Saturday, December 3, 2011

டிஸ்கவரி சேனல் -இயற்கையின் பிரமிப்புகள்

டிஸ்கவரி சேனல் தமிழ் வந்த பிறகு நிறைய சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் குறைவதாக எங்கோ செய்திப் படித்தேன். உண்மைதான்.கலக்குகிறார்கள்.

அதே ஆங்கிலம்தான் இப்போது தமிழில்.

சினிமா போல ஆரம்பம்,நடு, கிளைமாக்ஸ் என்று பதப்படுத்திக் கொடுக்கிறார்கள்.சில பிராணிக்குச் செல்ல பெயர் வைத்து பின் தொடர்ந்து கதைச் சொல்கிறார்கள்.இது அம்மா,இது அப்பா,இது அதன் குட்டிகள் என்கிறார்கள்.

மாதங்கள் வருடங்கள் காத்திருந்து படம் எடுக்கிறார்கள்.

ஒரு தனி கிரகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்வா-சாவா போராட்டம் நித்தம் நித்தம் நடக்கிறது.

பாம்பு விஷத்தைக் கழுகின் மேல் பீச்சி அடிக்கிறது.ஆமை ஜோடி சேர்வதற்கு படாத பாடு படுகிறது.ஒரு குருவி
வெகுளித்தனமாக வேறொரு குருவி குஞ்சு இனத்திற்க்கு உணவு ஊட்டுகிறது.லட்சக்கணக்கான மீன்கள் அலுக்காமல் நீந்திக்கொண்டே இருக்கின்றன.

குரங்குகள் குளிரில் நடுங்குகின்றன.பூச்சி ஒன்று எதிரி மேல் குசு விட்டு தப்பிக்கிறது.சிங்கங்கள் பிரபஞ்சமே கிடுகிடுக்கும்படி மோதுகின்றன.புணர்ந்த பின் சிலிர்க்கின்றன.வித விதமான பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்து குலுங்கிக்கொண்டே இருக்கிறது.வெளவால்கள் கண்டம் விட்டு கண்டம் உணவுக்கு பறக்கின்றன.குளிர் போய் வெப்ப காலத்தில் நிறைய மடிகின்றன. கன்றுகள் தொலைந்துப்போய் அம்மாவைத் தேடுகின்றன.
உஷார்...!காவல்காக்கும் மீர்காட்டுகள்
இயற்கையின் வினோதங்களை இண்டு இடுக்குவிடாமல் படம்பிடித்துப் போடுகிறார்கள்.விதவிதமான நவீன தொலைத் தொடர்பு சாதனங்களுடன் உலகத்தை வலம் வருகிறார்கள்.

சாப்பாடு,தற்காப்பு,செக்ஸ் முக்கியமான மூன்று தளங்களில் கோடிகோடி ஜீவராசிகள் தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

எல்லாமே உள்ளுணர்வு மூலம் உந்தப்படுகின்றன.

Survival of the fittest  என்பது நிதர்சனம்.இங்கும் பொறாமை,தகிடுதத்தம்,குழு மனப்பான்மை,பிலிம் காட்டுதல்,அலட்டுதல்(செக்ஸ்ஸுக்காக),திட்டம் போடுதல்,அன்பு,பிரிவு,துக்கம்,போட்டி,வருத்தம், எல்லாம் உண்டு.



யூகிக்க முடியுமா. வெற்றி அல்லது தோல்வி அல்லது டை?

ஆனால் எல்லாம் இருப்புக்கான போராட்டம்தான்.எப்போதும் உயிர் பயம் என்ற டென்ஷனிலேயே இருக்கிறது.ஒரு புல்லைக் கடிப்பதற்க்குள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.24 மணி நேர கண்காணிப்பு கேமராதான்.



தாவரத்தை உண்ணும் பிராணிகள் தாவர பட்சிணி.இங்கு தாவரம் பூச்சியை வூடு கட்டி பிடித்து உண்கிறது. அதற்கு சத்துணவு தேவையாம்.

இயற்கையின் சீற்றங்கள்.மனிதனின் சாகசங்கள்.மருத்துவ உலகின் அதிசயங்கள் என்று உலகம் விரிகிறது.


மனிதன் இயற்கை மற்றும் பிராணிகளுடன் போராட்டம் நடத்தி பிரயாணம் செய்வதை ஒரு டிவி சீரியல் போல் சொல்கிறார்கள்.

ஒரு ஜீவராசிக்காவது, அதன் உள்ளுணர்வில் தெரியுமா, டிவியில் இதன் சொந்த விஷயங்களை நாம் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று. தெரிந்தாலும் அது கவலைப்படப் போவதில்லை.


சேனலின் மொழிப்பெயர்ப்புத் தமிழை இன்னும் எளிமைப் படுத்தலாம்.

11 comments:

  1. வணக்கம்

    மிகவும் சரியான பதிவு.

    மேலும் அந்த மொழியாக்கத்துக்காகவே நான் அந்த தொலைக்காட்சியை பார்க்கின்றேன்.

    மிக அழகான தமிழில் -- தமிழகத்தில் எடுக்கப்படும் எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத அழகான மொழியாக்கம்.

    நன்றி

    ReplyDelete
  2. தத்ரூபமான நிகழ்வுகளை அழகாக தொகுத்து வழங்குவார்கள். விருப்பமான சேனல். தமிழாக்கமும் தரமாக இருக்கும்.

    நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நன்றி வனம்.

    நன்றி பாலகுமார்.

    ReplyDelete
  4. இனிமேல்தான் இந்த சேனலைப் பார்க்கணும்.

    ReplyDelete
  5. டிஸ்கவரி பார்ப்பதுண்டு தமிழில் பார்த்ததில்லை.

    ReplyDelete
  6. நன்றி டாக்டர் கந்தசாமி/ராமலஷ்மி,குடிமகன்,மாதேவி,ஹென்றி

    ReplyDelete
  7. VERY GOOD POST. I AM ALSO A FAN OF DISC.

    ReplyDelete
  8. டிஸ்கவரி தமிழ் சேவை தொடரட்டும்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!