Thursday, December 1, 2011

இளையராஜா - King of Musical Trills

இந்தப் பதிவில் Trill என்னும் இசையின் ஒரு கூறு பற்றிப் பார்க்கப் போகிறோம்.

ட்ரில் என்பது இசையை குட்டியாக அழகுப்படுத்த இயற்றப்படும் சின்ன இசைத் துண்டுதான்.முகத்தில் மெஹந்தி பொட்டு ஒற்றுகள் மாதிரி ஒரு குட்டி ஒப்பனை.அலங்காரம்.


வயலின்,கிடார்,கிளாரினெட்,பு.குழல்,பியானோ மற்றும் வேறு இசைக் கருவிகளால் இதற்குண்டான நோட்ஸ் பார்த்து வாசிக்கப்பட்டு அலங்கரிப்படுகிறது.

நாக்கு,உதடு,தொண்டை இவற்றால் கூட ட்ரில் இசைக்கிறார்கள்.வெண்ணிற ஆடை மூர்த்தி போல் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்ரில்லும் உண்டு.பார்க்க யூ டியூப்.

வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும் வயலினில் இது மாதிரி செய்வார்.

ட்ரில் பற்றி......

விக்கிப்பிடியா/ஆக்ஸ்போர்டு அகராதி:
1.(the effect achieved by)  the fast playing of a note and the note above or below it, one after another.

2.(bird song) Birds to sing a series of  quickly repeated high notes.

3.Singing two musical notes one after the other, repeatedly and very quickly


It was known from the 16th until the 19th century used in  French/German/Italy music compositions
 

பேஸ் புக்கில் Raja Fans Groupல் ராஜீவ் ஷங்கர் இதைப் பற்றி எழுதி எல்லோரும் தெரிந்துக் கொள்ள வைத்தார்.அவரும் தெரிந்துக்கொண்டார்.அவருக்கும் அங்கு கலந்துரையாடி ராஜாவின் ட்ரில் ஆடியோ பகுதிகளைப் பதித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.

அங்கு பல மேஸ்ட்ரோவின் பல இசைக் கூறுகள் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டு தெரிந்துக்கொள்கிறோம்.

உன் எண்ணம்,ராஜபார்வை,தீபம், அடுக்கு மல்லி,16 வயதினிலே,அஞ்சலி ஆயிரம் நிலவே வா தவிர மீதி அங்குப் பகிரப்பட்டது.

டிஸ்கி:பொது அறிவில் உள்வாங்கி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.பண்டித ஞானம் அல்ல.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

ட்ரில் பற்றி எளிமையாக புரிந்துக்கொள்ள: அதிவேக நாத அதிர்வுகள் அல்லது சிலிர்ப்புகள் அல்லது அலசல்கள்.

குளத்தின் மேற்பரப்பில் கல் எறிந்தால் எதிர்வினையாக ஏற்படும் அதிவேக அலை அதிர்வுகள்.

கேட்டால் செய்வது சுலபமாகத் தெரியும். ஆனால் இதற்கும் திறமை வேண்டும் என்று தெரிகிறது.

(Filedon floating audio பிரச்சனையால்(அங்கு பிரச்சனை) மற்றொரு ஆடியோ Divshare வைக்க வேண்டியதாயிற்று.நல்ல நட்சத்திர நாள் அதுவுமா ரொம்ப விசேஷம் போங்க பைல்டென்! பிரச்சனை எப்போது தீரும் என்று தெரியவில்லை)

இசைஞானி இளையராஜாவின் Trills?

  1. இளையராஜா இதைப் பன்முகமாக (versatile) இசைத்துக்காட்டுகிறார்
  2. பாட்டின் நுனி முதல் அடி வரை ஏதோ ஒரு பகுதியில் எதிர்பார்க்காத இடங்களில் வந்து சின்னதாக சிலிர்த்துவிட்டுப் போகிறது
  3. இசையின் ஓட்டத்தில் பொருந்தி இதுவும் ஓடுகிறது
  4. வண்ணமயமானது
  5. Grand and beautiful
  6. லூசுத்தனமாக (அமெச்சூர் நெடி?) இல்லாதது
  7. ஆத்மா உள்ளது
எதற்காக இது பாட்டின் நடுவே வருகிறது? பல காரணங்கள்.நான் சொல்வது யூகத்தின் அடிப்படையில்.

திகில்/பேய் எமோஷன்,பொழுது புலர்வது,குறும்பு/குறுகுறுப்பு,ஜஸ்ட் ஒப்பனை,தண்ணீர் பீச்சி அடித்தல்,கிராம காட்சிகள்,மெல்லிய சலனங்களோடு தொடங்குதல்,கனிவு, குழந்தைத்தனம்,திடீர் வேகம் etc.,etc.,.

பாட்டின் முழு சரத்தில் ஏதாவது இடத்தில் இதைப் பொருத்தி அழ்காகத் தொடுக்கிறார்.புல்லாங்குழல் நிறைய வருகிறது. காரணம் நிறைய கிராமீய மெட்டுக்கள்.



Let"s get thrilled with his Trills!

கிழ் வரும் முதல்  நான்கு (ராஜா அல்ல) ஆடியோ
உதாரணங்கள் எளிமைப்படுத்தும்.இவைகள் நானே என் சொந்த ஆர்வத்தில் சேகரித்தது.

நன்றி: you tube


கிழ் வரும் ஆடியோக்கள் வேலை செய்யவில்லை, கடைசியில் செல்லவும்.அங்கு பிளே ஆகிறது.

Trills- Violin.mp3

Trills-Piano.mp3

Trills-Guitar.mp3

Trills-Clarinet.mp3


Trill-Nadodi Thendral-92-ManiyeManikuyile.mp3
0.15-0.22 சிந்தசைசரின்(சிந்த்தானா?)சிலுப்புகள்.

Trill-KelviumNaane Pathilum-88-Title.mp3
இது படத்தின் டைட்டில் இசையில் வருவது.
0.18-0.22  அன்ட் 0.38-.044 பியானோவில் ட்ரில்

Trills-Thambi Pondatti-92Unennam.mp3
0.08-0.24

Trill-Thalapathi-91-YamunaiAatrile.mp3
ஆரம்ப புல்லாங்குழல் ட்ரில் கிளாசிகல் டச்சோடு வருகிறது.

Trills-PallaviAnupallavi-83-.mp3
0.31-0.33(சிந்த்?) அண்ட் 0.47-1.04(பின்னணி வயலின்)

Trills-Mella Pesu-83-Uyire_Uravil.mp3
0.10-0.14 இதன் பின்னணியை கவனியுங்கள்.இதனுடன் வேறு ஒரு எமோஷன் வயலின்(double bass?) குறுக்கிட்டு இசைக்கப்படுகிறது.

RajaParvaiViolin.mp3
ட் ரில் எங்கு ?தமிழ்ப்பறவை அண்ட் கோபிநாத்

Trills-Alaigal Oivathillai-81-PuthamPuthu.mp3
ட்ரில் எங்கு?தமிழ்ப்பறவை அண்ட் கோபிநாத்
அதிகாலை உணர்வுக்குக்காக இந்த ட்ரில்?

Trill-Nenjathai Killathe-80 -Title.mp3
படத்தின் டைட்டில் இசை 0.37-0.40

Trill-Aavarampoo-91-AdukkuMalli.mp3
0.04-0.11 புல்லாங்குழல்

Trill-Athisiya Piravi-90-Annakilye.mp3
0.19-0.25 புல்லாங்குழல்(சின்னதாக)

Trill-Edhomogam-Kozhikovuthu.mp3
வயலின் 00.00-00.05, 0.19-0.22

Trill-NalamVaazha-Marupadiyum-93-.mp3
00.00-00.03 வயலின்

Trills-Gopurangal Saivathillai-83-Poovadaikatru.mp3
0.43-0.45 புல்லாங்குழல்

Trills-Ullasa Paravaigal-80-.mp3
00.19-0.26 சிந்த் அல்லது பு.குழல்

Trill-Time-99-NiramPirithu.mp3
பியானோ 0.00-0.11

Trill-Solla Marantha Kathai-02-Etho Onna.mp3
00.00-0.10 வயலின்

கிழ் வரும் ஆடியோவில் ட்ரில் எங்கு வருகிறது. பின்னூட்டத்தில் சொல்லவும்.
Trills-Sri Ramarajayam-11-Rama Rama Ane.mp3

Trills-Deepam-77-Poovizhivasalil Yaradi1.mp3
0.04-0.08

Trills-Kumbakarai Thankaiah-77-ThendralKaathe(duet).mp3
???????? சொல்லுங்கப்பா.

பேய்-1
Trills-Aayiram Nilave Vaa-83-DevathaiIllam.mp3
00.05-0.08

Trills-Thavani-Kanavugal-84-SengamalamSir.mp3
0.04-0.11,  0.41-0.47,1.03-1.04

பேய்-2
அஞ்சலி-90-ராத்திரி நேரத்து
0.13-0.20


மேலே உள்ள filedon floating audio வேலை செய்யாவிட்டால் கிழே divshare audio



என் பழைய இளையராஜா பதிவுகள்:

1.இளையராஜாவின் மேஜிக் புல்லாங்குழல்கள்

2.ராஜாவின் மேஜிக் வயலின் நாதங்கள் -1

3.இளையராஜாவின் மேஜிக் வயலின் நாதங்கள் -2

21 comments:

  1. தல audio files சரியாக upload ஆகலையா !?

    ReplyDelete
  2. இசையை ஆழமாகவும், உன்னிப்பாகவும் ரசிக்கிறீர்கள். எல்லோருக்கும் இது வாய்த்திடாது.

    ReplyDelete
  3. தல செம கலக்கல் ;-)

    யப்பா எப்படி தான் இப்படி எல்லாம் தனித்தனியாக எடுத்து கலக்குறிங்களோ...எப்போதும் உங்கள் உழைப்புக்கு ஒரு வணக்கம் !

    தல இந்த ட்ரில் அப்படிங்கிற பெயரே இப்பதான் கேள்விபடுறேன். அதுவும் உங்க புண்ணியத்துல !

    ராஜபார்வை - என்னால முடியல தல...அந்த வயலின் ஆரம்பிச்சவுடனே ம்ஹூம்..!

    புத்தம் புது காலை - 0.01ல இருந்து 0.014 வரைக்கும் வருதே புல்லாங்குழல் அதுவா !?

    ஆனாலும் எங்களையும் (மீ & பறவை) கேட்டுகுறிங்க பாருங்க...உங்க நம்பிக்கைக்கு பெரிய நன்றி தல ;-)

    ReplyDelete
  4. தல ஜெயா டிவி பாருங்கள்...இசை தெய்வத்தின் ஒரு நிகழ்ச்சி பற்றி வருது....! விரைவில் அப்படின்னு போடுறாங்க...! ;-))))

    ReplyDelete
  5. இன்று தான் தங்கள் தளம் வருகிறேன்.. தாங்கள் பதிவிற்காக எடுத்துள்ள சிரத்தை வியப்பளிக்கிறது....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

    ReplyDelete
  6. arumayana padhivu nandri
    ennudaiya minnanjalukku padhivugalai anuppa mudiyuma mudindhdhal minnanjal seiyavum
    surendran

    ReplyDelete
  7. arumayana padhivu nandri
    ennudaiya minnanjalukku padhivugalai anuppa mudiyuma mudindhdhal minnanjal seiyavum

    surendransurendranath1973@gmail.com

    ReplyDelete
  8. நன்றி கோபிநாத்.தமிழ்ப்பறவை ஜெர்மனி போய் ஜெர்க்கா வந்திருப்பாரு.சொல்லட்டும்.

    ReplyDelete
  9. நன்றி வெண்புரவி.

    ReplyDelete
  10. நன்றி இந்தியன்

    நன்றி மதிசுதா

    ReplyDelete
  11. நன்றி விழித்துக்கொள்.என்னால் அனுப்ப இயலாது.
    தயவு செய்து மன்னிக்கவும்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  12. ராஜா ராஜாதான்! இசையை ரசிப்பதிலும் உங்களுக்கு இணையாக என்னால் வர இயலாது. உங்கள் ரசனைக்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete
  13. Oh my god awesome FEAST.. We can even differentiate the treatment wich clarinet and piano gives. One is nostalgic whilst other is spooky. super padhivunga. thanks a million. Thoroughly enjoyable.

    ReplyDelete
  14. நன்றி கணேஷ்.

    நன்றி ஷக்திபிரபா

    ReplyDelete
  15. Please change the audio player used in this.. We could not choose track and read the details about the track at the same time...

    Yahoo audio player was comfortable.

    ReplyDelete
  16. Kannan,

    //Yahoo audio player was comfortable.//

    Player is ok but Yahoo player had to read the mp3 files stored in Filedon.com (which is separate entity)play.There is problem. My earlier posts are also not playing.


    See below from Filedon:

    ''Maintenance update

    We appreciate your continued patience. As many are aware - we have been making large strides over the past months to increase the speed and efficiency of the Fileden system while simultaneously working to migrate it over to the new platform. However, this process provided to be more challenging and thus taking more time than we initially anticipated.

    Beginning Thursday December 1, 2011 we will begin a phased approached to incrementally providing access to account data. Though the entire process will take approximately 4-7 days to complete all phases, a vast majority will have access in the next 24-48 hours.

    We apologize for the inconvenience and look forward to having FileDen.com back up to 100% as soon as possible.

    Sincerely,

    The Entire FileDen Team "

    Thanks Kannan.

    ReplyDelete
  17. //choose track and read the details about the track at the same time... //
    same problem for me too sir... நான்குதினங்களுக்கு முன்பே முக்கால்வாசி கேட்டுவிட்டேன். பதில்களைச் சொல்வதற்காக மட்டும் கேட்க வேண்டியிருந்தது சார்...
    rajaparvai-0.15-0.25

    puththamputhu-0.00-0.12

    ramaraj-0.18 to 0.28
    poovizhivasalilae-0.03 to 0.07
    thendral katrae-0.45-0.51 0.5,0.10,0.25,0.30
    thevathai -0.04-0.08
    manjakkuLichu-0.05-0.08

    sengamalam -0.04-0.11(twice) and 0.21 to 0.30 and 0.38 to end with small intervals

    anjali no audio

    மேலே சொன்னது என் காதுக்கு எட்டியதுசார்...புதுவிசயம் அதான் கொஞ்சம் புரிபடக் கஷ்டமாயிருச்சு...நட்சத்திரவாரத்துல இருக்க வேண்டிய ஒரு பதிவுதான் சார்...

    நாந்தான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் . வழக்கம்போலவே அருமையான ‘பிரித்து மேய்தல்’ ;)

    ReplyDelete
  18. பைல் டென் இன்னும் சரியாகவில்லை.பழைய பதிவு ஆடியோக்களும் ஊத்திக்கிச்சு.


    //rajaparvai-0.15-0.25// 0.25-0.26 கடைசி சிணுங்கல்.

    //ramaraj-0.18 to 0.28//
    0.18-0.21

    கும்பரைக்கரை -0.38-0.39

    மஞ்சுகுளிச்சில் கிடையாதாம்.I have to remove.

    முதலில் கஷ்டமாக இருக்கும்.கேட்க கேட்க சரியாகிவிடும்.

    ReplyDelete
  19. இன்னிக்கி "நட்டு வச்ச ரோசா செடி" (அரண்மனைக்கிளி) பாட்டு கேட்டுக்கிட்டிருந்தேன்..
    1:29 to 1:34-ல வர்ற இசை Trill-ல் இசைக்கப்படுதுன்னு நெனைக்கிறேன்..
    நான் கண்டுபுடிச்சது சரியா? தப்பா?.. :-)

    ReplyDelete
  20. //1:29 to 1:34-ல வர்ற இசை Trill-//

    அது ட்ரில் இல்லை.நன்றி பிரசன்னா கண்ணன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!