Tuesday, March 20, 2012

DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்

அப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.

முக்கியமாக இளைஞர்கள் கூட்டம்.

பழைய கர்ணன்
முதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜி!இரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடுத்த பிரம்மாண்ட படம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.

பலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.

இந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)

சுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே
கர்ணன்:  மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு
சுபாங்கி: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
கர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே

இப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up)  DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.

DTS  Karnan
பல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததா?காலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்?பொறுமை?????

எனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.

இந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.

அவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.

இவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.

NTR Voice - K V Srinivasan Exclusive interview

4 comments:

  1. நானும் அது அவர் சொந்தக் குரல் என்றுதான் நினைத்திருந்தேன். கர்ணனின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். குறிப்பாக சீர்காழியின் குரலில் ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. நல்ல பதிவு.:-))))

    ReplyDelete
  2. ஆகா.. அது டப்பிங் வாய்ஸா.. இத்தனை நாளா தெரியாம போச்சே.. நல்ல இன்ஃபர்மேஷன்


    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  3. நன்றி கவிதை காதலன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!