தாளம் என்று சொல்லும்போது முதன்முதலில் எனக்கு அறிமுகமான எம் எஸ்வி - ராமூர்த்தி பாட்டின் சில தாளங்களை என்னால மறக்க முடியாது.வித்தியாசமான தாளங்கள் மற்றும் பாட்டு. அந்தக் காலத்திற்கேற்ற இசைக்கருவிகளுடன். அவை:
தொட்டால் பூ மலரும் - படகோட்டி-1964,
காற்று வாங்கபோனேன் -கலங்கரை விளக்கம் -1965
அவளுக்கென்ன - சர்வர்சுந்தரம் -1964
பொன்மகள் வந்தாள்-சொர்க்கம்-1970
காற்றுக்கென்ன வேலி- அவர்கள் -1977
அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும் -1965
கண்ணன் என்னும் மன்னன் பெயரை -வெண்ணிற ஆடை-1965
இன்னும் இருக்கிறது.
இளையராஜா தாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு தன் நவீன இசையால் நகர்த்தினார்.தாளக்கட்டில் புரட்சியே செய்திருக்கிறார்.Master of Musical Beats.பின் வரும் தாளத்துடிப்புகளே இதை சொல்லும்.
He is musical genius in blending the Melody(song) and Rhythm(beat) artistically.
ஸ்ருதி(மெட்டு) மாதா லயம்(தாளம்) பிதா என்று சொல்வார்கள்.
பாட்டிற்குக்கொடுத்த அதே ஆளுமையை (personality)இதற்கும் கொடுத்து புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார்.மெட்டில் இருக்கிற அதே உயிர் துடிப்பும் ஆத்மாவும் இதிலும் இழையாக ஓடுகிறது. ஆத்மா இல்லாத இசை வெறும் சவம்.
ஆச்சரியமான விஷயம் இவரின் ஆரம்பகால தாளங்களில் கூட பெரும்பாலும் “கத்துக்குட்டித்தனம்” இல்லை. மேதமை பொருந்தி இருக்கிறது.
ரசிகன் மனநிலையிலிருந்து ஆராய்ச்சி மாணவன் மனநிலைக்கு கொண்டுப்போய் விடுகிறார்.(எப்போதும் நடப்பது)
கர்நாடக இசையில் உள்ள விதவிதமான தாளங்களை தன் இசையில் நவீனமாக உபயோகப்படுத்தி உள்ளார்.அதைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.
ஒரு காமன் சென்ஸ் பார்வையில் தாளத்தைப் பற்றி:(தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்)
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக:
- தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
- சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
- உன் பார்வையில் ஓராயிரம்
- ஓ... உன்னாலே நான் பெண்ணானேனே...
- பொதுவாக என் மனசு தங்கம்
இந்தப் பாடல்களை அதே மெட்டில் பாடியபடி கையால் மேஜையில் தாளம் போடுங்கள்.(நாம் மியூசிலாகத் தட்ட முடியாது.சும்மா தட்டுங்கள்). தட்டல் எண்ணிக்கை வித்தியாசப்படும். காரணம் 1.வார்த்தை 2.மெட்டு. 3.உச்சரிப்பு.
”சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்” ராஜாவின் மெட்டுலேயே பாடும்போது போடும் தட்டல் அதிகமாகும். காரணம் நீளமான பல்லவி.” ஓ... உன்னாலே” அந்த ஓவை ஸ்டைலாக உச்சரிக்கும்போது தட்டல் எண்ணிக்கை அதிகமாகும்.
அதே போல்”உன் பார்வையில் ஓராயிரம்” மாறுபடும்.
இப்படி தட்டல்களின் எண்ணிக்கையை வைத்து ஆதி தாளம்,மிஸ்ர சாபு, கண்ட சாபு என்று வகைப்படுத்தி உள்ளார்கள்.
மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பாடும் வினாடிகள் அதற்குள் தட்டப்படும் தட்டல்கள். இதுதான் பாட்டுக்கு ஏற்ற தாளம்.
நாம வேண்டியவர்களுக்கு அடிக்கும் அதே “ஜிங் சக்”தான் தாளம்.
ராஜா இதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார். பின் வரும் பாட்டெல்லாம் ஏதோ ஒரு தாளத்தில் அடங்கும்.எல்லாம் ஒரு கணக்குதான்.
நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.ராஜா 1975ல் வந்தது நல்லதாகப் போயிற்று.இல்லாவிட்டால் இவ்வளவு விதவிதமான தாளக்கட்டுக்கொண்ட பாடல்கள் கிடைத்திருக்காது.காரணம் படங்கள் மாறிவிட்டது.பாட்டுத் தேவையா என்ற கட்டத்திற்கு வந்துவிட்டோம்.
கிராமம்,நகரம்,திகில்,சரித்திரம், மாயஜாலம்,பக்தி,ஆர்ட்
பிலிம்,கிராபிக்ஸ் படம்,புராணம், குற்றம்,குடும்பம்,முடிச்சவ்ழிக்கி,மொள்ளமாரி என்று எல்லாவித பிரிவுகளுக்கும் பாட்டுப்போட்டதால் மேஸ்ட்ரோவுக்கு சோதனை முயற்சிகள் செய்ய நிறைய வாய்ப்பு.போட்டுப்பின்னியிருக்கிறார்.
Master Blaster Maestro எல்லா fielding positionகளிலும் தன் பேட்டை சுழற்றி ரன்(தாளம்) அடித்திருக்கிறார்.ரிவர்ஸ் பேட்டும் ஆடி இருக்கிறார்.
- தாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மெட்டை(பாட்டு) கைவிடவில்லை
- தாளமும் மெட்டும் இணைந்துப்போகிறது
- தாளத்திற்காகக் கூட மெட்டு அமைத்தப் பாடல்கள் இருக்கிறது
- ஒரு சில பாட்டில் மேலோட்டமாகப் பார்த்தால் தாளம் இணைந்துப் போவது மாதிரி உணர்வோம்.ஆனால் சற்றுத் தள்ளிப்போகும்.அது ஒரு டெக்னிக் என்று சொல்லாம்
- ஒரே பாட்டில் டிரம்ஸ்,தபலா,மிருதங்கம்,டோலக் என்று தாளம் தாவுகிறது
- தாளத்தின் சின்ன சின்ன உணர்ச்சிகளை கவனமாக கேளுங்கள்
- தாரை,தப்பட்டை,உறுமி,தப்பு,கஞ்சிரா,மிருதங்கம், தவில்,டிரம்ஸ்,கைத்தட்டல்,தொடைத்தட்டல்,காங்கா, பேங்கோ மற்றும் பல
- தாளத்திற்கு முன்னும் பின்னும் பின்னப்படும் இசை முக்கியமானது
இதன் பெயர் Vibraslap.இதைக் கூட பயன்படுத்தியதாக நண்பர் சொன்னார். எந்தப் பாட்டிற்கு என்று தெரியவில்லை.
குறைந்தப்பட்சம் 3 நிமிடங்கள்தான் ஆடியோ ஓடும்.பாட்டின் பின் வரும் தாளத்தை சற்று உன்னிப்பாக கவனித்தால் அதன் தனித்தன்மையைக் காணலாம்.முன்னும் பின்னும் பாட்டு ஒடுவது ஒரு முழுமைக்காகதான்.
”
தென்ன மரத்துல” இருந்து ”பீட் பீட் பீட்” வரை 17 பாடல்களை சிவப்பு நிறத்தில் கொடுத்திருப்பது இசைஞானியின் தாளத்தின் பன்முகத் தன்மையை முன்னிலைப்படுத்துவதற்காக.ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.அதற்குப் பிறகு வருபவையும் தனிதன்மை கொண்டவையே.
தாளங்களை கூர்ந்து கவனியுங்கள்.
தென்ன மரத்துல தென்றல் அடிக்குது-லஷ்மி-1979
அழகே தமிழே அழகிய - கோவில் புறா-1981
Two - in -One.மெட்டுக்குத் தாளமும் தாளத்திற்கு மெட்டும் திருப்பிக்கொள்ளலாம்
ஆடும் நேரம் இதுதான் -சூரசம்ஹாரம் -1988
தகிடதகிட தந்தானா - சலங்கை ஒலி-1982
சும்மா குமுறவில்லை. ஒரு கலை அம்சத்தோடு குமுறுகிறார்.
0.10ல்மிருதங்கத்திலிருந்து தபலாவுக்கு தாவுகிறது தாளம்.
காதல் ஓவியம் -அலைகள் ஓய்வதில்லை-1981
தாளம் புதுசு.பின் பாதியில் அப்படியே தாளத்தை மாற்றுகிறார்.அம்மாடியோவ்!ஹிட்சாக் படத்தில் அடுத்து வருவதை கூட யூகிக்கலாம்.ஆனால் இவர் பாட்டில்.
குயிலே குயிலே - காதல் ஓவியம் -1982
சோகமான பாட்டிற்கு மென்மையாகத்தான் தாளம் வைக்கப்படும்.இதில் சற்று
கடினமாக தாளம் போகிறது.சோதனை முயற்சி?வெற்றியும் பெற்றுவிட்டார்.
போற்றிப்பாடடி கண்ணே -தேவர்மகன் -1992
கன்னிப்பொண்ணு கைமேல -நினைவெல்லாம் நித்யா-1982
உன் பார்வையில் -அம்மன் கோவில் கிழக்காலே-1986
28BeatUnParvaiyil.mp3
என்ன சுகமான உலகம்- கர்ஜனை-1981
மிருதங்கம் வயலின் கலவை அருமை.
42BeatEnnaSougamana.mp3
ஒரு ராகம் தராத பாடல் -உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்1992
என்ன ஒரு மெட்டு..! தாளம் பேசுகிறது..!
இப்போதென்ன தேவை - மக்களாட்சி -1995
அமிர்தவர்ஷ்னி ராகத்தின் சாயலில் ஒரு பாட்டு.
9BeatMakkalAati-IppothuEnna.mp3
பார்த்த விழி பூத்திருக்க - குணா -1991
29BeatPaarthavizhi-Guna.mp3
கேளடிகண்மணி - புதுப்புது அர்த்தங்கள்-1989
தாம்பூரின் என்ற இந்த இசைக்கருவியின் ஓசை இதில் கேட்கலாம்.அதன் நாதம் எப்படி பாட்டை அழகுப்படுத்துகிறது.
34BeatKeladiKanmani.mp3
கொத்தமல்லிப்பூவே - கல்லுக்குள் ஈரம் -1980
7BeatKoothamallepoove.mp3
கிழே இருக்கும் ஜலதரங்கம் இன்னும் இசைக்கருவியில்தான்
முதலில் வரும் இசை வாசிக்கப்பட்டிருக்கிறது.
(திருமதி சீதாலஷ்மி துரைசாமி)
இளநெஞ்சே வா - வண்ண வண்ண பூக்கள்-1992
இந்தப் பாட்டில் தோல்கருவிகள்தான்.உரையாடலை
கவனியுங்கள்.தாளக்கட்டை வைத்தே முக்கால்வாசி பாட்டு ஓடுகிறது.ஒரு மைல் கல். சோதனை முயற்சி.
1.07 பிறகு பல்லவியில் ட்ரம்ஸ் ,தபலா என்று மாறி மாறி தட்டப்படுகிறது.
தாளம் மெட்டை விட்டு தப்பிப்போகிறது ஆனால் போகவில்லை??!!
பருவமே புதிய பாடல் பாடு -நெஞ்சத்தே கிள்ளாதே-1980
தொடையில் தட்டித் தாளம் எழுப்பப்பட்டதாக கேள்வி. தொடைத் தட்டலில் ஆரம்பித்து மெதுவாக வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்குப் போய் ஹார்மனியத்தில் முடிகிறது.
காத்திருந்தேன் தனியே - ராசா மகன் -1994
7 beat cycle rhythm என்ற வகையில் போடப்பட்டதாம்.”காத்திருந்தேன் தனியே” “எதிர்பார்த்திருந்தேன் உனயே” “பூத்திருந்தேன் விழியே” ஒவ்வொரு வார்த்தையும் முடிக்க ஐந்து செகண்ட் ஆகிறது.அந்த ஐந்து செகண்டில் எத்தனை beat அடிக்கப்படுகிறது என்று மேஜையில் தட்டிப்பார்க்கவும். ஏழு வருகிறதா?
மோகனராகமும் கூடவே மெட்டில் போகிறது.ஜிக்கியின் மகன் சந்திரசேகர் பாடுகிறார்.
BeatKaathirunthen.mp3
____________________________________________________________
சிவகர தமருக -கொச்சு கொச்சு சந்தோஷங்கள்-2000
சித்ரா குரலில் கொல்கிறார்.ராஜா தாளத்தில்.
BeatShivkaradamaruka.mp3
நிலவு பாட்டு -கண்ணுக்குள் நிலவு-2000
தாகம் எடுக்கிற நேரம் - எனக்காகக் காத்திரு-1981