Friday, May 2, 2014

கர்நாடக இசை(கன்)பியூஷன்/சிம்பிள் சிவலிங்கம்/நிலாசோறு

கர்நாடக இசை என்பது  மரபு மீறாத அதற்குரிய இலக்கணச் சுத்தங்களுடன் பாடக்கூடிய சற்று கடினமான இசை.முக்கால்வாசி புரியாத தெலுங்கு மற்றும் வடமொழியில் புனையப்பட்ட பாடல்கள்.ஜனரஞ்கம் குறைவு.இப்படித்தான் பாட வேண்டும் என்று வரைமுறையோடு அதன் ஆதார ஆத்மாவை கலைக்காமல் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதே சமயத்தில்.........

சங்கீத மும்மூர்த்திகள்
இதை ஜனரஞ்கம்,கலப்பிசை(Fusion)அல்லது மெல்லிசைப்படுத்தி பல வருடங்களாக இளைய தலைமுறைகளால் கொடுக்கப்பட்டு வருகிறது.அதாவது இந்த இசைக்கு பின்னணி அல்லது முன்னணியாக சில சம்பிரதாய வாத்தியங்கள் தம்புரா,மிருதங்கம்,மோர்சிங்,கடம், வயலின்,வீணை,ஜலதரங்கம் உண்டு.அவைகளை நீக்கி(அல்லது குறைத்து) விட்டு கிடார்,ட்ரம்ஸ்,கீபோர்ட்,வயலின்,செல்லோ பின்னணியில் கர்நாடகப்பாடல்கள் வித்தியாசமாக பாடப்பட்டது.கிட்டத்தட்ட சினிமா மெல்லிசைக்கு அருகில் செலுத்தப்பட்டது.

கார்த்திக் ஐயர் லைவ்
இப்படி fusion செய்யப்பட்ட பாடல்கள் வெற்றிப்பெற்றதா?பலரால் ரசிக்கப்பட்டதா? பாமரமக்களிடம் அல்லது இசை புரிந்த மக்களிடம் போய் சேர்ந்ததா?இதற்காகத்தான் இப்படிச் செய்யப்பட்டதா?அல்லது இளவயது துடிப்பு பரிசோதனை முயற்சியா?

பல வருடமாக இந்த முயற்சிகளை கேட்கிறேன்.ரொம்ப வெற்றிபெற்றார் போல் தெரியவில்லை.சில பாடல்கள் ஆத்மா பிசிறாமல் கொடுக்கப்பட்டது.பல பாடல்கள் பின்னணி இசை தூக்கலாக அபத்தமாக இசைக்கப்பட்டு முகம் சுளிக்க வைத்தது.பழமையும் நவீனமும் சேராமல் அசட்டுத்தனமாக இருந்தது.கருவிகளின் சத்தம் தூக்கலாக இருந்தது.சில சமயம் சம்பிரதாயத்தை அசட்டுத்தனமாக மீறுவதுபோல் பட்டது.

சிடிக்கள் கேசட்டுகள் விற்காமல் தேங்கிக்கிடந்தது.நவீன சிற்றுண்டி உணவகங்களிலும் நீண்ட பிரயாண சொகுசு பஸ்களிலும் பயன்படுத்தப்பட்டது.

இப்போது.....

இணைய வளர்ச்சியால் உலக மாற்றத்தால் மீண்டும் இவை தனித்தனி bandகள் பெயரில் அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள்தான் முதன்முதலாக செய்கிறோம் என்று இதைச் செய்கிறார்கள்.செய்துவிட்டு “Fusionலேயே ஒரு வித்தியாசமான Fusion" என்கிறார்கள்.உருவாக்கபவர்கள் நேமாலிஜி/நியூமராலஜி அடிப்படையில் பெயர்களை வித்தியாசமாக வைத்துக்கொள்கிறார்கள்.

இணைய தளங்களில் சுடசுட பரிமாறப்பட்டு நெருங்கிய நண்பர்களால் 'awesome" 'stunning" "nice" beautiful" என்று அப்போதே கமெண்ட் போட்டு புல்லரிக்க
வைக்கிறார்கள்.இப்போது நிறைய ரசிக்கப்படுகிறது.ரசனை மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.கேட்கும்போது இப்போதும்  பழைய உணர்வுகள் வருகிறது.சிலது நன்றாகவும் இருக்கிறது.

சமீபத்தில் கேட்ட சில பாடல்கள்.
 

S.P.JANANIY


தாமரை பூத்த தடாகமடி

_______________________________________________________

சித்திரையில் நிலாசோறு


டிவியில் இந்தப் படம் பார்த்தேன்.ஏனோதானோ என்று நம்பும்படியாக இல்லை.ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த ஆர்.சுந்தர்ராஜன்  இயக்கம். அவர் மகன் அர்ஜீன் சுந்தர்ராஜன்,வசுந்தரா மற்றும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் சாரா.

”ஒரு காலத்தில்” கொடிகட்டிப்பறந்தவர்கள் மீண்டும் கொடிகட்டமுடியாதா? முடியும் ஆனால் கொடிகட்டிய காலத்தில் இருந்த டிராமத்தனத்தை விட்டுவிட்டு இப்போதைய டிரெண்டில் கதையை நகர்த்தவேண்டும்.இதே கதையை கொஞ்சம் சீரியஸ்ஸாக மகேந்திரன்/பாலு டைப்பில் சொல்ல வேண்டும்.யூத்துக்கு அப்பீல் ஆகும்.சுந்தர்ராஜன் தவறிவிட்டார்.நிறைய ரொமாண்டிக் காமெடிகள் கொடுத்தவர்.

அவர் காலத்தில் படம் பார்க்க வந்த குடும்ப மக்கள் இப்போது இல்லை.


சிவலிங்கம்

சமீபத்தில் முதன்முதலாக  பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.மூலவர் சிவலிங்க ரூபம்.லிங்கத்தை ரொம்ப அலங்காரம் செய்து அதன் ஒரிஜனல் உருவம் மாறி ஏதோ பிள்ளையார் பிரமை கண்ணில் தெரிந்தது.என் மனதில் படிந்துவிட்ட  சிவலிங்கம் அலங்காரம் இல்லாத சாதாரண லிங்கம். இதுமாதிரி ரொம்ப ஓவராக அலங்காரம் செய்தல் மனதில் “லிங்க” ரூபம் லிங்க ஆகமாட்டேன் என்கிறது.என் மனதில் என்றும் உள்ள சிம்பிள் சிவலிங்கம்அதுவும் இதுவும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு.


கிழ் இருப்பது மாதிரி சிம்பிளாக அலங்காரம் செய்யலாம்..