Wednesday, July 20, 2011

காணவில்லை - கவிதை

நடு தூக்கத்தில்
கண் விழித்த குழந்தை
மொட்டைப் போட்டு
மீசை வழித்த
அப்பாவைப் பார்க்கிறது
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
இது அப்பா இல்லை
இது அப்பாதான்
மீண்டும் தூக்கத்தில் போய்
அப்பாவின்
காணாமல் போன முடிகளை
தேடத் தொடங்குகிறது
தன் மொட்டைத் தலையை
தடவியபடி

6 comments:

  1. ha.ha... nice one. Hope the father is not you?! ;-)

    ReplyDelete
  2. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  3. Mira said...

    // Hope the father is not you?! ;-)//

    இல்லை.மொட்டையைக் கண்டு பயப்படும் குழந்தைகளைப் பற்றி.

    ReplyDelete
  4. அனுபவ கவியோ?! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //அனுபவ கவியோ?!// இல்லை.நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!