புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கும் புத்தகங்களை யாராவது வாங்கிப்பார்த்தால் சற்று குழம்புவார்கள். ஒரே கலந்துக்கட்டியாக இருக்கும்.எல்லா வகை புத்தகங்களும் இருக்கும். அதில் முக்கியமாக மறக்காமல் வாங்குவது மாயஜாலக் கதைகள்,புதிர்க் கதைகள்,நாட்டுப் புற கதைகள்.எல்லாம் “தமிழில்”.
முதலாக இந்தக் கதைகள் என் விருப்பம் சார்ந்து வாங்குவது.அடுத்து நான் படிப்பதைப் பார்த்து என் மகனும் ஈர்க்கப்பட்டுவிட்டான்.என் மனைவியும்.
நன்றி:ஆசிரியர்: எ. சோதி -நன் மொழிப் பதிப்பகம், புதுச்சேரி-605 003.
ஆனால் இதில் சில(புதிர்க்) கதைகளை செவி வழியாக
கேள்விப்பட்டும்,படித்தும்,தொலைக்காட்சியில் பார்த்தும் உள்ளேன்.
புதிர்க் கதைகளில் வரும் சில புதிர்களை விடுவிக்க முடியுமா என்று பாருங்கள்.
1.அரசன் ஊர்வலம் வரும்போது ஒரு நாய் ஒன்று அரசனின் விரலைக் கடித்துக் குதறிவிட்டது.காரணம் அரசனின் பர்சனல் காவல்காரனின் கவனக்குறைவு.
ஆத்திரத்தின் உச்சத்திற்குப்போன அரசன் காவல்காரனைப் பார்த்து” இந்த நாயை நீயே உன் கையால் கொல். இதை நீ எப்படிக்கொல்கிறாயோ அதே முறையில் நான் உன்னையும் கொல்வேன்”.
உக்கிரமாக குரைத்துக்கொண்டே வந்த நாயைக் காவல்காரன் கொன்றான்.ஆனால் அரசனால் அவனைக் கொல்லமுடியவில்லை?தப்பித்துவிட்டான். எப்படி?
(நாம்(பெரும்பாலோர்) இந்த நிலமையில்(வெலவெலப்பில்) இருந்தால் மென்மையாக சாகவேண்டும் என்று நாயை மென்மையாக சாகடிப்போம்)
2. ஒரு பெரியரோஜா பூந்தோட்டத்தில் இளவரசியும் அவள் தோழிகளும் ரோஜாப்பூவை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுகிறார்கள்.அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் முகத்தில் பச்சென்று அடித்து முள் குத்தி எரிச்சலாகிறார்.அவர் as usual கோபத்தில் அவளைப் பார்த்து சாபம் இடுகிறார்.” நீ இந்தப் பெரிய பூந்தோட்டதில் ரோஜாச் செடியாக மாறக் கடவது”
அவளும் as usual அறியாமல் செய்த பிழை,சாபத்தில் டிஸ்கெளண்ட் உண்டா என்கிறாள். அதற்கு “பகலில் மட்டும் ரோஜாச் செடியாக இருப்பாய். இரவில் பழைய வடிவத்தில் இளவரசியாக மாறிவிடுவாய்.இங்கு இருக்கும் இந்தப் பெரிய ரோஜாப் பண்ணையில் உன்னை மட்டும் தோழியர் கண்டுப்பிடித்து வேரோடு தூக்கி எறிந்தால் நீ எப்போதும் இளவரசியாக இருப்பாய்” என்கிறார் முனிவர்.
இளவரசியும் தோழிகளுடன் ரூம் (அந்தப்புரம்?)போட்டு ரோஜாவை முகர்ந்துக்கொண்டே யோசித்து தப்பித்து விடுகிறாள்.எப்படி?
3. அ ஊருக்கும் ஐ ஊருக்கும் இடையில் ஒரு பெரிய பாலம் இருக்கிறது.வெள்ளம் கிராமத்தை அழிக்காமல் இருக்கக் கட்டியது இந்தப் பாலம்.அதன் செலவை இதைக் கடப்பவர்களிடமிருந்து வசூலிக்க ஏற்பாடு.அதற்காக ஒரு காவல்காரன்.யாரும் காசு கொடுக்காமல் பாலத்தை கடக்க முடியாது. முயன்றால் பொளேர் என்று ஒரு அறை அறைந்து “பிச்சிபுடுவேன் படுவா”என்று திருப்பி விரட்டிவிடுவான். யாரும் தப்ப முடியாது.
யாரும் அதைக் கடக்க இருபது நிமிடம் ஆகும்.அதனால் காவல்காரன் பத்து நிமிடத்திறகு ஒரு முறை ரெஸ்ட்எடுத்துவிட்டு அடுத்த பத்த நிமிடம் காவல் காப்பான்.
ஒரு ”ஐ”ஊர் வாலிபன் ”ஆ”ஊர் காதலியை அர்ஜண்டாக காதலிக்க செல்ல வேண்டும். இல்லையேல் லவ் கான்சல்.கடப்பதற்கு கையில் காசு இல்லை.வெகு தூரத்தில் ஆடு ஒன்று வருகிறது.திட்டம் போட்டு கடக்கும்போது மாட்டிக்கொள்கிறான். காவல்காரன் அறைந்து திருப்பி விரட்டி விடுகிறான். “ரொம்ப தாங்கஸ்ன்னா” என்று கடந்துவிடுகிறான்.காவல்காரன் முழிக்கிறான்.
எப்படி?
விடைகள்:
1. நாய் வாலைப் பிடித்து சுழற்றிக் கொல்கிறான்
2.மறு நாள் பகலில் ஒரு ரோஜாவில் மட்டும் பனித்துளி இல்லை.காரணம் பனி பெய்யும் இரவெல்லாம் அவள் இளவரசி. பகலில்தான் ரோஜாவாகி விடுவாள்.அதைப் பிடுங்கி எறிந்தவுடன் அவள் full time இளவரசி ஆகி விடுகிறாள்.
3.காவலன் ஓய்வெடுக்கும் சமயத்தில் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கிறான்.”ஐ” ஊர் வாலிபன். பத்து நிமிடம் ஆனதும் அப்படியே திரும்பி நடந்து தான் “ஆ” ஊரிலிருந்து வருவதாக பாவ்லா காட்டி நடக்க, ஓய்வு முடிந்து காவலன் வெளி வந்து அவனைப் பார்த்ததும் ”காசு கொடுக்காத இவ்வளவு தூரம் நடந்து விட்டியா..திரும்பி ஓடுறா உங்க ஊருக்கு என்று விரட்ட அவன் “ஆ” ஊருக்கே ஜாலியாக ஓடுகிறான்.
.
Showing posts with label புதிர்கள். Show all posts
Showing posts with label புதிர்கள். Show all posts
Saturday, January 22, 2011
Subscribe to:
Posts (Atom)



