Showing posts with label சினிமா பாடல் விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா பாடல் விமர்சனம். Show all posts

Thursday, December 12, 2013

ரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா

டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக  திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.
வெள்ளை உடையில் மகேந்திரன்
இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை  ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கவிதை  ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

காட்சி நேர்த்தியாக romanticise செய்யப்பட்டு இருக்கிறது.




இந்தக் கவிதைக்கு  யதார்த்தமான  பின்னணி உண்டு.

குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும்  இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய  “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில்  ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான  பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும்  பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.

பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக  மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள்  மீன்களாய் துள்ளி  கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

பாடல் முழுவதும் அவன்  உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

காட்சி......



கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க  உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில்  வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!


முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.



இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி  முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும்  கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.



Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம்-பாடல்கள் ஒரு பார்வை



"நீதானே என் பொன் வசந்தம்" 1982ல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா"படத்தின் ஒரு சூப்பர் மெலடி.இப்படத்தின் பாடல்கள்புது விதமான கிளாசிகல் பரிமாணத்தில் போடப்பட்டு இசை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.தமிழ்த் திரை இசையில் ஒரு மைல் கல்.

அப்போதேல்லாம் காத்திருந்து காத்திருந்து ரேடியோவில்தான்  என்னால் கேட்க முடியும்.



முப்பது வருடம் கழித்து  இதே பாடலின் டைட்டிலில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம்.இசை இளையராஜா.கெளதமிடம் ஏன் ராஜா என்றால்“ "My music was defined by Raja Sir" என்கிறார்." I missed the bus ...I could have joined Raja  much earlier but I was very shy of approaching him... I don"t know why" என்றும் சொல்கிறார்.

வாரணம் ஆயிரம் படத்திலேயே ராஜாவின் பாடல்கள் பாடப்பட்டது.


இளைஞர்களின்  கனவு டைரக்டர் ராஜாவுடன் இணைவது எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதுவும் புடபெஸ்ட் இசைக்கலைஞர்களை வைத்து லண்டன் ஸ்டியோவில் ராஜா சூட்டுடன் லைவ் ரிகார்டிங் என்றதும் இன்னும் எதிர்பார்ப்பு எகிறியது.


கடந்த 12 வருடமாக புதிய தலைமுறை(new generation) இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை.நல்ல கதையோடு வரும் புது  இயக்குனர்களை ஊக்குவிப்பதாக அய்யன்,தாண்டவகோனே,செங்காத்து பூமியிலே,மயிலு,அழகர் மலை போன்ற படங்களும் “ஒன்லைன் ஸ்டோரி யோசிக்கறதுக்கு முன்னமே நீங்கதான் இசைன்னு என் கைல பச்சைக் குத்திக்கிட்டேன்” என்று வரும் இயக்குனர்களுக்கும், இவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்கிற படங்களுக்கும் (விருமாண்டி,பழசி,நான் கடவுள்,பிதாமகன் நந்தலாலா,ஸ்ரீராமஜெயம்,இவன்,பாரதி)இசையமைத்து வந்தார்.

முதன்முதலாக,  இளையதலைமுறையை கையில் வைத்திருக்கும் மற்றும் ஒரு காதல்கதை அதுவும் ராஜாவின் பழைய படத்தின் டைட்டில் மற்றும் கதாநாயகி பெயர் (நித்யா வாசுதேவன்) தொடர்புடைய கதையின் இசைக்கு ராஜா பொறுப்பேற்கிறார் என்பது ஒரு புது விஷயம்.

எதிர்பார்ப்பு மற்றும் எகிறுவது இருந்தாலும் சில லாஜிக்கான கேள்விகள் இருக்கு.

இசைஞானி இதுவரை போட்டது 5500 மேற்பட்ட பாடல்கள். எவ்வளவு வகையான உணர்ச்சிகள் அதிலும் அரைத்தமாவையே அரைத்த உணர்ச்சிகள்.2000-2012 வரையிலுமே கிட்டதட்ட 65 படங்கள்.கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மாதிரி பலவித கலவைகளில் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டு போட்டாகிவிட்டது.கட்டம் கட்டமாக தாண்டி வந்து ஒரு காட்டு காட்டியாகிவிட்டது.

இப்போது மீண்டும் ஒரு காதல்கதை.பழையபாடல்களின் சாயல் இருக்காதா? அதே குறுக்கும் நெடுக்கும் பின்னணியிலும் பலவித இசைக்கருவிகளின் பின்னல்களா? அதே  பல்லவிகளா?சரணங்களா?மிச்ச மீதி ஸ்டாக் இருக்கா?

சாயல் வராமல் இருப்பது உலக மகா கஷ்டம்.அதை நிறைய தவிர்க்கிறார் தன் திறமையால்.ஆனாலும் அங்கங்குத் தலைக்காட்டும்.

பாடல்களுக்கு வருவோம்...

”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்களுக்காக லண்டன் போவதற்கு முன் ஹோம்வொர்க் செய்துவிட்டுதான் போய் இருக்கிறார்.யோசித்தபோது என் கவனத்தில் உதித்தவை:

1.மூன்று பாடல்களில் ராஜா ராஜாவை விட்டு விலகி இசைஅமைத்திருக்கிறார்.ஒரு அன்னியத்தனம் (alien)ஆனாலும் ராஜா மின்னல் அடித்துப் போகிறார்.

2.இது எந்த இசையும் கிடையாது இது உங்கள் இசை என்றபடி இருக்கிறது

4.சிம்பனியை மேக்சிமம் பின்னணியில் தோய்த்துக்கொடுப்பது.

5.துல்லியமான  பளிச் பளிச் சவுண்ட் ரிகார்டிங்.

மற்ற இசை அமைப்பாளர்களின் அடுத்த தலைமுறை பாடல்களாக கடந்த 10-15 வருடங்களாக ஆண் அல்லது பெண் பாடும் பாடல்கள் ஸ்டைல் டச் அல்லது பாப் டச்சோடு வருகிறது.ஆனால் 95% பாடல்கள் ஆத்மா இல்லாமல் பிளாஸ்டிக் உணர்ச்சிகளோடு வந்து பயமுறுத்துகிறது.இசையும் தோதாக இல்லாமல் உறுத்துகிறது.

பின் வரும் ராஜாவின் மெட்டுக்களில் வளைவு நெளிவு மற்றும் ஆத்மா எங்கு வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன்.

மொத்தம் எட்டு பாடல்கள். பாடல்களை பார்க்கலாம்.நா.முத்துக்குமாரின் வரிகள் எனக்குப் பிடித்துவிட்டது.

ராஜாவின் பாடல்களை கேட்கும்போது படிப்படியாக உள்ளே இறங்கி  வாழ்ந்துவிட்டு வெளியே வரவேண்டும்.இசையில் நிறைய புத்திசாலித்தனம் இருப்பதால் அனுபவித்துக் கேட்கவேண்டும்.


முதல் முறை பார்த்த ஞாபகம்:


Hey Goutham!This is new generation  romantic singing...! Have it ! என்கிறது பாடல்கள்.

பாடியவர் சுனிதி செளகான்.என்னை ஆகார்ஷித்து அள்ளிக்கொண்ட பாடல்.மேடம் குரல் அட்டகாசம்.soulful stylish singing! Real stunner from Maestro Raja.

ஒரு விதமான தேவதை பாடல்!பின்னணி இசை விறுவிறு என்று மிளகு குத்தலுடன் திகிலாக போகிறது?காதல் வயப்படுவது மாதிரி உணர்வு.”நீதானே என் பொன் வசந்தம்”  கோரஸ் அழகு சேர்க்கிறது பாட்டிற்க்கு.ஒரே ஒரு நீண்ட சரணம்.முழுமூச்சில் பாடி அசத்துகிறார்.அதுவும் இதற்கு காட்சி எப்படி இருக்கும். இது மேடையில் பாடும் பாடல்?

1980லும் இதே புலம்பல் ஆனால் அடக்கஒடுக்க ஹோம்லி புலம்பல்”தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்).உருமாற்றம்.

எங்கு ஆத்மாவை  (எனக்கு)  வருடுகிறது?

“இதயத்தில் ஏனோஓஓஓஓஓஓஓஓ பாரம்.... விழியினில் ஏனோ ஓஓஓஓஒ ஒரு ஈரம்....”
“ஊடலில் போனது காலங்கள்...தேடலில்.......இல்லையே......அடையாளங்களா”வரிகள் முடிந்து “நீதானே என் பொன் வசந்தம்” கோரஸ் அட்டகாசம்.

பாடல் சடக்கென்று முடிந்துவிடுகிறது.

சற்று முன்பு பார்த்த: பாடியவர் NSK Ramya

சற்று முன்பு பார்த்த ஞாபகம்
காதல் பிரிவு/ஏமாற்றம் அல்லது தொலைந்துபோன காதலை மீட்பது மாதிரி பாடலில் உணர்வு.இதுவும் ஒரு தேவதை பாட்டு(angel singing.) சுனிதியை விட நல்ல உச்சரிப்பு.பழைய சிரிப்பு நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தியாச்சே.

பாடல் சிம்பனியில் பின்னப்பட்டிருக்கிறது.கனவுலகில் மிதக்க வைக்கிறது.போதையான குரல்.படுத்துகிறது.

ஆத்மாவை வருடும் இடங்கள்:

திடுக்கென்று பின்னணி தாளத்துடன்” நெஞ்சம் துடிப்பதும்... மின்னல் அடிப்பதும்”

’தன்னந்தனி காஆஆஆஆஆட்டில் இன்ன்ன்பம் காஆஆஆஆன  வாஆஆஆடா....ஆஆஆ....”

”தொட்டுத் தொட்டுப்பேஏஏஏஏஏஏசும் உந்ந்ந்.......தன் கைஇ இ இ இகள் எங்ங்ங்ங் கேஏஏஏஏஏஏ...” வேறு உலகத்திற்குக் கொண்டுபோய் தொப்பென்று கிழே போடுகிறார்.இரண்டு இடங்களிலும் இசை பின்னிப்பிணைகிறது.

ஷ்ரேயா கோஷால்/சாதன சர்க்கம் இருவரையும் தவிர்த்தது ரொம்ப சந்தோஷம். இந்த பீல் சத்தியமாக வராது.

இரண்டு பாடல்களிலிருந்தும் மீண்டு வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகிறது.

காற்றைக் கொஞ்சம்:
ஆரம்ப ஹம்மிங்கே காற்றோடு பிரயாணம் செய்யும் உணர்வு.தாமரைக்கொடி மற்றும் மலையாள கரையோரம் பாடல்களின் தென்றலும் விசுகிறது.ராஜாவின் அட்டகாசமான இசைக்கோர்வை

ஆத்மா:

(முதல் சரணம்) சாத்தி வைத்த வீட்டில் ..தீபம் ஏற்றி வைக்க நீ வா வா ..மீதி வைத்த .......... பேசி தீர்க்கலாம்.. ” (இரண்டாவது சரணம்)என்னை இன்று மீட்கத்தான் ...உன்னை...”

இரண்டாவது இடைஇசையில் வரும் ஹம்மிங்கும் புல்லாங்குழலும்...ரம்யம்.

என்னோடு வா வா:
இந்தப்பாட்டு யூத்துகளின் செல்லப்பாட்டு ஆகிவிட்டது.கார்திக்கின் மென்மையான ஸ்கூல் பையன் குரலில் ரொம்ப சிநேகமாக இருக்கிறது. ராஜாவிற்கு இதெல்லாம சர்வ சாதாரணம்.”என்னோடு .... வா வா என்று....போகமாட்டேன் “ என்று முடித்தவுடன் புறப்படும் கோரஸ் வயலின்/சிந்த் மற்றும் முதல் சரணம் வரும் வரை இசை சூப்பர்.

ஆத்மா:

”சின்னப் பிள்ளை போல நீயும் ,... என்னைவிட யாரும்.... செல்ல கேட்டுக்கொண்டால்”

சொல்லி அடித்திருக்கிறார் மேஸ்ட்ரோ!

சாய்ந்து ...சாய்ந்து:

இதுவும் சிம்பனியில் தோய்க்கப்பட்ட இனிமையான சிம்பிள் மெலடி.யுவன் பாடுவதை என்னால் ரசிக்க முடியவில்லை.அதனால் மனவாடு பாட்டான ஏதி ஏதி (Yeto Vellipoyindi Manasu)(ஷான் - ரம்யா) கேட்டேன்.அதில்மோகனம் கிளாசிகல் டச் இருக்கிறது.தமிழில் வேறு டச் வருகிறது.இரண்டாவது இடையிசை வெஸ்டர்ன் கிளாசிகள் அட்டகாசம்.


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.


பெண்கள் என்றால்:
என்னப்பா இது ரஹ்மான் பாட்டை ஏன் யுவன் பாடுகிறார் என்று திடுக்கிட செய்கிறது.இது நம்ம ஏரியா இல்லையே.”என்னடி மீனாட்சி”பாட்டின் 2012 வெர்ஷன்??.ரஹ்மானை யுவன் இமிடேட் செய்வதை விடவேண்டும்.எவ்வளவு பாடகர்கள் இருக்கிறார்களே. ஏன் யுவன்?

வானம் மெல்ல:
வித்தியாசமான மிகவும் மென்மையான மெலடி.அற்புதம்.ராஜா பாடுவதால் ஏறகனவே கேட்ட மாதிரி இருக்கு.பின்னணி இசை மாய உலகத்திற்கு கொண்டு போகிறது.Bela Shindeவும் நன்றாக பாடி இருக்கிறார். ஆனால் குரல் சில இடங்களில் கீச்சிடுகிறது.

“தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டை வேறு மெட்டில் பாடுவது மாதிரி ஒரு பீலிங்?


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.

புடிக்கல மாமு:

ராக் அண்ட் ரோல் பாணியில் அமர்க்களமாக ஆரம்பம்.சுரஜ் ஜகன் குரல் அற்புதமாக இருக்கிறது.குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்???இவருடன் கார்த்திக்கும் பாடுகிறார். முதல் பாதி ஒரு மாதிரி மெலடி& ரிதம் அடுத்த பாதி வேறு மாதிரி மெலடி&ரிதம்

டெயில் பீஸ்: எந்த படம் பாட்டு ரிலீஸ் ஆனாலும்  ”எண்பதுகள்  பாடல் பீலிங் மாதிரி வராதுங்க.ராஜா அதை மீட்க வேண்டும்” என்று ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்படி பேசுவது வன்முறை.எப்படி முடியும்? 1980க்கு வயது இன்று 32.அதெல்லாம் ராஜாவின் பொக்கிஷங்கள்.

நான்  பதிலுக்கு 1960 பீலிங்கை மீட்டு எடுக்க வேண்டும் என்கிறேன் ."தன்னிலவு தேன் இறைக்க”(படித்தால் மட்டும் போதுமா) ,”அன்பாலே தேடிய செல்வம் “(தெய்வப்பிறவி),"கலையே என் வாழ்கையின்”(மீண்ட சொர்க்கம்).1960 பீலிங்தான் 1980 மீட்டெடுக்கப்பட்டது.மெலடி எங்கும் கைவிடப்படவில்லை.


Saturday, March 20, 2010

என்.டி.ஆர். டான்ஸ்லு பிசியோதெரபி ஸ்டெப்லு

 டீவியில் சானல் மாற்றிக்கொண்டே வரும்போது  திடீரென புல்லரிக்க வைக்கும்  பழைய தெலுங்கு சினிமா  பாடல்கள் தெலுங்கு சேனல்களில் வரும். என்.டி.ஆரின் ”டான்ஸ்லு” குத்துப் பாடல்கள்.

நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த ஆட்டம் ஆட முடியுமா?கையைத்தான் அப்படியும் இப்படியும் ஆட்டுவார்.ஆனால் ”அண்ணவாரு...!கம்புயூட்டர் ஸ்டெப்லு பாக உந்தி !

இந்த வயதில் என்டிஆருக்கு என்ன எனர்ஜி.பின்னி எடுக்கிறார்.இவருக்கு ஈடு கொடுத்து இவருக்கு ”காட்டி காட்டி” பின்னிஎடுப்பவர் ஸ்ரீதேவி.இந்தப் ” பாஸ்ட்லு”பாடல்களைப் பாட மொத்த காண்ட்ராக்ட் மனவாடு எஸ்.பி.பி &  மனவாடி சுசிலா.

ஆனா சுசிலாகாரு( காரி?)  நம்ம ஊர்ல பாடும்போது ”முத்துமணி மாலை” போன்ற ”ஹோம்லிலு” பாடல்கள்தான் பாடுவார்.அஃதே ஸ்ரீதேவியும்.

இந்த பாடலுகென்று சில சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.முந்தானையைப் பிடித்து இழுப்பது,பின் (பெண்)பக்கத்தை கண்டிப்பாக மினிமம் ஐந்து முறைக்கு மேலாக ஆட்டுவது அல்லது காட்டுவது,பிசியோதரபி ஸ்டெப்ஸ்,பெல்பாட்டம்,தொப்பி,கூலிங்கிளாஸ்,கட்கோட்

கண்டப்பாக பாக்கியராஜின் டிரில் மாஸ்டர் ஸ்டெப்ஸ்.

குரூரமான செக்ஸ்ஸும் (crude sex)உச்சக்கட்ட காமெடியும் பாட்டில் கலந்துக் கொடுக்க இவர்களால்தான் முடியும்.கிட்டத்தட்ட ரெண்டேமுக்கால் எக்ஸ்.

சட்டைக்கும்(சில) பட்டன் போடல.மேல இருக்கிற ஜெர்கின்(கட் கோட்) பட்டனும் போடல. தல ...!ஹேர் ஸ்டைல் ஸ்பிகைக்ஸா?


கிழ் வரும் வீடியோவில் எ ன் டிஆர் குறும்பாக கண்ணடிப்பது எப்படி?

NTR & Sridevi in Kondaveeti Simham

 இந்த வீடியோவில் ஸ்ரீதேவிக்கும் என்டிஆருகும் நடக்கும் காதல் உரையாடலைக் கேளுங்கள்.என்டிஆர் ”அம்மா..தொங்கா” சொல்லும் இடம் ” விண்ணைத்தாண்டி வருவயா” காதலையே மிஞ்சுகிறது.

vetagadu அம்மா..தொங்கா

 "ஏ..பில்ல உந்தி..”

Naa Desam - Challa Pallilo  ஜெயசுதா-என்.டி.ஆர்

ஆனால் இப்போது ஆந்திரா இந்த “ஸ்டெப்லு” கூத்தெல்லாம் கடந்து சாப்ட்வேரில் முன்னேறி எங்கோ போய்விட்டார்கள்.


Wednesday, March 17, 2010

ரீமிக்ஸ் = ரீ செக்ஸ் - ஜக்குபாய் ரசாயன மாற்றங்கள்

சமீபத்தில் “அன்புள்ள மான்விழியே”(குழந்தையும் தெய்வமும்-1965-எம்-ஸ்.விஸ்வநாதன்) என்ற ஒரு அற்புதமான மெலடியை (ரீமிக்ஸ்)”ஜக்குபாய்” என்ற படத்தில் போட்டிருக்கிறார்கள்.

ஒரிஜனல் பாட்டின் பின்னணியில் வரும் வரும் bango drum ரிதம் அருமையாக இருக்கும்.பாட்டின் வரிகளும்,பாடகர்கள் பாடிய விதமும், காட்சி அமைப்பும் படத்தின் ஜீவனை வெளிப்படுத்தும்.

ஆனால் "ஜக்குபாயில்" அதை "ஆஃப் பாயி"லாக்கி, ரீமிக்ஸ் என்று ரிவிட் அடித்து ரேப் செய்துவிட்டார்கள்.

ரீமிக்ஸின் தத்துவம் என்ன?ஒண்ணுமே பிரியல?தல சுத்துது.

காட்சி:(ஒரிஜினலின் வீடியோ கிடைக்கவில்லை)

கு.தெ.படத்தில் லோகேஷன் வைக்கோல் போர் . புடவை அணிந்த ஜமுனாவின் செல்ல சிணுங்கல் முகம்.பக்கத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பேண்டிலிருந்து ஒரு பேனாவை எடுத்து பேப்பரில் “அன்புள்ள மான்விழியே” என "ஆசையில் ஒரு கடிதம்" காதலுடன் எழுத, பாடல் துவங்குகிறது.

அதே வைக்கோல் போர் லோகேஷன்தான் ஒரே காஸ்டியூம்தான் பாடல்முழுவதும்.

ஒரு சிங்கள்எக்ஸ் கட்டித்தழுவல்தான்.அதுவும் பிளாக் அண்ட்ஒயிட்டில்.பாவம் ஜமுனா-ஜெய்சஙகர்!அதிர்ஷடம் இல்லாதவர்கள்.

ரீமிக்ஸில் ஏற்பட்ட 45 வருட(2010-1965=45) ரசாயன மாற்றங்கள்:

ஜெய்சங்கரின் அன்புள்ள மான்விழி(யே)
Kuzhandaiyum Deivamum
ஜக்குபாயின் ”அன்புள்ள மான்விழி(யே)”





ஜக்குபாய லோகஷன் ஹோட்டல்/ஆஸ்திரேலியாவின் பல இடங்கள். ஜட்டி சைசில் உடை அணிந்த நடனமாடும் பெண் (சரத்தின் அன்புள்ள மான்விழி காதலி?) தன் ”பிருஷ்டத்தை” க்ளோசப்பில் செல்லமாக ஆட்டியபடி வருகிறார்.பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம்,விசில்.மேடைக்கு வந்து பறக்கும் முத்தம் கொடுக்கிறார்.அவருக்கு ”காதல் சின்னம்” பொறித்த வாழ்த்து அட்டையை அனுப்பி  சரத்குமார் ஆச்சரியமூட்டுகிறார்.அந்த பெண் தன் மான்விழியால் யார் என்று பார்க்க “அன்புள்ள மான்விழியே” என்றுசுப்ரீம் ஸ்டார் சரத் ட்ரம்ஸில் அடித்தபடி செக்சியாகப் பாடுகிறார்.



இதில் XXX கட்டித் தழுவி ஒரு இண்டு இடுக்கு விடாமல்  நித்தியானந்தா-ரஞ்சிதா லெவலுக்கு கடிதம்எழுதுகிறார் சரத்.


அன்புள்ள மான்விழியே -ரீமிக்ஸ்-வீடியோ


அன்புள்ள மான்விழியே-ஒரிஜினல்-ஆடியோ





Wednesday, January 20, 2010

தமிழ்ப்படம் -”நக்கல்” மெலடி பாட்டு

”தமிழ்ப்படம்” என்று ஒரு படம் 29-1-10 ரிலீஸ் ஆகப்போகிறது. அதில் பாடல்கள் கேட்டேன்.பொங்கல் தினம் டீவியில் இதன் விளம்பர வீடியோக்களையும் (பில்ட் அப்?)பார்த்தேன்.இது தமிழ்ப்படங்களின் புளிச்சுப்போன/வழக்கமான “பில்ட் அப்” பற்றிய நக்கல் படம் என்று தெரிகிறது.அந்த விளம்பர வீடியோக்களும் “நக்கல்” தொனிதான்.ஆவலைத் தூண்டுகிறது.

ஆங்கிலத்தில் spoof என்று சொல்லுவார்கள்.ஹாலிவுட் படங்களை நக்கல் அடித்தும் படங்கள் வந்திருக்கிறது.டீவியிலும் “லொள்ளு சபா” “சூப்பர் டென்” என்று  தமிழ்சினிமா படங்களை நக்கல் அடித்து வரும் நிகழ்ச்சிகள் வருவதுண்டு.நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சி.”தங்கப்பதக்கம்” “நாளை நமதே” பட நக்கல்களை என்னால் மறக்கவே முடியாது.நடிகர் கார்த்திக்கின் “மெளன ராகம்” நக்கலுக்கு, பார்சலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டது லொள்ளுசபா சுவாமிநாதனுக்கு.

ஆனால் இந்த படம் வித்தியாசமான நக்கலாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.சொன்ன மாதிரி பாட்டு அப்படித்தான் இருக்கிறது.

நடக்கப்போகும் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக்கு உண்டான தமிழ் சொற்களில் புனைந்த தமிழ்ப்பட பாட்டின் வார்த்தைகளை வைத்து "ஓ! மஹா சியா”)ஒரு பாட்டுப்போட்டிருக்கிறார்கள்.(நாக்கமுக்க,ஓ ஷகலக்க,ரண்டக்க,டோல்டப்பி,பல்லேலக்கா,
உல்லாஹி,அசிலி பிசிலி,டைலாமோ)அதுவும் சிவரஞ்ஜனிராகத்தில்.ஆனால்
“நக்கலாக”நல்ல மெலடியில் கம்போஸ் செய்யப்பட்டிருக்கிறது.ரசிக்க முடிகிறது.(ஹரிஹரன்+ஸ்வேதா)தலைகிழாக பாடல் பாடுவது மாதிரி இருக்கிறது.அதாவது கேசட்டை ரிவர்ஸ்ஸில் போட்டுக்கேட்பது மாதிரி.(இப்போது ஏது கேசட்?)அடுத்து (ராஜா+ரஹ்மான்+வித்யா+விஜய்+ஹாரிஸ்) என்று கிண்டல் அவியல் படைப்பு இசைக்கோர்ப்புகள்.


அடுத்த கிண்டல் ஒரு பெப்பி செக்ஸி பாட்டு.முதலில் வீணையில் தர்பாரி கானடாவில் ஒரு prelude".பாட்டின் ஆரம்ப வரி ”குத்துவிளக்கு, சத்தியமாய் நான் குத்துவிளக்கு”
”அப்பளமாய் என்னை நொறுக்கு”.ஆடுபவர் நடிகை கஸ்தூரி.இது “ஏக் தோ தீன்” பாட்டின் சாயல் அடிக்கிறது.அடுத்து “பச்ச,மஞ்ச,பிங்க், வொய்ட்,ரோஸ் தமிழன் நான்” என்ற பாட்டு. 2011 குறிவைத்துப் பாடுவது.ஆங்கிலம்,தமிழைக் கடித்துக்குதறிப் பாடுவது.

தலைப்பில் “ப்” இல்லாமல் தமிழ்படம் என்றுதான் விளம்பரம் இருக்கிறது.ஏழு எழுத்து ராசி இல்லாமல் ஆகிவிடுமோ?

இதன் ஹீரோ சிவா அழகான அப்பாவி லுக் எனக்குப் பிடித்திருக்கிறது.ரேடியோ மிர்ச்சியில் இருக்கிறார்.இவர் ஆறாவது அல்லது ஏழாது வரைத்தான் படித்திருக்கிறார்.இவரே இதை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.ஒரு முறை என் கம்பனி விஷயமாக இவரைச் சந்தித்தப்போது பேச்சிலும் இந்த அப்பாவித்தனம் வெளிப்பட்டது.



தமிழ்ப்படத்தை கிண்டல் அடிப்பதால் தயாரிப்பாளர் வீட்டிற்கு “ஆட்டோ” அனுப்ப முடியாது.அனுப்பினால் அனுப்பியவர் வீட்டிற்கே போகும். காரணம் தயாரிப்பாளர் அழகிரி மகன், தயாநிதி அழகிரி.

படிக்க:இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்

Monday, September 7, 2009

கமலின் “உன்னைப்போல் ஒருவன்”-பாடல்

கமல் மகள் ஸ்ருதிஹாசன் “உன்னைப்போல் ஒருவன்” படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.இந்தப் படம் ஹிந்தியில் வெளி வந்த “A Wednes Day" என்ற படத்தின் தமிழாக்கம்(ரீமேக்).இதில்கமல், மோகன்லால் நடித்துள்ளனர்.


கமல் நடித்துள்ளதால் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இசை ஸ்ருதிஹாசன்? தந்தை 8 அடி பாய்ந்தால் ஸ்ருதிகுட்டி 16 அடி பாயுமா?பார்க்கலாம்.





மொத்தம் ஐந்து பாடல்கள்.மனுஷ்ய புத்ரன் பாடல்கள் எழுதி உள்ளார்.எல்லாப் பாடலுமா? தெரியவில்லை.


1.அல்லா ஜானே ...கண்ணீர் அறியா கண்கள் உண்டோ!
கமல் (சோலோ)பாடுகிறார்.மிகச் சோகமான சுப பந்துவராளி ராகத்தில்(”பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுப்போனால் அய்யனை.. நீ காணலாம்...” என்ற பாட்டு இதே ராகம்) பாட்டின் ஆரம்ப இசையும் ,முதல் சரணத்திற்கு முன் வரும் இசை வித்தியாசமாக இனிமையாக இருக்கிறது.ஆல்பத்தில் இந்தபாட்டு ஒன்றில்தான் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு வெறும் சத்தமாக இரைக்காமல் it is simply musical. கமல் நல்ல நடிகர்.நல்ல பாடகரா?பாடும்போது நடிக்கக்கூடாது.சில இடங்களில் சுருதி சேரவில்லை.

2.அல்லா ஜானே -2..கண்ணீர் அறியா கண்கள் உண்டோ!
ஸ்ருதி ஹாசன் பாடியது.இனிமையான குரல்.ஸ்ரேஷ்யா/சாதானசர்க்கம் போல் மழலைத் தட்டவில்லை.தமிங்லிஷ் இல்லை.ஆரமபத்தில் இசை நன்றாக ஆரம்பிக்கப்படுகிறது. பிறகு?சோக மெலடிக்கு எதற்கு இந்த பப்பி லஹரி மியூசிகல் சேர் குமுக்கு இசை.அப்பா பாட்டு போல் வித்தியாசமாக இசைத்திருக்கலாமே! அங்கங்கே ஹிந்தோளம் ஹம்மிங் சோகமாக ஒலிக்கிறது.பாட்டின் நடுவில் ”கடவுள் பாதி” என்று கமல் மாதிரி வசனம் பேசுகிறார் ஸ்ருதி.


3.நிலை வருமா? கமல்-பம்பாய் ஜெயஸ்ரீ
நல்ல மெலடி.மெலிதான இசை.”நிலை வருமா” என்ற வரிகளுடன் பாடலின் நடுவில் கமல் ஜெயஸ்ரீடன்  சேரும் இடம் இனிமை. பின் வரும் ஆலாபனையும் நல்லா இருக்கு.ஆனால் பாட்டின் இனிமையையும் இசையையும் கடைசி வரை நீட்டிக்க முடியவில்லை.அனுபவம் வேண்டும்.முயற்சி செய்தால் வரும். Born with silverspoon என்று அசிரத்தைக் காட்டினால அம்பேல்.


4.வானம் எல்லை இல்லை:
ஸ்ருதி ஹாசன், பிளேசி பாடியது.இதில் ஸ்ருதி ஹாசன் குரல் அற்புதம்.ஆனால் பாட்டு மேற்கத்திய இசையின் கும்மாங்குத்துப் பாட்டு.வழக்கமான பிளேசியின் கடித்து குதறி ”தமிங்கிலீஷ் சாமி” வந்து ஆடி பாடும் பாட்டு.


மேற்கத்திய இசையை கொஞ்சம் புத்திசாலித்தனமாக இசைக்கலாமே!கூர் கட்டி அடிக்கனுமா?சுமார். தாங்க முடியவில்லை.அம்மணி! டெக்னாலாஜியை வைத்துக்கொண்டு சவுண்டு உடக்கூடாது.உட்ட இனிமையா வுடனும்.


5.உன்னைப்போல் ஒருவன்:
இந்தப் பாட்டை 11 பேர் பாடுகிறார்கள். இந்த ஒரு வரியும், மற்றும் கீதையின் சுலோகமான “பரித்ராணய சாதுனாம்...”தான் திருப்பிப் திருப்பி வருகிறது.இதுவும் சுமார். உயிரே இல்லாமல் பாட்டு.மனதைத் தொடுவது மாதிரி மெட்டுப் போட வேண்டாமா?


ரெஹ்மான்,ஹாரிஸ்,யுவன் தாக்கம் (ஒரளவுக்கு) இல்லாமல் இருப்பதற்கு பாராட்டலாம்.அம்மணிக்கு ஒரு யோசனை.பாட்டில் முடிந்த அளவுக்கு டெக்னாலிஜியை வைத்து இனிமைக் கொண்டு வாருங்கள்.தொப் தொப் தட்டுவதில் பிரயோஜனம் இல்லை.


சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.


கடைசியாக ஏர்டெல் சூப்பர் சிங் ஸ்டைலில்................


selected?   rejected?   wait listed?


Wait listed........................!


பாடல் கேட்க:

http://tamil-theater.blogspot.com/2009/09/download-unnai-pol-oruvan.html