Thursday, April 28, 2011

கார்த்திக் ராஜாவின் மெலடி/சாய்பாபா/ஜான் டேவிட்

கார்த்திக்ராஜாவின் பாடல்கள் மெலடி நிறைந்தது.யுவன் பாடல்கள் மாதிரி இல்லாமல் வெஸ்டர்ன் கிளாசிகல் டைப்.அதிகம் சத்தம் கிடையாது.ஆத்மா நிறைந்திருக்கும். அப்பா மாதிரி மெலடிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

”ரைட்டா தப்பா” என்ற படத்தில் “யாரிடம் சொல்வேன்” ஒரு பாட்டு. ஹரிணி பாடியது. அருமையான பாட்டு.

இது 2005ல் ரிலீஸ் ஆன படம். இது ஈவ் டீசிங் பற்றிய கதை.சென்னையில் நடந்த உண்மை சம்பவம்.




________________________________________

மக்கள் எப்போதுமே சித்து/மாய வேலைகள் செய்யும் சாமியார்/மத குருமார்களை ரொம்பவும் விரும்புவார்கள்.தங்களின் சொந்த முயற்ச்சியால் அல்லது விஞ்ஞான ரீதியில் தீர்க்கப்படுவதை விட மாயமந்திர விபூதி/லிங்கம் போன்றவற்றால் பிரச்சனைகள் தீருவது மக்களுக்குப்
பிடித்தமான ஒன்று.புல்லரித்துப்போவார்கள்.

சத்யபாபா அந்த சைக்காலஜியை தெரிந்துக்கொண்டு “அற்புதங்கள்” நிகழ்த்தி மக்களை தன் வசம் வைத்திருந்தார். வானூலகில் இருந்து மக்களின் துயரங்களை தீர்க்க வந்த messiahவாக பார்க்கப்பட்டார்.ஏசு கிறிஸ்துவைத்தான் messiah என்று சொல்லுவார்கள்.


எழுத்தாளர் சுஜாதா பாபாவைப் பற்றி எழுதும்போது “விஞ்ஞானத்தை மீறி எந்த அற்புதங்களும் நிகழ்ந்துவிடாது. இருந்தாலும் இவருக்கு இருக்கும் மிகவும் படித்த மேல் மட்டத்து பக்தர்களை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்..பிரமிக்கிறேன்” என்று ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தார்.நானும்தான்.

இந்த நூற்றாண்டில் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தில் பாபாவிற்கு இருக்கும் பக்தர்கள் வேறு யாருக்கும் கிடையாது.அவரைக் காப்பியடித்து சிலர் புறப்பட்டார்கள். ஒன்றும் போனியாகவில்லை.He is very rare phenomenon.அற்புதங்கள் நிகழ்த்தி மக்களைக் கவர்ந்ததில் இவர்தான் முன்னோடி.

வீட்டிலும் பாபா பக்தர்கள் உண்டு.சாதா பக்திதான்.(வீட்டில் சாமிபடங்களில் விபூதி கொட்டுவது இல்லை)எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால பாபா பக்தன் அல்ல.

இவர் செய்த சமூக சேவைகள் எண்ணில் அடங்காதவை.

இவரின் டிரஸ்டின் சொத்துக்கள் பல கோடியாம். நல்ல வேளை இவருக்கு குடும்பம் கிடையாது. இருந்திருந்தால்?
________________________________________
ஜான் டேவிட்:

நாவரசுவை துண்டு துண்டாக வெட்டிப்போட்டு கொன்ற வழக்கில் சென்னை நீதி மன்றம் கடலூர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து விடுதலை செய்தது.காரணம் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை.

எல்லோரும் அதிர்ந்தார்கள்.ஜான் டேவிட் மகிழ்ச்சியானார்.கடவுளுக்கு ஊழியம் செய்து வாழ்க்கையை கடத்த்ப்போவதாக பேட்டிக்கொடுத்தார்.ஆனால் வேறு பெயரில் பிபிஓவில் ஊழியம் செய்தார்.

ஆனால் போனவாரம் சுப்ரீம் கோர்ட் கடலூர் நீதி மன்றத்தின் தீர்ப்பை சரி என்று சொல்லி சென்னை நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளி வைத்தது. 

ஜான் டேவிட் மீண்டும் ஜெயிலில்.

அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.


Tuesday, April 26, 2011

கவனகர் அல்லது அவதானி

ஆந்திராவைச் சேர்ந்த திருப்பதி வேங்கட கவிகள் என்பவர்கள் திவாகர்ல திருப்பதி சாஸ்திரி(1872-1920), செள்ளப்பிள்ள வேங்கட சாஸ்திரி(1870-1950) என்னும்  இருவர்கள். இவர்கள் தெலுங்கு, சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை மிகுந்தவர்கள்.பக்தி இலக்கியம், நாடக காவியங்கள்,ஆசு கவிதைகள்,எள்ளல் நடை கவிதைகள் இயற்றுவதில் விற்பன்னர்கள்.

முக்கியமாக இவர்கள் அவதானக் கலையில்
தேர்ச்சிப்பெற்றவர்கள்.இதில்அஷ்டாவதானம்(எட்டு),சதாவதானம்(நூறு),சகஸ்ராவதானம்(ஆயிரம்) என்று பலவகைகள் உண்டு.

”அஷ்டாவதானம்” இது ஒரு சமயத்தில் பல வேலைகளை( multi tasking) செய்வது என்று மொழிப் பெயர்க்கலாம். அவதானம் என்றால் மனம் ஒன்றுதல்/கவனம்/சமாதி என்று பொருள் கொள்ளலாம்.

மொத்தத்தில் இது நினைவாற்றல் கலை. கவனகம் அல்லது அவதானம்.

சதாவதானம்:

ஒரு சபையில் ஒரு அவதானியின் முன் நூறு பேர் இருப்பார்கள்.அவர்களின் ஒவ்வொருவரின் கேள்வி, பாடுபொருள் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு கவிதையின் முதலடியை இயற்றுவர். இதில் யாப்பு இருக்க வேண்டுமாம். முதல் சுற்று முடிந்ததும் இரண்டாவதில் எல்லோருக்கும் இரண்டாவது அடியை இயற்றுவர். இப்படியே மூன்று நான்கு என்று இயற்றி முடிப்பார்.

முடிந்ததும் எல்லோருக்கும் கோவைப்படுத்தி வரிசை மாறாமல் கூற வேண்டும்.இப்படி கூறும் போது கவனமாக இருத்தல் வேண்டும், சிலர் வரிசை மாறி உட்கார்ந்திருப்பார்கள்.இவரின் கவனத்தைக் கலைக்க பேச்சுக்கொடுப்பார்கள். சிரிப்பார்கள். கொசுவின் காலைப் பற்றி ஒரு கவிதை எழுதச் சொல்வார்கள்.

இது தவிர இவரின் முதுகின் தூவப்படும் பூக்களை எண்ணுதல், இடையில் ஒலிக்கும் மணியோசைகள், தும்முதல் போன்றவற்றை கணக்கெடுத்தல்  வேண்டும்.

அவதானத்தில் ரொம்ப கஷ்டமானது அஷ்டாவதானம்தானாம்.

நம் தமிழ்நாட்டிலும் சபாபதி முதலியார்,பூவை கல்யாண சுந்தர முதலியார் என்று அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்கள்.

ரொம்ப வருடத்திற்கு முன் தூர்தர்ஷனில் தசாவதானி ( தமிழில் “பதின் கவனகர்”) திருக்குறள் ராமையா பிள்ளை என்பவர்
இதைச் செய்திருக்கிறார்.ஒரு சமயத்தில் பத்துவிதமான செயல்களில் கவனம் கொண்டு அதை வரிசைப்படுத்திச் சொல்வார்.


உதாரணமாக முக்கால் மணி நேர நிகழ்ச்சியில் கவிதை இயற்றுவார். இயற்றும்போது பார்வையாளர்கள்.....

(தோராயமான ஞாபகத்திலிருந்து.கவனம் இல்லை)

  1. ஒருவர் முதுகைத் தொடுவார்
  2. எண் வரிசைப் பற்றி ஒருவர் கேட்பார்
  3. குறளின் பாதியை சொல்லுவார் ஒருவர்
  4. வலது பக்கம் மணி அடிப்பார்/இடைவெளியில் மீண்டும்
  5. இரண்டு பேர் இடம் மாறுவார்கள்
  6. ஒருவர் அவர் இயற்றும் கவிதைக்கு இரண்டாவது வரி கொடுப்பார்
  7. ஒருவர் தண்ணீர் கொடுத்து பெயர் சொல்லுவார்
  8. பாட்டுக்கு ராகம் கேட்பார்கள்
  9. எதற்காகவோ விளக்கம்  கேட்பது
  10. வரலாறு பற்றி
இது மாதிரி விஷயங்கள்  நிகழ்ச்சி முழுவதும் நிறைய நடக்கும். முடிவில் அஷ்டாவதானி எல்லாவற்றையும்  கவனத்தில் வரிசைப்படுத்தி சொல்லி அசத்துவார்.

திரு ராமையா பிள்ளை காலமாகி பல வருடம் ஆகிவிட்டது. இவரின் மகன் திரு கனக சுப்புரத்தினம் இதைப் பயின்று பதினாறு கவனகர் ஆகிவிட்டார்.

Wednesday, April 20, 2011

ஷரத்தின் 180 இசை மற்றும் ”பொட்டு”ன்னு சொன்னா.....

போட்டோவில் இருக்கும் ஷரத் என்பவர் மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளர்.முறையாக சங்கீதம் படித்தவர்.நிறைய மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.நல்ல குரல் வளம்.

இவர் “ஹரியுடன் நான்” ஜெயா டிவி நிகழ்ச்சியில் நகைச்சுவையாகப் பேசி கலகலக்க வைப்பார்.இசையின் டெக்னிகல் விஷயங்களை ஆழமாக அலசுவார்.ஜுன் ஆறு என்ற தமிழ்ப் படத்திற்க்குக் கூட இசையமைத்து உள்ளார்.

சமீபத்தில் இவர் இசையமைத்த  ”180 டிகிரி ரூல்ஸ் இதுக்குக் கிடையாது” என்ற தமிழ் படத்தின் இசைத் தொகுப்பைக் கேட்டேன்.

இனிமையானப் பாடல்கள் சில.சுமாரானது சில.”சிறுசிறு”அப்படியே ரஹ்மான் சாயல்.

அதில் இரண்டு பாடல்கள்:

”நீ கூறினால்”-ஸ்வேதா மோகன் - கார்த்திக்

இனிமையான பாட்டு.அருமையான குரல்கள்.
 
இந்தப் பாட்டில்  சுவராசியமான விஷயம்.
ராஜா, ரஹ்மான்,யுவன் எல்லா மணங்களும் கலந்து வருகிறது.0.32-0.59 இசைத்துளிகள் சரியாகத் தொடுக்கப்படாமல் ஒரு மாதிரி “தனி”யாக இருக்கிறது.முழுமை இல்லை.

”கேஜே”-விது பிரபாகர்-ரம்யா


இதுவும் இனிமை.வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணி.முக்கால் ராஜா, கால் ரஹ்மான்.இதிலும் முழுமை இல்லை.

பல வருடமாக முக்கால்வாசிப் பாடல்கள் ”யூத்”தை குறிவைத்து இசைக்கப்படுவதால் கருவிகளின் ஆதிக்கத்தின் நடுவில் மெலடியைக் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்.
___________________________________

துபாயில் பின்னணிப் பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் முழ்கி இறந்துப் போனது மகா சோகம்.கவனமாக இருந்திருக்கலாமோ? இதைப் பற்றிய சில ஞாபகங்கள்.

பல  வருடங்களுக்கு முன் வெளியூரில் ஒரு திருமணத்திற்குச்
சென்றிருந்தோம்.மண்டபத்தின் பின்  மூடப்படாமல் ஒரு பெரிய கிணறு.கைப்பிடிச்சுவர் உயரம் கம்மி. யாவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வசீகரமான கிணறு.ஆழம் அதிகம்.

குழந்தைகளும் சிறுவர்களும்  அதைச் சுற்றி ஓடி விளையாடுவதும் எட்டிப்பார்ப்பதுமாக இருந்தார்கள். பெரிசுகள் மண்டபத்தின் உள்ளே. ஒரு பெரிய பெரிசு விபரீதத்தை உணர்ந்து  மற்ற பெரிசுகளிடம் சொன்னார்.யாரும் காதில் வாங்கவில்லை.காரணம் ” நம்மளுக்கு ஒண்ணும் நடக்காது”. டேக் இட் ஈசி பாலிசி.

பெரிசு நாசூக்கை விட்டுவிட்டு சற்று நாராசாரமாக “ போனவாரம்தான் ரெண்டு குழந்தைங்க விழுந்து செத்துடுத்தாம். ரெண்டுமே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாம்” என்று  பீலா விட்டவுடன் எல்லா பெரிசுகளும் விழுந்தடித்துக்
கொண்டு  ஓடி குழந்தைகளை இழுத்துக்கொண்டு வந்து பின் கதவை தாழ்போட்டார்கள்.

ஒரு பேன்சி கடையில் பிறந்த நாள் பரிசுக்காக பரிசுப்
பொருட்களை நானும் என் மகனும் பார்த்துக்கொண்டிருந்தோம்.மகன் எல்லாவற்றையும் கையில் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான்.

”தொடாமல் பாரு” என்று அங்கிருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினேன். அது “Please do not touch or disturb the gift items".தெரியும்பா என்றான்.

”தொட்டு அது கிழ விழுந்து சுக்கு நூறா போச்சுன்னா அதோட விலை ப்ளஸ் கிளினிங் காஸ்ட் தோராயமா 200 ரூபா. நீதான் கொடுக்கனும்.கிப்ட் வாங்க முடியாது”

அடுத்த நிமிடம் இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டவாறு கிப்ட் அயிட்டங்கலை நோட்டம் விட ஆரம்பித்தான்.

”பொட்டு”ன்னு  சொன்னா.... ”பட்டு”ன்னு உரைக்குது.தொலை நோக்குப் பார்வையில் விபரீதங்களை தடுப்பது நலம்.


(வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல்:”பாத்துப் போ.  நடு கபாலத்துல  நச்சுனு விழுந்து நாலா பொளுந்து நாண்டுக்கிடுவ.நாலுபேர் தூக்கும்படி ஆயிடும்”) 

Monday, April 18, 2011

180 டிகிரி படம், மாப்பிள்ளையும் வாக்கு எண்ணிக்கையும்

 ”180 டிகிரி ரூல்ஸ் கிடையாது” என்ற தலைப்பில் ஒரு  படத்திற்கு விளம்பரம் வருகிறது.இந்தப் படம் சத்யம் தியேட்டரின் தயாரிப்பு.

அது என்ன 180 டிகிரி ரூல்ஸ் கிடையாது?

இது சினிமாவில் கேமரா ஆங்கிளைப் பற்றியது.அது ஒரு விதி.காட்சி அமைப்பில் இடது, வலம் பார்வையாளரை குழப்பாமல் இருக்க அந்த விதி அமைக்கப்பட்டுள்ளது.


கேமரா பச்சை வண்ணத்திற்குள்தான் நகர வேண்டுமாம். ரோஸ் வண்ணத்திற்குள் கேமரா வந்தால் இடது- வலது  என்பது வலது-இடது ஆகி பார்வையாளரைக் குழப்புமாம்.இதைப் பற்றி வீடியோவும் நிறைய உள்ளது யூ டூப்பில்.

நன்றி: விக்கிப்பீடியா

சத்யம் தியேட்டர் வளாகத்தில் “ six degree" என்ற தியேட்டர் இருக்கிறது.
________________________________________________

விதவிதமான விரல்களால் அழுத்தப்பட்ட முடிவு CPUல் உறங்கிக்கொண்டிருக்கிறது.மே பதிமூணு வெட்டவெளிச்சமாகிவிடும்.வாக்கு எண்ணிக்கை பள்ளி இறுதித் தேர்வு முடிவு போல ரொம்ப தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அபத்தமாக இருக்கிறது இந்தத் தள்ளிவைப்பு.தேர்தல் ஆணையத்திற்கு எவ்வளவு டென்ஷன்.எவ்வளவு பண விரயம்.அரசியல் கட்சிகளுக்கும் தினமும் டென்ஷன்.

ஆனால் இது பரவாயில்லை. ஒரு தேர்தலில் காகிதத்தில் குத்தி ஓட்டுப்போட்டதின் ரிசல்ட் பல நாட்களுக்குப் பிறகு வந்ததது.மை இருக்குமா அழிந்துவிடுமா என்று ஒரே குய்யோ முய்யோ அப்போது.

________________________________________________


வரமாட்டேன் என்று சொல்லியும் கட்டாயப்படுத்தி ”இஸ்திக்கினு” போனார்கள் “மாப்பிள்ளை” படத்திற்கு என் இல்லாளும் மகனும்.பிடிக்காவிட்டால் கண்ணில் கர்சீப் கட்டிக்கொண்டு தூங்கச்சொன்னார்கள்.சிவகாசிப் படத்திற்கு அப்படித்தான் செய்தேன்.

ஒரளவுக்கு காமடியாக இருக்கும் என்று ரொம்ப தைரியமாகப்போனேன்.

”ங்கொய்யால”  தெலுங்கு டப்பிங் படத்தை விட மட்டமான படம்.கர்சீப் கட்டக்கூடாது உடம்பு முழுவதும் பேண்டேஜ் போட்டு மறைத்துத் தூங்கவேண்டும் தியேட்டரில்.சில பேர் எழுந்துப்போய்விட்டார்கள்.

லாஜிக் என்பது மருந்துக்குக்கூட இல்லை.விவேக்தான் ஓகே. அதுகூட அவரின் வழக்கமான புளித்துப்போன அப்பாவை திட்டும் காமடி மற்றும் பிகர்களிடம் அடிவாங்கும் “அடப்பாவிகளா” காமடி.பின் பாதியில் ஓகே காமடி.

காமடி நடிகர் சோ இந்த “அப்பாவை மட்டம் தட்டும்” காமெடி நிறைய செய்து இருக்கிறார்.
________________________________________________


Friday, April 15, 2011

இளையராஜா King of Mellifluous Flute

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் இளையராஜாவின் புகழ் பாடுங்களேன் என்று பாடத்தான் வேண்டும்.பிரபஞ்சத்தில் புல்லாங்குழலுக்கு இந்த அளவிற்கு திரை இசையில் அணி(அழகு) சேர்த்தவர் மேஸ்ட்ரோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.

பிரமிக்கத்தக்க அளவில் புல்லாங்குழலுடன் விதவிதமாக லீலைப்புரிந்திருக்கிறார்.அதே பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய இசைக்கருவி புல்லாங்குழலாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

குழல் பேசும் மொழிகள் பல.ஓவ்வொன்றும் வேறுபட்டவை.சில
ரகசியமானது.சில புரியாதவை.ரசிக்கக்கூடியவை.வேற்று பிரபஞ்ச மொழிகளும் இதில் அடக்கம்.


இந்த நாதங்கள் மனதில் ஊடுருவி கிளர்த்தும் காட்சிகள்/தீட்டும் ஓவியங்கள் விவரிக்க முடியாதவை.

He is a dictionary for  cinema light music flute.Magic Flute magician.

ஒரு இசைக்கலைஞனின் உன்னதம் அவன் இசைக்கும் இசையில் மட்டுமில்லாது தன் வசப்படுத்திய(mastering instruments) இசைக்கருவிகளின் மேன்மைகளும் வெளிப்படவேண்டும் அவன் இசையில்.

அந்த வகையில் All the musical instruments are at Ilaiyaraja"s delight.

இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.

போவதற்கு முன் இசைஞானியின் விதவிதமான வேணுகாணத்தில் நனைந்தபடி போவோம்.
 



Flute-Ooranjaaram-Kakkaisirakinile.mp3

Flute-Sollividu Vellinilave-Amaithi Padai.mp3

Flute-Orampo Orampo.mp3

Flute-Aur Ek Prem Kahani - Naina.mp3 

Flute-Gnan Gnan Paada-Poonthalir.mp3

Flute-Shri Eadukondalaswami.mp3

Flute-Unnaivazhathi Paadukiren-OhoKaalaiKuyilgale.mp3

Flute-Madhuramari.mp3

Flute-Sharadendupaadi-Kaliyoonjalu.mp3

Flute-Pularkindrapozhuthu-Uliyin Oosai.mp3

Flute-84-Oh Vasantha Raja-Neengal Kettavai.mp3

Flute-Chinnakannan Azhaikiran-Kavikkuyil.mp3

தன் புல்லாங்குழல் இசைப் பயணத்தை அன்னக்(குயில்)கிளியுடன்தான் ஆரம்பித்திருக்கிறார்.முன்னால் இசை மேதைகளிடமிருந்து வாங்கி அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

முதல் கட்டம்:

நதியைத் தேடிவந்த கடல்-1980- எங்கேயோ ஏதோ
ராஜாவிற்கு முன் இசையில் புல்லாங்குழல் இந்தப் பாடலில் (இதுவும் ராஜாதான்)வருகிற மாதிரிதான் சம்பிரதாயமாக இருக்கும். சில விதிவிலக்குகளும் இருக்கிறது.
ஜெயலலிதாவும் “படாபட்” ஜெயலட்சுமியும்

Flute-NathiyaiThediVandhaKadal-Engeyo.mp3

அடுத்தக் கட்டங்கள்:(முதலில் நாம் நனைந்ததும் அடுத்தக் கட்டம்தான்)

இந்த மனதை வருடும் உணர்ச்சிகள் நவீன தொனியுடன் இசைக்கப்பட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. 

புல்லாங்குழல் -1
அன்னக்கிளி-1976-அன்னக்கிளி உன்ன தேடுதே
 0.12-0.18க்குள் இரண்டு தடவை குழல் நாதம் வருகிறது.வருவதற்கு முன் இரண்டுக்கும் எப்படி ஒரு இசை பில்ட் அப் கொடுக்கிறார் பாருங்கள்!

“தேடுதே” (0.24)என்று முடிக்கும்  இடத்தில் மெலிதாக குழல் வருடிக்கொடுக்கிறது.
Flute-Annakkili Unna Theduthu1.mp3
 
புல்லாங்குழல்-2

ஜானி-1980 -காற்றில் எந்தன் கீதம்
 Flute-KaatrilEnthan.mp3

புல்லாங்குழல் -3
ஹே ராம் - 2000-நீ பார்த்த பார்வை
பின்னணியில் புல்லாங்குழல் சிறு சிறு விரகதாப அலையாக எழுவது அதீத கற்பனை.Out of the world flute interlude!
Flute-Neepaartha-Hey Ram.mp3

புல்லாங்குழல்-4
சாதனை-1986 -ஓ வானம்பாடி 
இசைத்துளியை கவனமாக கேளுங்கள்.0.03 இருந்து இசைக்கப்படும் ஷெனாய்  நாதத்தில் 0.08-0.09லும் மற்றும் 0.11-0.12லும் பு.குழல் இசைத் துளிகள்  தொடுக்கப்படுகிறது.இது என் யூகம்.

முக்கால் ஷெனாய்யும் கால் புல்லாங்குழலும் (இசை)கூட்டணி.
Flute-Saadhanai-OhVaanampaadi.mp3

புல்லாங்குழல்-5
கடவுள்- 1997 -ஆதிசிவன் தோளில்
குழலின் நாதத்தில் ஜீவகளை சொட்டுகிறது.
Flute-Kadavul-AadhiSivan.mp3

புல்லாங்குழல்-6
மண்வாசனை -1983- பொத்திவச்ச மல்லிகமொட்டு
பட்டாம்பூச்சிகள் படபடத்தபடி பூவில் தேனை உறிஞ்சுவது  போல் ஒரு நாதம்.ஆச்சரியப்படுத்துகிறார்.பாரதிராஜா இந்த  மாதிரி இசைத்துளிகளுக்கு காட்சி  அமைக்கத் தடுமாறுவாராம்.

வித்தியாசமான சின்னச் சின்ன  அசட்டுத்தனம் இல்லாத hifi ஊதல்கள்.
Flute-PothiVechcha.mp3

புல்லாங்குழல்-7
இது நம்ம பூமி -1992 - ஆறடி சுவருதான்
0.17/0.21/0.25/0.29ல் நாதம் உச்சஸ்தாயில் போய் நம்மிடம் பேசுகிறது. ஆனால் உச்சஸ்தாயில் வேறு ஒரு இசைக்கருவியும் கலவையாக  வாசிக்கப்படுகிறது என்பது என் யூகம்.உச்சஸ்தாயில் அதன் ஜீவனே மாறுகிறது.
Flute-AaradiChuvarthan.mp3

புல்லாங்குழல்-8
நிழல்கள் - 1980-பூங்கதவே தாழ்திறவாய் 
0.11 பிறகு மென்மையான புல்லாங்குழல் படபடக்கப்போகிறது என்பதை யூகிப்பது கஷ்டம்.
Flute-PoongathaveThazh.mp3

புல்லாங்குழல்-9
ருசிகண்ட பூனை-1980 - என் நெஞ்சம் உன்னோடு
Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3


புல்லாங்குழல்-10
தம்பி பொண்டாட்டி -1992 - என் எண்ணம்
Mind blowing  romantic musical Flute! எவ்வளவு வர்ணங்கள் காட்டுகிறார் ராஜா.
Flute-Un Ennam-Thampi Ponndatti.mp3

புல்லாங்குழல்-11
தீர்த்தக்கரையினிலே -1987- விழியில் ஒரு கவிதை படித்தேன்.
அடுத்தக் கட்டம் என்பதற்கு  பல பல உதாரணங்களில் ஒன்று. கதம்ப இசையில் குழல் சிறிதாக ஒத்தப்பட்டு அலங்காரப்படுத்தப்படுகிறது.

0.03-0.10 பிரமிக்க வைக்கிறார்.real stunner!தேஷ் ராக சுரங்களும் தெறிக்கிறது.
Flute-Vizhiyil Oru Kavithai-Theerthakkaraiyinile.mp3


கிட்டத்தட்ட முதல் 15 வருட மேஸ்ட்ரோவின்  முக்கால்வாசிப் பாடல்களில் வயலினுக்கு அடுத்து புல்லாங்குழல் நாதத்தில் தடுக்கி விழுவீர்கள்.இதில்நிறைய கிராமம் சார்ந்தப் படங்கள்.

மேஸ்ட்ரோவின் இசையின் எப்பவுமே ஆச்சரியப்படுவது :-
  • ஒரு இசையிழையும் அதனுடன் துரிதகதியில் இன்னொரு இசையிழை சேரும்போது அசட்டுத்தனம் இல்லாமல் இணைவது... இசைவது...
  •  அபஸ்வரம் தட்டாமல் இணைவது
  • ”ஆத்மா”(soul) கலந்து இந்த  இணைவதும் இசைவதும்  

வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் ஒரு பு.குழல் நாதம்:
அஜந்தா-2007 -தூரிகை இன்றி.
Flute-Thoorigaiindri-Ajantha.mp3

முதல் மரியாதை-1985:
மேஸ்ட்ரோ  புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்.அத்தனை புல்லாங்குழல் நாதங்கள். தமிழ்நாடு மறக்கவே முடியாது இந்தப் புல்லாங்குழல் நாதங்களை.

ராசாவே வருத்தமா! கூ கூ!

நவீனப்படுத்தப்பட்ட கிராமிய சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.குழலின் துளைகளினிடையே கசியும் உணர்ச்சிகள் விவரிக்க முடியாதவை.

Flute-Antha Nilavathan-Mudhal Mariyathai.mp3

Flute-Vettiveru Vaasam-Mudhal Mariyathai.mp3

Flute-Mudhal Mariyathai-PoongatruThirumbuma.mp3

பிரமிக்கத்தக்க விஷயம்:

63 வகையான புல்லாங்குழல் இடையிசைகள்(interludes) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை.back to back xeroxம் இல்லை. It is a amazing achievement!

காரணம்:
பல வித கலவைகளில் (combinations) இசை கோர்க்கப்படுகிறது.

எப்படி சாத்தியமாகிறது இந்த கலவைகள்?

  • இசைக்கருவிகளைப் பற்றிய நுண்ணிய அறிவு
  • நோட்ஸ் எழுதும் வேகம்/திறமை
  • வெஸ்டர்ன் கிளாசிகல்/கர்நாடக இசை/கிராமியம்,இந்துஸ்தானி.. எல்லாம் விரல் நுனியில்
  • மாற்றிப்போடும் தாளங்கள்/இசைக்கருவிகள்
  • permutation & combination
  • மாத்தி யோசி கான்செப்ட்
  • காட்சியமைப்பு
  • சில வித்தியாசமான இயக்குனர்கள்
  • அனுபவம்
டூயட்டில் புல்லாங்குழல்:
சின்னத்தாயி-1992- நா ஏரிக்கரைமேலிருந்து.
மனதுக்கு நெருக்கமான பாட்டு.
Flute-Naan Eraikkaraimel-Chinnathayee.mp3

கோபுர வாசலிலே-1991- காதல் கவிதைகள்
அமர்க்களமான அரேஞ்மெண்ட்.0.46-0.47 ல் கலக்கல்.054-1.18 பரந்த  வானில் ஏகாந்தமாக கூவிக்கொண்டுச் செல்லும் ஒற்றைப்பறவையின் மொழி.
Flute-Kadhalkavithaigal-Gopura Vaasalile.mp3

ஆராதனை-1981 - ஒரு குங்கும செங்கமலம்
காட்டில் இந்த இசையை இசைத்தால் பதிலுக்கு சத்தியமாக கூவத்தான் செய்யும் பெயர் தெரியாத பறவைகள்.
Flute-Oru Kunguma-Aaradhnai.mp3

கனிவு உணர்ச்சி:
உதிரிப்பூக்கள்-1979-அழகிய கண்ணே
Flute-UthiriPookal-AzhagiyaKanne.mp3

கண்ணே கலைமானே-1988-நீர் விழ்ச்சி தீமூட்டுதே
Flute-Neervizhchi-Kanne Kalaimane.mp3

வித்தியாசமான உணர்ச்சிகள் வித்தியாசமான நாதங்களில்:

மோகமுள்-1995-கமலம் பாத கமலம்
Flute-KamalamPaadha-Mogamull.mp3

பாக்யாதேவதா - 2009-அல்லிப்பூவே மல்லிப்பூவே
Flute-Allipoove-Bhagayadevatha.mp3

மணிப்பூர் மாமியார்-1982 -ஆனந்த தேன்காற்று
Flute-Aanandhathenkaatru-ManipurMamiyar.mp3

வருஷம்-16 -பூ பூக்கும் மாசம்
ராஜாவின் மாஸ்டர் பீஸ்.வீணையும் புல்லாங்குழலும் தனியாக உரையாடிபடியே கடைசியில் இணைவது அருமை.Awesome maestro! He is music magician.இந்த மாதிரி இசைக்கோர்ப்புகள் அனாசியமாகப் போடுகிறார்.
Flute-Varusham-16-PooPookkum.mp3

முரட்டுக்காளை-1980- மாமன் மச்சான்
தாளம் புல்லாங்குழலை தோற்கடிக்கிறது.
Flute-MamanMachan-Murattu Kalai.mp3

அரண்மனைக்கிளி-1993-ராசாவே உன்னை விட
 

”அன்னக்கிளி உன்ன தேடுதே”வின் 1993 வெர்ஷன். ரெண்டுமே ஜானகிதான்.0.35-0.54 அட்டகாசம்.இந்தப் பாட்டின் மெட்டை மிகவும் ரசிப்பவன்.
Flute-Raasave Unnai-Aranmanaikili.mp3

சிங்காரவேலன் - 1992 -தூது செல்வதாரடி.
புல்லாங்குழலோடு தபலாவும் தட்டப்படும் இடம் 0.10 அருமை ரம்யம்.
Flute-ThoodhuSelvadharadi-Singaravelan.mp3

என்றும் அன்புடன் - 1992 - நிலவு நிலவு வந்தது


மெல்லத் திறந்தது கதவு -1986 - குழலூதும் கண்ணனுக்கு
 Flute-KuzhaloothumKannanukku.mp3

மோகமுள்-1995-சொல்லாயோ
Flute-Sollayoo-Mogamull.mp3


Flute-Sevanthipoomudicha-16Vayathinile.mp3

Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3

Flute-SalangaiOli-VaanPole.mp3

Flute-Bharathi-EthilumIngu.mp3

Flute-ThendraNeePesu-Kadavul Amaitha Medai.mp3

Flute-SandhyavukkuVirinja-Manjum Kulirumi.mp3

ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979-என்னுள்ளில் எங்கோ
இந்தப்பாட்டின் ஒரு துளியும் அதன் உணர்ச்சிகளும் மனதைக் பிசையக் கூடியது.b>0.36-0.55 இரு புல்லாங்குழல் பேசும் மொழி ரகசியமானவை.அதன் அந்தரங்கம் புனிதமானவை.

இளையராஜாவின் முதல் ஐந்து பாடல்களில் இது கட்டாயம் இடம் பிடிக்கும்.


மெட்டி-1982-சந்தக்கவிகள் பாடிடும்
புல்லாங்குழலுக்கு இணையாக கோரஸ் வயலின்கள் டால்பின் மீன்கள் போல துள்ளி விளையாடுகின்றன.
Flute-Sandhakavigal-Metti.mp3

Flute-KalaKalakkum-Eramana Rojave.mp3

கிளாசிகல் ரொம்ப ஸ்டைலாக(மல்லுவேட்டி).
Flute-MalluvettiMinor-Kathiruntha Malli.mp3 

செந்தாழம் பூவில் வந்தாடும் புல்லாங்குழல் நாதங்கள்.
 Flute-Senthazham Poovil-Mullum Malarum.mp3

 வித்தியாசமான சின்னச் சின்ன நாதங்கள்:-

லேடிஸ் டெய்லர்-1986(தெலுங்கு)-பொரப்பட்டித்திதி
Flute-Ladies Tailor-Porapaatidhi.mp3

ஆ ராத்திரி -1983-நீலிமதன்(மலையாளம்)
Flute-Aa Rarathri(movie)-Ee Neelimathan.mp3

மகளிர் மட்டும்-1994 கறவ மாடு மூணு
Flute-KaravaiMaadu-Magalirmattum.mp3

மரகதவீணை-1986 -மரகதவீணை இசைக்கும்
Flute-MaragathaVeenai.mp3

உள்ளம் கவர்ந்த கள்வன் - 1988

குணா-1991 - உன்னை நானறிவேன்

குருசிஷ்யன் -1988 - உத்தமபுத்திரி நானு

உதிரிப்பூக்கள்-1979-ஹேய் இந்த பூங்காற்று

கோடை மழை-1986 -துப்பாக்கி கையிலெடுத்து
Flute-KodaiMazhai-ThupakiKayil.mp3

என் அருகில் நீ இருந்தால் - 1991
Flute-Udhayam Neeye-En Arugil Nee.mp3


டெயில் பீஸ்:
(30-03-11)ஆ.விகடன் கேள்வி:“ மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?”


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பதில்: “ ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு “மாஸ்ட்ரோ”னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடறோம்!’


Tuesday, April 12, 2011

வடிவேல் கட்டிங்கும் தேர்தல் இழுபறியும்

நாங்கதான் அடுத்த ஆட்சியும் என்று தி.மு.க.வும்  இல்லை இல்லை நாங்கதான் என்று அ.தி.மு.க.வும் உச்சக் குரலில் கத்தி பிரசாரம் ஓய்ந்துவிட்டது.இந்தக் கத்தலின் நடுவே நடந்த   டிங் டிங் டிங் என்ற சொந்த ”கட்டிங்” சண்டை வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும்.இரண்டு பேருடைய வண்டவாளங்கள் வெளியே வந்து ஊரே சிப்பா சிச்சிது.

வடிவேலுவுக்கு இதனால் (தி.மு.க.விற்கு ஆதரவாக) சினிமாவில் மாக்சிமம் டேமேஜ்.ஆனால் நிறைய சம்பாதித்து விட்டதாலும் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்துவிட்டதாலும் கவலைப்படவில்லை.ஜெயலலிதாவைப் பற்றி லைட்டாக டச்சிங்தான்.பயம்தான்.வச்சுடுவாங்கல்ல ஆப்பு.

 தேர்தல் முடிவு இழுபறி நிலை. இருந்தாலும் ஜெவுக்கு சாதமாக இருக்கிறது.ஆனால் ஜெவும் அடுத்தவர் உதவியை நாட வேண்டிய நிலை.இவருக்கும் ஆப்பு.

ஏன் இந்த இழுபறி? பலவித காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இலவசம். வோட்டுக்குப் பணம்.இதுதான் அடித்தட்டு மக்களைக் குழப்பிவைத்திருக்கிறது
என்பது என் யூகம்.

ஏற்கனவே  திமுகவின்இலவசம் அனுபவித்து சப்புக்கொட்டியாகிவிட்டது. அடுத்து பணம். மீண்டும் திமுக தரும் இலவசங்கள்.இந்தப் பக்கம் அ.தி.மு.க. தரும் இலவசங்கள் ப்ளஸ் ஆட்டுக்குட்டி. மற்ற மிக முக்கியமானப் பிரச்சனைகள் மண்ணாங்கட்டியாகிவிட்டன.

எவன் எக்கேடு கெட்டுப்போகட்டும்.கிரைண்டர், மிக்சி,மின்விசிறி,20 கிலோ அரிசி  ஆட்டுக்குட்டிக் கனவுகளுடன் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டு  மக்கள்.

பணம் கொடுக்கும் பெரியார் வழி கட்சிகள் ஓட்டுக்கு உத்தரவாதமாக வாக்காளர்களின் குலதெய்வத்தின் மேல் சத்தியம் வாங்கிக்கொள்கிறது.கடவுள் எப்படியெல்லாம் உதவுகிறார் பகுத்தறிவு கட்சிகளுக்கு.

கடவுளே!

Wednesday, April 6, 2011

பிண்டம் - திக் திக் திகில் கதை


”ஒருவா காப்பி சாப்பாடறேளா மாமா”? கஸ்தூரி மன்னி கேட்டாள்.

”வேண்டாம்மா.காத்தல ஒரு தடவதான்”முத்துசாமி சாஸ்திரிகள் கிளம்ப ஆயுத்தமானார்.

“இன்னிக்கு கொஞ்சம் மின்னலாயே வந்துட்டேள் போலருக்கு” கணபதியும் எழுந்தார்.

”வாஸ்துவம்.பனங்கா ஏரி ரூட்ட அடைச்சுட்டா இன்னிக்கு.நாளைக்குத்தான் தொறப்பா.இருக்கறது ஈஸ்வரி நகர் பாழ் கெணறுதான்.ஜலம் நிறைய இருக்கும்.அது அறுபது அடி ஆழம்.அதுவும் ஒரு மணிக்குள்ள பிண்ட சாதத்த கெணத்துல தூக்கிப் போட்டுன்னம்”

“ ராகுகாலமா?”

“சொல்றேன்.பயப்படமாட்டேள்ளயா?”

“சொல்லுங்கோ”

”மத்தியானம் ஒரு மணிலேந்து அங்க ஈ காக்கா நடமாட்டம் இருக்காது.வெறிச்சோடிப் போயிடும்.பிரேத ரூபத்துல மரிச்சவாள்ளாம் ஜலத்துல இருக்களாம்.போடற பிண்ட சாதத்துக்கு அலையறாளாம்.அங்க யாருமே போறதில்ல”

“மனுஷாளுக்கு வேற வேல இல்ல.எதையாவது கெளப்பிவுடுவா.வேணும்னா எக்ஸ்ட்ரா பிண்டம் எடுத்துண்டுப் போறேன்” கணபதி.

அப்பாவிற்குண்டான பிண்ட சாதம் ரெடியாக இருந்தது.பெரிய வெள்ளை வேஷ்டியில் மூட்டையாக முடிந்து வைக்கப்பட்டிருந்தது.பார்த்தவுடன் மனது கலங்கிப்போனது. முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

”அங்க போயிட்டு கிணத்துக்கு முதுக காட்னாப்பில நின்னுண்டு அப்படியே அலக்க தூக்கிப் போடுங்கோ.சைட்ல விழாம பாத்துக்குங்கோ.நட்ட நடுல பொத்துனு தண்ணீல விழறா மாதிரி.விழுந்த நமக்கும் திருப்தி.உங்கப்பாவுக்கும் திருப்தி.போட்டப்பறம்  பின்னால திரும்பிப் பார்க்காதேங்கோ”

கணபதி சைக்கிளில் கிளம்பினார்.வெயில் கொளுத்தி எடுத்தது.ஒரு மணிக்குள் போக வேண்டும். ”படக்... படக்...” செயின் சத்தமிட  அழுத்தமாக மிதித்தார்.

ஈஸ்வரி நகரில் அந்தப் பாழும் கிணறை நெருங்க நெருங்க ஊர்
ஆரவாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமுங்க ஆரம்பித்தது.முடிவில் காற்றின் ஓசைதான் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

எட்டத்தில் நின்று அந்தப் பெரிய வட்டமான பாழும் கிணற்றைப் பார்த்தார்.”வா..வா சீக்கிரம் பிண்டத்தப்போடு...” வாயைத் பொளந்து கேட்பது மாதிரி தோற்றம். லேசான பயம் உடம்பில் ஊர ஆரம்பித்தது.

”ஈஸ்வரா” முணகியபடி கிணற்றருகில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார்.ஏதோ பிரார்த்தனை செய்தார்.கிணற்றை நெருங்கினார்.

கிணற்றைச்சுற்றி மரங்கள் சற்றுத் தலைத் தொங்கி
கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.உச்சிக் கிளைஇலைகள் இரண்டு மூன்று அசைந்துக்கொண்டிருந்தது.நெருக்கத்தில் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. தட்டாம் பூச்சிகள் விர்விர்ரென்று அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தது.கருங்கல் கிராமத்து சாமிகள் இரண்டு மூன்று கிணற்றை ஒட்டி இருந்தது.வலது பக்க சுவரில் நிறைய புல் பூண்டுகள் முளைத்து விளிம்பு வரை வளர்ந்திருந்தது.

அருகே இருந்த ஒரு காட்டுச்செடியில் மஞ்சள் நிறப் பூவைக் கிள்ளி முகர்கையில் யாரோ நடந்து வருவது மாதிரி ஆள் அரவம் கேட்டது.

“யாரு?”உரத்தக் குரலில் கேட்டார். சைக்கிள் அருகே சென்று மணியை அடித்தார். ”யாராவது இருக்கேளா”மீண்டும் மணியை
அடித்தார்.பதிலில்லை.யாரோ பார்த்துவிட்டு ஓடி ஓடி ஒளிவது மாதிரி மனதில் பட்டுக்கொண்டே இருந்தது.

பத்து நிமிடத்திற்குப் பிறகு ஒன்றும் கேட்கவில்லை.பிரமை என்று விட்டுவிட்டு மீண்டும் கிணற்றை நெருங்கிப் பார்த்தார்.தண்ணீர் கிட்டதட்ட பத்து அடிக்குக் கிழ் இருந்தது.ஆழம் அறுபது அடியா?முகத்தருகில் கைகளைக் குவித்து கிணற்றை உற்றுப் பார்த்தார்.பிராணனை விட்ட பிரேத  ரூப ஜீவன்கள் பிண்டத்திற்காக பாதாள லோகத்தில் பாம்பு மாதிரி ஊர்ந்துக்கொண்டிருக்கிறதோ?

கைகளை எடுத்துவிட்டு சுற்றி ஒரு பார்வைப் பார்த்தார்.ஆள் நடமாட்டமே இல்லை.

பெரிய கிணறுதான்.உட் சுற்று செங்கற்கள் பாசிப் படிந்து பச்சைப்பூத்திருந்தது.எல்லா இடங்களிலும் செடிகளும் கொடிகளும் அங்கங்கு  படர்ந்து முனைகள் சூரியனை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தன.ஏதோ ஒரு தண்டு தடித்த மரம் வேறு கிளைவிட்டுத் துருத்திக்கொண்டிருந்தது.சிமெண்டுப் படிகள்  எல்லாம் தூர்ந்துபோய் உடைந்திருந்தது.

ஒரு படியின் அருகே இரண்டு ஓணான்கள் தலைத் தூக்கி இடுக்கு வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தது.தவளைகள் பாசியோடு பாசியாய் சுவற்றில் அப்பிக்கொண்டிருந்தன.

இறங்கி உள்ளேப் போக வாகாகவே இல்லை.பல வருடங்களுக்கு இதை பயன்படுத்திய அரவமே இல்லை.எங்காவது ஒற்றையடிப் பாதை தெரிகிறதா என்று பார்த்தார் கிணற்றைச் சுற்றி வரும் போது மீண்டும் யாரோ நடக்கும் அரவம் கேட்டது.

முழுவதும் சுற்றி வந்து  ஒரு பார்வைப் பார்த்தார்.சிறு கற்களை எடுத்து பம்ப் செட் தோற்றத்தில் இருந்த குட்டிச்சுவர் பக்கம் எறிந்தார்.அங்கு போவதற்கு சற்று பயமாக இருந்தது.

பச்...வந்த வேலையை விட்டுவிட்டு என்ன இது .....அவசரமாக சைக்கிளை நெருங்கினார்.

பிண்ட மூட்டையை எடுத்தார். குத்துமதிப்பாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். முதுகைக்காட்டியவாறு நின்று, அப்பாவை நினைத்து பிரார்த்தித்து பின் பக்கமாக இருகைகளிலும் ஏந்தித் தூக்கிப்போட்டார்.

தண்ணீரை மோதி ”பொச்சு” என்று சத்தம் வரவேண்டுமே.வேறு
சத்தம் வந்ததே?பார்க்கலாமா? திரும்பிப் பார்க்காமல் நடக்க வேண்டுமே?

கிணறை எட்டிப்பார்த்தார்.பிண்ட மூட்டை ஒரு அடர் காட்டுக்கொடியில் ஏடாகூடாமாக மாட்டிக்கொண்டு ஒரு மாதிரி பொத்தென்று உட்கார்ந்திருந்தது.அடர் பச்சையின் நடுவே பிண்ட மூட்டை வெள்ளை வெளீர் என்று காட்டியது.

கைக்கெட்டாத மூட்டையைக் கொலைப் பசியுடன் வெறித்துக்கொண்டு  அப்பாவின் பிரேதம்.தலையை உலுக்கிக்கொண்டு கண்ணை விழித்துப் பார்த்தார்.கிணறு  எந்த சலனமில்லாமல் இருந்தது.காய்ந்த இலைகள் மிதந்துக்கொண்டிருந்தன.பிரமை?

சே ..நேராகாவே பார்த்துப் போட்டிருக்கலாம்.அப்படியே அதை விட்டுவர மனசு கேட்கவில்லை.

கொடியை பலமாக அசைத்து உலுக்கினால் தொப்பென்று விழுந்துவிடும்.நீள கயிறு இருந்தால் ஏதாவது செய்யலாம்.ஆனால் கயிறு? அவருக்கு  நீச்சல் தெரியும். ஆனால் ஏறி வருவதற்கு தோதாக எதுவும் இல்லை.

பக்கத்தில் கிடந்த புள்ளையார் எறும்பு மண் கட்டிகளை எடுத்து கொடியின் மேல் விட்டெறிந்தார். கொடியில் மோதி உதிர்ந்து மண்ணாகி ஒரு அசைவும் ஏற்படுத்தவில்லை.

இந்த களேபரத்தில் ஆள் அரவ பயம் கொஞ்சம் மறைந்துப்போய் இருந்தது.

தேடிப்பிடித்து நீள வலுவானக் குச்சிகள் மூன்றை எடுத்து
சேர்த்துக்கட்டி நீளமாக்கினார்.துருப்பிடித்தக் கம்பி சிலவற்றைத் தேடி  ஒன்றாக முறுக்கி குச்சியில் பிணைத்து   முனையில் கொக்கி மாதிரி செய்தார்.

 இதைச் செய்யும் போதெல்லாம் ஏதோ அரவம் கேட்டுக்கொண்டே இருந்தது.

கைப்பிடிச்சுவரில் குனிந்து  குச்சியைத் தாழ்த்தி  மூட்டையின் முடிச்சருகே தொங்கவைக்கும்போது காலருகே மண்ணை உருவுவது மாதிரி...

உடம்பு வியர்க்க கால்களை பலமாக ஊன்றி  சுற்றி முற்றிப் பார்த்தார்.எதுவும் இல்லை.

முடிச்சருகே கொக்கியைத் தாழ்த்தி பிண்ட முட்டையை தூக்கும்போது இரண்டு மூன்று நீள  பாம்புகள் நெளிந்துத் தண்ணீருக்குள் நழுவியது.கை நடுங்கியவாறு மெதுவாக தூக்க பிண்ட மூட்டை கிணறின் உள்சுவரை உரசியவாறு மேலே  இன்ச் பை இன்சாக  எழும்பி வர அடியிலிருந்து இலைகளும் தழைகளும் உதிர்ந்தன.

கைப்பிடிச் சுவர் அருகில் வந்ததும் குனிந்து அப்படியே லாவகமாகப் பிடித்து இடது கையில் வாங்கிக்கொண்டார்.முகத்தில் சந்தோஷமும்  உடம்புபூராக வியர்வையும் நடுக்கமும் பரவ  சைக்கிள் அருகே வந்தார்.

இரண்டு நிமிடம் ஆசுவாசுப்படுத்திக்கொண்டார். அருகேயே முதுகைக்காட்டியவாறு நின்று மூட்டையை கிணற்றுக்குள் போட்டார்.விழுந்த கணத்தில் தண்ணீரை மோதி ”பொச்சக்” என்ற சத்தம் வரக் காணோமே.சரியாகத்தானே போட்டோம்.

இதயம் படபடக்க மெதுவாக திரும்பி கிணற்றை எட்டிப்பார்த்தார்.

                                     முற்றும்


Sunday, April 3, 2011

தோனி பின்னிட்ட!

வெற்றியிலும்  வெற்றி ஸ்டைல் வெற்றி. ”சொல்லி அடிப்பேன்” என்று 271 லிருந்து 277க்கு ஒரு ஆறு.What a magic  SIX!இந்தியா புல்லரித்தது. மூன்று நாளைக்கு பசி இருக்காது.

தோனிக்கு வாழ்க்கையில்  இது உன்னதமானத் தருணம்.
  • அவுட் ஆகாமல் கடைசிவரை விக்கெட்டைக் காத்தது
  • கேப்டனாக தானே வெற்றிக்கானப்  பந்தை அடித்தது
  • அதுவும்  ராயலாக ஆறாக அடித்து வென்றது 
  • முதுகு வலியுடன் வேறு ஆடியது
அக்கடச் சூடு!
கனவு மெய்ப்பட்டுவிட்டது. உலகக்கோப்பை கைவசமாகிவிட்டது.கனவின் பகுதி -1 ஆஸ்திரேலியாவை வென்றது. பகுதி-2 பாகிஸ்தானை தோற்கடித்தது. பகுதி -3(பெருங்கனவு) உலகக் கோப்பையை வென்றது.

உலகக் கோப்பை பையன்களா தூள் கிளப்பிட்டீங்க!  Hats off to you boys!    

உண்மையிலேயே கனவு மாதிரிதான் இருக்கிறது.சற்றுத் தொலைத் தூரமாகத் தெரிந்த 275ஐ விடாது பொறுமையாகத் துரத்திப்(chase) பிடித்து விட்டோம்.கடினமான உழைப்புக்கிற்குப் பரிசு. No pain. No gain.வீரர்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும்   வியர்வை சிந்தி களத்தில் விளையாடி ஜெயித்தார்கள்.கிரிக்கெட் ஆட்டத்தின் ஆன்மா சாகவில்லை.

இந்த சுகப்பிரசவம் ஆவதற்குள் எவ்வளவு வலிகள்?.

மும்பாயில் என்றுமில்லாமல் வெய்யில் சூடு."பூவா தலையா”வில் குழப்பம்.குருவிக் கூடு தலையன் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வாரி வழங்கியது.ஸ்ரீலங்கா கடைசி ஓவர்களில் அருமையாக ஆடி 275 என்ற பெரிய சுமையை சுமத்தி கன்னா
பின்னாவென்று ஒரு சஸ்பென்சில் நிறுத்திவிட்டுப்போய்விட்டார்கள்.

நியா?நானா ?மீண்டும் ஒரு திரில்லர். தொடரப்போகும் திகில்.

ஜெயவர்த்தனேவின் அபார ஆட்டம்-103
ஷேவாக் வழக்கமாக டான்ஸ் ஆடி  ஊத்தி மூடிக்கொண்டார்.அருமையாக ஆடிக்கொண்டிருந்த மும்பாய் பையன் டெண்டுல்கரை( what a superb strokes!) இழுந்தோம்.டெண்டுல்கர் கனவு தற்காலிகமாக நொறுங்கி சுக்கல் சுக்கல் ஆனாது.இந்தியாவிற்கு மரண அடி.சவக்களை தட்டியது இந்தியாவிற்கு.

திகிலா இருக்கு ... என்ன நடக்கப்போவுதோ?
”பால் வடியும்” முக  கம்பீரும் விராத்தும் குருவி போல் ரன் சேர்த்து அடித்தளம் உறுதியாக்கி  வயிற்றில் பாலை வார்த்தார்கள்.விராத் போனவுடன் கலவரமானோம்.அடுத்து சூப்பர் ஸ்டார் தோனி தன்னை ஐந்தாவதாக உயர்த்திக்கொண்டு(யுவராஜிற்கு முன்) “இந்தியாவையும் உயர்த்தினார்.

(இதில்(ஐந்தாவதாக வந்ததில்) இன்னொரு உள்குத்தும்  இருக்கிறது.தோனி வலதுகை ஆட்டக்காரர்,கம்பீர் இடதுகை. பந்து வீச்சாளர்களுக்கு வீச்சில்  சுருதி  தடுமாற வைப்பதற்கு. தடுமாறியதா?)
டெண்டுல்கர் அவுட் ஹை! க்யா போல்ரா...
இதற்கிடையில் ஸ்ரீலங்காவின் கைப்பிடி மெதுவாக தளர ஆரம்பித்தது.பிட்ச் ஒன்றும் அவ்வளவாக உழைக்கவில்லை.fieldingகில் தேவினார்கள்.
overthrowவில் இந்தியாவிறகு உதவினார்கள்.அகலப் பந்தில்(wide)இந்தியாவை ஆறுதல்படுத்தினார்கள்.இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல் கேப்டன் சங்ககாரா “ங்கே” என்று விழித்துக்கொண்டிருந்தார். (நாமும் இதையே செய்தோம் அவர்கள் விளையாடும்போது )

இப்படி சுகமாக போய்க்கொண்டிருக்கும்போது review வில் இதயத் துடிப்பை எகிற வைத்து தோனியும் கம்பீரும் சாவின் விளிம்பிறகுப் போய் ரெண்டு தடவை உயிர் பிழைத்தார்கள்.

final decision வரும் வரை ஸ்டேடியத்தில் ஒரு இதயத் துடிப்பு BGM கலக்கல்.
 
இந்த review இப்போது necessary evil ஆகிவிட்டது. எல்லாம் நல்லதிற்கே!சில சமயம் ரசிகர்களை “குபீர்” ஆக்கிவிடுகிறது.

கவுதம் கம்பீரின் 97 இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம்.பொறுமையாக ஆடி சேர்த்தார்.துரத்திப் பிடித்ததில் கவுதம் கம்பீர் முக்கியமான ஆட்டக்காரர்.
சில ஹைலைட்ஸ்:
  • முத்தைய்யா முரளிதரன் கனவு பொசுங்கிவிட்டது
  • இந்தியாவின் பீல்டிங் முதல் 10 ஓவர்களில் பிரமாதம்
  • ஷேவாக் பிடித்த தரங்காவின் கேட்ச் அற்புதம்
  • யுவராஜின் ஆனந்த அழுகை
  • ஒரு இந்தி மற்றும் ஆங்கில வர்ணையாளரின்(நேஷனல்) குரல் தாங்க முடியவில்லை.திண்ணைப் பேச்சு மாதிரி இருந்தது. நரோத்தம் புரி சூப்பர்.
  • ஓவ்வொரு வீட்டிலும் ஸ்டேடியம் மாதிரி கொண்டாட்டம்


டெயில் பீஸ்: பூனம் பாண்டே என்னும்”கிங் பிஷ்ஷர்” மாடல் “இந்தியா ஜெயித்தால் நான் நிர்வாணமாக தெருவில் ஓடுவேன்” என்றாராம்.இந்தியா ஜெயித்த அடுத்த நிமிடம் அம்மணி செல்போனை ஸ்விச் ஆஃப் செய்துவிட்டராம். காரணம் அம்மணி மேல் எப் ஐ ஆர்.