Thursday, March 20, 2014

ஆத்மா-மலேசிய விமானம்-பேய்-பீதி-தேர்தல் ஹாஹா

 மாயாமாய் போன விமானத்தைப் பற்றி வரும் ஹேஷ்யங்கள்/கதைகள்/அலசல்கள் நெட்டில் கொட்டிக்கிடக்கிறது.சில யூகங்கள் (ஹேஷ்யங்கள்)
விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டு ஒரு அளவுக்கு லாஜிக்கலாக இருக்கிறது. சிலது கன்னாபின்னா கற்பனையில் பீதியைக் கிளப்புகிறது.

அதில் ஒன்று:

இதுக்கெல்லாம் கன்னாபின்னான்னு ஹோம் வொர்க் செய்யனுமே?

விமானம் கடத்தப்பட்டு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ரகசியமான இடத்திற்க்கு கொண்டுச்செல்லப்படுகிறது.போகும் வழியிலேயே  ஆக்ஸிஜன் குறைப்பாட்டை இயக்கி பயணிகளை மூசசை அடக்கி உயிரிழக்கச் செய்வது.பிறகு விமானத்தை பிளான் செய்தபடி ரகசிய இடத்திற்கு கொண்டுசென்று  அதில் பண்டல் பண்டலாக வெடிக்குண்டுகளை ஏற்றி பிடிக்காத நாட்டின் மீது மோதுவது.இந்தியா பக்கத்தில் இருக்கா?

 சடன் லெப்ட் டர்னிங்.... ஏன்???

இரண்டு:

தீவிரவாதிகள் தாங்கள் தீவிரவாதத்தை உலகத்திற்க்கே வெளிச்சம்போட்டுக் காட்டிதான் எப்போதுமே  நாச வேலைகளைச் செய்வார்கள்.ஆனால் இது சிதம்பர ரகசியமாய்அல்லது கமுக்கமாய் அல்லது அமைதியாய்  விமானத்தை கடலில் இறக்கிநொறுங்க செய்திருக்கிறார்கள்.“நடந்தது என்ன?” என்று ஆளாளுக்கு ஒரு யூகம் செய்து மண்டையைப் பிய்த்துக்கொள்ளவேண்டும்.

மாத்தியோசி இதிலுமா? கடவுளே எல்லோரும் நல்லாபடியா திரும்பி வரணும்.
 
நம்பிக்கை-பிரார்த்திப்போம்


இது மாதிரி 83 விமானங்கள் மாயமாய் மறைந்திருக்கிறதாம்.அதில்  சிலது மாயம்.சில விபத்தில் மாட்டிக்கொண்டது.


தகவல் தொடர்பின் உச்சத்தில் உலகம்  இருந்தாலும் இன்னும் கண்டுப்பிடிக்காதது  சவாலாகத்தான் இருக்கிறது.

”மாயமாய் மறைதல்” என்ற சொல்லுக்கு தமிழில் ”அறு” “தீரு” “இல்லாமல் போ” “கண்மறைவுறு” “இன்மையாகு” என்று பல அர்த்தங்கள்.”திடீர் மறைவு” என்ற சொல் என் நினைவுக்கு உடனே வந்தது.அன்றாட வாழ்வில் புழக்கமான சொல்.

__________________________________________________________

 தேர்தல்...உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....
இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல்.கூட்டணி காம்பினேஷன்கள் அல்லது ஒட்டுக்கள் சுவராஸ்யமாக இருக்கிறது. திநகர் ரங்கனாதன் தெரு கூப்பாடுகள் பேரங்கள்.உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

தேர்தல் கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பதில் ”நீயா நானா” சண்டை.இவ்வளவு ஏன் கஷ்டபடவேண்டும்.ஒரு பெரிய விளையாட்டுத் திடலுக்கு எல்லா கட்சிகளும் வரவேண்டியது. வட்டமாக நின்று ”ஷாட் பூட் த்ரி” போட்டு முதலில் கூட்டணி அமைக்க வேண்டும் பிறகு கூட்டணிக்குள் சீட்டுக்குள் முடிவு செய்ய ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டு “சிங்கமா  பொட்டா” சொல்லி முடிவு செய்ய வேண்டும்.

Facts are stranger than fiction( உண்மை நடப்புகள் கட்டுக்கதைகளை விட புதிரானவை). அது இந்த தேர்தலில் ஒரு விசித்திரம்.சொந்த மகனே தன் கட்சிக்கு எதிராக பேசி ஓட்டுக்களைக் கலைப்பார் என்று  யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு பேய்  குறும்படம்: " Lights Out"

எனக்கென்னவோ வழக்கமான பாணியில்தான் எடுக்கப்பட்டமாதிரிதான் தெரிகிறது.பீதிக்காக பயன்படுத்தும் எல்லா உத்திகளும் இதில் உள்ளது. பயத்தில் செல்லோ டேப்  லாஜிக் வித்தியாசம்.செல்லோ டேப் எடுப்பது ஏன் தொடர்காட்சியில் வரவில்லை.

டிஸ்கி:This Video Is Not For The Weak Of Heart! Don't Watch This Alonehttp://www.sharedots.com/this-video-is-not-for-weak-of-heart-don-t-watch-this-alone-163.html


பாடலின் இனிமையை மீறும் ஆத்மா:
 
கருப்பு வெள்ளையிலும் ஆத்மா(சந்திரகலா-விஷ்ணுவர்த்தன்)

 கிழ்வரும் பாட்டில் மெட்டு-உணர்ச்சி-தாளம்-குரல்-பாடல் வரிகள்-கவித்துவம் நெருக்கமாக இனிமையாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி ஆத்மாவை தொடுகிறது.இப்படி எல்லாம் அமைவது அபூர்வம்.

ஆத்மா இல்லாத பாடல் சவம்.


0.30 - 0.40  & 0.55 - 1.05 & 1.54-1.57  இடையிசை ஐம்புலன்களை மீறி  ஆத்மாவோடு  உரையாடுகிறது..

.....மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு  மல்லிகைப்பூ
யார் வருவார்
யார் பறிப்பார்
யார் அறிவார்  இப்போது....

என்ற அழகான மெட்டுடன் கவித்துவமான  வரிகளுடன் ஜெயச்சந்திரனின் குரல் மிருதுவாகஆத்மாவோடு உரையாடுகிறது.

குளிர்ச்சியான மலைவாச ஸதலத்தில் டூயட் நடப்பதால் பாடல் மிருதுவான குளிருடன் நம்மை ஆக்கிரமிக்கிறது.

படம்: அலைகள் (1973) 
பாடியவர்:ஜெயச்சந்திரன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடல்:கண்ணதாசன்
இயக்கம்: ஸ்ரீதர்