Sunday, July 27, 2014

கங்கை அமரன் -ஜெயகாந்தன் - கோபிநாத்-ஆதித்யா

சினிமா பாடல் வரிகள் நேரடியாக சுட்டாமல் உள் மன வெளிப்பாடு கவித்துவமாக வெளிப்பட்டால் நான் ரொம்ப ரசிப்பதுண்டு.முக்கால்வாசி பாடல்கள் இப்படித்தான் புனைவார்கள். அதுதான் கவிதை.அதில் கங்கை அமரன் வாலி பாடல்கள் நிறைய பிடிக்கும்.வைரமுத்துவின் பாடல்களை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை.

கங்கை அமரன்: ஆனந்த ராகம்-என்னுள்ளில் எங்கோ-காற்றில் எந்தன் கீதம்-சிறு பொன்மணி அசையும்-ஒரு ராகம் பாடலோடு-அந்தி வரும் நேரம்-அதோ அந்த நதியோரம்-ஏதோ நினைவுகள்


சமீபத்தில் அவரை ஒரு பேஸ் புக் குழுமம் மூலமாக சந்தித்தபோது இதைப்பற்றி சிலாகித்தேன்.”சந்தோஷம்” என்றார்.இயல்பாகவே இவர் எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடியவர்.மனதில் பட்டதைப் பேசக்கூடியவர்.

நான் அவரிடம் ராஜாவின் முக்கால்வாசி பாடல்களில் மைய இழையாக ஒரு இனம் புரியாத சோகம் ஓடுவதாக என் பீலிங்.நிறைய பேர் இதை “அப்படித் தெரியலையே” என்றார்கள் ஆனால் கங்கை அமரன் உண்மைதான் என்றார். ராஜாவின் ஆழ் மனதில் இருக்கும் தேடல் இப்படி வெளிப்படுகிறது என்றார்.

_____________________________________________________

இந்தப் பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று.எல்.ஆர்.அஞ்சலியும் கோவை செளந்தரராஜனும் பாடியது.சும்மா ஒரு ஜாலி. ஹம்சத்வனி ராகம்.எழுதியது வாலி என்று என் யூகம். “மயிலாப்பூர் மாமி என்ன பாத்தா..............
சொல்லிட்டேண்டா டாட்டா ” வரிகள் சூப்பர். இதை தேடிக்கண்டுப்பிடித்து யூ டூபில் ஏற்றினேன்.

பாட்டு: அய்யர் ஆத்துப் பொண்னு சொன்ன  கேட்டுக்கோட அம்பி______________________________________________________

இப்போதைய (மிடில் அப்பர் கிளாஸ்)இளைய தலைமுறையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.விதவிதமான டிரஸ்,செல்போன், வண்டி,நெட்,ஸ்டேஷ்னரி,எண்டர்டெய்ன்மெண்ட்,.காஸ்மெட்டிக்ஸ் என்று அனுபவிக்கிறார்கள்.அப்படியே ஸ்டைல் காட்டுகிறார்கள்.

என் மகன் ஆதித்யா
உதாரணமாக என் காலத்தில் ஒட்டுவதற்கு சோற்றுபருக்கை,கோந்து என்று விரல்களை பிசுபிசு என்று அழுக்காக்கிக்கொண்டு அலைவோம்.கடந்த 15 வருடமாக gluestick என்ற கையில் ஒட்டாத கோந்து வந்துவிட்டது. இதை நான் என் ஆபிஸ் பருவத்தில்தான் பார்த்தேன்.Jeans அணிந்தது என் 24 வயதில்தான்.
இப்போது ஜீன்ஸ்ஸைத் தவிர ஏதும் அணிவதில்லை இவர்கள்.அடுத்து பென்பென்சில்.எல்லாமே ஸ்டைலிஷ் ஆக இருக்கிறது.

_________________________________________________________

போன வாரம் நீயா நானாவில் “ அரசு பள்ளிகள் -தனியார் பள்ளிகள்” கருத்து மோதல்.தனியார் பள்ளி குரூப்பிடம் “மாணவர்கள்  அரசு பள்ளி வேண்டாம்... உங்கள் பள்ளியில் ஏன் சேர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்று கேட்டார் கோபிநாத்.சொன்ன பதில்களில் கோபி திருப்தியாகவில்லை.

தனியார் சேனலுக்கும் அரசு சேனலுக்கும் உள்ள அதே வித்தியாசம்தான் இதற்கும் என்று எனக்குத் தோன்றியது.கோபிநாத்திற்கு தோன்றியதா?

__________________________________________________________

ஜெயகாந்தன்  ஆவியில் எழுதிய கதைகளை அதே பார்மெட்டில் ஆவி புத்தகமாக வெளியிடபோகிறார்களாம்.அந்தப்பக்கத்தில் வெளியான அப்போதைய விளம்பரம்,ஜோக்ஸ்ஸும் பிரிண்டில் வருமாம்.பழைய பார்மெட்டில் படித்த பாக்கியசாலிகளில் ஒருவன் நான்.சில கதைகளைப் படிக்க விட்டாலும் பைண்டிங்கில் படித்த ஒருவன்.”அக்கரகாரத்தில் பூனை” எனக்குப்பிடித்தமான ஒன்று.

இவரை ஒரு முறை அவரது மொட்டை மாடியில் ஒரு குரூப்போடு சந்தித்திருக்கிறேன்.என் வயது அனுபவம் காரணமாக அவர் பேசியது(நிறைய கம்யூனிச சிந்தனை) ஒன்றும் மண்டையில் ஏறவில்லை.
_________________________________________________________