Showing posts with label ராஜா-Hummings. Show all posts
Showing posts with label ராஜா-Hummings. Show all posts

Sunday, October 30, 2011

இளையராஜா - King of Heavenly Hummings-3

இந்தப் பதிவில் மீண்டும் இசைஞானி இளையராஜாவின் ரம்மியமான ஹம்மிங் பற்றிய பார்வை.இதில் 39 இசைத் துண்டுகள் உள்ளது.ப்ளே லிஸ்டை க்ளிக்கினால் பட்டியல் கிடைக்கும்.

ஹம்மிங்-1

ஹம்மிங்-2

மனது வருட ஹம்மிய முகம் தெரிந்த/தெரியாத தேவதைகள்/தேவர்களுக்கு.

ஒவ்வொரு ஹம்மிங்கையும் கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு அழகு! முக்கியமாக full of soul...soul... soul...!

இளையராஜா ஹம்மிங்கை ஒரு fashion designer போல் வடிவமைக்கிறார்.சலித்துப் போன ஒரே மாதிரி பாடல்கள் நம் தமிழ் பட உலகில் தவிர்க்க முடியாது.அதில் முடிந்த அளவு சாயல் அடிக்காதபடி அமைக்கிறார்.

வண்ணமயமான கற்பனைத் திறன் இருப்பதால் நிறைய கலவைகளில்(பெர்மிட்டேஷன் அண்ட் காம்பினேஷன்) கொடுக்கிறார்.இல்லாவிட்டால் காபி அன்ட் பேஸ்ட் ஆகிவிடும்.

குறிப்பு:  மேலே என் பாடல் பற்றிய குறிப்பு வரும். கிழே ஆடியோ துண்டு.

கிழ் வரும் இரண்டு பாடல்களும் ஒரே மாதிரி ரொமாண்டிக் கோரஸ் டூயட். ஆரம்பம் மற்றும் 1.11 பிறகு வரும் ”தனதந்த”வைக் கவனியுங்கள்.வெவ்வேறு மெட்டில் வரும்.ராகங்கள் வேறுபடுகிறது.அதனால் ராஜாவுக்கு இதெல்லாம் சுலபம்.

Humm-3-Vaathiyar Veetu Pillai-89-Oru Pooncholai.mp3

Humm-3-Periya Veetu Pannakkaran-90-Malligaiye.mp3

ஹம்மிங் என்பது இயற்கையில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். காடுகளில் பறவைகளின் கூவல்கள்தான் அடிப்படை.இந்து மத நூல்கள்,பைபிள், குரான் போன்றவைகளில் வானத்திலிருந்து அமானுஷ்ய குரல்கள்(அசிரீரி) தேவதூதர்களுக்கு கட்டளைகள் இட்டதாகப் படித்திருக்கிறோம்.

வானத்து தேவதைகளின் ஆசிர்வாதங்களும் அழுகைகளும் ஹம்மிங் வடிவில் பாடல்களில் கொடுக்கப்படுகிறது.புது பரிமாணம் பெறுகிறது பாடல்கள்.

கிழ் வரும் ஹம்மிங் ஓலத்தில் ஒரு “மாபெரும் சோகம்” வெளிப்படுகிறது.வானத்து தேவதைகள் கசிந்துருகுகின்றன.
Humm-3-Devan Magan-92-Vaanam Thottu Pona.mp3

சில ஹம்மிங்கள் ”பிகர்”கள் கொடுக்கும் கிளுகிளுப்பாகிறது.(சொர்க்கம் மதுவிலே) .
Humm-3-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3

1980/90 ஹம்மிங்குகள் slow motion (வெள்ளை உடை அல்லது சாதா உடை) காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.சின்னப்புறா ஒன்று பாட்டு.
Humm-3-Anbe Sangeetha -79- Chinna Pura Ondru.mp3




இது ஒரு பிரமிக்க வைக்கும் ஹம்மிங்.0.19ல் ஹம்மிங் போன்ற இசையும் மற்றும் கார்த்திக்கின் ஹம்மிங்கும் ஒன்றின் மேல் ஒன்று பின்னப்பட்டு நம்மை சிலிர்க்க வைத்தப்படி அமானுஷ்யமாகக் கடக்கிறது. Awesome maestro!
Humm-3-Azhagi-02-Oliyilae Therivadhu Devadhaya.mp3

“ஏரியிலே”  வெஸ்டர்ன் கிளாசிகல் அமைப்புப்படி ஒரு ஒழுங்குடன் அழகாக இனிமையாக இருக்கிறது.
Humm-3-Karaiyellam Sen-81-EriyileElandhaMaram.mp3

31 வருஷம் ஓடிவிட்டது.மெருகு அழியவில்லை.வெஸ்டர்ன் கிளாசிகல் கலவையில் வந்து அசத்துகிறது.
Humm-3-Nenjathe Killathe-80-UravenumPuthiya.mp3

உற்றுக் கேளுங்கள். கர்நாடாக மெலடியில் ஹம்மு(கொஞ்சு)கிறார்கள்.அதுவும் கடைசி 0.30-0.33 So sweet !(hear the echo when they hum)
Humm-3-Rajakumaran-94-SithakathiPookale.mp3

சம்பிரதாயமான “ஏலேலோ ஐலேசா”வை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்.முத்தம்மாவுக்கு எதிரொலியாக வரும் ஹம்மிங் heavenly.0.26-0.40அருமை.
Humm-3-Kattumarakaran-95-VetriVetri.mp3

ஹம்முவது யாரு? அட நம்ம...................? ஸ்டைலை கவனியுங்கள்.
Humm-3-Kalioonjal-97-Varna Vrindavanam.mp3

ஏய்... நான்சென்ஸ் மீசிக் டைரக்டர்ஸ்! மீசிக்னா அப்ப பறிச்ச ரோஜாப் போல சில்லுன்னு பிரஸ்ஸா இருக்கனும்.கீழ வர பிட்ட லிஸ்ஸன்யார்.
சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு போகும்.0.23 பைபாஸ்ல ஒரு கிடார் ரொமாண்டிக்கா கப்லிங்க் ஆவுது பாரு. கேட்டுட்டு திரும்பி பாக்காத ஓடுங்க! பிச்சுப்புடவன் படுவா!

ஞானி சார் ஸ்டார்ட் மீசிக்...! ஓ மை ஆல் கேர்ள்ஸ்.. ப்ளிஸ் ஹம்ஸ்ஸ!ஜஜம்ஜம்ஜம்....ஜஜம்ஜம்ஜம்.... ஜஜம்ஜம்ஜம்....
கவுண்டர் சொல்வதுபோல் என்னஒரு majestic flow!
Humm-3-Poonthotta Kavalkaran-88-ParamalPaartha.mp3

Humm-3-Mangalam Nerunnu-84-Rithubheda Kalpana.mp3

Humm-3-Ingeyum Oru Gangai-SolaiPushpangale.mp3
Humm-3-VellaiRoja-83-DevaninKovil.mp3


Oh.. Jency where are you(நீ எவ்விட போயி)?நான் பார்க்கும் தமிழக கிராமத்து வயல்களில் “லாலல்லல” இன்னும் ரீங்காரம் இடுகிறது. Stunning Jency!
Humm-3-Puthiyavaarpugal-79-Idhayampoguthey.mp3

Humm-3-Moodram Pirai-82-VaanengumVanna.mp3

Humm-3-Puthiya Raagam-91-Vaadumo Oviam.mp3

முழு பாட்டையும் கேட்டுப்பாருங்கள்.அள்ளிக்கொண்டு போகும் இசை.சித்ராவின் குரலில் என்ன கனிவு/பக்தி.Hats off Chithra!.
Humm-3-Kochu Kochu-00- Sivakaru.mp3

Humm-3-Thaipongal-80-Theerthakaraithanele.mp3

ராஜாவின் “பெல்பாட்டம்” கால குரல்.
Humm-3-ThaiPongal-80-KanMalargalinAlaipithal.mp3
Humm-3-Hey Ram-00-Isaiyil Thodanguthamma.mp3

என்ன ஒரு கர்வமான ஹம்மிங்(எல்லாம் எனக்கேதான்).தாளமும் மிகுந்த வீரியத்துடன் அடிக்கப்படுகிறது.அது ஒரு தனிமொழி பேசுகிறது.
Humm-3-Varusham Pathinaru-89-PazhamudhirCholai.mp3

Humm-3-Sollathudikathu Manasu-88-Yenathu Vizhivazhiyil.mp3

Humm-3-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3

Humm-3-KochuKochu Santo-00-Kodamanjin.mp3

ராஜாவின் மாஸ்டர் பீஸ்
அழகு+ஸ்டைல்+ஆத்மா+குரல்+வரிகள்+மேதமை இவ்வளவும் அடங்கிய ஒரு premium package.

ஹம்மிங் வியூகத்தில் நம்மை சுழலவிட்டு கிறங்கடிக்கிறார். என்ன ஒரு அரேஞ்மெண்ட்!இதில் கவுண்டர் பாயிண்டும் உண்டு. ஒரு சமயத்தில் இரண்டு மெட்டு.
Humm-3-Avatharam-95-Thendral.mp3

Humm-3-Agninatchthiram-88-Rojapoo.mp3

Humm-3-Eththnai Konam83Alaipayuthe Kanna.mp3

Humm-3-En Mana Vaanil-02-Vayasu Vandha Valibanukku.mp3

Humm-3-IdhayaKovil-85-OororamaAathuPakkam.mp3

எல்லா பதிவுகளிலும் வழக்கமாக சொல்வது. இதிலும் சொல்கிறேன். இசைகோர்ப்புக்களில் அசட்டுத்தனம் மற்றும் லூசுத்தனமாக அங்கும் இங்கும் கிழிந்து தொங்கும் அபத்தங்கள் இல்லாமல் நேர்த்தியாக கோர்ப்பது எப்பவுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

Humm-3-Julie Ganapathy-03-Thani Konjam.mp3

Humm-3-Eramana Rojave-91-AthomegaOorvalam.mp3

Humm-3-Thendrale Ennai Thodu-86-KavithaiPaadu.mp3

Humm-3-Bharathi-00-NinnaiCharanadainthen.mp3

Humm-3-Aayiram Vasal Idhayam-Maharani Unai.mp3

அழகான கிராம பாடல் வரிகளும் அதன் எதிரொலி ஹம்மிங்களும் அற்புதம்.
Humm-3-Aathma-93-Velakku Vaippom.mp3

Humm-3-Selvi-85-YaaroYaaro.mp3

Humm-3-Raagangal Maaruvathillai-83-Vaan Meedhiley(new).mp3

Wednesday, February 9, 2011

இளையராஜா- King of Heavenly Hummings-2

மேஸ்ட்ரோ ஹம்மிங்கை பாட்டின் இடைவெளியை வெத்தாக
நிரப்புவது(just filling up) போல் அல்லாமல் கலையாக செய்கிறார்.எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு
ஒழுங்கு அணுகுமுறை (structured approach) வைத்திருக்கிறார்.ஹம்மிங்கிற்கும் நோட்ஸ் உண்டு என்று எண்ணுகிறேன்.

இதை இசைக்கருவியாக பயன்படுத்துகிறார்.ஆச்சரியமான பரிமாணங்கள் கண் முன் விரிகிறது.பல கட்டங்களைத் தாண்டுகிறோம்.

பெண்களுக்கு 33% அல்லாமல் 92% ஹம்மிங்கில் ஒதுக்கீடு.அவர்கள்தான் 92% ஹம்முகிறார்கள். ஆண்கள் ஜாலியாக ஹம்மிங் மழையில் குளித்தபடி டூயட் பாடுகிறார்கள்.ஆண் ஆதிக்க மனோபாவம்.

பாரதி ராஜாவின் பாடல்களில்  வெள்ளை உடை தேவதைகள் வந்தப் பிறகு கோரஸ் ஹம்மிங்களின் ஜனத்தொகை அதிகமாயிற்று.
படம்:”இளமைகாலங்கள்” மோகன் - சசிகலா மற்றும் ”தோழிகள்”

முந்தைய பதிவு-1ல் குறைவானப் பாடல்களைத்தான் பார்க்க முடிந்தது. இதில் நிறைய பாடல்கள்.எடுக்க எடுக்க அலைஅலையாய் வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு பெரிய பிராஜகெட் மாதிரி செய்ய வேண்டி இருக்கிறது.

இளையராஜா ஹம்மிங் நிகர்நிலை பல்கலைக்கழகமே நடத்தலாம். அவ்வளவு ஹம்மிங்!

தெரியாத பாடல்களில் எந்த இடத்தில் ஹம்மிங் வரும் என்று யூகிப்பது கஷ்டம்.கையில் துண்டு வைத்துக்கொண்டு கோழி அமுக்குவது போல் அமுக்க வேண்டி இருக்கிறது.

ஏழுமலையான் மகிமை படத்தில் (பாட்டு:எந்த ஜன்மம் என்ன)முடியப்போகிறது என்று ஆடியோவை மூட யோசிக்கையில் 4.23ல் ஹம்மிங் வருகிறது.

யோசித்துப் பாருங்கள்.கிட்டத்தட்ட (சுமார் கணக்குதான்)5000 பாடல்கள்.இதில் 80/90களில் வழக்கமான ராமராஜன்,முரளி,மோகன்,பாண்டியராஜன்,சுரேஷ் (ரஜனி,கமல் இதில் அடங்குவார்கள்) இத்யாதிகளின்  புளித்தமாவையே புளிக்கவைக்கும் கதைகள் அதில் டூயட்டுகள்,மற்ற பாட்டுக்கள்.ஒரு கையில் ஹார்மோனியமும் மற்றொரு கையால் மூக்கையும் பிடித்துக்கொண்டு
(புளித்த மாவு நெடி) டியூன் போட்டிருப்பாரோ?

முடிந்தவரை சாயல் வராமல் தனித்தன்மையோடு ஹம்மிங்குகளைப் போட்டிருக்கிறார்.காரணம்.இவரிடம் நிறைய  out of box thinking மற்றும் எல்லாவகை இசை ஞானங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

"You  just name it director.... I  create it" என்றபடி போட்டிருக்கிறார் ஞானி ராஜா.

மொத்தம் எடுத்தது 55 ஹம்மிங்.(கைத்தட்டுங்ப்பா!)

             Melody Queen of South India என்கிற ஹம்மிங் ராட்ஷசி

ஹம்மிங்கில் ஜானகிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.சிலம்பாட்டம் ஆடுகிறார்.HATS OFF JANAKIAMMA!அவர் குரலின்  பன்முகத்தன்மை ஒரு காரணம்.2000 வோல்ட்ஸ் கம்பி இழைக் குரல்.குரலில் ஒரு சில்லிப்பு.கவர்ச்சியும் ஹிந்துஸ்தானி டச்சும் கூடுதல் பலம்.

ஹம்மிங்கில் லட்சக்கணக்கான ரசிகர்களை இம்சைப்படுத்தியவர். 

அறிவிப்பு:
மிதக்கும் ஆடியோ பிளேயர்(fileden)தளம் தொழில் நுட்ப
கோளாறு காரணமால்Divshare ஆடியோ பிளேயர் பாதி வைக்க வேண்டியதாய் போயிற்று.
 
சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே -1989
வித்தியாசமாக  டூயட்டில்  ஆண்களின் கோரஸ் ஹம்மிங்.அண்ணிக்கு ஜே? 0.57-1.15 ஹம்மிங்கின் ஊடே செல்லும் இசை அருமை.மென்மையாக ஹம்முகிறார்கள்.
Humm2Annanukku-Solaiilam.mp3
அடுத்து முக்கியமானது ஹம்மிங்குடன் இசைக்கப்படும் மற்ற இசை நாதங்கள்.இதனால் ஹம்மிங்கிற்கு ஒரு களை வருகிறது.புத்திசாலித்தனமும் மிளிர்கிறது.

உதாரணம் சில:நான் என்பது, ஆறு அது,முத்தமிழ் கவியே,ராசாவே உன்ன,காதல் ஓவியம்,புத்தம் புது காலை.இதில் புத்தும் புது காலை பிரமிக்க வைக்கிறது.

புத்தம்புது காலை -அலைகள் ஓய்வதில்லை-1981
இனிமையான இசை நாதங்களுக்கு நடுவே மொட்டு விரியும் ஹம்மிங்.ராஜாவின் மேதைத்தனமான இசை.ஒரு வானவில் வர்ணஜால கற்பனை.மார்கழி மாத பனிகாலை இழைகள்.
ஆறு அது ஆழமில்ல -முதல் வசந்தம்-1990
தாளக்காட்டு ஹம்மிங்கிற்கு எக்ஸ்ட்ரா கிராமியம மணம் கொடுக்கிறது.எனக்கு பிடித்தமான ஒன்று.இதெல்லாம் மறுபடியும் உருவாக்கமுடியுமா.இதெல்லாம் classics ஆகிவிட்டது.
Humm2Aaruathuazha.mp3

முத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988
ஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது. 

அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் -1982
0.20-0.32 தாளமும் ஹம்மிங் செய்கிறது.0.36-0.49ல் கவுண்டர் பாயிண்ட்.
நான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988
முதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா?
 Humm2Nanenpathu.mp3
ராசாவே உன்ன நான் எண்ணித்தான் - தனிக்காட்டுராஜா-1982
தன தம் தம் தம் தம்மெல்லாம் ஹம்மிங்ல சேருமா? இதில் கவுண்டர் பாயிண்ட்0.33-0.52 வருகிறது.(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது).0.16ல் ஹம்மிங்கில் இசை குறுக்கிட்டு அழகு படுத்துகிறது.
Humm2RaasaveThanikati.mp3
பாடல்களில் ஹம்மிங்கின் காம்பினேஷனை மாற்றி அழகுப்படுத்துகிறார்.back to back ஜிராக்ஸ் எடுப்பதில்லை.சிலது ஹம்மிங்கா இசைக் கருவியா என்று தெரியவில்லை.

ஸ்டைலோ ஸ்டைல்
ஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை -1981
என்ன ஒரு ஸ்டைல்! அட்டகாசம்.
Humm2Oru gunguma.mp3


பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981
முன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில்  வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.
Humm2PoonAada.mp3

பூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985
இது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும்  ஹம்மிங்கை  ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)
Humm2Poomalaye Thol.mp3

இளையராஜாவின் சோதனை முயற்சி?
 பொன்னோவியம் கண்டேன் - கழுகு -1981
4.05 நிமிட பாடலில் 1.54 நிமிடம் ஹம்மிங்.1.54 நிமிடங்கள் ஹம்மிங்கயே இசைக்கருவியாக பயன்படுத்தி உள்ளார்.
Humm2PonnoviumKazhugu.mp3
 மதம் சம்பந்தப்பட்ட ஹம்மிங்:
மாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989
சர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(?).
Humm2Marugo.mp3

அல்லா உன் ஆணை -சந்திரலேகா - 1995
இஸ்லாம் சம்பந்தபட்ட அரேபியன் டைப் ஹம்மிங்(?).அட்டகாசம்.
Humm2Allahunanai.mp3
டூயட்டில் கதாநாயகன் பாடல் வரிகளைப் பாடுவதும் அதை கதாநாயகி ஹம் (ஆரம்பம்/நடு/முடிவு)செய்வதும் அந்தக்காலப் பாடல்களில்  பார்க்கலாம். இப்போது  குறைந்துவிட்டது.

ரொம்ப ஆச்சரியமான விஷயம் பாடகி சித்ரா ஹம் செய்யும் பாடல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.காரணம்?

 கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ - 1983
இதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.

Humm2Geetham Sangee.mp3

அருமையான ஒரு குரல் ஹம்மிங்குகள்:
 
Chamber welcomes Ilayaraja
(புது முகம்?)
Humm2Naan Thedum .mp3
காதல் வந்திருச்சு-கல்யாணராமன் -1979  
நல்லவர்கெல்லாம் - தியாகம் -1978
ராஜாவின் இசையில் டிஎம்எஸ் ஹம்மிங் அருமை.சிவாஜி கண்முன் வருகிறார்.எஸ்பிபியையேக் கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இது புதுசு.
Humm2NallavaThiyagam.mp3
 
 ஏதோ நினைவுகள் - அகல் விளக்கு-1979
Humm2EthoNinaivu.mp3
 இளஞ்சோலைப் பூத்ததோ-உனக்காகவே வாழ்கிறேன் - 1986
Humm2Ilanjolai.mp3

மன்றம் வந்த தென்றலுக்கு - மெளனராகம் -1986
Humm2MandramVantha.mp3

அழகே அழகே - ராஜபார்வை - 1981
Humm2Azhake.mp3

பெண்ணும் ஆணும் சேர்ந்த ஹம்மிங்:

தென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு -1985
Humm2ThendralVanthu.mp3

பெண் மானே - நான் சிகப்பு மனிதன் - 1985
Humm2PennMaane.mp3

அழகே உன் முகம் - அந்தப்புரம்(1999)

 Soul-stirring and ever haunting hummings
ஆரோ பாடுன்னு - கதா பரயுன்னு-2010
Humm2Aaro Padunnu .mp3
 காற்றில் எந்தன் கீதம் - ஜானி -1981
(இந்தப் பாடலைப் பற்றிய தனி பதிவே என்னிடம் இருக்கிறது.இந்தப் பாட்டை R&D செய்வதற்குண்டான விஷயம் இருக்கிறது)
(ஜானகி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978

(வாணி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978

தெய்வீக ராகம் -(உல்லாசபறவைகள் -1980)&ஆயிரம் மலர்களே (நிறம் மாறாத பூக்கள் - 1979)
இது மாதிரி  மனதை பிழியும் ஹம்மிங் கடந்த முப்பது வருடத்தில் ஏதாவது இருக்கிறதா?ஹம்மிங்கை அழகாக டிசைன் செய்திருக்கிறார்.

  
இளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979
இதில் 0.07ல் ஹம்மிங்கும்  தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம்  மெலிதான பூங்காற்று  வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்!
Humm2Ilamaiennum.mp3
 

பொன்வானம் பன்னீர் - இன்று நீ நாளை நான் - 1983
Humm2PonvanamPanner.mp3
 
ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992 
இதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம்.
Humm2OruKanamOru.mp3

எங்கே நான் காண்பேன் -  சாதனை - 1986
Humm2EngeNaanKanpen.mp3

ரோஜாவைத் தாலாட்டும் -நினைவெல்லாம் நித்யா-1982

தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991

ரொம்ப ஸ்டைலான ஹம்மிங்குகள்:
இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்-1978
Humm2Intha Minminikku.mp3

ஏ ராசாத்தி- என் உயிர் தோழன் - 1990
Humm2Hey Rasaathi.mp3

ஏதோ மோகம் - கோழிகூவுது -1982
Humm2Ethomogam.mp3

ஹேய் ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் -1984
Humm2Hey I Love.mp3

ஆகாய கங்கை - தர்மயுத்தம் -1979
Humm2Agayagangai.mp3
கிளாசிகல் ஹம்மிங்: 
ராகவனே ரமணா - இளமைகாலங்கள்-1983  
இன்றைக்கு ஏன் இந்த - வைதேகி காத்திருந்தாள் -1984 
சோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு-1979
Humm2SolaiKuyile.mp3


மான் கண்டேன் - ராஜரிஷி-1985
Humm2Mankanden.mp3

 
மாடத்திலே கன்னி - வீரா-1994
இதில் ஆண்கள் ஹம்மிங் புதுசு.சூப்பர். குத்துப்பாட்டில் இது மாதிரி ஹம்மிங் கேட்டதாக ஞாபகம் இல்லை.
Humm2Maadatthile.mp3
நாதவினோதங்கள் - சலங்கை ஒலி -1982
இதில்  எஸ்பிபி சொல்லும் காளிதாசன் எழுதிய  ரகுவம்சத்தில் வரும் ஸ்லோகத்திற்கு ஹம்மிங் ஒரு special effect கொடுக்கிறது.0.40-0.46  எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.
வித்தியாசம்.
humm2Nathavinothangal.mp3



  ஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி-1994
Humm2Ooradangum.mp3

இசைமேடையில் - இளமைகாலங்கள் - 1983
Humm2Isaimedaiyil.mp3

தாம்த தீம்த - பகலில் ஒரு இரவு -1979
Humm2Pagalil-Thamtha.mp3

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்-1987
மடைதிறந்து கூவும் - நிழல்கள்-1981
சங்கத்தில் காணாத கவிதை - ஆட்டோ ராஜா-1982
எள்ளு தாத்தா வெர்ஷன்.புது முயற்சி.

யாரும் விளையாடும் - நாடோடி தென்றல் -1992

Sunday, June 6, 2010

இளையராஜா- King of Heavenly Hummings-1

சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில்  சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின்  பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

இது தேவதைகளின் மொழி.பாடலை  உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித  gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.

முகம் தெரியாத பேர் தெரியாத பாட்டைஅழகுப்படுத்தும் ஹம்மிங் தேவதைகளுக்கு    பூங்கொத்துக்கள்.


ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.
”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

 ”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
Humm_manjalnilavukku.mp3

“ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன்  பெண் ஹம்மிங்  சூப்பர்.

”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
 Humm-EnIniya Pon.mp3

கிடாரைத் தொடர்ந்து  தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து   தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
 Humm-Rathiriyil Poo.mp3

இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து  இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

"பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
 Humm_Poovilvandu.mp3

பாலுவின் ஆரம்ப  மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?



கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

Humm - Neepaartha.mp3

 ”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில்  ஏதோ  பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது.  பிரமிப்பு.

பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

"செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

Humm_SenthaPoovil.mp3
 யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

"காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
 Humm-KalidasanKanna.mp3
ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

 ”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

Humm-Mettimetti.mp3
 அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும்  வித்தியாசமான ஹம்மிங்

"ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
 24Humm_anandthen.mp3


"என்னுள்ளே”-1993-வள்ளி  Heavenly humming 
 Humm-ennulle ennule.mp3

"ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
 Humm_OruRagam1.mp3

வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப  ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில்  ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.
(ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.


”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
 I love you Jency!
Humm-AayiramMalargale.mp3

”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
 Humm-Nan oru pon.mp3

 இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ  மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ”  பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள்  மாறி மாறி  ஹம் செய்வார்கள்.

ஆரம்ப இசையை கவனியுங்கள்  இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
 Humm_KeladiKancom.mp3

எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

 இன்னும் பல அவற்றில் சில
1.தம் தம் தன்னம்
2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
3.பொன்வானம் பன்னீர்
4.எனதுவிழியில்
5.காற்றில் எந்தன் கீதம்

ஓகே... நன்றி தேவதைகளே.. இன்னொரு நாள் சந்திப்போம்.