Monday, June 27, 2011

பையைவிட்டு” மியாவ் ”வெளியே வரவில்லை!

போன வாரம் என் பையன் ஒரு கேள்வி கேட்டான்.”என்ன சின்ன வயசுல தூங்க வைக்க அம்மா  ஒண்ணு சொல்லி பயமுறுத்துவாங்களே தெரியுமா?”

”தெரியுமே. அது “ மியாவ்... மியாவ்... தூங்கு இல்லேன்ன பூன வரும்”

”அதெல்லாம் எங்கப்பா இப்போ?”

 ”தெரியலப்பா” என்றேன்(நாயகன் கமல் ஸ்டைலில்)

ஆமாம். பாத்து ரொமப நாளாச்சுல்ல.அப்போதுதான் யோசித்தேன். கடைசியா பூனையப் பார்த்தது எப்போது?மெத்துமெத்தென்ற உடலமைப்போடு மற்றும் அழகான கண்களை உடைய குட்டி பிராணி.ஆனால் கருப்பாக இருக்கும் அந்தக் கடுவன் பூனைக்கு ஒரு டெரர் லுக் இருக்கும்.

நகரங்களில் முன்பு போல் பூனைகள் இப்போது அதிகம் கண்ணில் தென்படுவதில்லை.( கிட்டத்தட்ட  90% அழிந்துவிட்டது?)எதிர்பார்க்காத தருணங்களில்"மியாவ்” என்று மீட்டர் பாக்ஸ் அடியிலும், துள்ளிக்குதித்தபடி அல்லது தாவியபடி, மதிலில்(cat walk) நடந்தபடி ரோடை(குறுக்கே?) கிராஸ் செய்தபடி வழக்கமான சாம்பல் அல்லது பிரெளன் நிறப் பூனைகள்  கண்ணில் தட்டுப்படும்.இப்போது?
 
கார்டூன்களிலும் அனிமேஷன் படங்களிலும் தான் இருக்கிறது பூனை.பேஷன் ஷோக்களில் cat walk இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வில்லன் மடியில் ஒரு பூனையை வைத்திருப்பார்.

கிராமங்களில் எலித்தொல்லையினால் பூனை வளர்ப்பார்கள்.அடுத்து காத்து கருப்பு,பூனை இருக்கும் இடத்தில் அண்டாது என்பார்கள். அது இருக்கும் இடத்தில் வினை வைக்க முடியாது என்பது ஒரு நம்பிக்கை.அதே கிராமத்தில் பூனைக்குப் பிடித்த பாலை அதற்கு வார்க்காமல் பாம்பு புற்றிற்கு வார்ப்பார்கள்.

ஏன் குறைந்துவிட்டது?  அதற்கான இடங்கள் இல்லை. மனிதனால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தனி வீடுகளில் அதற்கான இடங்கள் நிறைய இருந்தன.பிளாட்டுகளில் இல்லை.அதன் முக்கிய உணவான எலி,ஓணான்,அரணை எல்லாம் அழிந்ததால் உணவு சங்கிலி அறுபட்டு பூனையும் அழிய ஆரம்பித்துவிட்டது.நீர் நிலைகளும் மறைந்துவிட்டது.

குட்டிகளைப் பிரசவிப்பதற்கு மறைவு இடம் தேவை.அது சற்று குளிர்ச்சியாகவும் உணவுகளைக் கொண்டு வர வசதியாக இருக்க வேண்டும்.அது எங்கு நகரத்தில் இருக்கிறது.

நாய்கள் பெருக்கமும் பூனைக்கு அழிவுக்குக் காரணம்.மக்களுக்கு இதையெல்லாம் போஷித்து வளர்ப்பதில் இம்மியளாவும் ஆர்வம் இல்லை.

அதிகமாக இருந்தக் காலத்தில் இவைகள் செய்த அட்டகாசங்கள் சொல்லிமாளாது.நடு ராத்திரியில் பாத்திரங்களை உருட்டும். இதுகள் “காதல்”(mating) செய்யும் சமயத்தில் வரும் ஓசை கர்ணகடூரமானது.அதே ஓசைப்படாமல் எவ்வளவு நாள் பாலைக் குடித்திருக்கிறது.நாங்கள் இரண்டு பேர் வேலைக்குப் போகும்போது இண்டு இடுக்கு விடாமல் வீட்டை மூடிவிட்டுச்செல்லவேண்டும்.(இதற்காக கிராமத்தில் உரிப்பானையில் பாலை வைப்பார்கள்).

Cat will steel any kind  of milk except breast milk  என்பார்கள்.

பூனையினால் வரும் நோய்களால் செல்லப்பிராணியாக வளர்ப்பதும் குறைந்துவிட்டது.முக்கியமாக ஆஸ்துமா.


”பூனையை கொல்லக்கூடாது.அதற்கு ஒன்பது ஜென்மம் உண்டு.பிழைத்துப் பிழைத்து ஒன்பது ஜென்மம் வரை உயிரோடிருக்கும்”.

இந்தக் கட்டுக்கதையை வைத்துப் பேசி சிறு வயதில் பல நேரங்கள் ஓட்டி இருக்கிறோம்.எங்கிருந்து குதித்தாலும் தன் உயிருக்கு ஒன்றும் நேராமல் சாமாத்தியமாக  தன் கால் குஷன் மற்றும் உடலமைப்பு வைத்து குதித்துப் பிழைக்கும் என்பதுதான் அந்த ஒன்பது ஜென்ம புனைவின் மூலம்.

பூனைகள் அதைப் பற்றிய பழமொழிகளில் இன்னும் உயிரோடு  இருக்கிறது.
 
  பூனையைப் பற்றிய பழமொழிகள்/சொல்வழக்குகள்:
  • பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது
  • பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
  • மதில் மேல் பூனை(எந்த பக்கம் குதிக்கும் என்பதில் பெட் வைத்து சூதாட்டம்  நடக்குமாம் வட இந்தியாவில்)
  • ருத்ராட்ச பூனை
  • புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
  • Cat "O" nine tails(இது ஒரு மாதிரியான சவுக்கு)
  • Let the cat out of the bag
  • பூனைய மடில கட்டிகிட்டு சகுனம் பாக்கிறது
  • பூனைக்கு யாரு மணி கட்டுவது
  • பூனை போலமெதுவாக அடி எடுத்து வைப்பது
  • பூனை அடுப்புல தூங்குது(வறுமை)
  • பூனைக் கண் அதிர்ஷ்டம்
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம்
  • Cat walk
  • எலிகளுக்குக் கொண்டாட்டம் பூனைகள் வெளியே இருக்கும்போது(மானேஜர் சற்று வெளியே போனால் அலுவலர்களுக்குக் கொண்டாட்டம்)
  • Curiosity killed the cat
  • பூனை முடி

Saturday, June 18, 2011

இளையராஜா-King of Penetrating Pathos


தமிழ் சினிமாவில் பல வித ரசங்களில் சோகம் ஒரு ரசம்.ஆனால் கடந்த 15 (20?)வருடங்களில் இந்த ரசம் மிகவும் குறைந்துவிட்டது.பழைய படங்களில் சோகத்தை பாட்டில்தான் அதிகம் வெளிப்படுத்துவார்கள்.அதுவும் பயங்கர தாடியுடன்,தத்துவங்களுடன்,இருமலுடன்,பாட்டிலுடன்.
இருமலில் பாட்டு பாதியில் நின்றாலும் மீதிப் பாட்டை காதலி எடுத்துக்கொடுப்பாள்.

சோகத்திற்கு ஏற்ற லோகேஷேன் பாழ் அடைந்த வீடு,பட்ட மரம்,கடல்அலைகள், சுடுகாடு,குப்பைத்தொட்டி... என்று விதவிதமாக.
ஜகமே மாயா.., பிராதுகே மாயா..(தேவதாசு)
”உலகே மாயம்.வாழ்வே மாயம்” என்று பிழிய பிழிய பிழிய பிழிய சோகம் போய் பின்னால் சோகம் ஒரு பிழிய ஆகி சற்று ஸ்டைல் ஆனாது.காதல் சோகப் பாடல்கள் அதிகம் முன்பு. இப்போது இருக்கிறதா?

காதல் ”happy” பாடல்களே “sad"ஆக டியூன் போட்டு சோகமாக மாறும் ஒரு டிரெண்ட் இருந்தது.இப்போது சுத்தமாக காணவில்லை.

இளையராஜா சோகத்தின் இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினார். இவருக்கு சவாலான வேலை.

காரணம்?

சிவாஜி சோகம்,விஜயகாந்த் சோகம்,கமல் சோகம்,ரஜினி சோகம், ராமராஜன் சோகம், மோகன் சோகம்,முரளி சோகம்,பிரபு சோகம்,கார்த்திக் சோகம்,சுரேஷ் சோகம்,பாக்யராஜ்சோகம்,பாண்டியன்,பாண்டியராஜன் சோகம்,பார்த்திபன் அடுத்து ராதா,ஸ்ரீதேவி,அம்பிகா,சரிதா,ஸ்ரீப்ரியா,லதா,சுஜாதா,ஷோபா.சீதா இன்னும் பெயர் தெரியாத புதுமுக சோகங்கள்.

எப்படி தாக்குப்பிடித்தார். மகா சோகமான  விஷயம்.அதிலும் முக்கால்வாசி காதல் சோகங்கள்!

எப்படி ?
  • முக்கியமாக ஷெனாய்/வயலின்/வயோலா வீரியங்கள் காலத்திற்கேற்ப குறைக்கப்பட்டது.
  • பல வித இசைக்கருவிகளின் கலவைகளில் சோகம் தோய்க்கப்பட்டது
  • வெஸ்டர்ன் கிளாசிகளில் சோகம் வாசிக்கப்பட்டது
  • நவீன மோஸ்தரில் வித்தியாசமாகக்கொடுக்கப்பட்டது.
  • சோகத்திற்கு தோதான  சிவரஞ்சனி,சிந்துபைரவி, மாயமாளவ கெளள ஹம்சா நந்தி என்று பலவித கலவைகள் வருகிறது
  • ஸ்டிரியோ டைப் இல்லாத சோகம்.சாயல் சதவீதம் குறைந்தது.
  • சோதனை முயற்ச்சிகள் 
  • முக்கியமாக முன்னணி(lead) இசைக்கருவியின் நாதத்திற்க்குத் தோதாக மற்ற உபரி இசைக்கருவிளின் நாதங்களை மூட் கலையாமல் பிணைப்பது இளையராஜாவின் மிகப் பெரிய பலம்.பாட்டிற்கு வர்ணங்கள் சேர்க்கிறது.உணர்ச்சிகளை  வாரி இறைக்கிறது.

ஆடியோ தகராறு செய்தால் ஒரு தடவை ஓடவிட்டு பிறகு கேட்கவும்.

முதல் படம்.சம்பிராதயமான சோகம் இருந்தாலும் சில வித்தியாசம் உள்ளது.
Pathos-Annakkili-76-Sonthamillai.mp3

Pathos-Rajapaarvai-81-Vizheoorathu.mp3

0.05-0.15 சோகம் அருமை.
Pathos-NallavanukkuNallavan84-ChittukkuChella.mp3

குரல் சோகம்.ஆண் குரல் அருமை.”ஒ.. சின்னப் பூமேனி அழுமோ” பெண் கோரஸ் சோக குரல்கள்  0.46ல் சேர, பின்னணியில் “மெட்டி... மெட்டி...”இதயம் உடைந்து உச்சரிப்பது அருமை.இசைஞானி அழகாக இழைத்து இருக்கிறார். 0.30-0.46 தாளத்தைக் கவனியுங்கள்.

எனக்கு நெருக்கமான பாட்டு.
Pathos-Metti-82-Raagam Engeyo.mp3

சிவரஞசனி ராகத்தில் பிழியும் சோகம்.0.27-0.34  புல்லாங்குழலின் சோகம் மென்மையாக வயலினில் எதிரொலிப்பது அருமை.0.45-0.57ல் திடீரென்று ஷெனாயில் தபலா பின்னணியில் சோகம் தீவிரமடைகிறது.இந்துஸ்தானி டைப் நாதம் அபாரம்.
Pathos-EnUyirkannamma88-yaaraikettu.mp3


மோஸ்மேஸ்ட்ரோவின்ஆரம்பகால மேதமை.இசைக்கருவிகளின் வீரியத்தை மட்டுப்படுத்தி ஒரு வித நவீன தொனியில் வெஸ்டர்ன் கிளாசிகளில் கொடுக்கப்பட்ட சோகம்.ஒரு வித அமானுஷ்யம் இருக்கும்.இந்த இசைக்கோர்ப்பு பேசும் மொழி வித்தியாசமானது.

ஆழ்ந்துக்கேட்டால் மனதைப் படுத்தும். (ஒரு ஆடியோ சரியாக வேலை செய்யவில்லை.அதனால் இரண்டு).

இளையராஜாவின்  இசையில் ஒரு மைல் கல்.
24Pathos-Jhonny-79-Kaatril Enthem Geetham.mp3


முதல் படத்திலிலேயே கலக்கலான சோகம்.கிடாரில் வாசிப்பும் அருமை.
 Pathos-AnnakiliUnnai76TMS-Sad.mp3


Pathos-Meera-93-Oh Butterfly (Patho).mp3

வீணையில் சோகம் அருமை.
Pathos-Achchani-78-Maatha Un Kovil-SAD.mp3

”கானல் நீர் போல் எந்தன் காதல்.....” ஜானகி உருக்கும் குரல் பிறகு வயலின் பிறகு புல்லாங்குழல்.
Pathos-Ninaivellam Nithya-82-kaanalneer.mp3


கிராமத்து சோகம்.
Pathos-Chinnathayee-92-Naan Erikkarai (Sad).mp3

டிஎம்எஸ்  டிஎம்எஸ்தான்.
Pathos-Bairavi-78-Nandooruthu.mp3

Pathos-Geethanjali-85-OruJeevans-SAD.mp3

Pathos-Karakattakaran-89-KudaguMalai.mp3

Pathos-NallavanukkuNallavan84-Unnaithane (Pathos).mp3

Pathos-Nayagan-87-ThenpandiSeemaiyile2.mp3

Pathos-Neethiyin Marupakkam-85-MaalaiKaruSad.1.mp3

நல்ல மனம் உள்ள மச்சான்....!
Pathos-Chinnaveedu-85-VellaManam.mp3


சோக பின்னணி இசை:

BGM-Flute-86-Kadalora Kavithaigal.mp3


BGM-85-Mmuthal Mariyathai.mp3
____________________________________________________________

Pathos-Raasavey Unnai Nambi-88-RaasaththiSad.mp3

Pathos-Vanna Vanna Pookkal-92-Chinna Mani Koyilile.mp3

Pathos-Anandakummi-83-Thindaduthey.mp3

அருமையான வெஸ்டர்ன் கிளாசிகலில் மென்மையான சோகம்.
Pathos-Anand-87-Poovukku.mp3

ஸ்வர்ணலதா சோகத்தைப் பிழிகிறார்.அவரை இழந்ததும் சோகம்.
Pathos-Idhu Namma Bhoomi- 92-AaradiChuvarthan.mp3

Pathos-Ingeyum Oru Gangai -84- Solai Pushpangale.mp3

Pathos-Pandithurai-92-Enna Marantha Pozhuthum.mp3

Pathos-Oruvar Vazhum Aalayam-88-UyireUyire.mp3

Pathos-Anandakummi-83-Thindaduthey.mp3

டெயில் பீஸ்:
விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் “மலருக்கு தென்றல் பகையானல்”சுசீலா-எல்.ஆர்.ஈஸ்வரி(எங்க வீட்டு பிள்ளை) நான் எப்போதும் ரசிக்கும் பாகேஸ்வரி ராகத்தில் மென்மையான சோகம்.

Thursday, June 16, 2011

ஆரண்ய காண்டம்-விமர்சனம்

"தர்மம் எது?” என்ற கேள்விக்கு “எது தேவையோ அதுவே தர்மம்” என்று ஏதோ ஒரு(400 கி.மு.) காலத்தின்  குருட்டாம்போக்கு(loose moral) ஒழுங்கைக் காட்டி படத்தை ஆரம்பிக்கிறார்கள்.அதன்படி இதில் வரும் கதாபாத்திரங்கள் பின்பற்றப்போகின்றன என்று ஒரு இரண்டு வரி கோனார் நோட்ஸ் அது.

அந்த கி.மு.400 வருடத்தின்  முழு வரலாறு  என்ன?


”அம்மா இல்லாத பையன தலைல கொ(கு)ட்டக்கூடாது ” என்று பள்ளி படிக்கும் காலத்தில் குருட்டாம்போக்கு ஒழுங்கு வைத்து கொ(கு)ட்டமாட்டோம்.ஆனால் முதுகில் அறைவோம். அதுதான் ஞாபம் வந்தது. இதே மாதிரி ஆட்டோ சங்கரும்” அண்ணான்னு கூப்பிட்ட பொண்ணுங்க மேல சுண்டு விரல் கூட படாது”. ஆனா பிடிக்காத ஆளுங்கள கொன்னுட்டு செவுத்துல வச்சி சிமெண்ட் பூசிடுவாரு.

அச்சுபிச்சுத்தனமான கிரிமினல் மாரல்.

பவுடர்(cocaine) கடத்தும் இருட்டு உலக கிரிமினல் கும்பல்களுக்கு இடையே ஒரு நாளில் நடக்கும்  டபுள் கிராஸ்/மோதல்/துரோகம்/காமம்/பொறாமைதான் கதை.
வட சென்னை பாஷையில் சொன்னால்” பவுட்ரு கடத்தி அது ரெளடி கேங்குங்க கைல வருதுகுள்ள நடக்கிற  மேட்டர்தான் ஸ்டோரி.”
 
 ஒரு நாளில் நடக்கிறது என்று ஏதாவது குறியீடு காட்டி(suggestive shots) இருக்கலாமே? ஒரு வேளை  குறியீட்டின் அடுத்தக்கட்டத்தை தாண்டி விட்டார்களோ?.

ஆரண்யம் என்றால் காடு அதான் தாதாவுக்கு சிங்கபெருமாள்(சிங்கம்),கஜேந்திரன், கஜபதி என்று மிருகப்பெயர்களோ?.

ஒரு படத்தின் விதியை முதல் அரைமணி நேரம் நிர்ணயிக்கும் என்பார்கள். இப்படம் அந்நேரத்தில் மனதில் ஒட்டாமல் ரொமப அன்னியப்படுகிறது.என்னவோ இருட்டில் (mood lighting)பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.அது தவிர அன்று ”பந்த்” இவர்கள்(கேரக்டர்ஸ்) மட்டும்தான் தெருவில்  உலாத்துகிறார்கள் என்ற படம் நெடுக ஒரு உணர்வு வந்துக்கொண்டே இருக்கிறது.படத்தின் கதாபாத்திரங்களின் உணர்வுதளங்கள் பார்வையாளனோடு இழைத்துப்பின்னப்படவில்லை.ஆழமும் இல்லை.

(நான் மகான் அல்ல படமும் வட சென்னை ரெளடிகள் பற்றிய படம்தான்.படத்தோடு பொருந்தி வந்து ஒட்டினார்கள்.இவர்கள் ஒட்டவில்லை.ஏன்?)

இரண்டாவது பாதி முதல் பாதியைவிட சற்று கன்வின்சிங்காக போகிறது.என்று சொல்லலாம்.ஜாக்கி ஷெராப் பாத்திரம் ஒன்றும் அவ்வளவு புதுமையாக இல்லை.ரொம்ப யதார்த்தமாக தாதா அம்மணத்தோடு  எண்ணெய் தேய்த்துக்கொண்டு குளிக்கக்கிளம்புகிறார்.அதே யதார்த்தமாக பாத்ரூமில் இருக்கும்போது செல் அடிப்பது கேட்கிறது. ஆனால் காட்ரேஜ் பீரோ திறக்கும் ஓசை கேட்கவில்லை. அவருக்கு.

பையனிடம் இருந்து பவுடர் பையை வாங்குவதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார் சம்பத்.

படத்தில் ரொம்ப பிடித்தது யுவனின் இசை.அட்டகாசம்.அடக்கி வாசித்திருக்கிறார்.வித்தியாசமான பின்னணி.

படத்தில் நம்மை ஈர்ப்பவர்கள். சப்பை, சிறுவன்,சிறுவனின் அப்பா மற்றும் சம்பத். கடைசியில் திடீர் திருப்பமும் ரசிக்க முடிகிறது.நாங்களும் ஆம்பிளைக்கு சமமான ரெளடிங்கதான்னு.அடுத்து ரசித்தது உலகத்தரம் என்பதற்காக பாசாங்குத்தனமான மிஷ்கின் காட்சிகள்/கோணங்கள் இல்லை.

உடை,காமிரா, பின்னணி எல்லாம் நன்று.ரெண்டு மூன்று இடங்களில் வசனம் ஷார்ப்.மேக்கிங் ஓகே ஆனா சரக்கு கன்வின்சிங்க சொல்லலியே?கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நாமும் உணரவேண்டும்.

கிராண்ட் ஜூரி அவார்ட் வாங்கிவிட்டால்  அதற்காக வலியப்போய் படத்தோடு பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்ள முடியமா?


டெயில் பீஸ்:

பாசிட்டிவ் கதாபாத்திரங்களை வைத்து உலகத் தரம் படம் எடுக்க முடியாதா? எப்பவுமே காட்ஃபாதர் டைப்புதானா?


Thursday, June 9, 2011

சினிமா பாட்டும் புராண/சரித்திர மேற்கோள்களும்

ஒரு கட்டம் வரை (1995 வரை?)தமிழ் சினிமா  டூயட் அல்லது சோலோ பாடல்களில் நிறைய புராண அல்லது சரித்திர கதாபாத்திரங்கள் மேற்கோள் காட்டப்படும்.அதுவும் 80க்கு முற்பகுதியில் அதிகம்.

உதாரணமாக.....

  1. கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா...காளிதாசன் சகுந்தலை(ஆலயமணி-1965)
  1. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்(நெற்றிக்கண்-1981)
  2. காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி காத்திருந்தாள்(வாழ்ந்துக் காட்டுகிறேன்)
  3. மதுரையில் பறந்த மீன் கொடியை....சேரன் வில்லை உன் கண்களில்(பூவா தலையா-1970?)
  4. வா வா கண்ணா வா.....காளிதாசன் காணவேண்டும்........ஷாஜகானைப் பார்த்ததில்லை ...(வேலைக்காரன்-1987)
  5. கம்பன் ஏமாந்தான் ... கன்னியரை மலர்(நிழல் நிஜமாகிறது-1978)
  6. ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே (கனிமுத்துபாப்பா-1972)
  7. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா(அவன்தான் மனிதன் -1975)
  8. ராதா ராதா நீ எங்கே...(மீண்டும் கோகிலா-1981)
  9. கங்கைகரைத் தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்(வானம்பாடி-1963)
 இன்னும் நிறைய இருக்கின்றன.

காலங்கள் மாற சினிமாவின் கதைகளும் மாறின.பாடல்களும் மாறின.மக்களின் மனோபாவமும் மாறியது.

முக்கியமாக ஒரு கட்டத்தில் தாலி செண்டிமெண்ட்/கற்பு கதைகள் காணாமல் போயி புடவைக் கட்டிய கதாநாயகிகள் காணாமல் போயினர்.பதிலாக ’கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா” நாயகிகள் வந்தார்கள்.

கிலோ கிலோவாக கதையின் மையத்தைச் சுமக்கும் கதாநாயகி கதைகள் மாறின.டோட்டல் குடும்ப செண்டிமெண்டுக் கதைகளும் காணவில்லை.

அடுத்து தாடி வளர்த்து பட்ட மரத்தின் கிழ் நின்று கதாநாயகன் பாடும் தத்துவப் பாடல்கள் சுத்தமாக மறைந்தன.சிவாஜி கணேசன் இதில் பிஹெச்டியே வாங்கி இருக்கிறார்.

கடந்த பத்து வருடத்தில் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    Tuesday, June 7, 2011

    ரஜினியின் ராணாவும் “இன்” செய்த புகையும்

    சினிமாவில் ரஜினி சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடித்து பல்லால் கடித்தவாறே சிரிக்கும்  ஸ்டைல் அப்போது நல்லாத்தான் இருந்தது.“காயத்ரீ” படத்திற்கு  கைத்தட்டலும் விசிலும் பறக்கும். நானும் ரசித்திருக்கிறேன். மற்றொரு ஸ்டைல்  குடி கிளாஸை ஸ்டைலாகப் பிடித்து அதில் கட்டிங்கை ஊற்றுவது மற்றும் அதில் மோதிரத்தை இரு விரலால் ஸ்டைலாக போடுவது.

    சிகரெட் ஸ்டைலுக்காக காயத்ரீ படத்தை இரண்டு முறைப் பார்த்தோம்.

    இந்த ஸ்டைல்கள்  புகழ் ரேட்டிங்கை ஏற்றியது. அதே ஸ்டைல் இப்போது சிங்கப்பூருக்கு செல்ல வைத்து ரேட்டிங்கை இறங்கவும் வைத்துவிட்டது. 
    ரஜனியின் ராணா படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி ஆரம்பித்துவிட்டது.உடல் நிலையின் ஸ்டைல் மாறிவிட்டது.

    ரசிகர்கள் இறைவன் அருளால் நலம் பெற்று திரும்பிவிடுவார் என்று நம்புகிறார்கள்.நம்பினார் கெடுவதில்லை.எம்ஜியார் குண்டடிப்பட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்து வெற்றிப்படங்கள் கொடுத்தார்.ஆனால் ரஜினியின் உடம்பு உபாதை வேறு.


    படத்தில் நடிப்பது இருக்கட்டும் .முதலில் உடல் நலம் பெற்று சந்தோஷமாக வீடு திரும்பட்டும் என்று மனம் பிராத்தனை செய்கிறது.

    எப்படி இருந்தாலும்  மருத்துவர்கள் நீண்டமாத ஓய்வு வேண்டும் என்று சொல்லுவார்கள்.ஓய்வுக்குப் பிறகு தன்னை வருத்திக்கொள்வாரா? ரஜினி பாதுகாப்பாகத்தான்(safe game) இருக்க விரும்புவார்.நடித்தாலும் பழைய கெத்து வருமா? சந்தேகம்தான்.

    சினிமா ஒரு அவுட் அண்ட் அவுட் வியாபார  உலகம்.ஓடும் குதிரைகள்தான் மீதுதான பணம் கட்டப்படும்.

    டெயில் பீஸ்: விடலைப் பருவத்தில் சிகரெட் பிடிப்பதில் ஒரு பந்தயம் இருக்கும். அது “இன்” செய்வது. அதாவது புகையை  இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று உள்ளே இழுத்து புகையை  மார்பில் ”இன்” செய்து(அடக்கி) சிறிது நேரம் கழித்து ஊதினால் புகை வரக்கூடாது. செய்தால் அவன் பிஸ்தா அல்லது பருப்பு.

    இப்படி “ இன்” பழக்கமாகி நண்பர் ஒருவர் 30 வயதிலேயே பூமிக்குள் “இன்” ஆகிவிட்டார்.