Tuesday, March 20, 2012

DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்

அப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.

முக்கியமாக இளைஞர்கள் கூட்டம்.

பழைய கர்ணன்
முதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜி!இரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடுத்த பிரம்மாண்ட படம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.

பலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.

இந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)

சுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே
கர்ணன்:  மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு
சுபாங்கி: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
கர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே

இப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up)  DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.

DTS  Karnan
பல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததா?காலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்?பொறுமை?????

எனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.

இந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.

அவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.

இவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.

NTR Voice - K V Srinivasan Exclusive interview

Thursday, March 15, 2012

ஆ.. இவங்களா இப்பத்தானே!லாஜிக் லஞ்சம்?எட்டுக்கால் பூச்சி கேள்விகள்

வாழ்க்கையில் இந்த திடுதிப் சந்தோஷம் ஏதாவொறு விஷயத்தில் நம்முன் திடுதிப்பென்று தோன்றி பரவசப்படுத்தும்.உள்ளுணர்வில் அதைப் பற்றி திடுதிப்பென்று உதிக்க அதே சமயத்தில் நம் கண் முன்னால் நடக்கவும் செய்தால் விவரிக்க முடியாத குஷி.

போன(11-03-12) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட உள்ளுணர்வு முன்னால் தூர்தர்ஷன் சினிமா நிகழ்ச்சியும் அதை நடத்திய பெண்ணைப் பற்றியும்தான்.அதை நினைத்தவாறு டிவியை ஆன் செய்ய விஜய் டிவியில் (நீயா நானா) கைத்தட்டல் ஒலி அதனூடே நடந்துவருபவர் சற்று முன் என் உள்ளுணர்வில் வந்த தூர்தர்ஷன் ”மெட்ரோ ப்ரியா”.

மார்க்கெட் போய் கல்யாணம் ஆகி குடும்பம நடத்தும் தமிழ் நடிகைகளின் அதே உப்பல் கன்னம் உடம்பு தொகுப்பாளினிக்கும்.


அப்போது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு சேனல்.இவரும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு  தமிழ் டிடி மெட்ரோ டூவின் முதல்(?) பெண் தொகுப்பாளினி.ஒரு மணி நேர நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.

கையை ஆட்டி ஆட்டி தொகுக்கும் ஸ்டைலை அப்பவே கொண்டு வந்தவர்.துடிப்பாக பேசுவார்.இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.பிறகு லாவண்யா என்ற பெண்ணை வைத்து (பாட்டு பாடவா கதாநாயகி) இதே மாதிரி முயற்சித்தார்கள் ஆனால் வெற்றி அடையவில்லை.

இப்போது எவ்வளவு சேனல்கள் எவ்வளவு கை ஆட்டல்கள்/தலையசைத்தல்கள்/கத்தல்கள் ... தோன்றி மறைந்துவிடுகிறார்கள்.காரணம் இப்போது supply is more and demand is less. அப்போ Demand is more because supply is less.

அந்த நிகழ்ச்சியைப் பார்க்க:
டிவி பார்ப்பதில் வீட்டில் சண்டை
________________________________________
லாஜிக் லஞ்சம்?

சமீபத்தில் ஆரணி அரசு ஆசிரியர் பணிக்கு பன்னிரெண்டு,பத்து,எட்டு என்று லஞ்சம் கொடுத்து நிறைய பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.(வாங்கிய ஹெட்மாஸ்டர் போலீசிடம் சிக்கிவிட்டார்)ரொம்ப வருடமாகவே நடக்கிறது. கால் காசனாலும் கவர்மெண்ட் வேலை அதன் பயன்கள் என்றாலும் டீச்சர்கள் லஞ்சம் கொடுப்பதில் லாஜிக் புரியவில்லை.

ஆர்டிஓ,பத்திரப்பதிவு,தாலுக்கா ஆபிஸ் இத்யாதி வேலைகள் என்றால் கொடுத்த லஞ்சத்தை மீட்டு எடுக்க வழி இருக்கிறது.டீச்சர் வேலையில்?இதை நேர்மையாக சம்பாதித்து மீட்பதற்கே 6 அல்லது 7 வருடம் ஆகாது? அதுவும் இந்த கேசில் 5000 அல்லது 6000தான் சம்பளம் வாங்குகிறார்களாம்.

ஒரு வேளை இவர்கள் ஹெட்மாஸ்டர் ஆகி மீட்டு எடுப்பார்களோ?

புரியலா ...தெரிஞ்சா சொல்லுங்க!
________________________________________
எட்டுக்கால் பூச்சி கேள்விகள்


16 பூச்சிக் காலுக்கு எத்தனை கால்?
சூர்யா நடத்தும் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” யை “எல்லோரும் 6.40 லட்சம் வரை வெல்லலாம்” என்று கிண்டல் செய்யப்படுகிறது.ஏன் என்றால்  6.40 வரை கேட்பதெல்லாம் “எட்டுக்கால் பூச்சி” (எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்)கேள்விகள்.

ஏன்? நிறைய பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.நிறைய
பார்வையாளர்கள் நிறைய விளம்பரம். நமக்கு இருக்கும் பொது அறிவுக்கு பிபிசி லெவலில் கேள்விகள் கேட்க முடியாது.”அச்சு..அச்சு..” என்றால் 1. இருமல் 2.கொட்டாவி 3.தும்மல் 4.விக்கல் என்று கேட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.

மேலும்....

இது குவிஸ் கம் சூப்பர் சிங்கர் கம் கதையல்ல நிஜம் கம் நீயா நானா கம் ரியாலிடி ஷோவாக நடத்துகிறார்கள்.”அப்பாவுக்கு நெஞ்சு வலி தேவலயா?” என்று கேட்டுவிட்டு கேள்வியை சூர்யா ஆரம்பிக்கிறார். கலந்துக்கொள்ளும் சில இளம் பெண்கள் முதலில் ஜொள்ளை துடைத்துக்கொண்டுதான் சேரில் உட்காருகிறார்கள்.
நிகழ்ச்சியின் அரங்கம்,கலர்,இசை,லைட்டிங் எல்லாம் அட்டகாசம். ரொம்ப கிராண்ட்.Professional to the core. அசட்டுத்தனம் இல்லை.

கேபிசியின் டெம்பிளேட் பார்மட்தானே.

கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி -சன் டிவி குவிஸ்


பணம் என்றால் டெட் பாடி ஆல்சோ ரெடி என்ற சித்தாந்தத்தில் இதுவும் வருவதால் பார்வையாளவர்கள் வாய் பிளந்து கலந்துக்கொள்ள தூண்டப்படுகிறது.கையில் அள்ள முடியாத கட்டுகட்டாக பணம்,பெண் செக்யூரிட்டிகள், ஏழு கேள்விகள் என்று பணத்தைத் துரத்திக்கொண்டு போகும்விளையாட்டு.

ஏழு கேள்விவரை விளையாட வேண்டும்.போதும்பா என்று கழட்டிக்கொள்ள முடியாது.சுலபமாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். இந்த நிகழ்ச்சி எனக்குப்பிடித்திருக்கிறது.

ஆறு கேள்விகள் வரை ஒரு கோடியை விடாமல் ஜெயித்துவிட்டு ஏழாவது கேள்வியில் தவறினால் ஒரு கோடி ஊத்தி மூடிக்கொண்டுவிடும்.

தாங்கமுடியாது.ஏழாவது பதில் தப்பாக இருக்கக்கூடாவே கூடாது. ஆப்ஷனும் கிடையாது. ஆனால் தோற்றால் ஆறுதலாக சன் டிவியின் ஒரு லட்சம் உண்டு.