்மளுக்கு ஒண்ணும் நடக்காது”. டேக் இட் ஈசி பாலிசி.

பெரிசு நாசூக்கை விட்டுவிட்டு சற்று நாராசாரமாக “ போனவாரம்தான் ரெண்டு குழந்தைங்க விழுந்து செத்துடுத்தாம். ரெண்டுமே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாம்” என்று  பீலா விட்டவுடன் எல்லா பெரிசுகளும் விழுந்தடித்துக்
கொண்டு  ஓடி குழந்தைகளை இழுத்துக்கொண்டு வந்து பின் கதவை தாழ்போட்டார்கள்.

ஒரு பேன்சி கடையில் பிறந்த நாள் பரிசுக்காக பரிசுப்
பொருட்களை நானும் என் மகனும் பார்த்துக்கொண்டிருந்தோம்.மகன் எல்லாவற்றையும் கையில் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான்.

”தொடாமல் பாரு” என்று அங்கிருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினேன். அது “Please do not touch or disturb the gift items".தெரியும்பா என்றான்.

”தொட்டு அது கிழ விழுந்து சுக்கு நூறா போச்சுன்னா அதோட விலை ப்ளஸ் கிளினிங் காஸ்ட் தோராயமா 200 ரூபா. நீதான் கொடுக்கனும்.கிப்ட் வாங்க முடியாது”

அடுத்த நிமிடம் இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டவாறு கிப்ட் அயிட்டங்கலை நோட்டம் விட ஆரம்பித்தான்.

”பொட்டு”ன்னு  சொன்னா.... ”பட்டு”ன்னு உரைக்குது.தொலை நோக்குப் பார்வையில் விபரீதங்களை தடுப்பது நலம்.


(வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல்:”பாத்துப் போ.  நடு கபாலத்துல  நச்சுனு விழுந்து நாலா பொளுந்து நாண்டுக்கிடுவ.நாலுபேர் தூக்கும்படி ஆயிடும்”) 

8 comments:

  1. முதல் பாட்டுக்கு குரல்கள் நல்ல சாய்ஸ்...

    ரெண்டாவது பாட்டில் கொஞ்சம் மகேஷ் பாதிப்பு கூட இருக்கே:)..."பூங்குயில் பாடினால் என்ன சங்கீதம்" 1.39 கு அப்புறம் வரும் அந்த violin இசைக்கு அடுத்து...மகேஷ் இசை ஞாபகம்...

    அண்ணா...நீங்க எதை முழுமை அடையலைன்னு சொல்றீங்க..முதல் இசையா...??
    பட் எனக்கு எதுவுமே கேட்ச் ஆகல அண்ணா..:(((

    ReplyDelete
  2. ”பொட்டு”ன்னு சொன்னா.... ”பட்டு”ன்னு உரைக்குது.தொலை நோக்குப் பார்வையில் விபரீதங்களை தடுப்பது நலம்.

    (வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல்:”பாத்துப் போ. நடு கபாலத்துல நச்சுனு விழுந்து நாலா பொளுந்து நாண்டுக்கிடுவ.நாலுபேர் தூக்கும்படி ஆயிடும்”)


    ...... பல சமயங்களில், எதில் கவனம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம் - உலுக்கும் சம்பவங்கள் நடக்கும் வரை - அல்லது கேட்கும் வரை.

    ReplyDelete
  3. Mr.Sharath is a disciple of Shri. Dr.Balamuralikrishna.

    ReplyDelete
  4. இசையானியின் பாடல் இருக்கும் என்று வந்தாள் புதியவரை தந்துள்ளீர்கள் பாட்டைகேட்கின்றேன் பதில் பிறகு நண்பா!

    ReplyDelete
  5. //அண்ணா...நீங்க எதை முழுமை அடையலைன்னு சொல்றீங்க..முதல் இசையா...??//

    இசை இழைகள் சரியாக சேரவில்லை என்று சொன்னேன் ஆனந்தி. நன்றி.

    ReplyDelete
  6. நன்றி சித்ரா

    நன்றி அழகன்

    //இசையானியின் பாடல் இருக்கும் என்று வந்தாள் புதியவரை தந்துள்ளீர்கள் பாட்டைகேட்கின்றேன்//

    எல்லோரையும் முடிந்த அளவு கேட்பேன்.அது ஒரு அனுபவம். பரந்துப்பட்ட பார்வை கிடைக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  7. சரத்தின் தமிழே அழகு - மலையாள ஆக்செண்டுடன்!

    பொட்டுன்னு சொல்வது அருமை!

    ReplyDelete
  8. நன்றி மிடில்கிளாஸ்மாதவி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!