Wednesday, March 31, 2010

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக......

கொழு கொழு கன்னமும்,திரட்சியான மார்பும்,அங்கங்கு சதைப்பிடிப்புகளும்,ஓவர் மேக்அப்பும்,கோபுர கொண்டையும் இருந்தால்தான் “நடிகை” எனறு இருந்த காலத்தில் இயற்கையான மூக்குத்தி முக சுருக்கலும்,வெகுளித்தன நமுட்டு சிரிப்பும்,விதவிதமாக வாரியிறைத்த வெட்க புன்னகைகளும்,காட்டன் புடவை உடுத்திய elegant walkக்கும்,
ஹோம்லி கம் மார்டன் லுக்கும்,ஒரு வித குறுகுறு பார்வையும் கொண்டு எல்லோர் மனதையும் அள்ளியவர் நடிகை ஷோபா (1976-80).

  இந்த வசீகரம்தான் எல்லோரையும்  அவரிடம் ஈர்த்தது.
 
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.....


 ஷோபாவைப் பார்த்தால் நடிகை மாதிரி தெரியாது.
  
தெருவில்  சற்று பார்க்க சூட்டிகையான பக்கத்துவீட்டு ஒண்டு குடித்தன (அப்போதைய) பெண். கையில்  A4 பேப்பர் மடித்துக்கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயூட்(????) செல்லும் பெண் ஞாபகம் வரும் எனக்கு எப்போதும்.

இவரின் மிடில்கிளாஸ் பின்னணி கூட காரணமாக இருக்கலாம்.

”அழகில்லாத”சாதாரண அழகி.அச்சு அசல் அப்போதைய தமிழச்சி சாயல்.ஆனால் இவர் சேச்சி. இயற் பெயர் மஹாலஷ்மி.

ஷாலினி எண்டே கூட்டுக்காரி

அப்போது கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்கள் ஷோபாவைப் போல் சிம்பளாக இருந்தால் போதும் என்றும் சொல்லக் கேட்டுருக்கிறேன்.ஷோபாவை பிடிக்காதவர்கள் ,”அய்ய... இது பஸ் ஸ்டாண்ட் கேஸ்ஸூ மாதிரி இருக்கு” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை.......இவர் நடிக்க ரொம்ப சிரமபடவில்லை.

தன்னுடைய இயற்கையான மற்றும் சிம்பிளான முகபாவங்களில் சிம்பிளாக வந்து போனார்.முதன் முதலாக நடிப்பிற்கு வேறொரு பரிமாணம் கொடுத்தார்.ஒரு மாதிரி வசீகரமான நடிப்பு.உடல் மொழியும் அருமை.

இதழை வருடும் பனியின் காற்று.........

மேக்கப் போட்டாலும் அதே பக்கத்து வீட்டுப் பெண்தான்.இதுதான் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்று தந்தது.குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம் என்று சொல்லுவார்கள்.

பூ வாசம் மேடை போடுதம்மா.........


நான்கு மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.மலையாளம்,தமிழ் கொடிக்
கட்டிப்பறந்தார்.தன் 19 வயசிலேயே “ஊர்வசி” அவார்ட் வாங்கியவர்.தேசிய விருது குப்பம்மாவாக நடித்த “பசி” படத்திற்கு கிடைத்தது.அதே 19 வயசிலேயே மரணமும் அடைந்தார்.

டைரக்டர் மகேந்திரனின் முள்ளும் மலரும் ஷோபாவுக்கு மாஸ்டர் பீஸ்.

நல்ல வேளை உயிரோடு இல்லை. இருந்திருந்தால் சினிமா இவரை அரைத்த மாவையே அரைக்க வைத்து அலுத்துப் போய் முடக்கி இருப்பார்கள்.குறைவு ஆனாலும் நிறைவு.

ஓடை தரும் வாடை காற்று வானுலகை.........


இவர் பிரியட்டில் பாலிவுட்டில் சுமிதா பாடீல் என்ற நடிகையும் இதே அடுத்தவீட்டுப் பெண் லுக்குதான்.அவரும் உயிரோடு இல்லை.இப்போதைய நந்திதா தாஸ்ஸூம், ஷோபா போன்ற சிம்பிள் அழகுதான்.இளைய  பருவம் சொர்க்கம்  மலையில் வந்தால்............அவர் நடித்த படங்கள்(தமிழ்):அச்சாணி,பசி,(தேசிய விருது)அழியாத கோலங்கள்,மூடுபனி,முள்ளும் மலரும்,நிழல் நிஜமாகிறது,ஒரு விடுகதை தொடர்கதை,ஏணிப்படிகள்,வெள்ளாடுவேங்கையாகிறது,அகல்விளக்கு,சாமந்திப்பூ,பொன்னகரம்...
இன்னும் சில

பூ வண்ணம் போல நெஞ்சம்.....(அழியாத கோலங்கள்)மற்ற மொழிகள்:(மலையாளம்)ஒர்மகள் மரிக்குமோ, ஷாலினி எண்டே கூட்டுக்காரி...இன்னும் சில(கன்னடம்) கோகிலா,(தெலுங்கு)மனவூரி பாண்டவலு,தாரம் மாரிந்தி இன்னும் சில

கடைசியாக.......

ஷோபாவின் மரணத்திற்கு பிறகு ”லேகாயுடே மரணம் -ஒரு பிளாஷ்பேக்” என்று ஒரு  மலையாள படம் வந்தது.அவரின் ஆட்டோபயாகிராபி இது.கி்ழ் உள்ள வீடியோவில் ஷோபாவின் முக உணர்ச்சிகளை freeze செய்து பாருங்கள்.விதவிதமான உணர்ச்சிகள் ஒவ்வொரு பிரேமிலும்.மனதை அள்ளுகிறார்.

செந்தாழம் பூவில்

ஒவ்வொரு உயிரோட்டமான பிரமேக்கும் பின்னால் இருந்தவர் பாலுமகேந்திரா.இந்த பிரேமில் இருந்த நட்சத்திரம் உயிரில்லாமல் போனதற்கும்  பாலுமகேந்திராதான்  காரணம் என்று சொல்லப்பட்டது.

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக......பாலுவும் அதை மறுத்தார். உண்மை கடைசி வரை தெரியவில்லை.

Friday, March 26, 2010

ஆசையுடன்......

 
இன்று
பதிலுக்கு கையசைத்து
டாடா காட்டுகிறேன்
விமானப் பயணத்தில்
ஜன்னலோர இருக்கையிலிருந்து
அதே ஆசையுடன்


திருப்தியுடன் படிகளில்
இறங்குகிறேன்
இன்று

என்றோ எப்போதோ
மொட்டை மாடியில்
அண்ணாந்துப் பார்த்து
கை அசைத்த
நான்படிக்க:கடைசிப்படியின் அருகே டாஸ்மாக் அல்லது பிரபஞ்சம்

Saturday, March 20, 2010

என்.டி.ஆர். டான்ஸ்லு பிசியோதெரபி ஸ்டெப்லு

 டீவியில் சானல் மாற்றிக்கொண்டே வரும்போது  திடீரென புல்லரிக்க வைக்கும்  பழைய தெலுங்கு சினிமா  பாடல்கள் தெலுங்கு சேனல்களில் வரும். என்.டி.ஆரின் ”டான்ஸ்லு” குத்துப் பாடல்கள்.

நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த ஆட்டம் ஆட முடியுமா?கையைத்தான் அப்படியும் இப்படியும் ஆட்டுவார்.ஆனால் ”அண்ணவாரு...!கம்புயூட்டர் ஸ்டெப்லு பாக உந்தி !

இந்த வயதில் என்டிஆருக்கு என்ன எனர்ஜி.பின்னி எடுக்கிறார்.இவருக்கு ஈடு கொடுத்து இவருக்கு ”காட்டி காட்டி” பின்னிஎடுப்பவர் ஸ்ரீதேவி.இந்தப் ” பாஸ்ட்லு”பாடல்களைப் பாட மொத்த காண்ட்ராக்ட் மனவாடு எஸ்.பி.பி &  மனவாடி சுசிலா.

ஆனா சுசிலாகாரு( காரி?)  நம்ம ஊர்ல பாடும்போது ”முத்துமணி மாலை” போன்ற ”ஹோம்லிலு” பாடல்கள்தான் பாடுவார்.அஃதே ஸ்ரீதேவியும்.

இந்த பாடலுகென்று சில சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.முந்தானையைப் பிடித்து இழுப்பது,பின் (பெண்)பக்கத்தை கண்டிப்பாக மினிமம் ஐந்து முறைக்கு மேலாக ஆட்டுவது அல்லது காட்டுவது,பிசியோதரபி ஸ்டெப்ஸ்,பெல்பாட்டம்,தொப்பி,கூலிங்கிளாஸ்,கட்கோட்

கண்டப்பாக பாக்கியராஜின் டிரில் மாஸ்டர் ஸ்டெப்ஸ்.

குரூரமான செக்ஸ்ஸும் (crude sex)உச்சக்கட்ட காமெடியும் பாட்டில் கலந்துக் கொடுக்க இவர்களால்தான் முடியும்.கிட்டத்தட்ட ரெண்டேமுக்கால் எக்ஸ்.

சட்டைக்கும்(சில) பட்டன் போடல.மேல இருக்கிற ஜெர்கின்(கட் கோட்) பட்டனும் போடல. தல ...!ஹேர் ஸ்டைல் ஸ்பிகைக்ஸா?


கிழ் வரும் வீடியோவில் எ ன் டிஆர் குறும்பாக கண்ணடிப்பது எப்படி?

NTR & Sridevi in Kondaveeti Simham

 இந்த வீடியோவில் ஸ்ரீதேவிக்கும் என்டிஆருகும் நடக்கும் காதல் உரையாடலைக் கேளுங்கள்.என்டிஆர் ”அம்மா..தொங்கா” சொல்லும் இடம் ” விண்ணைத்தாண்டி வருவயா” காதலையே மிஞ்சுகிறது.

vetagadu அம்மா..தொங்கா

 "ஏ..பில்ல உந்தி..”

Naa Desam - Challa Pallilo  ஜெயசுதா-என்.டி.ஆர்

ஆனால் இப்போது ஆந்திரா இந்த “ஸ்டெப்லு” கூத்தெல்லாம் கடந்து சாப்ட்வேரில் முன்னேறி எங்கோ போய்விட்டார்கள்.


Wednesday, March 17, 2010

ரீமிக்ஸ் = ரீ செக்ஸ் - ஜக்குபாய் ரசாயன மாற்றங்கள்

சமீபத்தில் “அன்புள்ள மான்விழியே”(குழந்தையும் தெய்வமும்-1965-எம்-ஸ்.விஸ்வநாதன்) என்ற ஒரு அற்புதமான மெலடியை (ரீமிக்ஸ்)”ஜக்குபாய்” என்ற படத்தில் போட்டிருக்கிறார்கள்.

ஒரிஜனல் பாட்டின் பின்னணியில் வரும் வரும் bango drum ரிதம் அருமையாக இருக்கும்.பாட்டின் வரிகளும்,பாடகர்கள் பாடிய விதமும், காட்சி அமைப்பும் படத்தின் ஜீவனை வெளிப்படுத்தும்.

ஆனால் "ஜக்குபாயில்" அதை "ஆஃப் பாயி"லாக்கி, ரீமிக்ஸ் என்று ரிவிட் அடித்து ரேப் செய்துவிட்டார்கள்.

ரீமிக்ஸின் தத்துவம் என்ன?ஒண்ணுமே பிரியல?தல சுத்துது.

காட்சி:(ஒரிஜினலின் வீடியோ கிடைக்கவில்லை)

கு.தெ.படத்தில் லோகேஷன் வைக்கோல் போர் . புடவை அணிந்த ஜமுனாவின் செல்ல சிணுங்கல் முகம்.பக்கத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பேண்டிலிருந்து ஒரு பேனாவை எடுத்து பேப்பரில் “அன்புள்ள மான்விழியே” என "ஆசையில் ஒரு கடிதம்" காதலுடன் எழுத, பாடல் துவங்குகிறது.

அதே வைக்கோல் போர் லோகேஷன்தான் ஒரே காஸ்டியூம்தான் பாடல்முழுவதும்.

ஒரு சிங்கள்எக்ஸ் கட்டித்தழுவல்தான்.அதுவும் பிளாக் அண்ட்ஒயிட்டில்.பாவம் ஜமுனா-ஜெய்சஙகர்!அதிர்ஷடம் இல்லாதவர்கள்.

ரீமிக்ஸில் ஏற்பட்ட 45 வருட(2010-1965=45) ரசாயன மாற்றங்கள்:

ஜெய்சங்கரின் அன்புள்ள மான்விழி(யே)
Kuzhandaiyum Deivamum
ஜக்குபாயின் ”அன்புள்ள மான்விழி(யே)”

ஜக்குபாய லோகஷன் ஹோட்டல்/ஆஸ்திரேலியாவின் பல இடங்கள். ஜட்டி சைசில் உடை அணிந்த நடனமாடும் பெண் (சரத்தின் அன்புள்ள மான்விழி காதலி?) தன் ”பிருஷ்டத்தை” க்ளோசப்பில் செல்லமாக ஆட்டியபடி வருகிறார்.பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம்,விசில்.மேடைக்கு வந்து பறக்கும் முத்தம் கொடுக்கிறார்.அவருக்கு ”காதல் சின்னம்” பொறித்த வாழ்த்து அட்டையை அனுப்பி  சரத்குமார் ஆச்சரியமூட்டுகிறார்.அந்த பெண் தன் மான்விழியால் யார் என்று பார்க்க “அன்புள்ள மான்விழியே” என்றுசுப்ரீம் ஸ்டார் சரத் ட்ரம்ஸில் அடித்தபடி செக்சியாகப் பாடுகிறார்.இதில் XXX கட்டித் தழுவி ஒரு இண்டு இடுக்கு விடாமல்  நித்தியானந்தா-ரஞ்சிதா லெவலுக்கு கடிதம்எழுதுகிறார் சரத்.


அன்புள்ள மான்விழியே -ரீமிக்ஸ்-வீடியோ


அன்புள்ள மான்விழியே-ஒரிஜினல்-ஆடியோ

Saturday, March 13, 2010

நாலாவது மாடியில் ஆர்த்தி

கரண்டி,பென்சில்,பொம்மை
ரீமோட்,டார்டாய்ஸ் காயில்
டம்ளர்,சாவிக்கொத்து,பவுடர் டப்பா
கட்டை சீப்பு என கையில் கிடைத்த
எல்லாவற்றையும்
கிழே தூக்கிப்போட்டு
ஆவலுடன் பார்க்கிறது
மூன்று வயது ஆர்த்தி
நாலாவது மாடி ஹால்
ஜன்னலில் இருந்து

ஆர்த்தி எதிர்பார்த்தபடி
 
வளைந்தும் உடைந்தும்
திரும்பி வந்துவிடுகின்றன
மீண்டும் நாலாவது மாடிக்கே

ஒன்று மட்டும் வருவேதேயில்லை

அதே ஜன்னல் வழியாகத்தான்
தன்  கண் முன் விழுந்தது
சாவிக் கொத்துபோல் சொத்தென்று

அம்மா

Friday, March 12, 2010

வீடியோ மாரியம்மன் - சிறுகதைகள் -இமயம்

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தென் தமிழக வட்டார வழக்கு இல்லாத “சென்னைத் தமிழ்”வட்டார வழக்குக் கதைகள் நிறைந்த ஒரு கதைத் தொகுப்பைப் படித்தேன்.எழுதியவர் இமயம் என்னும் எழுத்தாளர்.கடலூர்வாசி என்பதால் “சென்னைத் தமிழ்” நெடி அடிக்க கதைகள் புனைந்துள்ளார்.இவரின் சில கதைகளைச் சிறு பத்திரிக்கைகளில் படித்ததுண்டு.

தொகுப்பின் பெயர் “வீடியோ மாரியம்மன்”.மொத்தம் 11 கதைகள்.சிறு பத்திரிக்கைகளிலும் பிரசுரமானதும் ஆகாததுமாக.

இமயம், அச்சு அசலாக வட்டார வழக்கில் அபத்தமான உலகத்தில் அபத்தமான கதை மாந்தர்களை உலவ விட்டு சுவராஸ்யமாக கதைச் சொல்கிறார்.சில கதைகள் ஆழம் அதிகம்.மிகைப் படுத்தல் இல்லை.ஒரு சில கதைகள் நாடகத்தன்மையுடன்.இவரின் கதை மாந்தர்கள் 98% சதவீதம் வறுமை கோட்டுக்கு கிழேதான்.தலித்,மற்றும் உயர் ஜாதி ஏழைகள்,தாழ்த்தப்பட்டவர்கள் என்று கலந்துக்கட்டியாக.அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள்.

சில கதைகளில் அடை அடையாக  தேனீக்கள் போல் கேரக்டர்கள்.

முக்கியமாக கதைகள்,உரையாடல்கள் தெளிவாக இருக்கிறது. அதே சமயம் சில கதைகள்,உரையாடல்கள் ரொம்பவும் நீண்டுபோய் அலுப்புத் தட்டுகிறது.ஒரே விதமான எண்ண ஓட்டங்கள் உணர்ச்சிகள் உள்ள கதை மாந்தர்கள் காரணமாக இருக்குமோ?

இவரது நடையில் எதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது.
எனக்குப் பிடித்தக் கதைகள் :-

நாளை:
வித்தியாசமான கரு.இதில் வரும் செல்லாம்மாளும் சின்னசாமி உடையாரும்,ஆட்டிகுட்டியும்,மாலதியும் மகேந்திரன் படத்தில் வரும் கேரக்டர்கள் போல் இயல்பாக வந்து மனதில் இடம் பிடிக்கிறார்கள்.செல்லாம்மாளும் சின்னசாமி உடையாரும் யதார்த்தமாக உலவுகிறார்கள்.

இதில் வரும் ஒரு வசனம்:

“இப்ப ஊட்டுக்கு ஊடு டி.வி. பொட்டியக் கொண்டாந்து கொடுத்துட்டான்.இப்ப சனங்க அந்தப் பொட்டியில பேசுற மாதிரிதான் பேசுறாங்க.என்னால அப்படிப் பேச முடியாது”

பயணம்:
ரொம்ப நீண்ட பயணம்.கணவன் இல்லாத குடும்பத்தில் மனைவியின் தலையில் விழும் பொறுப்புகள் அதை ஒட்டிய பிரச்சனைகள்.கதை பூராவும் வரும் லோகம்மாளின் உள்ளத்து உணர்ச்சிகள் நம்மை கனக்க வைக்கிறது.

உயிர்நாடி:
உயிருக்கும் மேலாக நேசிக்கும் தன் நிலத்தை கம்பெனிக்கு விட்டு தர மறுக்கும் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை.அப்பா-மகனாக உறவை விளித்துச் சொல்லாமல் இவர்களைகிழவர் -ராமசாமியாக்வே கதை முழுவதும் இவர்களை ஒட்டாமல் உலாவ விடுகிறார் கதைச்சொல்லி.அருமை.யதார்த்தமான நடை.முடிவு நாடகத்தன்மை?

ஊர்வம்பு:
சாதாரண ஒரு பஸ் சம்பவத்தை உணர்வுபூர்வமாக கொண்டுவந்து கண் முன் ந்நிறுத்துகிறார்.

நல்லசாவு:
அபத்தமான ஊர்.அபத்தமான சம்பவம்.அபத்தமான மனிதர்கள். சுவையாக மிகைப்படுத்தாமல சொல்கிறார்.டிராமடிக் முடிவு எதற்கு?

சத்தியக்கட்டு: இதில் வரும் ஒரு பெண்ணின் மரணம் மனதை என்னோவோ செய்கிறது.அருமையான கதை கரு.ஆனால் பெரிய கதை.சுருக்கலாமோ?முதலில் படித்திருந்தால் ஒட்டி இருக்குமோ?

Wednesday, March 10, 2010

இளையராஜா- மயக்கும் புல்லாங்குழல்

இசைஞானி இளையராஜா,இந்த ஒண்ணரை அல்லது ரெண்டு அடி புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் காற்றுத்துளைகளின் வழியாக மயக்கும் இசைத் துளிகளை தன் பாடல்களில் விதவிதமாக வழிய விடுகிறார் .

மேஸ்ட்ரோவின் இசையில் எப்போதுமே “classical touch" & "classic" இருக்கும்.No artificial flavour.No additives,No preservatives.


மேஸ்ட்ரோ தவிர மற்றவர் 95% பாடல்களில் புல்லாங்குழல் நேரடியாக வாசிக்கப்பட்டு பாடல் அமைந்திருக்கும்.அதாவது மேஸ்ட்ரோ மாதிரி பாடல்களின் குறுக்கும் நெடுக்குமாக புல்லாங்குழல் இசைக்கப்பட்டு ஒப்பனைச் செய்யப்பட்டிருக்காது. சின்ன கண்ணன் அழைக்கிறான் -1977 - கவிக்குயில்

ஆரம்பத்தில் ரீதகெளள ராக நாதம் இனிமை.இதில் நேரடியாக பாடல் முழுவதும் வாசிக்கப்பட்டிருக்கும்.அதிக ஒப்பனைகள் கிடையாது.ஆனால் நாதங்கள் இனிமை.

பொன்மானே கோபம் - 1985 -ஒரு கைதியின் டைரி

”சின்னகண்ணன்” புல்லாங்குழல் இதில் பார்ட்டைம் தான். ”பொன்மானே””கோபம்” “ஏனோ” என்ற வரிகளுக்கு சுட்டித்தனமாக ரெஸ்பான்ஸ் அளித்துவிட்டு மறையும்.உமா ரமணன் கடைசிப் பல்லவியில் இதன் வேலையைப் பறித்துக்கொள்கிறார்.(பொன்மானே!கோபம் எங்கே?)

ராஜாபார்வை வயலின் BGM  - 1981

மெய்சிலிர்க்கும் ஆரம்பம். 0.57ல் வயலினோடு தபலா அழகாக சேர்ந்துக்கொள்ளும்.1.09ல் ஒரு புல்லாங்குழல் மொட்டவிழ்ந்து மலரும்.1.16ல் இன்னொரு புல்லாங்குழல் மலரும்.மெய்சிலிர்க்கும்.

காதல் மயக்கம்  - 1984 - புதுமைப் பெண்

மிகவும் காதல்படுத்தப்பட்ட பாட்டு.இதில் 4.14 - 4.25 புல்லாங்குழல் கானத்தில் கண்ணாமூச்சி விளையாடும்.

தாலாட்டும் பூங்காற்று -1991 - கோபுரவாசலிலே


மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ் புல்லாங்குழல் புல்லரிப்புகள்.

Thalattum poongatru

ஜானகியின் ஹம்மிங் முடிந்து ஜிகு ஜிகு புல்லாங்குழலின் குஷிதான்.

ஹெட் போனில் கேட்கவேண்டும்.”நள்ளிரவில் நான் கண் விழிக்க” இடது காதில் மென்மையான வருடல். “உன் நினைவில் மெய் சிலிர்க்க” வலது காதில் மென்மையான வருடல். வலது இடது புல்லாங்குழலின் ஸ்வரம் மாறும்.இது மாதிரி இரண்டு தடவை.

“எப்பொழுதும் சொப்பனங்கள்” இப்போது முதல் வருடல் வலது.”எப்போழுதும் உன் கற்பனைகள்”பிறகு இடது.

3.00 -3.20 மென்மையான புல்லாங்குழல் உரையாடல்.ஜானகி அட்டகாசம்.


ஆனந்த ராகம் -1981 - பன்னீர் புஷ்பங்கள்

இந்தப் பாட்டைத் தொட்டால்  சில இடங்கள் சுடும்.

ஆரம்ப உக்கிரமான western classical வயலின் /செல்லோ தீற்றல்களுக்கு நடுவே நம்ம ஊர் Indian Classical சிம்மேந்திர மத்யமம் ராக ”கலங்கும்” புல்லாங்குழல் அருமை.அட்டகாசமான வெஸ்டர்ன்+இண்டியன் Fusion."ஆயிரம் ....” “ஆசைகள்” இந்த வரிகளுக்கு ரெஸ்பான்ஸாக கிணற்றுக்குரலில் வித்தியாசமான புல்லாங்குழல்ஆச்சர்யம். பாட்டின்  முடிவிலும் கொசுறாக சூப்பர்.

குறுக்கும் நெடுக்கும் போகும் western classical வயலின் சிக்கலுக்கிடையே நம்ம ஊர் இந்திய ஷெனாயின் கதறலைக் கேளுங்கள்.அம்மாடியோவ்!

Maestro  went full blast! Hats off Maestro!

”தாலாட்டும் பூங்காற்று”ம்  சிம்மேந்திர மத்யமம். அது மென்மை.இது முரடு.எப்படி ராஜா? அதான் ராஜா.

தென்றல் காற்றே  - 1991 - ஈரமான ரோஜாவே

புல்லாங்குழலில் மதுர கானம்தான். சோகம்(ஏக்கம்?) கானம் இசைக்குமா? இதில் சோக கானம் 01.19 -01.30 முக்கியமாக  03.28 -03.30 மற்றொரு வாத்தியங்களுடன் சேர்ந்து சோகம் பாடிவிட்டு மீண்டும் தனியாக 03.31-03.33 சோகம்.

 வா வா அன்பே
அதே படத்தில் இன்னோரு பாடல்.அதே மெட்டு.ஆனால் புல்லாங்குழல் முதலில் கொஞ்சம் சோகம் ஆனால் 01.25-1.52 வரை துடிப்புடன் நிரம்பி வழியும்.வயலினுடன் உரையாடிக்கொண்டே வரும்.


மதுர மரிக்கொழுந்து  - 1987 -எங்க ஊரு பாட்டுக்காரன்

”பச்சரிசி மாவு இடிச்சு..சக்கரையில் பாவு(கு) வச்சு...சுக்கிடிச்சு.மிளகிடிச்சு..
..................அம்மனவ எங்களயும் காக்க வேணும்.....0.27-0.41 மதுர மரிக்கொழுந்து வாசம் வீசும் புல்லாங்குழல் தெய்வீக கானம்.கிராமிய மணம் கமிழும்.Stunning  Maestro!  
"தல..!சின்ன ஹார்மோனியத்துல மெட்டுப்புடிக்கிறீங்க.ஆனா அத அழகுப்படுத்த எத்தன விதமான இசைக்கருவிகள்...!

பூங்கதவே தாழ்  - 1980 -நிழல்கள்

வீணையுடன் புல்லாங்குழல் காதல் 0.33-0.42 அருமை.டால்பின் போல் துள்ளும் துடிப்பான வாசிப்பு 1.44-1.49.புத்திசாலித்தனமான அதே சமயத்தில் பாட்டோடு ஒட்டி வரும் கானம்.


கண்ணா வருவாயா...  - 1987 -மனதில் உறுதி வேண்டும்

மீரா-கண்ணன் சம்பந்தப்பட்ட பாட்டு. 5.31 நிமிட பாட்டில் 1.50-1.57 புல்லாங்குழல் கண்ணில்(காதில்?) காட்டுவார்.5.04-5.05 மருந்துக்கு சிணுங்கிவிட்டுப் போகும். மேஸ்ட்ரோ இது நியாமா? ”சின்ன கண்ணன் அழைக்கிறான” பாட்டுக்கு எல்லாம் வாசிச்சாச்சுப் போல..!

சிறு பொன்மணி அசையும் - 1980 -கல்லுக்குள் ஈரம்

பாரதிராஜாவுக்குன்னு தனி உழைப்பு உண்டு.இந்தப்பாட்டில் 0.15 - 0.24ல் நேரடியாக வரும் கிராமிய புல்லாங்குழல் கானம் 0.25-0.28 ல் வயலினுடன் எப்படி கொஞ்சுகிறது பாருங்கள். தல..! பின்னிட்டீங்க!

பின்னால் வரும் அலைபுரண்டு வரும் கானமும் அருமை.

சின்ன சின்ன - 1986 -மெளனராகம்

0.27-0.39 ,1.04-1.10ட் ஆணி அடிக்கிற மாதிரி புல்லாங்குழல் கானத்தை ஊதி ஊதி அடித்துக்கொண்டே வருவார்.அட்டகாசம்.வித்தியாசமான கானம்

இன்னும் நிறைய இருக்கு.பின்னால் பார்க்கலாம்.

படிக்க:

இளையராஜா The King of Beats

இளையராஜாவின் -நாத உரையாடல்கள்
Saturday, March 6, 2010

மயக்கும் குரல்காரி -L.R.ஈஸ்வரி

சிறு வயதில் முதன் முதலில் காலையோ சாயங்காலமோ ”தாயே கருமாரி””மாரியம்மா எங்கள் மாரியம்மா” ”வேர்காடு வாழ்ந்திருக்கும் ”எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் ரொம்ப பிடித்திருந்தது.ஆனால் உண்மையில் காற்றில் மிதந்து வந்து ஒரு மாதிரி மயக்கும் குரலில் வசீகரித்திருந்தது.அப்போது தெரியவில்லை.

 

அடுத்து கல்யாண மண்டபங்களில் அடிக்கடிப் பெண் அழைப்பு பாட்டு”வாராயோ என் தோழி”(பாசமலர்).இதுவும் பிடித்திருந்தது.காற்றில் மிதந்து வந்து ரசிக்க முடிந்த இவரை  ரேடியோ பக்கத்தில் உட்கார்ந்துக்கேட்டால்  ரசிக்க முடியவில்லை.தெரு குழாய் பெண்கள் மாதிரி அராத்துக்குரல். இவரின் குரல் டெக்சர் அப்படி.

கொஞ்ச நாள் கழித்து அதே சிறு வயதில் ”அம்மம்மா கேளடி சேதி”(கருப்புப் பணம்)சோகம் அப்பிய பாட்டு மனதைப் போட்டுப் பின்னியது.பிறகு காதல் பாடல் “நாம் ஒருவரை ஒருவர்”(குமரிக்கோட்டம்) ”கண்ணில் தெரிகின்ற வானம்” அதற்கு அடுத்து மனதை வருடும் ஹம்மிங்கில் ”கல்லெல்லாம் மாணிக்க”(ஆலயமணி)”பவளக்கொடியிலே”(பணம் படைத்தவன்)

ஒரு நாள் “ஆட வரலாம்” என்ற பாடல் கேட்டுவிட்டு “ஆஹா! இவங்க கெட்ட பாட்டெல்லாம் பாடுவாஙகளா!” மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் எலக்டிரிக் கிடார் பின்னணியில் நிறையப் பாடல்கள். ஹை பிட்ச்/லோ பிட்ச்/ஊளையிடுதல்/போதைப் பாட்டு என்று எல்லாப் பாடல்களையும் கேட்டேன்.

இவரின் பிரபலமான பாடல் “காதோடுதான் நான் பாடுவேன்”(ஹிந்தி பாட்டு காபி) .

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர் ஒரு பன்முகத்தன்மைக் கொண்ட பாடகி என்பது ஒன் பைன் டே தெரிந்தது.இவரின் திறமை கிளப் டான்ஸ்(இப்போது குத்துப்பாட்டு) சூப்பராக எடுபடுகிறது. காரணம் இவர் குரல்.
ஒரு வித்தியாசமான குரல்.

இவர் லெவலுக்கு ஜானகியும் பன்முகத்தன்மைக் கொண்டவர்.

மனதை மயக்கும் ஹம்மிங்:
1.கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி
2.பவளக்கொடியிலே - பணம் படைத்தவன்

கல்லெல்லாம் மாணிக்க
இதில் முதலில் வரும் இசை அருமை.ஈஸ்வரியின் ஹம்மிங்கை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் வித்தியாசமான இனிமை

பவளக்கொடியிலே

தாளக்கட்டு அற்புதம். பாட்டு வரிகள் இலக்கியதரம் வாய்ந்தவை.

கிளப் டான்ஸ் பாடல்கள்(மேற்கத்திய இசை)
1.பளிங்கினாள் ஒரு மாளிகை(வல்லவன் ஒருவன்)
2.ஆட வரலாம் (கருப்புப்பணம்)(ஜாஸ் டைப்)
3.துள்ளுவதோ இளமை(குடியிருந்த கோவில்)
4.வர வேண்டும் ஒரு(கலைக்கோவில்) (ஜாஸ் டைப்)
  
காதல்
 1. நெஞ்சத்தை அள்ளி - காதலிக்க நேரமில்லை
 2. முத்துக் குளிக்க வாரிஹளா- அனுபவி ராஜா அனுபவி
 3. நாம் ஒருவரை ஒருவர் - குமரிக் கோட்டம்
 4.  சந்திப்போமா - ராமு
 5.  ராஜாராஜஸ்ரீ ராஜன் - காதலிக்க நேரமில்லை
 6. பன்சாயி காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
 7. கண்ணில் தெரிகின்ற வானம -ரகசிய போலீஸ் 115

 சோகம்
 1. மாணிக்கத் தொட்டில் -
 2. மலருக்கு தென்றல் பகையானல் - எங்க வீட்டு பிள்ளை
 3. அம்மம்மா கேளடி சேதி -  (கருப்புப்பணம்)
 4. காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளி விழா
 5. உனது மலர் கொடியிலே -  பாதகாணிக்கை
 
அராத்துக்குரல்

 1. எலந்த பயம் - பணமா பாசமா
 2. அடி என்னடி உலகம் - அவள் ஒரு தொடர்கதை
 3. ஆனந்தத் தாண்டவமோ - நினைத்தாலே இனிக்கும்
 4. குடி மகனே பெரும் - வசந்த மாளிகை
 5. அடி சரிதான் போடி வாயாடி - பூவா தலையா
  பொது
 1. சிந்து நதியின் இசை - கப்பலோட்டிய தமிழன்
 2. வாராயோ என் தோழி - பாசமலர்
 3. மணமகளே மருமகளே - சாரதா 
மேலே உள்ள பாடல்களின் தாக்கம் சில இளையராஜாவின் பாடல்களில் பார்க்கலாம்.
   அந்த காலத்தில்  எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.   Thursday, March 4, 2010

   விண்ணைத் தாண்டி வருவாயா?

   காதல் கதை சீசன் முடிந்து பல மாதங்கள் ஓய்ந்துப்போய் மீண்டும் ஒரு காதல் கதை.ஒரு (அப்பர்?)மிடில் கிளாஸ் காதல் கதை.மாடி வீட்டு (த்ரிஷா) ஓனர்ப் பெண்ணைக் கிழ் விட்டு வாடகை வீடு சிம்பு 500%(கண்டதும் காதல்)காதலிக்கிறார்.அவள் மலையாளி கிறிஸ்டியன்.இவர் இந்து.அவள் இவனை விட ஒரு வயது பெரியவள்.

   த்ரிஷாவுக்குப் பிடிக்கிறது.ஆனால் பிடிக்கவில்லை.பிடிக்கிறது.
   ஆனால்பிடிக்கவில்லை.பிடிக்கிறது.ஆனால் பிடிக்கவில்லை.இவளுக்குப் பிடித்தாலும் அப்பா சத்தியமாக கல்யாணம் செய்ய அனுமதிக்க மாட்டார்.அவர் ஒரு உண்மையான கிறிஸ்டியன்.

   ஒரு மாதிரி இரண்டும் கெட்டான்தனமாக  த்ரிஷா-சிம்பு மாட்டிக்கொண்டு அல்லாடுகிறார்கள். காதல் வெற்றி பெற்றதா?

   இருவரின் காதல் போராட்டம் ரியாலிடி ஷோ மாதிரி கண் முன் ஓடுகிறது.சிம்பு நேர்த்தியாக ஹேர்கட் செய்துகொண்டு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிப்பும் அதே ஸ்மார்ட்.த்ரிஷா சிம்புவை மிஞ்சுகிறார்.அவர் முகத்தில் எப்போதும் போல் ஒரு நமுட்டு சிரிப்பு.சிம்புவின் நண்பராக வரும் கணேஷ் சூப்பர்.பில்டிங் சூப்பரவைசர் மாதிரி வாய்ஸ் மாடுலேஷன் யதார்த்தம்.

   அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்வதும் விகல்பமாகத் தெரியவில்லை.

   சிம்பு அவர் டிரஸ்ஸில் ”அடுத்தவிட்டுப் பையன்” மாதிரி த்ரிஷாவுக்கும் கொஞ்சம் வித விதமான காட்டன் சாரி உடுத்தி ”அடுத்தவீட்டுப் பெண்” கொண்டு வந்திருக்கலாம்.

    Vinnaithaandi Varuvaayaa Gallery

   ரஹ்மானின் இசையில்  “விண்ணைத்தாண்டி வருவாயா” ”ஓமனப் பெண்ணே”நன்றாக இருக்கிறது.இன்னும் கூட பாட்டை இயற்கையான தீற்றல்களுடன் ரொமாண்டிசைஸ் செய்யலாம்.மெட்டாலிக் சவுண்டை குறைக்கலாம்.

   ”ஹோசன்னா” பாட்டிற்கு தியேட்டரே அதிர்கிறது.இதெல்லாம் லட்டு மாதிரி ஏஆருக்கு.

   டூயட் பாடல்களில் லோகஷன் மாறி கலரிங் கடுக்கன்  ஜீரத் தொப்பி தலை டான்ஸர்கள் கூட ஆடும்போது காதல் கதையின் வீரியம் நீர்த்துப்போகிறது. சாதாரண சிம்புவின் விரல் படம் ஆகிறது.இருவர் மட்டும் கண்ணியமாகப் பாடுவது மாதிரி வைத்திருக்கலாம். மற்ற பாடல்கள் over globalised ஆனதால்ஓகே ரகம்.

   பின்னணி இசை இன்னும் கூட மெருகேத்தலாம்.ஓகேதான்.கேரளா லொகேஷன்களில் நேட்டிவிட்டியோடு பின்ன வேண்டாமா? தவறவிட்டு விட்டார்.முந்தைய படங்களில் இருந்த பிஜிஎம் லெவல் கூட இதில் இல்லை.மிடில் கிளாஸ் பிஜிஎம் கொடுத்திருக்கலாம்.

   உயிரோட்டமாக ஒரு மிடில் கிளாஸ் காதல் சொல்லவேண்டும் என்றால் எளிமை மிக அவசியம்.ரிச்னெஸ்ஸை குறைக்க வேண்டும்.பாடல்களை குறைக்க வேண்டும்.

    காதலுக்கு மரியாதை படம் நினைவில் வந்து போகிறது.பாசில் ரொம்ப அருமையாக ஆரம்பம் முதல் கடைசிவரை செதுக்கி இருந்தார்.காரணம் மிடில் கிளாஸ் எளிமை.கெளதம் மேனன் தவறிவிட்டார். செதுக்கியது 55%

   ஓ...! பரமஹம்ஸ நித்யானந்(ரஞ்சி)தா..!

   ”என்னைக் கட்டுப்படுத்த முயற்சித்து மீண்டும் மீண்டும் தோற்கிறேனே!!” சரி நம்மால்தான் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விட்டால், என் ஆசைகள் என்னை வாட்டி, வதைத்துவிடுகின்றன.நான் என்னதான் செய்வது? வீரனாகவும் இருக்க முடியவில்லை. கோழையாகவும் இருக்க முடியவில்லை.

   இனி நான் தோற்கக்கூடாது.அதற்கு எனக்கு வழி வேண்டும் என்ற ஆழ்ந்த தேடுதல் உடைய ஒவ்வொருவருக்குமான வெற்றிக்கட்டுரை இது”

   - ”இனி தோற்கமாட்டீர்கள்!” பரமஹம்ஸ நித்யானந்தா- பாகம்-137,குமுதம் 24-02-2010

   வார வாரம் “குட்டி”க் கதைகளை சொன்னவர் "ஜட்டி”த்தெரிய தோற்றுவிட்டார்.நிஜங்கள் புனைவுகளை விட வினோதமானவை.(Facts are stranger than fiction).

   ஞானியும் படகுக்காரனும் என்ற ஒரு ஞானக் கதை மிகப் பிரபலம்.படகுக்காரனுடன் பிரயாணம் செய்யும் ஒரு துறவி அவனிடம் “இது தெரியுமா, அது தெரியுமா,இது படித்திருக்கிறாயா,அது படித்திருக்கிறாயா,என்று இறுமாப்புடன் கேட்பார். அவன் எல்லாவற்றிற்கும்”இல்லை” என்பான்.

   ஒவ்வொரு ”இல்லை”க்கும் “அடப்பாவி...பல வருட வாழ்க்கையை வீணடித்து விட்டாயே! தொலைத்துவிட்டாயே என்பார்!”.

   கொஞ்ச தூரம் போனதும் “சாமி...உங்களுக்கு நீச்சல் தெரியுமா” படகுக்காரன் கேட்பான். “தெரியாதே...” என்பார்.”இந்த சின்ன விஷயம் தெரியதனால உங்க முழு வாழ்க்கையே அம்பேல் ஆகப்போவுது..படகுல ஓட்டை.தண்ணீ உள்ள வருது. நான் எஸ்கேப்’

   எல்லாவற்றையும் உபதேசித்த நித்யானந்தர் "sting operation"என்ற ஒன்று இருப்பது தெரியாமல் நாடோடித் தென்றலாய் உள்ள வந்த ரஞ்சிதா “சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே.... ஓ.... மதி! ஓ....மதி!” பாடுவது(இங்கேயேயும் மேஸ்ட்ரோவா?) உலக முழுவதும் ரீலிசாகி வழித்துக்கொண்டு சிரித்தது உலகம்.

   ஆசிரம் என்பதற்கு ரொம்ப ”சிரமம்” எடுத்துக்கொள்ளும் நிலமை என்பார்கள்.

   இவர் ரொம்ப ஈசியாகஎடுத்துக்கொண்டுவிட்டார்.துறவு நிலை என்பது அவ்வளவு சுலபம் அல்ல.அதற்குத்தான் பிரம்மச்சரியம்,கிருகஸ்தன்(குடும்பவாழ்க்கை),வானபிரஸ்தம்(காட்டில் மனைவியோடு வாழ்வது), என்று மூன்று நிலைகளில் பயணித்து நாலாவது நிலையான சன்னியாசம்(துறவு) வர வேண்டும்.

   அடுத்த உச்சக் கட்ட காமெடி.வாழ்க்கையில் எல்லாவற்றையும் வண்டி வண்டியாக நெட்டுரு செய்து உபதேசித்த போலி சாமியார் விவேகமில்லாமல் ”ஆத்மா” வைவிட “உடம்பு”தான் முக்கியம் என்று தலை மறைவு ஆகிவிட்டார்.

   உடம்புதான் “பிரத்யக்‌ஷமாக” கண்ணுக்கு தெரிகிறது அவருக்கு.ரொம்ப நாளாக வெயிட் லிஸ்டில் இருந்து மாட்டிக்கொண்டார்.

   எனக்கும் கடவுள் பக்தி உண்டு.என் தாத்தா காலத்திலிருந்து சீரியஸ் முரட்டு பக்தி லெவல் கொஞ்சம் கொஞ்சமாக உருகி “போலிபைனான்ஸ் கம்பெனி” “போலிச் சாமியார்” பற்றிய விழிப்புணர்ச்சியானால் புத்திசாலித்தனமான பக்தியாகி நேரடி கடவுள் பிரார்த்தனைதான்.

   1.“இடைத் தரகர்கள் அனுமதியில்லை”

   2. “சாமியார்களுக்கு அனுமதியில்லை
   கண்டிப்பாக Split A/C சாமியார்களுக்கு”


   எங்கள் மனதில் போர்டு மாட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 20 வருடம் ஆகிவிட்டது.

   ஆனால் மறக்காமல் Split A/C  போலி சாமியார்களை டீவியில் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு.வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்.இதற்காக நன்றி செலுத்துவதுண்டு இவர்களுக்கு.

   .