Showing posts with label நொறுக்குத் தீனி. Show all posts

Sunday, January 16, 2011
சிறுத்தை/ஆடுகளம்/காவலன்/ஒரு பார்வை
சிறுத்தை -தூங்கினாலும் தள்ளி நின்று ஒரு பார்வை
ஆடுகளம் - இரவில் ஒரு பார்வை
காவலன் -இவர் தூங்காமல் உஷாராக இருப்பதால் இவரின் ஒரு பார்வை.
Thursday, January 13, 2011
லஞ்சம் வாங்கினால் குஷ்டம்
இந்தப் பிரபஞ்சத்தில இருக்கிற காற்றை ஒழித்தாலும்
லஞ்சத்தை ஒழிக்க முடியாது.நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார் பேசும்போதெல்லாம் கறுப்பு எம்ஜியார் கேப்டன் விஜயகாந்த்.இது விருதகிரி படத்திற்கு ஓகே.நடைமுறையில்?
சிவப்பு எம்ஜியாரும்,ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்த லஞ்சத்தை ஒழிப்பேன் டயலக்கை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.இதெல்லாம் முழு நீள காமெடி என்று அவருக்கே தெரியும்.எல்லாம் கைமீறி போய் அவரும் அதில் விழுந்தார்.
சைக்கிளில் டபுள்ஸ் போனதற்கு அபராதம் ரூ2/-க்கு பயந்து பதினைந்து பைசா என் அண்ணன் கொடுத்ததைப் பார்த்தேன்.இப்போது 2Gஐ பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நானும் பல சந்தர்ப்பங்களில் கொடுத்துள்ளேன்.வாங்குபவனிடம் மாரடிப்பதற்கு தெம்பு நேரம் இல்லை. இதுதான் பெருகுவதற்கு முக்கிய காரணம்.
பொதுமக்களும் பஞ்சபூதத்தில் லஞ்சமும் ஒன்று என்று பழகிவிட்டார்கள்.
ஒழிப்பதற்கு ஒரு வழி.லஞ்சம் வாங்கினால் கொடுத்தால் அடுத்த நாளே “குஷ்டம்” வரவேண்டும்படி கடவுள் செய்யவேண்டும்.நோய் எதிர்ப்பு மாத்திரை ஏதாவது போட்டுக்கொண்டு வாங்க ஆரம்பித்தால் முதலில் கைக்குப் பதிலாக கண் அழுக ஆரம்பிக்கும்.
சில இஸ்லாமிய நாடுகள்போல் கடுமையாக தண்டனை வைத்தால் அதிலும் நம்மவர்கள் லஞ்சத்தைப் புகுத்தி தப்பிப்பார்கள்.
குஷ்டம் சீப் & பெஸ்ட்.
________________________________________
”மாமா.. என்ன உட்ருங்க. என்னல முடியல.போதும் மாமா... போதும் மாமா..! .” அப்படின்னு சொல்லனும்டா உனக்கு வர பொண்டாட்டி.எவ்வளவு சுகம் இருந்தாலும் இந்த சுகம் முக்கியம்டா. நா உங்க தாத்தா மாதிரிடா..உன் கிட்ட இருக்கிற குறைய எங்கிட்ட தைரியமா சொல்லுடா. நீ எப்ப வேணா வரலாம்.எல்லா உரிமையும் எங்கிட்ட எடுத்துகிடுடா. ஒரு தாத்தாகிட்ட பேரன் பழகுகுற மாதிரி தாண்ட். பேரனுக்கு ஒண்ணுண்ணா தாத்தா பதற மாட்டாரா? (அழுகிறார்).அப்பாயிண்ட்மெண்ட் தேவை இல்ல.எப்ப வேணாம் வரலாம்.வாடா...காலையிலிருந்து ராத்திரி எப்ப வேணாம் வரலாம்.கூச்சப்படாத தாத்தாகிட்ட சொல்லலாம்.”
ராஜ் டிவியில் சித்த வைத்தியர் சேலம் சிவராஜ்
”அய்யோ தாத்தா என்ன உட்ருங்கோ...”

”பூவே செம்பூவே “ என்ற அருமையான பாட்டு “சொல்லத் துடிக்குது மனசு ”படத்தில் வருகிறது.படம் மறந்தே போச்சு. பூஞ்சகாலன் பூத்த தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நாள் இந்தபடம் போட்டார்கள்.”இதோ இப்ப வந்துரும்... ” என்று எதிர்ப்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து
எதிர்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்க படம் முடியும் தருவாயில்தான் வருகிறது.இந்தப் பாட்டிற்க்காக மொக்கைப் படத்தை தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
இதே மாதிரி “நந்தா என் நிலா” படத்தில் வரும்
“நந்தா நீ என் நிலா" பாட்டும் எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. எதிர்பார்த்து கடைசியில்.
.

Monday, October 25, 2010
ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!
போன வாரத்தில் ஒரு மதிய வேளை.ICICI Bank ஏடிஎம் கியூவில் நின்றிருந்தேன்.பெரிய கியூ. செக்யூரிட்டியை காணவில்லை.அதில் ஒருவர்,எனக்கு அடுத்து நின்றவர், செல்லில் கத்திப் பேசிக்கொண்டு(கெட்ட வார்த்தையுடன்) இம்சை கொடுத்தார்.
தோற்றத்தில் டிசெண்டாக படித்தவர் போல் இருந்தார்.
அவரை நாசுக்காகப் பார்ப்பதும் முகம் சுளிப்பதுமாக மெதுவாக கியூ நகர்ந்தது.அவர் எதையும் சட்டைச் செய்யவில்லை. மேலும் குரலை உயர்த்திக்கொண்டு பில்ட் அப் கொடுத்தார்.அடுத்து சடாரென்று கியூவிலிருந்து விலகி ஏடிஎம்முக்குள் போய்விட்டார். மறுபடியும் கியூவில் முகம் சுளிப்பு. உள்ளே சென்றும் செல் பேச்சு.அதுவும் பணம் எடுக்கும் காட்சியைப் பார்த்தவாறு.
மூன்று பேர்களுக்கு முன் பணம் (10000/-)எடுத்தவர் (எனக்கு ஓரளவு அறிமுகமானவர்,கொஞ்சம் முதுமையானவர்) அவர் அங்கு நிறபதை நாசூக்காக ஆட்சிபித்திருக்கிறார். அதற்கு அந்த மொள்ள மாரி சொன்ன பதில்:
”சார்... நா ரொம்ப டீசெண்டான ஆளு. வெளில வெய்யில் தாங்க முடியல.அதான் உள்ள வந்துட்டேன். செக்யூரிட்டியும் தெரிஞ்ச ஆளு.அதுவும் என் டர்ன் வரும்போதுதான் பணம் எடுப்பேன்”
டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!
(நான் எடுக்கும்போதும் உள்ளேதான் இருந்தார்)
______________________________________________
போன மாதம் ஒருவர் வீட்டிற்குப் போய் இருந்தேன். வாசலில் திருஷ்டி பரிகாரமாக ஏதோ ஒன்று ஒரு சணலில் தொங்கிக்கொண்டிந்தது.அதில் நான்கு மாத ஒட்டடை.முடை நாற்றம். சுவற்றில் ”கண் திருஷ்டி” கணபதி போட்டோ. அதிர்ஷட இரும்பு ”யூ” வடிவ லாடம் கதவில். சுவற்றில் “ஐஸ்வர்யம்” “ஸ்ரீ” போன்ற சிவப்பு குங்கும எழுத்துக்கள். கதவை திறப்பதற்கு முன் இவ்வளவு இருக்கிறதே உள்ளே நுழைந்தால் எவ்வளவு வஸ்துக்கள் இருக்கும். அடி வயிறு பகீரென்றது.
உள்ளே நுழைந்தவுடன் wind chime bells. ஆனால் அது கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. செருப்பு வைக்கும் இடத்தில் ஒரு தவளை பொம்மை. அதே என்னயே பார்த்துக்கொண்ட்ருந்ததால் பயந்துவிட்டேன். வாசலில் இருந்த பாத்ரூமை இடித்துக்கட்டி ஒரு பெரிய கண்ணாடி.அங்கேயும் ஒரு கண் திருஷ்டி கணபதி. மூலைகளில் ஜிகினா கண்ணாடிகள். சிரிக்கும் புத்தர்.சிரிக்காத புத்தர். ஹால் சுவற்றில் திருப்பதி வெங்கடசலபதி படம்.
மற்ற ரூம்களிலும் சி.பு, பெல்ஸ்,கண்ணாடி....etc etc etc.
இதெல்லாம் ஓகே.ஆனால் வீடு? அலங்கோலம். போட்டது போட்டபடி.சுத்தம் ஒரு பைசாவுக்குக் கூட இல்லை.
புத்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!
Cleanliness is next to Godliness டா!

Tuesday, September 14, 2010
சூப்பர்..super..சூப்பர்..super..சூப்பர்..super..சூப்பரப்பு.!
படம் ”சூப்பரா” இருக்குங்க,”சூப்பரா” ஒரு சீன்/பாட்டு பாத்தோம், ”சூப்பர்” டிஸ்கவுண்ட், ”சூப்பர்” சேல்,” ”சூப்பர்”ஆட்டம்,”சூப்பர்”பதிவு”சூப்பர்”கிக் ”சூப்பர்” கலெக்ஷன்,”சூப்பர்” பிகர்,”சூப்பர்” ஹிட், ஏர்டெல் “சூப்பர்” சிங்கர் இப்படியாக இந்த சொல்லை லெப்ட் அண்ட் ரைட் பொழுது விடிஞ்சி பொழுது போனால் இதையே போட்டுத் துவைத்து எடுக்கிறோம்.
பேசிப்பேசியே எல்லோரும் Superintendent ஆகிவிட்டோம்.
கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகத்தான் இந்த சொல் ”சூப்பர்” லோல் படுகிறது என்பதாக என் யூகம்.
இதன் உண்மையான அர்த்தம் தெரியாமல் superficialலாக எல்லாவற்றிக்கும் உபயோகிக்கிறோம்.பல இடங்களில் சும்மா பில்ட் அப் கொடுக்க உதவுகிறது.இதைப் பெற்றுக்கொண்டவர் சாதா மகிழ்ச்சியை விட சூப்பர் மகிழ்ச்சி ஆகிறார். சினிமா வட்டாரங்களில் இது அதிகம்.
அர்த்தம் என்று பார்த்தால் “வழக்கத்தை விட”என்றுதான் இதன் அகராதி அர்த்தம். வழக்கமாக “ஸ்டார்”கள் இருக்கிறார்கள் ஆனால் ரஜினி “சூப்பர் ஸ்டார்” அதே மாதிரி ” பாஸ்ட் டிரெயின்” ”சூப்பர் பாஸ்ட் டிரெயின்”.
சுப்பராயான்களில் பெஸ்ட் சுப்பராயன் “சூப்பர்” சுப்பராயன்?
இந்தப் பொருளில்தான் நாம இதை பெரும்பாலும் பயன் படுத்துகிறோமா? இதன் அர்த்தம் நீர்த்துப்போய் “நல்லா இருக்கு” என்பதற்கு இணையாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.சாதாரண பேச்சு வழக்கில் “அத விட சூப்பர் என்னன்னா...” என்பது அடிக்கடி காணலாம்.
இதற்கு சரியான இணை “ரொம்ப நல்லா இருக்கு”(அருமை?அற்புதம்?) .நாம் தமிழர்கள் அதனால் “சூப்பர்”என்றுதான் சொல்லுவோம். இது சிம்பிளாகவும் வசதியாகவும் இருக்கிறது. வாய் ரொம்ப வலிக்காது.இதன் அருகில் இருக்கும் ஸ்லாங்குகள் ”செம்ம” “தூள்” “அட்டகாசம்” “பட்டைய கிளப்பிட்ட”.
இதன் மூலம் (லோகல் மூலம்) "superb" என்பதாக என் யூகம்.மூலம்
சினிமாக்காரர்கள். சூப்பருப்(பு) என்றால் ஏதோ காசிமேடு கெட்ட வார்த்தைப்போல் இருக்கிறது என்று “பி”யை எடுத்து சைலாண்டாக்கி சூப்பர் ஆகிவிட்டார்கள்.
சூப்பர்..!இது எல்லா தர மக்களும் பேச வசதியாகவும் நாகரிகமாகவும் மற்றும் ”ஆங்கிலம் பேசும் பெருமை”யும் இருக்கிறது.
90களில் சூப்பருக்கு இணையாக ”தூள்” ”அமக்களம்””பின்னிட்டான்”.ஆனால் இது குறிபிட்ட வட்டத்தில்தான் பேசப்படும்.இதற்கு சமீபமாக ”கிளாசா” ”ஏஒன்”“ஏகிளாஸ்””எக்ஸ்லெண்ட்” பல வட்டங்களில் பேசப்பட்டதுண்டு.
80களில் மாணவர்கள் மற்றும் படித்த வட்டாரங்களில் எதற்கெடுத்தாலும் “fantastic" .சொல்லும்போது சிவாஜி கணேசன் உச்சரிப்பு.
ஒரு கவுண்டமணி ஜோக்:
கவுண்டமணி காதலியின் அப்பா: ஏண்டா... என் பொண்ணயே லவ் பண்றீயா? உண்டவீட்டுக்கே ரெண்டகம் பண்றீயா?
கவுண்டமணி: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்ன்னு எல்லோரும் சொல்றீங்க.அப்படின்னா என்னய்யா மீனிங்?
கவுண்டமணி காதலியின் அப்பா: எனக்கு தெரியாது. எல்லோரும் சொல்றாங்க. நானும் சொல்றோன்.
கவுண்டமணி(நொந்துக்கொண்டே): ஏன்யா தெரியாததெல்லாம் சொல்றீங்க...?

Thursday, September 9, 2010
முரளி -ஒரு ஜீவன் மறைந்தது-எனக்காக அழ வேண்டாம்
கருப்பு ஒரு அழகு.காந்தல் ஒரு ருசி. ஏதோ ஒரு தி.ஜானகிராமன் கதையில் இந்த வரிகள் வரும்.கஞ்ச கருப்பு இல்லாமல் நடிகர் முரளி ஒரு சாதா கருப்புதான்.ரஜனியும் கருப்புதான். ஒரு வசீகரம் இருக்கும்.முரளியிடம் ஒரு இன்னசெண்ட் முகபாவம் உண்டு.ஓவர் தம்மடித்த மாதிரி உதடுகள்.
இவரை Poor man"s Rajnikant என்பார்கள்.ரஜனி மாதிரி மோசமான தமிழ் உச்சரிப்பு இவரிடம் கிடையாது.
”இதயம்”(1991) படத்தின் மூலம் என்னைப் பாதித்தவர் முரளி.உளவியல் ரீதியில் பார்த்தால் கிட்டத்தட்ட மனதில் காதலை பூட்டி வைத்து உருகும் 1980 இளைஞர்களின் மனதை பிரதிபலித்தார்.(ஸ்டெப் கட்டிங் ஹேர் ஸ்டைல்) அப்படத்தில்..காதலில் கண்ணியம் இருந்தது.அதனால் ஹிட் ஆயிற்று.
சில காலம் ” மைக்மோகன்”னிடருந்து மைக்கைக் கடன் வாங்கி ”மைக் முரளி” யாகப் பாடல்களை பாடினார்.மிடில் கிளாஸ் கதாநாயகனாக வந்து தாக்கத்தை ஏற்படுத்தி மறைந்து விட்டார்.வருத்தம்தான்.
இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் இவர் மாதிரி உருவம் உள்ளவர்களுக்கு ஏத்த மாதிரி படங்கள் இப்ப இருக்கிறதா?

Thursday, May 20, 2010
தூரதர்ஷன் அன்றும்.... இன்றும்
தூரதர்ஷன் ......................அன்று
தூரதர்ஷன் ......................இன்று
கருப்பு வெள்ளையில் இருக்கும் இடம் ஏதாவது சபா மேடை?
Saturday, April 17, 2010
அனானிவாலா,தொகுப்பாளினி,கொலை,சுஜாதா
அசோக் நகர் கொலை மர்மம் விடுபட்டுவிட்டது.”நிஜங்கள், புனைவுகளை விட வினோதமானவை”என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.
”டாமின்” அதிகாரி,அவர் மனைவி,பணிப்பெண் மூன்று பேரையும் கொன்றவர்களில்(நவம்பர்-2008) ஒருவர் ஒரு வருடம் அமுக்காக போலீஸ் கூடவே இருந்திருக்கிறார்.அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கம்புயூட்டர் சர்வீஸ் டெக்னிஷியனாக.
சொந்த கார் இருந்தும் கொலையாளி நடத்திய டிராவல்சில்தான் கார் வாடகைக்கு அந்த அதிகாரி எடுப்பாராம்.அவருடன் நட்பாகி அவரின் பணம்,நகை விவரங்களை தெரிந்துக்கொண்டு இந்த கொலையை நடத்தி இருக்கிறார்கள்.
நீதி: வெளியாட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவும்.
_________________________
கிரிக்கெட்டில் பாரூக் ”என்ஜினியர்”, நாரி “காண்டராக்டர்” போன்ற பெயர்கள் சிறு வயதில் கேட்கும்போது வினோதமாக இருக்கும்.ஏன் தொழில் சார்ந்த பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள் என்று. பிறகாலத்தில்தான் தெரிந்தது இவர்கள் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் என்று. இவர்களுக்கு பெரிய வரலாறே இருக்கிறது.தங்கள் முப்பாட்டனார் செய்த தொழிலை பெயரோடு சேர்த்துக்கொள்வது.
டாட்டா,காத்ரெஜ்,வாடியா,ஹோமி பாபா,சூபின் மேத்தா போன்றவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சில சுவராஸ்யமானபார்சி பெயர்கள்; காஸ்வாலா,கீதா டாக்டர்,டயர்வாலா,காண்டீன்வாலா,ரோன்னி ஸ்குரூவாலா,சோடா-மூடி-ஒப்பனர்வாலா,
டாரூவாலா,ஒயின்வாலா. இதில தவுசண்ட் வாலா சேருமா?
இவர்களின் மூப்பாட்டனர் காலத்தில் பிளாக் இருந்திருந்தால் “பிளாக்வாலா” “பின்னூட்டம்வாலா” “அனானிவாலா” இருந்திருப்பார்கள்.
_________________________
தொலைக்காட்சிகளில் ஆளுமைகளைப் பேட்டி எடுக்கும் தொகுப்பாளினிகள் எடுக்கப்போகும்
துறையைப் பற்றி ”ஹோம் வொர்க்” செய்வது மாதிரி தெரியவில்லை.ஆளுமையை பார்த்து”கெக்கே பிக்கே” என்று இளித்துக்கொண்டு அல்லது கையை ஆட்டிக்கொண்டு ‘ஏனோதானோ” என்று எதையாவது கேட்டுக்கொண்டு எதற்கும் உதவாமல் வேஸ்ட் செய்கி்றார்கள்.
“ கேள்வி கேட்பவர்கள்(பேட்டியில்) என் பதிலைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படுவதில்லை.அதன் சடுதியில்,விரலின் நகப்பூச்சை வருடியபடியே அடுத்த கேள்வியை யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்”.
- சுஜாதா

Monday, November 30, 2009
ஏம்பா..! லாங்கா லுக் விட மாட்டீங்களா?
என் பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் சில மக்குத்தனமான விஷயங்களைப் பார்த்திருக்கிறேன் மற்றும் படித்திருக்கிறேன்.அப்போது எனக்குத் தெரியாது இதெல்லாம் மக்குத்தனம் என்று.சரிதான் இவங்க பண்றது என்கிற ரீதியில் இருந்தேன்.
ஆனால் இதைச் செய்தவர்கள் தலைவர்கள், படைப்பாளிகள்.
சிந்தனையாளர்கள் சுத்தமாக ஒரு தொலைநோக்குப் பார்வை ( லாங் லுக்) இல்லாத மக்குகள என்பது இப்போது அந்த விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து இவர்களைப் பார்த்து வழித்துக்கொண்டு “ஹிஹிஹி” என இளித்துக் கொண்டிருக்கிறது.
அது என்ன? பார்ப்போம்.
1.80 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.வேலையில்லா திண்டாட்டம் வரும் என்று அதை எதிர்த்து சில யூனியன்களும்,ஒரு பெரிய தலைவரும் மவுண்ட் ரோடில் ஊர்வலம் போனர்கள்.அதே இவர்கள் சில வருடங்கள் கழித்து ”ஓகே! வரட்டும்..! ஆனா ரயில்வேயில் (ரிசர்வேஷன்)”இதைக்கொண்டு வரக்கூடாது பிடிவாதம் பிடித்துக் கொடிப்பிடித்தனர்.
ஹிஹிஹி.! தாங்க முடியல!
2.டீவி வந்த புதிதில் ஞாயிற்று கிழமைகளில் மாலையில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடக்கூடாது என கூட்டம் போட்டுத் தீர்மானம் போட்டார்கள் பிறகு ஊர்வலம் போனார்கள் சினிமாகாரர்கள்.போட்டாலும் “இது திரைக்கு வந்து பல பல பல வருடங்களே ஆன” படங்களைத்தான் போடவேண்டும்.அதே மாதிரி மேடை நாடகம் நடத்துபவ்ர்களூம் கொடிப் பிடித்தார்கள்.அவர்களுக்கு ஞாயிறு கிழமைகளில் சபாக்களில் ஈ ஓட்டுவதன் காரணமாக.
ஹிஹிஹி...! தாங்க முடியல!
3.வீடியோ கேசட் வந்த போது அதற்கு சினிமா உரிமையைக் கொடுக்கக்கூடாது என்று கூட்டம் போட்டார்கள்.எதிர்த்தார்கள்.சிறிது மாதம் கழித்து ஒரு படத்தின் உரிமையை இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் கழித்துதான் தர வேண்டும் என்று அடுத்தக் கட்டத்திற்க்குப்போனார்கள். அப்புறம்.....?
ஹிஹிஹி...! தாங்க முடியல!
4.கருத்தடை சாதனம்.இது மதங்களுக்கு எதிரானது. கடவுள் கொடுப்பதை தடுக்கக்கூடாது.பிள்ளகள காப்பாத்தவது எங்கள் வேலை.மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்.இதுல கவர்மெண்ட் தல இடக்கூடாது.

Wednesday, November 4, 2009
பத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்
எனக்குப்பிடித்த பத்து: 1,2,3,4,5,6,7,8,9,10.
எனக்குப் பிடிக்காத பத்து: கிச்சன் சிங்கில் கழுவாமல் முடை நாற்றம் அடிக்கும் பத்து, பத்துப்பாத்திரங்கள்

Monday, November 2, 2009
யாருக்குத்தான் பிராப்ளம் இல்லை..?
கேள்வி: நான எங்கள் வகுப்பில் மானிட்டர்(கிளாஸ் லீடர்).டீச்சர் இல்லாத சமயத்தில் நான்தான் வகுப்பைச் சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.யாராவது பேசினால் பெயர் எழுதி டீச்சரிடம் காட்ட வேண்டும்.என் நண்பர்களின் பெயர்களை எழுதினால் அவர்கள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எமோஷனலாக பிளாக் மெயில் செய்கிறார்கள். நான என்ன செயவது ?அவர்கள்பெயர்களை எழுதி என் நட்பை இழக்கலாமா?
- மும்பையிலிருந்து ஒரு பள்ளி மாணவன்
பதில்:நீங்கள் இருக்கும் நிலமை தர்மசங்கடமான ஒன்று.நீங்கள் உங்கள் மனசாட்சிக்கும் நண்பர்களுக்கும் நியாமாக நடக்கவேண்டிஇருப்பதால் ,உங்கள் நண்பர்களிடம் சொல்லி விடுங்கள் ,இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்கப்போகிறேன் என்று.ஏனென்றால் நீங்கள் டீச்சரை ஏமாற்ற விரும்பவில்லை.
வகுப்பில் பேசாமல் அமைதியாக ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுங்கள் டீச்சர் வரும் வரையில்.இந்த யோசனையையும் கண்டிப்பையும் மீறி இவர்கள் நடந்தால் உங்களுக்கு ஒரே வழி அவர்கள் பெயரை எழுதுவதுதான். உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது.
நன்றி: கோகுலம்.The Magazine for Children
குழந்தைகள் எப்படியெல்லாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
_______________________________________________________________________
நான் ரசித்த லாஜிகல் ஜோக்ஸ்:
செந்தில்: அண்ணே! என்ன பத்தி இப்போ எதுவும் தெரியாது.போகப்போத்தான் என்னப் பத்தித் தெரியும்.
கவுண்டமணி: என்னது போகப்போகவா... போகப்போக போரதுதான் தெரியும்.வேற என்னடா தெரியும்
_____________________
செந்தில்: அண்ணே! ஆத்துல போட்டாலும் அளந்துப் போடணும்
கவுண்டமணி:டேய்...! ஆத்துல போடறதே தப்பு.இதுல அளந்து வேற போடனுமா?
_____________________
செந்தில்: அண்ணே!எல்லா மனிதனுக்கும்மறுபக்கம் உண்டுண்ணே!
என்னோடமறுபக்கத்தயும் ஒரு நாள பாக்கப்போறீங்க.
கவுண்டமணி:டேய்! பிளேடுக்குக் கூட மறு பக்கம் இருக்கு. ஒரு பக்கம் சேவிங் முடிச்சாலும் அதோட மறுபக்கத்த அடுத்த சேவிங்க்கு யூஸ் பண்ணலாம். உன்னோட மறுபக்கத்த வைச்சு நான் என்னடா பண்றது.

Tuesday, October 20, 2009
சுஜாதா,வடிவேல்,லீனா மணிமேகலை
போன வெள்ளிக்கிழமை. ஹிந்து தினசரி பேப்பரில் டீவி நிகழ்ச்சிகள் பகுதி.பொதிகை டீவியில் (முன்னாள் தூரதர்ஷன்)இரவு 7.30 மணிக்கு “ஒளியும் ஒலியும்”சினிமா பாடல்கள்.”ஆமா...இத எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே?இன்னும் வருகிறதா?.உடனே”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” னும் ஞாபகம் வந்தது.
________________________________________________________________________
தமிழ் சினிமாவில் நகைச்சுவை.வறட்சிதான்.நகைச்சுவைக் காட்சிக்கென்று சிலவிதி முறைகள் உள்ளன.முடிக்கவேண்டிய இடத்தில் ஷார்ப்பாகமுடிக்க வேண்டும்.காட்சியின் நோக்கமான குபீர் சிரிப்பு வந்தவுடனசட்டென முடிதது விடவேண்டும்.முடிந்தவுடன் அறுக்கக்கூடாது அல்லது காட்சிக்கு நோட்ஸ் போட கூடாது. இப்படி அறுப்பது தமிழ் சினிமாவில் நிறைய.அதுவும் வடிவேலு காமெடியில்.
ஷார்ப்பாக முடிக்காத காமெடி: வடிவேலு டீக்கடையில் பெஞ்சில்எதிரில் இருப்பவர் மாதிரி ஒவ்வொரு சைகையும் செய்யும்படி உசுப்பேத்துவார ஒருவர்.
கடைசியில் அவர் மாதிரி சாய்ந்து உட்கார பின்னாடி சாக்கடையில ்விழுவார்.
விழுந்தவுடன் காமெடி முடிகிறது.புரிந்தும் விட்டது.சிரிப்பும் வந்துவிட்டது.ஆனால் அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு வசனம் பேசி விளக்கம் கொடுப்பார்.காமெடி
நீர்த்து விடுகிறது.
ஷார்ப்பாக முடிந்த காமெடி: வடிவேல் பெண் பார்க்கப்போன இடத்தில்,பெண் தனியாக பேச அழைத்து வசனங்கள் காமெடியாகப போய்கொண்டிருக்க கடைசிஅடியாக “உங்க வீட்ல வேலக்காரங்க இருக்காங்களா...”கேட்க உடனே வடிவேல் கத்த காமெடி ஷார்ப்பாக முடியும்.(அப்புறம் வசனம் பேசி கோனார் நோட்ஸ் அறுவை இல்லை)
சமீபத்தில் பார்த்த வித்தியாசமான மற்றும் fresh காமெடி.சார்லியின மாடுவாங்கும் காமெடி. சார்லி அசத்துவார். படம்....ராமகிருஷ்ணா.?

டெல்லியில் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது சாலையின நடுவே வயதான ஒருவர் கிடந்தார்.நான் நிறுத்திப் பார்த்ததில் அவர் மிகவும் இறந்திருந்தார்.போகிற வருகிற கார்கள் எல்லாம் சற்றுத் தயங்கி அந்த உடலை
மரியாதையாகத் தவிர்த்து வளைந்து சென்று மறுபடி வேகம் பிடித்த மறைகின்றன.ஒருவரும் நிற்கவில்லை. நிற்பதில்லை.எதிர்வீட்டின் டெலிபோன் பீங்கான்களைப் பார்த்து அங்கே செய்தி சொன்னதற்கு “நீ ஏன் கவலைப் படுகிறாய்” அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று உபதேசம் கிடைத்தது.
யார் அந்த அவர்கள்........?
நன்றி - சுஜாதா “மிஸ் தமிழ்த்தாயே நம்ஸ்காரம்”
_________________________________________________________________
ரசித்த கவிதை:
எல்லா
எண்ணங்களும்
நினைவுகளாகும்
திறன் இல்லாதவை
ஆழமான காயங்களுக்கு
மட்டுமே
வடுக்கள்
சாத்தியம்
நன்றி-லீனா மணிமேகலை “ஒற்றையிலையென”

Tuesday, September 29, 2009
ரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்
பல சந்தா(Pala Shanda),ப்ரியா, தர்ஷினி கோபி,சுவி,சுர்முகி(Surmukhi)பெஃபி
(Febi)பீலாஹிண்டோ(PellaHinto),சைந்தவி,ஜனனி,நவீன்,ரீட்டா,கெளசிக்,ஜானகி ஐயர்,பிரசன்னா,ஷீபா,பாலாஜி,ரம்யா,பிரியாஹேமேஷ்,விவேகா,சரிதா,ரேகா,கீதா,
வின்செண்ட்,,ஸ்வேதா,ஹரிகுமார்,கிளிண்டன்,சோலார்சாய்,ஷான்,பல்ராம்,
நான்சி,கீர்த்தி சஹாத்தியா,ஷாயில் ஹதா,மேகா,மஹேஷ் வினயகராம்,கல்யாணி,சங்கீதாராஜேஸ்வரன்,கிருஷ்ண ஐயர்,ஷோபா சேகர்,வேல் முருகன்...
............மற்றும் பலர்.
இவர்களெல்லாம் யார்?ரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா? இல்லை.
பின்னணிப் பாடகர்கள்.வெளிவந்த மற்றும் வரப்போகிற படங்களின் பாடல்களைப் பாடியவர்கள்.இன்னும் கூட நிறைய பேர் இருக்கிறார்கள்.
இன்னும் கூடவா? ஐய்யோ..! அம்மா!
டீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது இதில் இருக்கிறார்களா? பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.
இவர்கள் டீவி சீரியல்களில் பாடினாலும் சினிமா ஆசை அவர்களை விடாது.தீவிர சினிமா பாடல் ரசிகர் கூட இவர்கள் பாடிய பாடலை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்.
கார்பரேஷன் தினக்கூலி நமக்கு இன்று வேலைக்கிடைக்குமா என்று வாசலில் நிற்பது மாதிரி இவர்கள் தாங்கள் பாடிய குறுந்தகடைக் கொடுத்து இசையமைப்பாளர்கள் வீட்டு வாசலில் சான்சுக்காக நிற்க வேண்டும்.
அப்படியே சான்ஸ் கிடைத்தாலும் முன்னாள் மாதிரி 10 -20 வருடம் ஓட்ட முடியுமா?புதுபுது கதா நாயக/கிகள் மற்றும் இசையமைப்பாளர்கள் தோன்ற இவர்கள் மறைய ஆரம்பிப்பார்கள்.
இது தவிர சின்மயி,ரஞ்சித்,அனுராதா,நரேஷ்,பென்னி,சுசித்ரா,சுதா,கிருஷ் மது,திப்பு ,ஸ்ரீலேகா,மகதி என்று முன்னணியில் இருக்கும் பின்னணிப் பாடகர்கள்.
கடைசியாக:
முன்னெல்லாம் திரையில் ஒரு 10 அல்லது 20 வருடம் அனுபவப்பட்டு “திரை உலகைத் திரும்பிப் பார்க்கிறேன்” அல்லது “நான் கடந்து வந்த பாதை” என்று டீவியில் தோன்றி பேட்டி கொடுப்பார்கள்.
இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.

Sunday, September 6, 2009
என் வாய் நாத்தமடிக்துங்கறாள்
முத்தமிழ் தவிர ”விளம்பரத் தமிழ்” என்ற ஒன்று இருக்கிறது.எண்பதுகளில்ஆங்கிலம் அல்லது இந்தியில் தயாரிக்கப்பட்ட பற்பசை(tooth paste)விளம்பரம் ஒன்று தமிழில் டப் செய்யப்படும்போது எப்படி நாறுகிறது பாருங்கள்!தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
மழுங்க ஷேவ் செய்யப்பட்ட வட இந்திய காதலன் தன் காதலியின் முகத்திற்கு அருகே சென்று ஆசையாகப் பேசுவான்.சட்டென காதலி முகத்தைத் திருப்பிக்
கொள்வாள்.அடுத்த ஷாட்டில் காதலியின் தோழி “என்னாச்சு” என்பாள்.
காதலியின் பதில்: “அவர் வாய் நாறுது” .
வேறொரு விளம்பரப் படம்.அதே சீன். ஆனால அடுத்த ஷாட்டில் காதலியின் தோழிக்கு பதில் காதலனின் தோழன் “என்னாச்சு!? ஏன் முகத்தைத்திருப்பிக்
கொள்கிறாள்” என்பான்.
காதலன் பதில்:“என் வாய் நாத்தமடிக்துங்கறாள்”
இதன் ஆங்கில உரையாடல்களை உங்களால் ஊகிக்க முடிகிறதா?மொழிபெயர்ப்பு அவ்வளவு மணக்கிறது!கொஞ்ச காலம் கழித்து காதலி டப்பிங்கைத் திருத்திக்கொண்டாள் “அவர் வாய் துர்நாற்றம் வீசுது”
இப்போதெல்லாம் இந்த ”விளம்பரத் தமிழ்” நிறைய முன்னேறி விட்டது.நல்ல மொழி பெயர்ப்பு.சரியான டப்பிங் தமிழ் பேசும் ஆட்கள்.அடுத்து நேரடி தமிழ் விளம்பரங்கள்.
அதிக ”போஷாக்கு” என்பது மாறி அதிக “சக்தி”(அ)”ஊட்டச் சத்து”
ஆனாலும் குழந்தைகள் பேசும் (ஆங்கிலம் அல்லது இந்தியில் எடுக்கப்பட்ட) விளம்பரப் படங்களில் டப்பிங் தமிழைக் கேளுங்கள்.உணர்ச்சியற்று ஒப்பிப்பதுப் போல இருக்கும். ஏன் அது? synchronisation?
எல்லா தலைமுறையும் கேட்டு வளர்ந்த விளம்பரப் படம் “ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைஃப் பாய்.......லைஃப் பாய் எவ்விடமோ.......”
யூ டியூபில் ஒரு டூத் பேஸ்ட் விளம்பரம் பாருங்கள். சூப்பர்!
சிறுகதையின் கடைசி டிவிஸ்ட்?
Friday, September 4, 2009
அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா?
இந்த பிரபஞ்சத்தில் எல்லோருமே நிச்சியமாக ஆயுளின் ஏதோ ஒரு கணத்தில் நின்று அதைப்பற்றி யோசனைச்செய்திருப்போம்.
எதைப் பற்றி?
இந்த பிரபஞ்சம் பற்றிதான்.
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?நாமெல்லாம் யார்? எப்படி வந்தோம்?எதற்கு வந்தோம்?கோடானகோடி அண்டங்களின் கதை-வசனம்-டைரக்ஷன் யார்?ஏதேதோ மனதில் யோசித்து விட்டு அடுத்த வேலைக்குப்போய்விடுவோம்.ஏன் என்றால் விடை தெரியாது.
ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.
ஒரு பானை இருந்தால் செய்தவன் (குயவன்),செய்வதற்கான கருவி (சக்கரம்),செய்யும் முறை,(சுத்திவிட்டு கையால் பிடிப்பது),செய்பொருள்
(களிமண்) (raw materials).
இந்தப் பிரபஞ்சத்திற்கு உண்டான Man,Machine,Method,Materials?வடமொழியில் ஒரு வஸ்துக்கு தேவை உபாதானம்,நிமித்தம்,ஸஹகாரி என்பார்கள்.
500,00,00,000 கோடி வருடங்களுக்கு முன் சூன்யம் அல்லது எங்கும் தூசு மண்டலம் (தூசு எப்படி வந்தது?சூன்யம் ஏன்?).இத்தூசுகளுக்கு இடையே ஏற்பட்ட இயக்கத்தின் காரணமாகஇவைகள் ஈர்க்கப்பட்டு,மோதி விளையாடி,சுற்றி, சின்ன சின்னக் கோளங்களாக உருவாகி சுற்றத் தொடங்கின என்கிறது விஞ்ஞானம்..
அடுத்து நமது பூமி ஒரு பெருவெடிப்பில் (bing bang theory) சூரியனிடமிருந்து பல லட்சம் உஷ்ணத்தில் துண்டாகப் பிரிந்து பல கோடி ஆண்டுகள் மழை மற்றும் காற்றால் குளிர்ந்து ஏற்பட்டதுதான் என்கிறது விஞ்ஞானம்.
(இந்த பிரபஞ்சத்தில் நான் இருக்கும் தெரு எங்குள்ளது?)
பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா கடவுள்தான்.இவர்தான் பிரபஞ்ச காரணன்.பிரம்மாதான் படைத்தார்.விஷ்ணுதான் அட்மினிஸ்ட்ரேஷன்.சிவன்தான் அழித்தலைப் பார்த்துக்கொள்கிறார் என்கிறது என்கிறது மதம் .
மற்ற மதங்களும் அவரவர் கடவுள்கள்தான் என்று சொல்லுகின்றன.
ஜகத்மித்யா அதாவது உலகம்(ஜகம்) மாயத்தோற்றம்.நமது ஜீவாத்மா மாயத்தோற்றத்தில் மயங்கி இருக்கிறது.(கயிறு பாம்பாகத் தோற்றம் அளிக்கிறது மாயை என்ற போர்வையால்)மாயத்தோற்றம் நீக்கி பெருவெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவை இந்த ஜீவாத்மா உணர்ந்தால் ஒன்றும் கிடையாது./அஹம் பிரம்மாஸமி. அதுதான் இது தத்வமஸி என்கிறது வேதாந்தம்.
இதைத் தவிர பாட்டி, அம்மா, செவிவழி,சந்தமாமா கதைகள் நிறைய உண்டு.
எப்படி தோன்றியது என்று எல்லாம் சொல்கிறது.ஏன் தோன்றவேண்டும் என்பதற்கு விடை இல்லை.
எதற்குப் பானை? புரியாத புதிர்தான்.
தெரியாமல் இருப்பதுதான் சுவராசியம் என நினைக்கிறேன்.
ஆனால் கலர்கலரான கோடானகோடி அண்டசராசரங்கள் அற்புதம்.வாயைப் பிளக்க வைக்கும் ஆச்சிரியம். அதை ரசிக்கவும் அதைப் பற்றி யோசிக்கவும் அறிவைக்கொடுத்த அந்த முகம் தெரியாத “அனானி”க்கு நன்றி.
Thursday, August 27, 2009
மதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை

ஒசாமா பின் லேடன் தோன்றும் ”அல் ஜஸீரா”(Al Jazeera)சானல் தவிர மீதி எல்லா சானல்களிலும் 24 மணி நேரமும் போட்டு துவைத்து எடுத்தார்கள் இந்தப் பாட்டை எல்லா FMகளிலும் போட்டுத்தாக்கினார்கள். தமிழகத்தில் ஓடும் எல்லா PT வண்டிகளிலும் இதேதான். அடுத்து எல்லா பாட்டு நிகழ்ச்சி சேனல்களிலும் மைக் பிடித்துக்கொண்டு நடுவர் ஆனார். சினிமாவில் தோன்றினார்.

இப்போது அவர் எங்கே?
_____________________________________________________________________

ராஜபார்வை(கமலின் 100 வது படம்) என்ற திரைப்படம் எனக்கு தெரிந்து கடந்த 20 வருடமாக எந்த சேனலிலும் போடப்படுவதில்லை. கமலின் சொந்த்ப்படம் இது.
என்ன காரணம்?
____________________________________________________________________

மதன் பாப் என்ற காமெடி நடிகரின் பாணி மூக்கை மேல் நோக்கி இழுத்து பல்லைக் காட்டிக்கொண்டு ”ஹி..ஹி..”சிரிப்பது.அவருக்கென்ற சில வேறு சில காமெடித் திறமைகள் உண்டு.எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவார் முன்னொரு காலத்தில். அதெல்லாம் இல்லாமல் இந்த “மூ.மே.நோ.இ.ப.கா.கொ” பாணியை அவர் மேல் திணித்து” மவனே...உனக்கு ஆயுசுக்கும் இதாண்டா” என்று ஆக்கியது பரிதாபம்.
அவரும் வேறு வழியில்லாமல் .....?
____________________________________________________________________
அம்பானி முதல் ஆண்டி வரை எல்லோரும் கூலிக்குத்தான் மாராடிக்கிறோம்.இந்த எப் எம் (FM) தொகுப்பாளினிகளும் அதே. பாவ்ல கேள்விகளும், பாசாங்கு சிரிப்புகளும்,கொஞ்சி பேசும் பேச்சுக்களும், சேனலுக்கு சேனல் பார்க்கலாம்.
நிகழ்ச்சியில் நேயர்களோடு பேசும் பேச்சு வழிசலோ வழிச்சல். FM நேயர்கள் விடும் ஜொல்கள் தாங்கமுடியவில்லை.
ஒரு சேனலில் அந்த இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்.
“உங்கள்ட்ட பேசனம்னு மூன்று மாசாமா முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் லைன் கிடைச்சுது.” இது ரூம் போட்டு வழிதல்.
படிக்க:
"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா
Wednesday, March 4, 2009
தமிழா..தமிழா..தமிழ் பேசலாமா?..
எனக்குத் தெரிந்து கிழ் உள்ளனவைற்றைக் குறிப்பதற்கு எந்த காலத்திலும் ஆங்கில சொற்களைத்தான் பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.அப்படியே தமிழோ வடமொழியோ பயன்படுத்தியிருந்தாலும் அது 80/90 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம்.அடைப்புகுறியில்(பிராக்கெட்?) அந்த சொற்களை கொடுத்துள்ளேன்.
பஸ்(மோட்டார்),டெலிபோன்,பில்,டிக்கெட்(சீட்டு),வக்கீல்,லாயர்,ஜட்ஜ்,
கோர்ட் (கச்சேரி),கார்(பிளசர்),ரயில்வே ஸ்டேஷன்,ஆபிஸ்,ரேடியோ,கலெகடர்,போலீஸ் (டாணக்காரன்),வாட்ச்மேன்,பேங்க்,பிரவேட் அல்லது டூசன்,டீச்ச்ர்(வாத்தியார்),சினிமா(டாக்கீஸ்),நைட் சோ(ராவாட்டம்),கேட்,பஸ் ஸ்டாண்ட்,கலர் சோடா,பெட்டிஷன்(தாக்கீது),லெட்டர்(கடுதாசி/காயிதம்),சோப்,காலேஜ்,காமெடி(டமாஸ்,தமாஷ்),ஸ்வாமி தரிசனம்,ஹார்ட் ஆபரேஷன்,ஹாஸ்பிடல்,டாக்டர்(வைத்தியர்/மருத்தவச்சி(நர்ஸ்?))ஹோட்டல்,
பேண்ட்(கால் சராய்/குழயாய்),
சில் சொற்கள் ஆங்கிலம்தான் உபயோகபபடுத்த வேண்டிய கட்டாய்ம். ஏன்? அந்த பொருள்கள் வேறு நாட்டிலிருந்து வந்த காரணம்.
உதாரணம்:ரேடியோ(வானெலி),டெலிபோன்(தொலை பேசி),சோப்,சினிமா(திரைப் படம்),பஸ்(பேரூந்து) போன்றவை.எனக்குத் தெரிந்து பேச்சு வழக்கில் இதற்கு ஈடான தமிழ் சொற்களை சத்தியமாக யூஸ் பண்ணிய மாதிரி தெரியவில்லை.
Tuesday, November 18, 2008
திடீர் ரசம் - யாரடீ நீ மோகினி
நான் ரசித்த கவிதை
(எப்பவோ படித்தது)
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சியக்கப்படுகிறது
என் திருமணம் மட்டும் ஏன்
செங்கல்பட்டில் நடந்தது
கேட்டான் ராமரத்தினம்
_____________XXX__________
....மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக, அதன் அவசியம்
இல்லாமலே இயங்கக்கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு
வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா... நான்
பிறப்பதற்கு முன்.....என்னைப் பற்றி எனக்கு ப்ரங்ஞ்சையுண்டா ?
எனனைப்பற்றி,இப்போது என்னைப்பற்றியுள்ள சுழ் நிலைக்குத்தான்
ப்ரங்ஞ்சையுண்டா ?
கயிற்றரவு - சிறுகதை - புதுமைப்பித்தன்
______________xxxx______________________
கிழுள்ள ”திடீர் ரசம்” செய்முறை விளக்கத்தில் ஒரு காமெடி
உள்ளது
அது என்ன சொல்லுங்கள்?
”திடீர் ரசம்” செய்முறை
1.புளியை அரை மணி நேரம் தண்ணீரில்
ஊற வைக்க வேண்டும்.
2.நன்கு பிழிந்து கரைசல் எடுத்துக் கொண்டு தண்ணீர்
சேர்த்து நீர்த்து 5 கப் தயாரித்துக் கொள்ளவும்.
3.உப்பு,வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை
நீங்கும் வரை 1அல்லது 2 நிமிடம் கொத்திக்க விடவும்.
4.நெய்யில் நறுமண பொருட்களை வறுத்து பொடித்து
ரசத்தில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து
இற்க்கி வைக்கவும்.
5.உடனடியாக மூடியால் மூடவும். சூடாக சாதத்துடன்
பரிமாறவும்
”அறு சுவை மதிய உணவுகள்” - மல்லிகா பத்ரிநாத்.
பக்கம் -170
___________ xxxxxxxxxxxxxxxxxx_______
படம்: யாரடீ நீ மோகினி
பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
இசை: யுவன் சங்கர்
பாடியவர்: உதித் நாராயண்
நல்ல மெட்டு. நல்ல வரிகள். நல்ல இசை.நல்ல விஷுவல்
ஆனால் தமிழ் தெரியாத T.R.மஹாலிங்கம் மாதிரி ஒரு”சேட்”குரல்.
வழக்கமாக “மெய்க்கம், நெர்க்கம் ,ஒர்கோடி,
போதம், சிருப்பம் “ என்று”பருவாயில்லை” தமிழில் ஒரு
ஹதம்(கொலை). பாடலை ரசிக்கமுடியாமல்.
இனி மேல் பாடகர்களை TNSPSC தேர்வு வைத்துதான் தேர்வு
செய்யவெண்டும்.
இவர் தப்பு தப்பாக பாடினால் படம் ஒடும் என்ற செண்டிமெண்ட்
உண்மையா?
ஓடாவிட்டாலும் “பருவாயில்லை”
____________xxxxxxxxxx___________
Subscribe to:
Posts (Atom)