Friday, July 29, 2011

கணவன் ரெடியா?

என் வயது* ____ நான் _________ ஜாதியை சேர்ந்தவள். கருப்பு நிறம். நல்ல இடத்தில் வேலை.ஒளிவு மறைவு இல்லாத,சுயசார்ப்பு மற்றும் உலகத்தில் எல்லாவற்றையும் சமமாக மதிப்பவள்.குடும்பம் ,மனித உறவுகளை மிகவும் மதிப்பவள். மேலும் நகைச்சுவை உணர்வும் குழந்தைகளை நேசிக்கும் குணம் உள்ளவள். அடுத்தவர்  உணர்வுகள் பற்றிய புரிதலும் மதிப்பும் என்னிடம் உண்டு.என்னை மதிப்பது, என் குணாதிசயம் அல்லது சுபாவத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும்.

 எனக்கு நண்பர்களையும் அவர்களுடன் பொழுதுபோக்குவது பிடிக்கும்.படம் பார்ப்பதும் வெளியே போய் பொழுதுப்போக்குவதும் பிடித்தமானது. என் சொந்தகாலில் நின்று  சுயமாக சம்பாதிப்பதும் செய்யும் வேலையை நேசிப்பதும் ரொம்ப பிடிக்கும்.நான் நம்புவது “ நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும்”.நான் ஒரு  நல்ல வாழ்க்கை துணைவராக இருந்து  நல்ல மற்றும் கஷ்ட காலத்தில் உறுதுணையாகவும் உந்துதல் சக்தியாகவும் இருப்பேன்.

எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் மேல் உண்டு.

மேற்சொன்ன அனைத்து பண்புகளையும்/மதிப்பீடுகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டு, அன்பும் நட்பும் என் மேல் கொண்டு ,நான் நானாகவே இருக்க விரும்புவதை ஏற்றுக்கொள்ளும் ஒருவரை மணக்க விரும்புகிறேன்.

மேற்கண்ட விளம்பரம்  ஒரு தினசரியில் திருமண விளம்பர பகுதியில் வந்திருந்தது.

இவர் நினைப்பது போல் வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள்!

99% திருமண விளம்பரத்தில் கோத்ரம்,நட்சத்திரம்,ஜாதி,பிரிவு,வயது,
வேலை,உயரம்,சம்பளம்,நிறம் முக்கியமாக கொடுப்பார்கள்.

இவர்  தன் மனசில் உள்ள மற்றவற்றையும் மறைக்காமல்
கொடுத்துள்ளார்.கிட்டத்தட்ட blogger profile.
 
இது போல் ஐடியல் எண்ணங்களை மனதில் இளமை காலத்தில் வைத்திருப்போம்.“நீங்கள் எல்லாம் என்ன” நான் வாழ்ந்துக் காட்டுகிறேன் பார் என்ற ஒரு துடிப்பு இருக்கும்.

திருமணத்திற்குப் பிறகு  வாழ்க்கை அவ்வளவு சுலபமானதா?

பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள விஷயங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தில்  குறுக்கிட்டு உரசக் கூடியவை.தாக்குப்பிடித்தால் சாம்பியன்.

எல்லோரும் ஒரே அலைவரிசையில் இருந்தால் வாழ்க்கையில் சுவராஸ்யம் இருக்குமா?

என் யூகம் & டிஸ்கி:

தான் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இவ்வளவு கொடுத்திருக்கிறாரோ?


  *திருமண வயதுதான்.

  Monday, July 25, 2011

  தல அஜித்து...நாங்கூட்தான் ஆடிக்றேன் மங்காத்தா

  ”ரொம்போ ஷ்டைல்லா தல சூட்டு கோட்டு போட்டுகினு வெள்ளாடு மங்காத்தா விடமாட்டா எங்கத்தான்னு  பொன்னுகளோட குரூப்பா  ஆடிகினே பாட்றாரு”.
  தல இத்கூடத்தான் மங்காத்தா வெள்யாடு போறயா?

  ”அல்லோ பிரதர்ஸ்... சிஸ்டர்ஸ்... மங்காத்தான்ற ஜூது,( சீட்டு)கட்டு வச்சுகினு  ரவுடிங்க அல்லாங்காட்டி பொறுக்கி பசங்க அல்லாங்காட்டி சோமாரிங்கதான் முக்கா வாசி வெள்ளாட்ர கேமு. துட்டு பந்தியம் கட்டுவாங்க.கால்வாசி மாடி வீடுங்கள்ள அல்லாகாட்டி அய்யர் வுடுங்கள்ளா சூதுக்கு பத்தியா புளியாங்கொட்ட,கோலி,மேட்சி பாக்சு, லேபிள் வச்சு வெள்ளாடுங்க கொயிந்திங்க”.

  ”இத்தொட்டு தாம்பரம் -பீச் ட்ரெயினு  ரூட்டு தண்டவாளத்தாண்ட லுங்(கி )கட்டிகினு அத்தொட்டு குந்திக்கினு காதுல பீடி சொருவிகினு  வெள்ளாடனும். இது மெட்ராஸ்ஸாண்ட. ஏன் குந்திக்கிற? எனி மூவ்மெண்டு போலீஸ்காரன் வருவான்.கபால்லுன்னு எந்திரிச்சு ஒட்லாம்.அத்தொட்டு ட்ரெயின் டிராக்காண்ட போலீஸ்காரன் வரமாட்டான்.அத்தொட்டு சைக்கிள் தள்ளிகினு உள்ள வர முடியாது”.

  ”மாம்பலம் தாண்டி  கோடம்பாக்கம் எல்ட்ரிக் ட்ரெயின் பாஸ் ஆவ சொல அல்லாங்காட்டி கோடம்பாக்கம் செத்பட் ரூட் பாஸ் ஆவ சொல பாத்தின்னா நம் பசங்க ஜீட்டா ஆடிகினு இருப்பானுங்க. தண்டவாளத்து ஒட்டி இருக்கிற செவத்த ஒடிச்சி வச்சுருப்போம்”.

  ”கன்னுங்களா... இது இப்பத்தி கத இல்ல. எல்லாம் முட்ஞ்சி போச்சு.ரொம்ப ரேர்ரா வெள்ளாட்றாங்க”.

  ”ரம்மி, மொத்த கட்டு ஆடனும்னா நேரம் ஆகும். சட்புட்ன்னு பாஸ்ட்புட்டு மாதிரி முடியாது.அத்தொட்டு ...த்தா நம்மாளு நாலு பேருக்கு வெள்ளாட தெரியாது.ஆபிசரு கிளப்ல வெளயாடுவாங்க.அத்தொட்டு அதுல அட்த கை பாத்து உள்ள புட்சி  ஆடனும்.இவனுங்க முட்டா கூங்க.உஜார புட்சு ஆட தெரியாது.தெரிஞ்சவன் ரெண்டு பேரு பட்டாபிராம் போய்ட்டானுங்க”.

  ”ரம்மில ஒரு பேஜாரு இன்னா தெரியுமா, ஹண்ட் ஆனாவ(ன்) ஆட்றவன் பக்கத்துல உட்காந்திகினு ” இத எடு அது போடு”ன்னு அட்வைஸ் குடுத்துகினு பேஜார் பன்னுவான்.பெர்சனலா வெள்ளாட உடமாட்டான்.கன்பீஸ் பன்னுவான்”.

  ”அது சரி எங்க் கட்டு பாத்துக்கிறியா?”


  ”ஓவ்வொரு சீட்டு பின்னால பாரின் ஆக்டர் குட்டி ஒன்னு  மார காட்டிகினு போஸ் குடுத்துகினு இருக்கும்.அந்த கட்டுதான் வாங்கினு வருவான் சொம்பு கஜேந்தரன்.பர்மா பஜார்ல கெடைக்கும்.சொம்ம பள்பள்ன்னு இருக்கும்.மேல பாத்திகுனே சர்சர்ன்னு  அத்தினி பேர்க்கும் காடு போடுவான் கன்சன்(கணேசன்)”.

  ”ஜுது பேரு மங்காத்ததான்  ஆனா ஆட்டம் ஸ்டார்ட் ஆவசொல “உள்யா? வெலியா?” கேட்பானுங்க.இதுக்கு உள்ள வெளியேன்னுட்டு ஒரு பேரு இருக்குது. சால்டு கோட்டர்ஸ்ஸாண்ட இத்தான் ஆடுவானுக”.


  ”அது இன்னா மங்காத்தா? பேர நெனைக்கசொல ஒரு ஐடியா வர்து.குயின் பேஸ் கட்டு பாத்தியா.ஆத்தா (அம்மன்) பேஸ் கட்டு மாதிரி இல்ல.பொட்டுவச்சு கீரிடம் வச்சம்னா அசல்லா ஆத்தாதான். போர்ட் டிரஸ்ட் ஆண்ட ஒரு அம்மன் கோவிலு. மொகம் ஒண்டிதான் தெரியும். பஸ்ட் பஸ்ட்ல ஆட்னவன் இத பாத்து  மெர்சலாயிட்டுகிறான். “ஆத்தா... மங்காத்த”ன்னு கும்பிட்டுஆரம்பிச்சிட்டுக்கிறான்.அதுதான் மங்காத்தான்னு ஒட்டிக்கிச்சு”.

  ”ஆனா ரம்மில குயின் எடுத்தா ஒரு கிஸ் கொடுத்துட்டுதான் கட்டுவுள்ள சொருகுவோம்.அங்க ஆத்தா கெடயாது.தொரசாணி குயினுதான்”.

  ”இத்தோட ரூல்ஸ் என்னான்னு தெரியுமா. மொதல்ல துட்டு பெட்டு கட்னம். நானு அஞ்சு ரூபா பார்ட்னர் அஞ்சு ரூபா.மொத்தம் பத்து ரூபா. இத பொதுல வச்சிடனும்”.

  ”கட்ட நல்ல குலுக்கிட்டு பார்ட்னராண்ட ஒரு கார்டு உருவ சொல்லனும். அது மூனு ஆட்டின்னு வை.அத ஓபனா தர்ல போட்டுன்னம். அத்தொட்டு உள்ளவா வெள்யாவான்னு கேட்கனும். வெளியேன்னு கண்டி சொல்றான்னு வை கையாண்ட இருக்கிற கார்டுங்கள ஒன்னு ஒபன்ல, ஒன்னு கவுத்து போட்டுகினே வர்னம்.இப்ப மூனுல ஸ்பேட்,டமண்டு,கிளாவருன்னு ஏதாவது ஒன்னு கண்டி வெளியே விழுந்துச்சுன்னா  ஜுது துட்டு பார்டனருக்கு போய்டும். கவுத்து வச்ச கார்டலேயே போயிட்சுன்னா என்கு வரும்”.

  ”ம்மால...  சில சோமாரிங்க “வை ராஜா வைன்னு” குரல் குடுத்துகினே வெள்ளாடுவாங்க. ஆட்டத்துல் ஒரு டெம்பர் கிடைக்கும்.ஆனா போலீஸ்காரன் மோப்பம் புட்சுகினு வந்துருவான். உஜ்ஜார இருக்கனும்.நாங்க சைலண்டு”.

  ”இதகண்டுகினு மொட்ட பசங்க  சிரெட்டு(சிகரெட்) பாக்கெட்ட சூது வச்சு வெள்ளாட்றானுங்க.அத்தொட்டு துட்டு வச்சுகினு சிங்கமா பொட்டா வெள்ளாட்றானுங்க”.

  ”இப்ப இருக்கிற  இண்டர்னெட் மாதர்சோத் பேமானிங்க ஐஸ்வர்யாவுக்கு ஆண் கொயிந்தயா பொட்ட கொயிந்தயா பொறக்க போவுதுன்னு  சூது கட்டிஇருக்கானுங்கன்னு பேப்பர்ல படிச்சேன்”.

  ”பச்ச கொயிந்தீங்க மேல சூது வச்சு வெள்ளாட்னா ஆத்தா... மங்காத்தா கன்ன புடுங்கிடுவ”..

  Sunday, July 24, 2011

  கவிதை

  சோதனை - தமிழ்மணம் கருவிப்பட்டை இணைந்துள்ளதா

  மொட்டை -கவிதை

  நடு தூக்கத்தில்
  கண் விழித்த குழந்தை
  மொட்டைப் போட்டு
  மீசை வழித்த
  அப்பாவைப் பார்க்கிறது
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  மீண்டும் தூக்கத்தில் போய்
  அப்பாவின்
  காணாமல் போன முடிகளை
  தேடத் தொடங்குகிறது
  தன் மொட்டைத் தலையை
  தடவியபடி

  Wednesday, July 20, 2011

  காணவில்லை - கவிதை

  நடு தூக்கத்தில்
  கண் விழித்த குழந்தை
  மொட்டைப் போட்டு
  மீசை வழித்த
  அப்பாவைப் பார்க்கிறது
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  இது அப்பா இல்லை
  இது அப்பாதான்
  மீண்டும் தூக்கத்தில் போய்
  அப்பாவின்
  காணாமல் போன முடிகளை
  தேடத் தொடங்குகிறது
  தன் மொட்டைத் தலையை
  தடவியபடி

  Monday, July 11, 2011

  சமசீர் கல்வியும் இரண்டு துண்டான பெண்ணும்...

  கல்வி என்பது அறிவை வளர்க்கும் ஒரு கருவி.அதனால்
  சிந்தனை கூடுகிறது.மக்களிடமிருந்து மாக்களை(விலங்குகள்) வேறுபடுத்திக்காட்டுகிறது.கூடவே ஒழுக்கத்தைக் (படிச்சவனா நீ?)கற்றுக்கொள்ளுகிறோம்.சமுதாயத்தின் பல தளங்களில் முட்டி மோதி முன்னேற அல்லது சந்திக்க அல்லது கடத்த அல்லது எதிர்க்க  நமக்கு இந்தக் கல்வி ஆற்றல்கொடுக்கிறது. கூடவே வரும் அனுபவங்களும் கல்வியின்  பங்களிப்புதான்.

  இந்த கல்வி இல்லாதவரை “கைநாட்டு”கேஸ் என்கிறது சமூகம்.

  பெறப்படும்  கல்வியை  அப்படியே “டப்பா” (உரு ஏற்றி)அடித்து மண்டைக்குள் திணித்து  அதை விழாமல் இறுத்திப்பிடித்தபடி  தேர்வு எழுதும் டெஸ்க்கிற்கு சென்று  வாந்தி எடுத்து  வெற்றி  பெற்று வேலைக்குப்போவதுதான் கல்வியின் குறிகோள் ஆகிவிட்டது.

  வெறும் புத்தகக் கல்வி.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா? அதனால்தான் செய்முறை கல்வித் திட்டமும் சில இடங்களில் கற்றுவிக்கப்படுகிறது.சிந்தனையை வளர்க்க  தேர்வு கேள்விகள் டிவிஸ்ட் பண்ணி கேட்கும் வழக்கமும் உண்டு.

  வேலைக்குப்போனால்  “இது பிட் அடிச்சு  டிகிரி வாங்கி இருக்கு”  “ இது டப்பா அடிச்சு டிகிரி வாங்கி இருக்கு” அதான் தடுமாறுது என்கிறார்கள்.கைநாட்டில் கொஞ்சம் உசத்தி அவ்வளவுதான்.

  கொடுக்கப்படும் கல்வியில் பல சீர்கேடுகள் இருப்பதால் அதைக் களைவதற்கு கடந்த வந்த ஆண்டுகளில் பலவித சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது.அதில் முக்கியமான ஒன்றுதான்  லேட்டஸ்ட் சமச்சீர்கல்வி. எல்லோர்க்கும் சமமான பாட திட்டம்.

  இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல. சரி எதைப் பற்றி? அது....

  எந்தக் கல்வியானலும் அது கல்வியின் அடிப்படையான
  அறிவைக்
  கொடுத்து மாணவர்களின் சிந்தனையை தூண்டுகிறதா?வாழ்வின் பல தளங்களில் இதை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா? 

  ஏதோ ஒரளவுக்குதான்.

  நான்காவது வகுப்பில்(தமிழ் மீடியம்) எனக்கு பூகோளம்( geography) எடுத்த ஆசிரியருக்கு  மேஜிக்கும் தெரியும்.அடிக்கடி செய்து காட்டுவார்.

  ஒரு நாள் “இடது கையின் ஆள்காட்டி விரலை துண்ட ஒடிச்சி, ஒடஞ்ச துண்ட தனியா ஆட்டிக்காட்டிட்டு மறுபடியும் ஒட்ட வைச்சுடுவேன்”  சொல்லி அதன்படி செய்துக் காண்பித்தார்.உடையும் போது ஒரு சத்தமும் வரும்.

  டிரிக்கென்று தெரிந்தாலும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அதைப் பார்த்து பரவசமடைந்தோம்.

  அடுத்து அவர் “ இது டிரிக்தான்.உண்மையா பண்ணா முடியாது? ஏன்னு யாருக்காவது தெரியுமா?யோசிச்சுச் சொல்லுங்க”

  47 பேரும் முழித்தோம்.(சரியாக யோசித்து ஒன்றிரண்டு பேர் பயத்தில் சொல்லாமலும் இருந்திருக்கலாம்)

  ”அறிவு கொழுந்துகளா.. நம்ம உடம்புல எதுனா துண்டாச்சு இல்ல அடிப்பட்டதுன்னா உடனே என்ன வரும்?”

  ”ரத்தம் வரும்” முக்கலும் முனகலுமாக குரல் வந்தது.

  “அப்புறம்?”

  பதில் இல்லை.

   ”வலி உயிர் போய் கத்துவேன்ல”

  ”ஆமாங்கயயா”

  ”எனக்கு வந்ததா? யோசீங்கடா தரித்தரம் புடிச்சப் பசங்களா”.

  எல்லோரும் அவரவர் தலையில் நங்கென்றுக் குட்டிக்கொண்டோம்.

  ஏன் சிந்திக்கவில்லை.”பெரிய்ய சைண்டிஸ்டு ...இதெல்லாம் தேவையா?” என்ற நினைப்புதான் எல்லோருக்கும் அப்போது.இரண்டு தரப்பிலும் குற்றம் இருக்கிறது.

  இது மாதிரி நிறைய கேட்பார். தடுமாறுவோம்.அடுத்த வகுப்பு போனவுடன்  இவரை மறந்துவிட்டோம்.அவர் வகுப்பாசிரியராக இருக்கும் வகுப்பில் இது மாதிரி அடிக்கடி பின்னி எடுப்பார்.

  ஒரு பெண்ணை இரண்டுதுண்டாக்கும் மேஜிக்.எங்கே ரத்தம்?
  எட்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியருகே இருந்த மிக ஆழமான பாழடைந்த கிணற்றில்  (தண்ணிர் இல்லை) அந்த ஊரை சார்ந்த ஒருவர் தவறி விழுந்து இறந்து விட்டார். மாடு மேய்க்கும் சிறுவன் சாட்சி.

  அடுத்த வாரம் அதே ஆசிரியர் எங்களுக்கு moral instructions
  வகுப்பு எடுக்க வந்தார்.அடிவயிற்றில் கிலி.

  ”டேய்  போன வாரம் செத்தாரே ஒருத்தரு.அவரு அடிப்பட்டும் சாவல. பாம்பு கடிச்சும் சாவல. எப்படி செத்தார் தெரியுமா?”

  நான்கு பேர்(நானும் ஒருவன்) கைத்தூக்கினார்கள்.நான்கு பேரிடமும் தனித்தனியாக காதில் ரகசியமாக வாங்கிக்கொண்டார்.நாலு பேரும் பதிலும் ஓகே என்றார்.

   நாலில் ஒரு  மாணவன் கையைக் கட்டிக்கொண்ட்டு கத்தி பதில் சொன்னான்:

  “உல்ல விலுவந்தவரு மூச்சு திணறி செத்துட்டாரு.உல்லார மூச்சுப்பிடிக்க காத்துல ஆக்சிசன் இல்ல.பயர் இஞ்சின்காரங்க உல்லார இறங்கம்முன்னே ஒரு விளக்க(lamp) உல்லார காட்னப்போ விளக்கு டப்ன்னு அணைஞ்ச்சிடுச்சு”

  மற்ற மாணவர்களை திட்டு திட்டென்று திட்டித்தீர்த்தார்.தலையில் குட்டிக்கொண்டார்கள்.

  படிப்பு வழியாக சிந்தித்தக்க தலைப்பட்டாலும்  நம் சிந்தனையை மழுங்கடிக்க  நம் பாரம்பரியத்தில் நிறைய விஷயங்கள் உண்டு.

  இப்படியே உயர் வகுப்பு மற்றும்  கல்லூரி முடிந்து வேலைக்குப் (accounts) போன முதல் இரண்டு நாளில் எனக்கு கொடுத்த பல வேலைகளில் திணறி  முட்டி மோதி நானே சிந்தித்து (???) இரண்டு  சின்ன வேலையை நானே கற்றுக்கொண்டேன்.

  1.Bank Reconciliation Statement. இது நாம்  மெயிண்டெயின் செய்யும் வங்கி கணக்கும் வங்கியின் கணக்குத் தொகையும் சரி செய்தல்.திணறியது ஏன்? கல்லூரியில் இதைத் தியரியாக படித்தக்காரணம். செய்முறை கல்வி இல்லை.அப்போது DD  commission, Telegarphic Transfer, OD என்றால் என்னவென்றே தெரியாது.

  2.ஒரு காலத்தில் வீட்டு  மின்சார கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு என்று flat rateஆக கணக்குப்போட்டு கார்டில் பதிக்கும் முறை போய்  slab rate வந்தது. இதை  நான் அரை நாள் ரூம் போட்டு யோசித்து  விடைக் கண்டுப்
  பிடித்தது ரொம்ப ஓவர்.ஏன் திணறினேன்.டிவிஸ்ட் பண்ணிக்கேட்ட மாத்தி யோசிக்கனும்.

  எந்தக் கல்வியானலும் டப்பா அடிக்காதே.யோசி. அந்த
  வயசில யோசிக்கிறதாவது மண்ணாங்கட்டியாவது.ஆசிரியர்கள் தூண்ட வேண்டும்.இங்குதான் concept based learning வருகிறது.

  டெயில் பீஸ்: என் பாட்டி இறந்தபோது என் பெரியப்பாவிற்கு தந்தி கொடுக்க பணித்து, தந்தியில் சொற்கள் குறைவாக இருந்தால் காசு கம்மியாகும் என்று (தன் பெயரில்)அப்பா சொல்லி அனுப்பினார்.

  எல்லோரும் வழக்கமாக கொடுப்பது: MOTHER DIED START IMMEDIATELY.

  நான் கொடுத்தது:  MOTHER DIED COME FAST