Thursday, July 11, 2013

சார்...தந்தி -காட்டன் சாரி- உடல் தானம்- எம்எஸ்வி


சார்.... தந்தி!


அந்தக் காலத்தில் “சார்..தந்தி!” திகில் கிளப்பும் பன்ச் டயலாக்.திகில்செய்தியைப் படித்துவிட்டு உடைந்துவிடக்கூடாது.”ஸ்டார்ட் இம்மியடியட்லி” என்று செய்தி அதட்டும்.போட்டது போட்டபடி வேஷ்டி பனியனோடு அலறியடித்தபடி ஓட வேண்டும்.சீரியஸ்ஸூக்கு ஸ்டார்ட் இம்மிடியட்லி ஓகே “எக்ஸ்பையர்டுக்கு”?அப்போது freezer box கிடையாதோ?

தந்தி மேல் பாசிட்டீவ் பார்வை 10% தான்.

Sow Rani matured என்று கொடுத்தத் தந்தி சேரும் போது How Rani matured என்று சேர்ந்ததாம்.என் வாழ்க்கையில் நாலு அல்லது ஐந்து தந்திகளாவது கொடுத்திருப்பேன்.(ஆபிஸ் தந்திகள்  போனில் கொடுக்கப்படும் போனோகிராம் கணக்கில் நிறைய உண்டு).”We liked your daughter proceed further" உறவுக்காரர்  வீட்டின் தந்தி ஒன்றை நான் வாங்கி இருக்கிறேன்.தாத்தா இறந்தபோது அப்பாவிற்குக் கொடுத்தத் தந்தி “Father expired start immediately". பாதர் இடத்தில் ஏன் கிராண்ட் பாதர் போடக்கூடாது என்ற குழப்பம் தீர ரொம்ப நாளாயிற்று.

கல்யாண மண்டபத்திற்கு வரும் வாழ்த்துத் தந்திகளை சரியாக இலை போடும் நேரத்திற்குக் கொண்டு கொடுப்பார்கள்.அதன் வாசகம் 'சொர்க்கத்திலிருந்து தனியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிர்வாதங்கள் தம்பதிகள் மேல் பொழியட்டும்”

செல்போன்கள்  மற்றும் அதன் டவர்கள் “டிவிட்.. டிவிட்...டிவிட் ”குருவிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தமாதிரி இந்தக் “கட் கடகட கடகட” தந்தியும் ஜுலை 15 முதல் முடிவுக்கு வருகிறது.கிராமத்து மக்களும் ராணுவத்தில் வேலை செய்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சாவப்போவதை முன்கூட்டியே தெரியபடுத்திவிட்டதால் வேஷ்டி பனியோடு ஓட வேண்டாம்.

காட்டன் புடவை


ஒரு காலத்தில் (சூடிதார் இல்லாத காலம்) கல்லூரி மாணவிகள் மற்றும் ஆபிஸ் கோயிங் பெண்களிடம்  புசு புசு காட்டன் புடவை அணிவது ஒரு பேஷனாக இருந்தது.ஒரு சமயம் டிரெண்டாகவே இருந்தது.பாவாடைத் தாவணிக்கு நல்ல மாற்றாக இருந்தது.

இந்தப் புடவையில் ஆல் இன் ஒன் கிடைத்தது.அதாவது கண்ணியம்+ஸ்டைல்+ரிச்னெஸ்+கவர்ச்சி+பாரதமாத இந்தியத்தனம்+மெயிண்டனென்ஸ்+சிம்பிளிசிட்டி+மிடில்கிளாஸ் மற்றும் பல.

நடையே வித்தியாசமாக மாறிவிடும்.என் அபிமான நடிகை ஸ்ரீப்ரியாக்கு இந்த உடையில் கூடுதலாக ஒரு grace and poise(நேர்த்தி & நிதானம்?) இருக்கும்.


சினிமாவில் ஸ்ரீப்ரியா,சுகாசினி,ஷ்பனா ஆஸ்மி,ஸ்மீதா பாட்டீல்,ஷோபா அர்ச்சனா,அருந்ததி ( மிடில்கிளாஸ் ஆபிஸ்கோயிங் லுக்?) அணிந்து ஒரு டிரெண்டை உருவாக்கினார்கள்.படங்கள் மத்தியதர ரகத்தைச் சேர்ந்த படங்கள்தான் காரணம்.

இப்போது இரண்டுமே காணாமல் போய்விட்டது.
இவங்க மிடில் கிளாசா?








காண்டு:

திரைப்பட இசையில் எந்த இசையை மேற்கோள் காட்டினாலும் தொண்ணூறு சதவீதம் இளையராஜாவின் இசையை மேற்கோள் காட்டுவதால் அதற்கு முன் இருந்த ஜாம்பவான் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் “காண்டு” ஆகிறார்கள்.

“மவனே ..ராஜாதான் இசையே கண்டுபிடிச்சாருன்னு சொல்வானுங்க போல”

எம் எஸ் வி சினிமா பாடல்களில் இருந்த கர்நாடக கடினத்தை மெலிதாக்கி மெல்லிசையாக்கியவர்.பல புதுமைகள் செய்தவர்.இவர் இளையராஜாவுக்கு முன்னோடி.அடுத்தக் கட்டத்திற்கு கடத்தியவர்.ஆனால் அதற்கு அடுத்தக் கட்டத்திற்கு கடத்தவில்லை.

தங்கத்தில் முகம் எடுத்து.... சந்தனத்தில்
சிவாஜி(தெய்வமே.... தெய்வமே...) மற்றும் எம் ஜி யார் (என் அண்ணாவை ஒரு நாளும்) உடல் மொழிக்கு டியூன்களைப் போட்டு போட்டு போட்டு போட்டு இளைத்து போய்விட்டார்.ராஜா ரசிகர்கள் எம் எஸ் வியும் மற்றும் அவரின் முன்னோடிகளையும் கேட்பது  எம் எஸ்விக்கும்  மற்றும் ராஜாவிற்கும் நல்லது.

விரிவான கட்டுரை மற்றொரு நாளில்.


உடல் தானம்

இறந்தப் பிறகு உடலை  பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுப்பதாக சில பிரபலங்களும் மற்றவர்களும் உறுதி அளித்துள்ளார்கள். இந்தத் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.எங்கிருந்து வந்தோமோ அதே இயற்கையுடன் (நெருப்பு அல்லது மண்) கலப்பதுதான் உடல் மற்றும் ஆன்மாவுக்குச் செய்யும் மரியாதை.A decent funeral என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

அனதைப் பிணங்களைக் கூட அதற்குரிய  சகல மரியாதையுடன் புதைப்பது அல்லது எரிப்பதை சமூக நல சங்கம் ஒன்று செய்கிறது.

மருத்துவ கல்லூரியிலும் எவ்வளவு நாள் அதை பாடம் செய்து பாடம் நடத்துவார்கள்.அது கிழிக்கப்பட்டு திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டு மக்கிப்போய். இப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்னும்  இருந்துக்கொண்டே இருக்க வேண்டுமா? இதற்கும் ஆயுள் உண்டு என்று நினைக்கிறேன்.பிறகு (In)decent funeral???

டாக்டர்கள் யாரும் ஏன் உடல் தானம் செய்வதில்லை?

படைத்தானே....

ஒருகாலத்தில் ஒரு கும்பலில் இருந்து தனியாக படைத்தவர்கள் பின்பு அடுத்து வந்த கும்பலில் இருந்து  தனியாகாமல் காலாவதியாகி ஆகிவிடுகிறார்கள்.ஏன்?

எல்லாம் மாறிப்போச்சு!

பாரதிராஜா தன் செல்ல சப்ஜெக்ட்டான கிராமத்துக் கதையை எடுத்து சொதப்பிவிட்டார். நன்றாக எடுத்திருந்தாலும் பழைய கெத்துடன் மீண்டும் படங்களை இயக்கி இருப்பாரா?

படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் சினிமா இயக்குனர்கள்  பலர் பல படங்கள் இயக்கிவிட்டு அப்புறம் காணாமல்போய்விடுகிறார்கள்.காணாமல்
போனாலும் முன்னாள் இயக்குனர் பந்தாவில் வலம் வருகிறார்கள்.

படைப்பாளிகள்(creative artists)  புதுசு புதுசாகப் படைத்துக்கொண்டே இருக்க வேண்டாமா?காணாமல் போவதற்கு முக்கிய காரணம்(முதுமை/உடல் உபாதை என்றால் தவிர்க்கமுடியாதது).தங்களை இதுதான் எங்கள் பிராண்ட் என்று நிருபித்துவிட்டதால் இதிலிருந்து வெளியே வந்து காலத்திற்கேற்றார் போல் சிந்திக்கமாட்டோம்.இதான் காரணமா? அல்லது கற்பனை வற்றிப்போய்விட்டதா?

விடியும் வரை காத்திரு/நூறாவது நாள்/ராசா மகள்/சிவப்பு ரோஜாக்கள்/டிக் டிக் டிக்/ஆண்பாவம்/மலையூர் மம்பட்டியான்/முந்தானை முடிச்சு/உதிரிப்பூக்கள்/
ராஜபார்வை/ஜானி/இதுமாதிரி இன்னும் விலகி வந்து கொடுத்தவர்கள் ஏன் மீண்டும் கொடுக்கவில்லை.

இப்போது இருக்கும் குறும்பட கும்பலின் கற்பனைத் திறம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்.

டெயில் பீஸ்:

ஒகே...ஒகே.... ரெடியா இருந்தாலும் யாருப்பா பைனான்ஸ் பண்ண தயாரா இருக்காங்க இவங்கள நம்பி?