Wednesday, June 30, 2010
Tuesday, June 29, 2010
ஹைக்கூ....ஹைக்கூ...!
தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைக்கூ.மற்றும் வேறு விதிகள் கட்டாயம் (5-7-5) உண்டு.
இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.
Haiku only describes, does not prescribe or tell or preach.
குடை மேல் மழை
குடைக்குள் தெறிக்கிறது
சாரல்
___________________________________________________
பூட்டிய வீட்டிற்க்குள்
சிணுங்கிக் கொண்டிருக்கும்
அதிர்ஷ்ட மணிகள்
திடீர் மின்னல் ஒளியில்
ரோடை கிராஸ் செய்யும்
நீள பாம்பு
ஹாலில் தூங்குபவர்கள் மீது
ஏறிப் போகிறது
குல்ஃபி ஐஸ் வண்டி

கார் மேல் படர்ந்துள்ள
தூசியில் எழுதப்பட்டிருக்கிறது
I love you Kavitha

புது மனைவியையே
பார்த்துக்கொண்டிருக்கும்
நிலவு
___________________________________________________
திடீர் மின்னல் ஒளியில்
ரோடை கிராஸ் செய்யும்
நீள பாம்பு
___________________________________________________
ஹாலில் தூங்குபவர்கள் மீது
ஏறிப் போகிறது
குல்ஃபி ஐஸ் வண்டி
___________________________________________________
கார் மேல் படர்ந்துள்ள
தூசியில் எழுதப்பட்டிருக்கிறது
I love you Kavitha
___________________________________________________
Saturday, June 26, 2010
”அவதார்” ராவணன் -விமர்சனம்
”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் ” என்ற தகவல் தொடர்பு சம்பந்தமான ஆட்டோமேடிக் குரல் ஒன்றை செல்லில் அடிக்கடி கேட்கலாம்.இந்தப் படத்தை பார்த்துக்
கொண்டிருந்த போது அப்படித்தான் தொடர்பு எல்லைக்கு வெளியே 2000 கி.மி. தூரத்தில் சுத்தமாக ஒட்டாமல் இருந்தேன்.
இத்தனைக்கும் இப்படத்தில் தமிழ்நாடு சம்பந்தமான திருநெல்வேலி,பிரபு,கார்த்திக்,ப்ரியா மணி,விக்ரம்,வையாபுரி,பரிசல்,காடு,அருவி,மலை கிராமம்,குகை, இருட்டு( மணிரதனம் அல்ல)தாவணி,மல்லிகைப்பூ,மணிரத்னம்,சுஹாசனிஎல்லாம் போட்டு அடைத்து இருக்கிறார்கள்.
ஆனால் ”அவதார்” பட கிரகவாசிகளைப் போல் படு அந்நியமாக இருக்கிறார்கள்.பேசுகிறார்கள்.கம்புயூட்டர் வடிவமைத்த டான்ஸ்ஆடுகிறார்கள்.கோனாரக் கோவில் அருகே கல்யாணம் நடக்கிறது.சுத்தமாக வட்டரத்தன்மை காணவில்லை.காட்டும் வட்டாரத் தன்மையிலும் ஒரு Hi-Fiத் தனம்.
ராமாயணத்தின் கதைதான் ஒன் லைன் ஸ்டோரியாக பெரிய கேன்வாசில் வழக்கமான மணியின் non-linearல் சொல்லப்பட்டிருக்கிறது.ஆழம் இல்லை.ஏன்? எதற்கு? என்ற அடிப்படையில்லாத சம்பவங்கள் non-linear narration ல் நீர்த்துப் போகிறது.
பழங்குடி மக்களின் தலைவன் தங்களுக்கு போலீஸ் இழைக்கும்/இழைத்த அநீதிக்கு எதிராக பழி வாங்கும் நோக்குடன் SPயின் மனைவியை (ராகினி) கடத்தி காட்டிற்கு கொண்டு சென்று 14 நாட்கள் வன வாசம் வைத்துவிட்டு திருப்பி அனுப்புகிறான்.இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கடைசியில் என்ன ஆகிறது? முடிவைத்திரையில் பார்க்கவும்.
வனவாசத்தில் ராகினிக்கும் வீராவுக்கும் ஏதாவது கெமிஸ்டரி,பிசிக்ஸ்,ட்ரிக்னாமெண்டரி எப்படி இருக்கிறது என்பதை பிரேமுக்கு பிரேம் காவியத்தன்மையுடன் சொல்ல விழைகிறார்கள்.
சொன்னார்களா? சுத்தமாக இல்லை.
படத்தில் சுத்தமாக ஜீவனே இல்லை. Soul is dead.படு செயற்கையான டப்பிங் பட mismatch வசனங்கள் அண்ட் mismatch உணர்ச்சிகள்.மெயின் கதைக்கு அணைந்து வராத காட்சிகள்.மெயின் கதாபாத்திரங்களும் அவர்கள் உணர்ச்சிகளும் வெறும் பில்ட அப்தான்.சுத்தமாக ஒட்டவே இல்லை.
சாதாரண வசனங்களை ரொம்ப படுத்தி எடுத்து ஹாலிவுட் ஸ்டைல் ஆக்கி.....?வசனங்களுக்கு சுஹாசினி கோனார் நோட்ஸ் போட்டால் நல்லது.காட்சிகளை ஆழமாக உள் வாங்காமல் அசட்டுத்தனமான அச்சு பிச்சு வசனங்கள்.
அருமையான பின்னணிதான் நம்மை பரிதாமாக கெஞ்சி ஒரளவுக்கு ஒட்ட வைக்கிறது.
மூன்று மொழியில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, தமிழ்+ஹிந்தி+தெலுங்கு மூன்றையும் கூட்டி காட்சி அமைப்பு+எமோஷன்+கதாபாத்திரங்கள்+லோகேஷன்+வசனம்+உடை போன்றவைகளுக்கு ஒரு ஆவரேஜ் எடுத்து குழம்பி,குதறி ரெண்டுங்(மூன்று?) கெட்டானாக படம் பல் இளிக்கிறது.
ஆனால் ஓவர் பிலட் அப்போடு இளிக்கிறது.
பாடலகள் ஆவரேஜ்தான். வழக்கமாகவே ரஹ்மான தமிழ்+இந்தி+குளோபல்= ஆவேரஜ் எடுத்து பாட்டைக் கம்போஸ் செய்வார்.இதிலும் அதே.அதே ரெண்டுங்கெட்டான் தனம். ”உசிரே போகுது” ”கெடக்காரி”பாடல்கள் ஓகே. “கள்வரே” பழைய எம் எஸ் விஸ்வநாதனின் பாடலை பாலிஷ் செய்து போடப்பட்டது? பின்னணி நிறைய இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.”கோடுபோட்டா” பாடல் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது..
அசோகவனத்து Lux Supreme சீதாவாக ஐஸ் வருகிறார்.நடிப்பு? விக்ரம் அச்சு அசலாக வீராவாக வருகிறார். பாராட்டுக்கள்.உழைப்பு எல்லாம் வீண்.
பிருதிவிராஜ் நல்ல நடிப்பு. தலையில் கொண்டைப் போட்டு கையில் வில் கொடுத்தால் அப்படியே சாட்சாத் ராமர்பிரான்தான். மழுங்க மழித்த சாந்தமான ராமன் முகம்.
அனுமான் கார்த்திக் காமெடி தெலுங்கு டப்பிங் டைப் ஹிம்சை.
தியேட்டரில் எல்லோரையும் கலகலக்க வைத்தது ”கதவைத் திற காற்று வரட்டும்” ஹிரோயின் ரஞ்சிதா. முகம் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. ப்ரியா மணியும் பிரபுவும் குறுக்கும் நெடுக்கும் வந்து போகிறார்கள்.
அருமையான லோகேஷன்.அருமையான கேமரா, விக்ரம் நடிப்பு.

மொத்தத்தில் மணிரத்னம் “பிலிம்” காட்டி வா(லி)ட்டி வதம் செய்துவிட்டார்.
Friday, June 25, 2010
வாணி Honey ஜெயராம்
70வதுகளில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி என்று கேட்ட குரல்களையே கேட்டு புளித்துப் போய் இருந்த காலக் கட்டத்தில் வந்தவர் வாணி ஜெயராம்.இவர்களிடமிருந்து மாறுபட்ட வித்தியாசமான குரல்."என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டைக் கேளுங்கள் தெரியும்.
ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)
அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.
எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.
எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.
முதல் படம் என்னவென்று தெரியவில்லை.
இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.
அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.
ஆனால் முதல் கட்டமாக என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:
”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)
”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)
“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration) இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.
இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.

அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).
அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.
வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.
ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு
"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்-1977
"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.
”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
என்னால் என்றும் மறக்க முடியாத மற்றொரு பாடல்:
"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.
குறை: கடைசியில் பல்லவி பாடி முடியும் இடத்தில் வாணிக்கு மூச்சு வாங்குவது கூட பாட்டில் கேட்கிறது.
ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)
அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.
எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.
எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.
தமிழுக்கு வருவதற்கு முன் 1971ல் Guddi என்ற இந்தி படத்தில் இவர் பாடிய “போல் ரே பப்பிஹரா” மெகா ஹிட் பாடல். ஒரு பக்கத்து வீட்டு ஹைஸ் ஸ்கூல் பெண் ஹோம்லிகுரலில்இந்தியாவையே கிறங்கடித்தவர் வாணி ஜெயராம்.அப்போது இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ்நாடும் பாட்டைக் கேட்டு சொக்கியது.ஆனால் தமிழிற்கு பின்னால்தான் வந்தார்.(1975ல் “ போல் ரே பப்பிஹரா” பாட்டு “என் உள்ளம் அழகான வெள்ளித்திரை” என்று தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் டவுன்லோட் ஆகி ”ஹிட்” ஆகியது.)
1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லா ஹோம் மேக்கர்/ஹவுஸ் வைஃப்களுக்கு மிகவும் பிடித்துப்போய் சூப்பர் ஹிட் ஆகியது.ஹோம் மேக்காதவர்களும் ரசிக்கத்தான் செய்தார்கள்.இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.
அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.
ஆனால் முதல் கட்டமாக என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:
”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)
”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)
“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration) இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.
இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.

அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).
அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.
வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.
ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு
"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்-1977
"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.
”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
(இந்தப் பாட்டின்(எம் எஸ் வி) தாக்கத்தில்தான் “பொன்மானே சங்கீதம் பாடவா”
பாட்டை ராஜா போட்டிருப்பார் என்பது என் யூகம்.)
"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.
குறை: கடைசியில் பல்லவி பாடி முடியும் இடத்தில் வாணிக்கு மூச்சு வாங்குவது கூட பாட்டில் கேட்கிறது.
Subscribe to:
Posts (Atom)