Sunday, November 30, 2008

ஹைகூக்கள். ஹைகூக்கள்..ஹைகூக்கள்.

   
All the best       

எக்ஸாம் பார்த்து எழுதுங்க

வாழ்த்தும்

வேன் சிறுவன்

24/7

பாலியில் தொழிலாளி வீட்டில்

காத்திருக்கும் கஸ்டமர்கள்

ஆயுத பூஜை

அண்ணாச்சி Fresh

காய்கறி வாங்கவில்லை

கனக்ட்டிவிட்டி டெளன்

அணணாச்சி கடையில்

Religion no bar

காண்டம் பாக்கெட் பில் போட

Bar Code தேடும் சேல்ஸ் கேர்ள்

பர்தா முஸ்லீம் 

மொட்டை மாடி புறாக்கள்

தாஜ் ஹோட்டலுக்கு

மெளன அனுஷ்டிக்கும்

புறாக்கள்


பதிவர்களே ...எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க

                   சிறுகதை

 எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க......

 

முதல் உலக யுத்தம், இரண்டாம் உலக யுத்தம் இதெல்லாம் உண்மையாக நடந்ததாக ஆதாரங்கள் உள்ளது. CNN/BBCயிலும் நேரலையாக சில நாடுகளின் சண்டைகளை பார்த்துள்ளோம்.அடுத்து நம்ம ஊர் அரசியல்வாதிகள், மாமியார்-மருமகள்  சண்டை மற்றும் WWF வரை பார்த்தாயிற்று. லேட்டஸ்டாக சட்டக்கல்லூரி சண்டை நேரலையாக....

ஆனால் இந்த பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. பார்த்ததாக ஏதாவது வரலாற்று ஆவணங்கள் இருக்கிறதா? டிஸ்கவரி சானலில் கூட எலியின் பிரசவம் காட்டுகிறார்கள் இதை காட்டியதாக தெரியவில்லை.

செப்புடு வித்தைக்காரன் சொல்லுவான் ஆனால் விட மாட்டான் என்ற கர்ண பரம்பரையாக வந்த “பொது அறிவுஎல்லோருக்கும் இருக்கிறது.

இன்னிக்கும் சொல்லியிருப்பதால் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.அந்த பாடம் செய்த பொம்மையில் பாம்பு கீரிப்பிள்ளையின் வயிற்றை  மூன்று முறுக்கு முறுக்கிக்கொண்டு கீரியின் முகத்தை உக்கிரமாக முறைக்க, பதிலுக்கு கீரியும் Rabies நாய் முக பாவத்துடன் பாம்பை முறைத்துக்கொண்டிருந்தது. நிஜமான கீரி, பாம்பு மூடி வைத்திருந்தான். உள்ளே இருக்குமா?

அங்கு  நின்ற பார்வையாளர் வைத்தி யோசிக்க ஆரம்பித்தார்.

இந்த மாதிரி பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை, லேகியம் விற்பது,மோடி வித்தைகள்/செக்ஸ் புக் சேல்ஸ்  எல்லாமே ஒரு மலையாள பிட் படம் ஒடுகிற, ஒரு ஈரத்தில் மக்கிப் போய் மூத்திரம் நாற்றம் அடிக்கிற தியேட்டர் எதிரேதான் நடப்பாதாக ஆணித்தரமாக நம்பினார். 

சண்டை விட்டதாக  ஒரு பேச்சுக்கு  வைத்துக்கொள்வோம்.இந்த மாதிரி கலை நயமான போஸில் சண்டை போடுமா? WWF மாதிரி ஒரு சும்மாவா?.அந்த வட்டத்திற்க்குள் உள்ளேதான் நின்று சண்டை போடுமா? எது ஜெயிக்கும்? மக்கள் யார் கட்சி?

கீரிபிள்ளை கட்சிதான் என்று நம்பினார்.. பாம்பு என்றால் படையும் நடுங்குமே?ஆனால்  பாம்பின் மேல் ஒரு செலக்டிவ் லைக்கிங்தான் மக்களுக்கு. நாகபஞ்சமி,நாகதோஷம், பாம்பு பஞ்சாங்கம்,ராகு,கேது என்று கடவுள் சம்பந்தப்பட்டிருந்து, ஒரு அந்தஸ்து இருந்தாலும், நடுங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

வைத்தி ஊரில் நடந்த சம்பவம்.

பக்தியுடன் பக்தர்கள் பாம்பு புற்றிற்க்கு பல வருடம் பால் வார்க, அது ஒரு நாள் தன் பக்தர்களை பார்த்து அருள் பாலிக்க கம்பூயுட்டர் கர்சர் மாதிரி நாக்கைத் துறுத்திக் கொண்டு ஆவலுடன்  தலை நீட்ட, “ஐய்யோ! நாகராஜா என்று அலறியடித்துக்கொண்டு பால் சொம்பை போட்டுவிட்டு அலறி ஒடினார்கள்.

“நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே பாடி அவர்ஆசிர்வாதம் வாங்க ஆள் இல்லை.

“அல்லாரும்  ஜோரா ஒரு தடவ கைத்தட்டுங்கசெப்பிடு வித்தைக்காரன் சத்தம் போட்டான். கூட்டம் கைத்தட்டியது.

பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை விடப்போகிறானா? ஆர்வமுடன் வைத்தி  கூட்டத்தை விலக்கி முன்  வந்தார். இன்று இந்த காணக்கிடைக்காத காட்சியை பார்த்து விட வேண்டும். கை சொடுக்கெல்லாம் எடுத்து சுறுசுறுப்பானார்.

கிட்ட தட்ட ஒரு மணி நேரம்  தன்னுடைய லேகிய மருந்து மற்றும் வேர்களின் அருமை பெருமைகளைப் பற்றிபேசினான். ஏதோ ஒரு லேகியத்தை காட்டி, மாதத்தில் 25 நாட்க்ள் டூரில் இருக்கும் சேல்ஸ்மேன்கள் சாப்பிட்டுவிட்டு, மீதியிருக்கும் ஐந்து நாளில் ஏதாவது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கூடியிருந்தால், மீதி 25 நாட்கள் மனைவியின் கற்பைப் பற்றி கவலை பட வேண்டாம் என்று சொன்னான்.

செப்பிடு வித்தைக்காரன் ஒடுக்கடித்துக்கொண்டே அவரை  நெருங்கினான். அவன் நாற்றம் குடலைப் பிடிங்கியது.பாம்பு-கீரிப்பிள்ளை சண்டைக்காக தாங்கிக்கொண்டார்.

“இந்த சாரு மனசுல ஏதோ சங்கடம் ரொம்ப நாளா கீது

கூட்டம் அவரை பார்த்தது.. அவர் Mr.Bean போல் அசட்டுப்புன்னகைப் புரிந்து கூட்டத்தைப் பதிலுக்குப்  பார்த்தார்..

“நீ வெளில காட்ட மாட்டீன்ர . உன் மனசுல ஆமான்றது எனக்கு மட்டும் கேக்குது. இந்த கயிர கட்டு. இந்த மைய தலகாணி கிழ வச்சு படு.  இதெல்லாம் வூட்டு வாசல்ல கட்டு. தன லாபம்,ஆயுள் விருத்தி, போஜன ச்வுக்கியம் வந்து கொட்டும். சங்கடம் பூடும்.200 ரூபாய் தட்ல போடு.

200 ரூபாய்யா? மனதிற்க்குள் திகிலடித்தது வைத்திக்கு.

தட்சிணை நேரம் வந்து விட்டது என்று கூட்டம் நழுவ ஆரம்பித்து வைத்தி மட்டும்தான் இருந்தார்..

பேக் செய்து அந்த பொட்டலத்தை அவர் கையில் கொடுத்தான் செப்பிடு வித்தைக்காரன்.

“பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை வுடலயே? அந்த சங்கடம்தான்  என் மனசில இருக்கு” 

பொட்டலத்திற்க்கு எதிர் மரியாதையாகக் கேட்டார்.

“ஏன் வுட்ல தெரியுமா? உனுக்கு கெட்ட நேரம் வரும்னுதான். நீ வாண்டேடு லிஸ்ட்ல இருக்கேன்னு தெரிஞ்சுப்போச்சு. பேஜார் ஆயிடுவ. மிருக தோசம் வரும். உன் கண்டிதான் வுட்ல.

வைத்தி ஈளித்துக்கொண்டே ஒரு பழைய இரண்டு ரூபாய் தாளைப்போட்டார்.

கீரிப்பிள்ளை பாம்பை முறைப்பது போல் உக்கிரமாக முறைத்தான்.

“ரொம்ப சேம் ஆக்கிட்ட என்ன. குட்டிச்சாத்தான் உன்ன புடிச்சுக்கும்.ரத்த வாந்தி, பேதி வரும். கை கால் முறுக்கி கொள்ளும்

இரண்டு ரூபாயை எடுத்து கடாசினான்.

ஆமாம் நீ வுடறேன்னு சொல்லிட்டு......ஒன்னையும் காணோம்

வைத்தி அந்த இரண்டு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டார். மேலும் ஏதும் கொடுக்காமல் அவனேயே முறைத்தார்.

அவன் ஏதோ முணகினான். ஆத்திரமாக மண்டை ஒட்டின் மேல் ஏதோ பொடியை தூவினான். வைத்தி தன் பர்சில் உள்ள  ஆஞ்சுநேயர் படத்தை எடுத்து கண்களில் அவன் முன் ஒற்றிக் கொண்டு ஒரு மாதிரி  தைரியப்படுத்திக்கொண்டு கிளம்பினார்..

போகும் வ்ழியில் லேசாக பயம் தொற்றிக்கொண்டது. மேல் பாக்கெட் ரொம்ப கனத்துப்போய் தொங்கி குட்டிசாத்தான் எட்டிப் பார்பபது போல் இருந்தது. எச்சில் துப்பிப் பார்த்தார். ரத்தம் இல்லை. வயிறும் கலங்கவில்லை. 

இரவு தூக்கம் வர மறுத்தது. ”சங்க்ரன்குட்டிக்கு பொண்ணு வேனும் படம் பார்த்துவிட்டு நேர வீட்டுக்கு வந்திருக்கலாம்.  ஏண்டா அங்க போனோம்?. ஏன் அவன பாத்து தொலச்சோம்? நொந்து போனார். வாழ்க்கைல பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை முக்கியமா? சே...... 

கை கால் முறுக்கிகொள்ளாமல் இருக்க மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு கால்களை அகல விரித்து கைகளை இறுக்கி நீட்டிக்கொண்டார். அவன் உடுக்கடித்து  அந்த கீரியையும் பாம்பயும் அவன் மேல் ஏவிக்கொண்டிருந்த மாதிரி பிரமை..வந்துக்கொண்டேயிருந்தது.அனுமார் படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு, கடைசியாக ஒரு தீர்மானம் எடுத்தார்.

அவனை காலையில் பார்த்து 200 ரூபாய் கொடுத்து எல்லாவற்றையும் எடுத்து விட சொல்லி நிம்மதியாகி விட வேண்டும். பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை  கனவில் கூட போட வேண்டாம்.

இப்படியே யோசித்து..யோசித்து தூக்கம் வந்து தூங்கிப் போனார்.

மறு நாள்  அவன் வீட்டை அடைந்தார். வாசலில் ஒரே கூட்டம். விசாரித்தார்.

“செப்பிடு வித்தகாரன் நைட்டெல்லாம் தூங்கல. மோட்டு வளையை பார்த்துக்கொண்டு ஏதோ பயம் புடிச்ச மாதிரி இருந்தானாம். காலில காகக வலிப்பு வந்து, கை காலெல்லாம் முறுக்கி,வாயில ரத்தம் வந்து இறந்துட்டான்ஒருவர் சொன்னார்.

நேத்து வித்த காட்ட சொல  யாரோ ஒரு ரீஜண்டான் ஆள சொம்ம எங்கப்பா பயம் காட்டிருக்கிறாரு. அந்தாளு நெசம்னு நெனச்சு அனுமார படம் காட்டி ஜெபிச்சு எங்கப்பாவுக்கு வென வச்சுட்டான். அவன் கண்டி ஏங் கைல கெட்சா’  அவன் பையன்  உறுமினான்.

பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை ஆரம்பித்து விட்டதா?

                  முற்றும்

 

 

 

 

Friday, November 28, 2008

மீண்டும் ஒரு காதல் கதை

குரோம்பேட்டை ரயில் நிலையத்தைத் தாண்டி ஜி.எஸ்.டி ரோடைக் கிராஸ் செய்தால் வருவது அல்டாஃப் ஹவுஸ். இங்கிருந்து பள்ளி ஒரு கிலோ மீட்டர். இங்குதான் பன்னீர் செல்வம் லூசுநாராயணன் காலரைக் கொத்தாகப் பிடித்துக்கேட்டான். நாங்கள் ஆறு பேரும் திரும்பி பார்த்தோம். 
பள்ளிக்கு நேரம் ஆகிக்கொண்டிருந்தது.
கமலுக்கும் ரஜினிக்கும் சண்ட வுட்டா யார் ஜெயிப்பாங்க?”
லூசுநாராயணன் முகம் பீதியடைந்தது. வழக்கமாக சிங்கம்-புலி, நாய்-பூனை, கரடி-காண்டாமிருகம் போன்ற மிருகங்களுக்குத்தான் சண்டைவிடுவான். திடீரென்று மனித குலம் தாவியது சற்று அதிர்ச்சியாக இருந்தது.புரியாமல் விழித்தான் “லூசுநாராயணன்.
பன்னிர் செல்வம் யார் மீதோ "காண்டு" வைத்து விட்டான்.
இப்படித்தான் சில சிக்கலான கேள்விகள் கேட்டு ஜாடைமாடையாக சண்டையை ஆரம்பிப்பான் . அன்றைக்கு அவன் மூடின் படி எது ஜெயிக்குமோ அதைத்தான் பதிலாக சொல்ல வேண்டும் .அவனை மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது. அவன் வைத்ததுதான் சட்டம். இந்த மாதிரி நடவடிக்கை எங்களை திகில் படுத்தும். ஏன் என்று   அவனை புரிந்துக்கொள்ள  முடியவில்லை..
ஒரு தடவை உங்க அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் சண்ட வுட்டா யார் ஜெயிப்பாங்க? என்று கேட்டு குமார் மேல் காண்டு வைத்தான். அந்த காண்டு எடுக்க அறுபது நாள் ஆகியது . ஆனால் இன்று யார் மீது பன்னீர் செல்வம் காண்டு வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை.
குருட்டாம்போக்கில் என்று ஆரம்பித்துபன்னீர் செல்வத்தின் முக பாவம் பார்த்து,பயந்து வாயை மூடிக் கொண்டான் “லூசுநாராயணன். “ஒன்னுக்கு போய்ட்டு வந்து சொல்றேண்டாஒரு விரல் காட்டி விசுக்.. விசுக்..என சார்லி சாப்ளின் போல் நடந்து மறைந்தான். காண்டு அவன் மீது இல்லை என்பது மன்னிப்பில் விளங்கியது.
அடுத்துள்ளவர்களிடம் இதே கேள்வியை கேட்டான்.இவர்கள்லூசுநாராயணன் மாதிரி இல்லை. ப.செ.வின் உளவியல் தெரிந்தவர்கள்.ரஜினிஎன்றார்கள்.
அவர்கள் அடிமைப்பட்டதை பெருமிதமாக எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். முறைத்தான்.காண்டு என் மீது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தது.
என்னை பார்த்து வில்லன் செந்தாமரை போல் புன்னைகைத்தான். சற்றுகுழம்பினேன்.கமல் ஜெயிப்பான்என்று கமல் மாதிரியே சொன்னேன். இருவரும் கட்டிப் புரண்டோம்.கண்களில் பூச்சி பறந்தது.எங்கோ தேய்ந்துஎரிந்தது.சட்டைகள் கிழிந்தது.யார் பட்டனோஅறுந்தது. நான் ஜெயிப்பது எனக்கு தெரிய ஆரம்பித்தது. ப.செ.வின் அடிமைகள் கட்சி மாற ரெடியானர்கள்.
லூசுநாராயணன் ஒரு புளிய மரத்தின் பின் மறைந்து கலவரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். யார் கமல் யார் ரஜினி கட்சி என்று பீதியோடு குழம்பிக்கொண்டிருந்தான்.
டேய்.. வைஜெயந்தி வராடா...!சொன்னான் “லூசுநாராயணன்.மின்னல் வேகத்தில் பிடிகளைத் தளர்த்தினோம். சட்டை பேண்டுகளை சரி செய்தோம்.மண் துகள்களை தட்டிக்கொண்டோம். நிறுத்திடலாம்..அப்புறம் பாத்துக்கலாம் .சொன்னேன்.
கரக்ட்ராமகிழ்ச்சியாக பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டான். எல்லோரும் சேர்ந்துக்கொண்டார்கள்.
வைஜெயந்திக்கு மதிப்புக்கொடுத்து உலகப் போரை பாதியில் நிறுத்தும்அளவுக்கு எங்களை வசீகரித்திருந்தாள்.
சனிக்கிழமையானதால் அன் யூனிபார்மில் ரொம்ப சூட்டிகையாக இருந்தாள். சிறு கொத்தாக எடுத்த முடியை சின்னதாக பின்னி நெற்றிக்கு இரு பக்கமும் கொண்டுப்போய் சேர்த்த பக்கப்படிய வாரிய அடர்த்தியான ஒற்றைப் பின்னல். நெற்றியில் சின்ன விபூதி கீற்று. நீண்ட புருவங்கள். தீர்க்கமான நாசி.சொப்பு வாய். செதுக்கினார் போல் கழுத்து.பிஞ்சு மார்பகங்கள். கச்சிதமாக தைக்கப்பட்டு பொருந்தியிருந்த ஸ்கர்ட். பூனை முடி சுழன்ற வாழைத்தண்டு கால்கள். அதற்கு மேல் ஒரு ஸ்டைல் ஷர்ட். நடையில் ஒரு நளினம்.
ஏதோ ஒரு கிளாஸ் டெஸ்ட் பாடத்தை மனப்பாடம் செய்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
அவள் பேசும் ஆங்கிலம் ஒரு மாதிரி கல கலவென்று இருக்கும்.அவள்உச்சிரிப்புக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டி வைதத கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னும் பிடித்துப்போயிற்று.
ஜாதி கோட்டாவில் அவளை கவர்ந்து விடலாம் என்ற பத்ம வாசன்தான் முதலில் அவளுக்காக உருகி பின்னால் பணக்காரி” (பேசும் ஆங்கிலத்தை பார்த்து) என்று எண்ணி முதன் முதலில் ஒரு தலை காதலில் தோல்விஅடைந்து கைவிட்டான்...
அவள் உருவம் மறைய தொடங்க.......
நான் ப.செல்வத்தை கிழே தள்ளிண்டை மீண்டும் தொடங்கியது. இதுவைஜெயந்தி யாரு ஆள், என்ற சண்டை.
வைஜெயந்தி யாரு ஆள்என்ற யுத்த வளையத்தில் நானும் பன்னீர் செல்வமும்தான். மற்றவர்கள் காணாமல் போனார்கள்.
ஒரு வாரம் கழிந்த ஒரு நாள். ஆனால் அன்று எனக்கு கெட்ட நாள்.
வைஜெயந்தி வாங்கியிருந்த புது சைக்கிள் பின்னல் ஒடி வெரி நைஸ் என்று சொல்லி அவளை குஷி படுத்த (cheer leader?)முயல, என் கால் ஸ்போக்ஸில் நுழைந்து, சைக்கிள் ஒரு மாதிரி கச்சக்என்று சத்தம் வந்து பேலன்ஸ் தடுமாறி சைக்கிள் நொடித்து கிழே விழுந்தாள். விழுந்த வேகத்தில்,ஸ்கர்ட் தொடை வரை ஏறி, அவமானத்தில் முகம் சிவந்தாள்.
போடா... இடியட் ....பிக் .. துண்டு பீடி..பிஞ்ச செருப்பு...” மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல் சரமாரியாக வந்தது.பன்னீர் செல்வம் எங்கிருந்தோ ஒடி வந்து அவளை சரி செய்து, சைக்கிளையும் சரி செய்து அவளை உட்கார வைத்து,மேலே சாய்ந்தவாறு பத்திரமாக கொஞ்ச தூரம் தள்ளி கொண்டு கூடவே ஒடி அவளுக்கு பேலன்ஸ் செய்து கொடுத்தான். அவள் மெனி மெனி தாங்க்ஸ்என்று என்னை பார்ததவாறு தூதுப்பினாள்.
பன்னீர் செல்வம் சட்டையின் கைகளை மடித்தவாறு முறைத்தான்.
அவமானத்தில் தொள தொளத்து போய் கண்களில் நீர் முட்டியது. பீட்டரும் லூசுநாராயணனும்  ”டேக் இட் ஈசிடா உமா ஷங்கர் என்றார்கள்..நாளாக நாளாக என்னை விளம்பரத்தில் அலட்சியமாக தூக்கியெறியப்படும் படுசாதாரண அழுக்கு சோப் போலவும், பன்னீர் செல்வத்தை மின்னலடிக்கும் பார் சோப் போல நடத்தி பேசுவதேயில்லை.
இந்த world அழியும் வரையும் பேச மாட்டாயா?’ என்று லூசுநாராயணன் கடைசியாக கட்டன் ரைட்டாக கேட்கச் சொன்னான். அதையும் கேட்டேன். எப்படியாவது அவளை வென்று விட வேண்டும் என்று.
அழகுகாட்டி ஸ்டுப்பிட்என்றாள்.
அவமானத்தில் முகம் சுருங்கி அசட்டுத்தனமாக அவளைப் பார்த்துச்சிரித்தேன் லூசுநாராயணன் காணவில்லை.
தினமும் கனவில் வந்து ““அழகுகாட்டி ஸ்டுப்பிட்என்றாள். வேர்த்து நடு இரவில் எழுந்துக் கொள்வேன். அவள் முகத்தை மறக்க முடியவில்லை.இரண்டு நாள் கழித்து “லூசுநாராயணன் வேறு ஒரு ஐடியா கொடுத்தான். பைசாவில் டாஸ்(toss) போட்டுப் பார்த்து வைஜெயந்தியை யார் எடுத்துக் கொள்வது என்று ஒரு மகாபாரத சூதாட்ட ஐடியாவைச் சொன்னான். கடவுள் பல சோதனைகள் வைத்து கடைசியில்தான் வேண்டியது கொடுப்பார் என்று நம்பினேன்.

பன்னீர் செல்வம் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. இதில் எதோ சூது இருக்கிறது என்று. ஒரு வாரம் வெறுப்பேற்றினான். மான அவமானங்களை விட்டு, இதுதான் லாஸ்ட்டுக்கு லாஸ்ட் என்று சொல்லி  கெஞ்சி கூத்தாடி ஒப்புக்கொள்ள வைத்தேன்.
வைஜெயந்தி வரும் போது 90 டிகிரியில் அவளைப் பார்த்தபடி நின்று டாஸ் போட்டு விட்டுலூசுநாராயணன் பீதி பிடித்து தலைத் தெறிக்க ஒடி மறைந்தான். ”head" விழுந்து பன்னீர் செல்வம் வைஜெயந்தியை எடுத்துக்கொண்டுவிட்டான். லாஸ்ட்டுக்கு லாஸ்டாக
சுக்கல் சுக்கலாக உடைந்து போனேன். ஒரு சின்ன சுக்கல் கூட வைஜெயந்தி கண்ணுக்குப்படாமல், ஏதோ மனப்பாடம் செய்தபடி, ஒரு மண்ணும் தெரியாமல் போய்க்கொண்டிருந்தாள்.
அடுத்த பல மாதங்கள் வாழ்கையில் எல்லாமே கசந்து வழிந்து ஏதோ ஸ்கூல் வருவதும் போவதுமாக இருந்தேன். தாடி கூட வளர்க்க முடியாத பருவம்.
பன்னீர் செல்வம் வாழ்கையில் தினம் தினம் வித வித பூக்கள் பூத்து வசந்த ருதுதான்.
லூசுநாராயணன் ஏதாவது மந்திரம் போட்டு சூனியம் வைக்கலாமா என்று கேட்டபோது மறுத்து விட்டேன்.
வருடங்கள் கடந்து பள்ளி முடிந்து பல பேர் பல திசைகளில் சிதறினோம் .
பன்னீர் செல்வம் கல்லூரியிலும் வைஜெயந்தியை தொடர்வதாக கேள்விப்பட்டேன்.
கல்லூரி படிப்பில் புது நண்பர்கள் வந்து சேர்ந்து அவர்களும் வேலையில் சேரும்போது காணாமல் போனார்கள். திருமணத்தில் சக அலுவலக நண்பர்கள் வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டு போனார்கள். வைஜயந்தி மட்டும் நினைவில் எங்கோ மூலையில் "அழகு" காட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்தாள். 
ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மால் லிப்ட் டில் . நானும் என் எட்டு வயது மகள் சந்தியாவுடன் உள்ளே நுழைய ..........வைஜயந்தி . மைசூர் சில்க் புடவையில் . சற்று பூசினாற் போல்.
"என்ன தெரிகிறதா ?" வைஜயந்தி 
"உன்ன மறக்க முடியுமா?"
"என் ஹஸ்பெண்டு கீழ வெயிட் பண்றாங்க”
லிஃப்ட் கிழே இறங்கியது. பார்த்தேன்.
“ஹஸ்பெண்டு” யாரு? நம்ம லூசு நாராயணன்தான். பழைய சுக்கல் சுக்கலாக உடைந்தது ஞாபகம் வந்தது.செளக்கியமா என்று கேட்டு விட்டு கழட்டிக்கொண்டான்.அவளும் எதுவும் பேசாமல் பின் தொடர்ந்தாள்.அதே graceful walk.
லூசு என்று அவள் முன் கூப்பிட்டுவிடுவேன் என்ற பயமா? மறுபடியும் "toss" போடுவேன் என்ற பயமா? இவளை “toss" எதுவும் போடாமல் எடுத்துக்கொண்டு விட்டானே. ஏன்? ஏதற்கு?எப்படி? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறதா?
தாங்கமுடியவில்லை.
”அப்பா ...வைஜெயந்தி ஆண்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க” சிலிர்த்துக்கொண்டே சொன்னாள்.
இதையும் தாங்கமுடியவில்லை.
முற்றும்