Monday, January 30, 2012

கொத்து கொத்தாக இசையமைப்பாளர்கள்

பாடல் தளங்களுக்குப் பாட்டு கேட்கப் போனால் நிறைய புதுப்படங்கள் புது இசையமைப்பாளர்கள்.கடந்த 15 வருடம் கும்பல் கும்பலாக (200-300?) புது இசையமைப்பாளர்கள்,புது பாடகர்கள்.அம்மாடியோவ்!

ஒரு காலத்தில் வாய்ப்புக்குக்காக முட்டி மோத வேண்டும்.அவருக்கு இவர்,இவருக்கு அவர்தான் பின்னணி பாட வேண்டும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் அந்த நியதியெல்லாம் உடைந்து சுக்கு நூறு ஆகிவிட்டது.
படங்கள் மாறிவிட்டது.பாட்டுக்கள் மாறிவிட்டது.

இதில் யாரும் பிரபல ஸ்டார் படங்களுக்கு இசைஅமைக்கவில்லை.வாய்ப்பு கொடுக்கவும் விரும்பவில்லை.ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.இசை அமைத்து வெற்றிப்பெற்றால் விமோசனம் உண்டு.

கிழே 28 புது படங்கள்.ரிலீஸ்(ஊகம்) ஆனது ஆகாதது லிஸ்ட்.
இசையமையப்பாளர்கள் 28.28*5=140 பாடல்கள்.இதில் தீம் சாங் வேறு.யார் கேட்பார்கள்.எவ்வளவு பாட்டு கவனத்தைப் பெறும்.காலத்தை வெல்லும்.நன்றாக இசையமைக்கப்பட்டப் பாடல்கள் கும்பலில் நசுங்கி அட்ரஸ் இல்லாமல் ஆகிவிடும்.கொலைவெறி இசையமைப்பாளரின் மற்றப் பாடல்கள் என்ன ஆயிற்று.

அப்படி எல்லா பாடல்களையும் தொடர்ச்சியாக கேட்டால் பெரும்பாலான பாடல்கள் ஒரே சாயலில் இருக்கும். காரணம் லேட்டஸ்ட் டிரெண்டை மெயிண்டன் செய்வதால்.”வாகை சூடவா” ஜிப்ரான் கவனத்தைப் பெற்றார்.இவரின் அடுத்தப்படம்?

ரசிகர்கள் தீடிரென்று கேட்டு ஈர்ப்பாகி செல் காலர் டியூனாகத்தான் கேட்கிறார்கள்.இது ஒரு வகையில் ஆறுதலான விஷயம்.

இப்போதெல்லாம் பாடல்களைப் பார்க்கிறோம்(வீடியோ) கேட்பதில்லை.

கிழ் லிஸ்டில் கழுகு,முப்பொழுதும்,மயிலு பெரிய இசையமைப்பாளர்கள்.
 1. கழுகு-யுவன்
 2. 18 வயசு
 3. பேச்சியக்க மருமகன்
 4. சிவ பூஜைல கரடி
 5. பழைய வண்ணாரப்பேட்டை
 6. கனவுக் காதலன்
 7. உன்னதமானவன்
 8. மயிலு-ராஜா
 9. கிருஷ்ணவேணி பஞ்சாலை
 10. தலகோணம்
 11. கொண்டான்கொடுத்தான்
 12. உன்னோடு ஒரு நாள்
 13. அட்ட கத்தி
 14. மெரீனா
 15. உடும்பன்
 16. பெருமான்
 17. பாரி
 18. பிசினஸ் மேன்
 19. விருது நகர் சந்திப்பு
 20. முப்பொழுதும் கற்பனைகள்-ஜி.வி.
 21. மை
 22. உருமி
 23. கம்பன் கழகம்
 24. துள்ளி எழுந்தது காதல்
 25. மூணு
 26. ஆசாமி
 27. மழைக்காலம்
 28. தேனி மாவட்டம் 
எல்லாப்பாட்டையும் (8,20,3 தவிர)கேட்டு யாராவது feedback கொடுங்கப்பா.எஸ்கேப்!


Friday, January 20, 2012

பாண்டு,பொம்மை,அருண்மொழி,பரத நாட்டியம்

நடிகர் பாண்டு ஒரு நகைச்சுவை நடிகர் என்றுதான் பலருக்குத் தெரியும்.அவர் சிறந்த ஓவியர் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.அவர் தன் ஓவியங்களை வைத்து கண்காட்சியெல்லாம் நடத்தி இருக்கிறார்.
பாண்டுவும் அவர் மகனும்
முக்கியமான விஷயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையின் லோகோவை வடிவமைத்தவர் பாண்டுதான்.கிழே படத்தில் உள்ள குடை லோகோவை வடிவமைத்து பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர் பல வருடங்களுக்கு முன்பு.

_______________________________________________________

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போகவில்லை.போனவருடம் வாங்கிய புத்தகங்களே(நீண்ட நாவல்கள்) இன்னும் முடித்தப் பாடில்லை.எந்த ஒரு புத்தகமும் முழு மூச்சில் படிப்பதில்லை.திடீரென்று பத்தாவது பக்கத்தில் நிறுத்திவிட்டு அடுத்த புத்தகத்திற்குத் தாவுவது.

தாவும் புத்தகம் துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.பார்ப்பவர்களுக்கு லூசுத்தனமாக இருக்கும். சத்தியமாக எனக்கு இது ஒரு ரிலாக்ஸேஷன் மாதிரி உள்ளது.தாவுதலில் சுவராஸ்யம் கெட்டும் போவதில்லை.

பள்ளி பருவத்திலும் தேர்வுக்குப் படிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் சட்டென்று தாவி வேறு ஒரு பாடம் படிப்பேன்.

அடுத்து வாங்குவதற்கு முன் வைப்பதற்கு இடம் யோசிக்க வேண்டி இருக்கிறது.
_______________________________________________________

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிப் பேட்டியில் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி(நெப்போலியன்) சொன்னது:இதில் சில விஷயங்கள் தெளிவாகிறது:-

1.ரசிகன் அளவுக்கு சில படைப்பாளிகள் படைப்பில் ஒன்றுவதில்லை??? நான் படைத்தேன் என்னும் உளவியல்...?????????

2.படைப்பவனுக்கு படைப்பு தொழில்.ரசிகனுக்கு பொழுதுபோக்கு

3.காலம் கடந்து மிளிர்ந்து நிற்கும் படைப்புக்களை மறு உருவாக்கம் செய்ய முடியாது.

4.அருண்மொழி வேறு எந்த வெளி மெல்லிசைக் கச்சேரிகளுக்கு வாசிப்பதில்லை??
_______________________________________________________

பரத நாட்டியம் எனக்குப் பிடித்தமான ஒன்று.அதைப் பற்றி ஒன்றும் தெரியாது.அதில் உணர்ச்சிகள் பலவித பாவத்தில் அபிநயம் பிடிக்கப்படுவதால் ஒரு ஈர்ப்பு.மற்றும் வண்ணமயமான உடை அலங்காரம்.ரொம்ப ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கலை.

இதில் பிடிக்காதது ரொம்ப வயது முதிர்ந்த முகத்தில் சுருக்கம் விழுந்த நடனமணிகள் ஆடுவது.முக பாவங்கள் ரசிக்க முடியவில்லை.


தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு கடந்ததை ஒட்டி ஆயிரம் பேர் பத்மா சுபரமணியன் தலைமையில் நாட்டியம் ஆடுகிறார்கள். அற்புதம்.


_______________________________________________________

"பொம்மை” என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படம் 1963 ரிலீஸ் ஆகியது.சிறு வயது,கல்லூரி பருவம் மற்றும் வேறு சந்தர்ப்பங்களில் இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.இப்படத்தை இயக்கியவர் வீணை மேதை எஸ்.பாலசந்தர்.இப்படத்திற்க்கு இசையும் இவரே.
இந்தப் படத்திற்க்கு தேவையான முக்கியமான விஷயம் மிஸ்ஸிங்.அது விறுவிறுப்பு மற்றும் சஸ்பென்ஸ்.இவரே முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிக்கிறார்.ஆனால் பொருந்தாத மிகை நடிப்பு.அந்த கால டிராமா.

பொம்மை நடந்துவருவதை வைத்து திகில் கிளப்பி இருக்கலாம்.ஒரு வேளை அந்தக் காலத்தில் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ?

படத்திற்கு தனியாக டைட்டில் கிடையாது.படம் முடிந்தவுடன்
இந்த சேரில் உட்கார்ந்தவாறே நடிகர்களை அறிமுகப்படுத்துவர்.
ஒவ்வொருவரும் மேக்கப் இல்லாமல் அவர்கள் தங்கள் பெயரைச் சொல்லுவார்கள்.
முதல் பெண் எல்.விஜயலஷ்மி வேட்டியில் இருப்பவர் வி.எஸ்.ராகவன் கடைசியில் சதன்
படங்கள் ஹாலிவுட் பாதிப்பில் இருக்கும்.பல புதுமைகளைப் புகுத்துவார்.பாடல்கள் இல்லாமல் “அந்த நாள்” படம் இயக்கினார்.”நடு இரவில்” “அவனா இவன்” போன்ற சஸ்பென்ஸ் படங்களை எடுத்தவர்.
Thursday, January 12, 2012

நீலப்பட நாயகியும் டோனியின் நாட் அவுட்டும்

யுகத்திற்கு யுகம் ஊருக்கு ஊர் தர்மங்களும் நியாயங்களும் மாறுபடும்.இதைத்தான் திரு.மார்கண்டே கட்ஜூ,சேர்மன்,பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு விஷயத்தில் சொல்லி இருக்கிறார்.
மார்கண்டேய் கட்ஜூ
ரொம்பவும் மாறுபட்ட கருத்து.இதை ஒட்டித்தான் கருத்து வருகிறது.ஆங்கில தினசரியில் படித்தது.

சன்னி லியோன்-Sunny Leone(லிஒன்?) என்னும் நடிகை பஞ்சாபி அம்மா அப்பாவிற்குப் பிறந்தவர்.இந்தியாவில் படிக்கும்போது 11 வயதில் முதல் முத்தமும் 16 வயதில் கன்னித்தன்மையும் இழந்து அமெரிக்கா சென்றார்.


அங்கு Penthouse /Hustler போன்ற adult பத்திரிக்கைகளில் மாடல் தொழில் செய்துவிட்டு பிறகு பல வருடம் நீலப் படங்களில்(hardcore) நடித்து புகழ் பெற்றார்.லெஸ்பியன் பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று அக்ரிமெண்ட் போட்டு நடித்தார். பின்னால் அதை மாற்றிக்கொண்டு தனக்கு பரிசம் போட்டவனுடன் ”வேறு”  பாத்திரங்களில் நடித்தார்.அதையும் பின்னால் மாற்றிக்கொண்டு எல்லோருடனும் நடித்தார்.

சில அவார்டும் (???) வாங்கி இருக்கிறார்.அவரே சொந்தமாக நீலப் படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.அவார்டு வாங்கின படத்த இந்தியாவுல யாராச்சும் பார்த்திருந்த நடிப்பு எப்படின்னு சொல்லுங்கப்பா.

பார்க்க விக்கிபீடியா.ரொம்ப சுவராசியமா இருக்கு.
Sunny Leone

சரி விஷயத்திற்கு வருவோம்.

இவர் இப்போது “Colors" என்னும் இந்திய டிவி சேனலில் ”பிக் பாஸ்” என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவருகிறார்.அதை தன்னுடைய வெப்சைட்டில் விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்று இவர் மேல் ஒளிப்பரப்புத் துறை மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கும் புகார் போய் இருக்கிறது.

கலர்ஸ் சேனல் இவரை வைத்து அவரின் வெப் சைட்டுக்கு விளம்பரம் கொடுக்கிறது என்பதுதான் தாத்பரியம்.

அதுபற்றி திரு.மார்கண்டே கட்ஜூ, சொல்வது:

”சன்னி பொருளீட்டுவது (நீலப்படங்களில் நடிப்பது)அங்கு(அமெரிக்காவில்)சட்டபூர்வமான தொழில்.ஆனால் இங்கு சட்டவிரோதம்.இந்தியாவில் அவர் இருக்கும்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறார்.கடந்தகாலம் இல்லாத புனிதனும்,எதிர்காலம் இல்லாத பாவியும் கிடையாது.சன்னியின் கடந்த காலத்திற்காக அவரைத் தண்டிக்கக் கூடாது.
அம்பா பாலி
தேவதாசி அம்(பா)ராபாலியும்,மேரி மேக்டலின்னும் பிற்காலத்தில் புத்தருக்கும் ஏசுநாதருக்கும் பக்தையானர்கள்”
மேரி மேக்டலின்
_______________________________________________

பிரகாஷ்ராஜின் சொந்த தயாரிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் படம் “டோனி நாட் அவுட்”இது பெங்காலிப் படத்தின் தழுவலா?  பார்க்க யூ டூப்.
டோனி நாட் அவுட் முன்னோட்டம்:


அப்ப டோனி அவுட்டா?