Friday, April 30, 2010

ரகசிய தோழி தீபாவுக்கு ...!

இரவு மணி 11.00. நிலா FM ரேடியோ 101.25 . வரப்போகும் நிகழ்ச்சிக்கேற்றார் போல் இசையும் அந்தரங்கமாய் ஒலித்தது.

தீபா இந்த நிகழ்ச்சியின் செல்ல ஸ்டார். காரணம் அவளின் குரல்.ரொம்பவும் சினேகமானது. இந்த நிகழ்ச்சிக்கு base வாய்சில் பரிவோடு பேசுவது கேட்பவர்களின் மனதை லேசாக்கிவிடும்.

அடுத்த முக்கியமான காரணம் FM தொகுப்பாளினிக்கே உரித்தான பாசாங்குத்தனம் இல்லை.தன் சொந்தப் பிரச்சனைகள் போல் அணுகுவாள்.இதனால் நேயர்களுக்கு செல்லமாகிப்போனாள்.

”சந்தோஷத்த யார்கிட்டயாவது ஷேர் பண்ணினால் அது டபுளாகும். அதே மாதிரி துக்கத்த ஷேர் பண்ணிக்கிட்டா பாதியாக குறையும்னு சொல்வாங்க.அதேதான் இந்த புரோகிராம்மின் நோக்கமும். உங்களுடைய ரகசியமான விஷயங்களை என்னோட தயக்கமில்லாம ஒரு பிரண்ட்லியா ஷேர் பண்ணிக்கிறீங்க.அதற்கு மில்லியன் தேங்கஸ் சொல்லிட்டு இன்னிக்கு புரோகிராம்ம ஆரம்பிக்கிறேன்”

”இன்னிக்கி என்னோட”ரகசிய தோழி தீபாவுக்கு அன்புடன்” நிகழ்ச்சிக்கு நுங்கம்பாக்கத்திலிருந்து அரவிந்த் என்பவர் கடிதம் எழுதி இருக்காரு.அவரு என்ன சொல்ராருன்னு இப்போ பாக்கலாம்”

ரகசிய தோழி தீபாவுக்கு,

என் அந்தரங்கத்தை யாரிடமாவது கொட்டவேண்டும்.அதுவும் ஒரு மூன்றாவது மனுஷியிடம். கேட்பதற்கு நீ ஒருத்தி இருக்கிறாய் என்றதுமே மனதில் ஒரு ஆறுதல்.புலம்பலில் ஒரு வித self pity இருக்கும் .அதை எனக்காகப்பொறுத்துக்கொள்.அதுதான் உண்மை.நான் ஒரு தப்பும் செய்யவில்லை.

கொட்டுவதால் பாரம் குறைந்துவிடும் என நம்புகிறேன்.சரி விஷயத்திற்கு வருகிறேன்.

நான் (பொது துறை) அலுவலகத்தில் வேலையில் இருந்தேன்.என் துறை சம்பந்தமாகத்தான் உமாவும் என் அலுவலகத்திற்கு அடிக்கடி வருவாள். அவள் வேறு ஒரு தனியார் நிறுவனம்.

அலுவலக சம்பந்தமாக interact செய்ய என்ற பெயரில் அடிக்கடி சந்தித்தோம்.என்னை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று.கிறங்கிப்போய் காதலில் விழுந்தாள்.
ஒருத்திக்கு என்னைப் பிடித்துப்போயிற்று என்ற மிதப்புலேயே நானும் கிறங்கிப்போய் அதே காதலில் குஷியாக விழுந்தேன்.

அன்று முதல் பூமி புதிதாக சுற்றத்தொடங்கியது.

அவளை அப்படி லவ் பண்ணினேன்.தினமும் போனில் பேச விட்டால் என்னனோ மாதிரி இருக்கும்.. மேரேஜ்னா அவளைத்தான் என்று நிச்சயமே செய்துவிட்டேன்.
அவளைப் போல் இன்னொருத்தி கிடைப்பாளா?கடவுளாக போட்ட முடிச்சு என்று தினமும் ஒரு முறையாவது  சாமிபுத்திப் போட்டுக்கொள்வேன் படுப்பதற்கு முன்.

ரகசியமாக சந்தித்தோம்.அவளின் i10 காரின் கலரை நான்தான் செலக்ட் செய்தேன். அதில் ஊர் சுற்றினோம்.காதல் சினிமா பாட்டுக்கள் எல்லாம் ரொம்ப முக்கியமாகப்பட்டு பிடித்துப்போயிற்று. கல்யாணம்,ஹனிமூன்,குழந்தைகள் என எதிர்காலத்தையும் பிளான் செய்தோம்.மொத்தத்தில் 24/7 குஷியாகவே இருந்தோம்.(ஹாய்...தீபா ! எழுத எழுத ப்ரெஷர் குறைந்து மனசு லேசாகிறது).

ஆனால் அவளின் ரிச்னெஸ் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டேதான் இருந்தது.

அருகாமை  தந்த அவள் வாசனை ஒரு கட்டத்தில்  காமமாக மாறியது.அவளுக்கும் அதே பீலிங்க்தான்.அவள் காட்டிக்கொள்ளவில்லை.திருமணம் தவிர வேற வடிகால் இல்லை.திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.அவள் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.எனக்கு புதிராக இருந்தது.

அடுத்த சில மாதங்களில் சந்திப்பு குறைந்தது.செல்லிலும் தொடர்பு குறைய ஆரம்பித்தது. பல முறை வலிய போய் காதல் பாராட்டினேன்.அவள் கண்டுகொள்ளவில்லை. அவளின் போக்கு  என்னை ஷாக் ஆக்கியது.

அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்ற நினைப்பு  அடி வயிற்றில் புளியை கரைத்தது.ஒரு கட்டத்தில் செல் நம்பரும் மாற்றி விட்டாள்.கம்பெனியையும் விட்டு விட்டாள்.அவளை டிரேஸ் செய்யவே முடியவில்லை.மனம் நொ்ந்து போனேன் .

இனி வரும் காலத்தை எப்படி ஓட்டப்போகிறேன் தீபா?.ஒன்றும் புரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் தீபா .கிடைக்கமாட்டாள் என்கிறது என் உள்மனசு தீபா.

உமா என்னை ஏன் மறந்தாள் தோழி தீபா?

அன்புடன்,

அரவிந்த்
நுங்கம்பாக்கம்

படித்து முடித்ததும் மூட் அவுட ஆனாள் தீபா.ஒருவாறு
சமாளித்து அரவிந்தனுக்காக, தன் பரிவான குரலில் பத்து நிமிடங்கள் ஆறுதலாகப்  பேசினாள்.அவளை மறந்து புது வாழ்க்கை தொடங்குமாறு தேற்றினாள்.

தான் பேசியது அரவிந்த் கண் முழித்துக் கேட்டிருப்பானா?வாட் அபொவுட் உமா?சான்ஸே இல்லை.

(இந்த ஒருவருடத்தில் இதுதான் பெஸ்ட் என்று அலுவலகத்தில் மறு நாள எல்லோரும் பாராட்டினார்கள்)

புரோகிராம் முடிந்தாலும் அரவிந்தின் கடிதம் மனதை போட்டு உலுக்கத்தான் செய்தது.அவனைப்போய் பார்க்கலாமா? அலுவலகத்தில் இதற்கு அனுமதி இல்லை.ஏன் உமா ஏமாற்றினாள்.குழம்பியபடியே மறுநாள் ஏழு ஆறு மணிக்குத்தான் தூக்கம் வந்தது தீபாவுக்கு.

அடுத்த நாள் மதியம் 1.00.தீபாவுக்கு பொது தொலைபேசியில் இருந்து போன் வந்தது.

“வணக்கம். ஐ ஆம் உமா. ஆர் யூ தீபா அஃப் நிலா FM 101.25? "

"வணக்கம். எஸ் உமா. யூ ஆர் ரைட்...நீங்க அந்த அரவிந்த்.....?

”ஆமாம்... அத பத்தி பேசனும்.நீங்க தனியா வர முடியுமா?”

 “ஒகே”

”கண்டிப்பா தனியாத்தான் வரணும்.அப்பத்தான் ப்ரீயா பேசலாம்”

“சத்தியமா”

மிகுந்த சந்தோஷமும் அதே சமயம் ஒரு ஒரத்தில் கிலியுமாக மனதில் ஓடியது. உமா அட்ரஸ் சொன்னாள்.அது அரவிந்த் அட்ரஸ். அரவிந்த் உமா குரலில் பேசுகிறானா?ஏன் தனியாக வரச் சொல்கிறாள்.போலியா?வேறு ஏதாவது நெட்வொர்க்கா?இது புது அனுபவமா இருக்கே?

ஹாண்ட்பாக்கில் பெப்பர் ஸ்பரே,மற்ற தற்காப்பு சாதனங்கள் எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டாள்.புது கணவன் மணி வண்ணனைத் துணைக்குஅழைத்துக்கொண்டாள்.கணவனிடம் மேலோட்டமாகத்தான் விஷயத்தைச் சொல்லி இருந்தாள்.

காரில் கிளம்பினார்கள். அரவந்தனின் கடிதம் போகும் வழியெல்லாம் படுத்தி எடுத்தது.

கணவனை காரோடு ஒர் இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு அந்த வீட்டை நெருங்கினாள்.தனி வீடானாலும் அழகாக இருந்தது.சூடிதாரில் ஒரு பெண் நின்றிருந்தாள்.அவள்தான் உமாவா? பயத்தில் உடம்பு சற்று உதறியது.

 ”ஹாய்...தீபா!”

“ ஹாய் உமா!”

நட்பாகச் சிரித்து கையை பிடித்துக்கொண்டாள்.பார்த்ததும் பிடித்துப்போயிற்று.இப்படித்தான் அரவிந்தனையும் கவர்ந்திருப்பாளோ?

மாடிக்கு அழைத்துக்கொண்டுபோனாள்.நுழைந்த்தும் மல்லிகைப்பூ வாசனை கிறங்கடித்தது.அது பெட்ரூம்.உட்கார வைத்துவிட்டு உள்ளே போனாள்.அறை சுத்தமாக இருந்தது.தனக்காக அவசரமாக சுத்தம் செய்த மாதிரி தெரியவில்லை.விலை உயர்ந்த style SPA படுக்கை.ஏசி அணைக்கப்பட்டு பேஃன் ஓடிக்கொண்டிருந்த்து.அவள் தன் குரலைக் கேட்கும் மியூசிக் சிஸ்டம் எங்கே?

சிறிது நேரம் ஓடியது.உமா எங்கே?ஆள் அரவமே இல்லை .ஒரு கெஸ்டை வெயிட் பண்ண வைத்துவிட்டு....லூசாக இருப்பாளோ?எதற்கு பெட்ரூமில் சந்திக்க வேண்டும்?

ஹாண்ட் பேக்கில் இருந்து பெப்பர் ஸ்ப்ரேயை  கட்டிலில் வைத்து ஹாண்ட் பேக்கால் மூடி மறைத்தாள்.

யோசனையை கலைத்தது கொலுசு சத்தம்..அவள்தான்.முதலில் பார்க்கும்போது கொலுசு இல்லையே? மெலிசான ஹவுஸ்கோட்டில்இருந்தாள்.கை, கழுத்து பகுதிகள் வெண்மை நிறத்தில் பளிரென அடித்தது.மேல் உள் ஆடைகள் அரசல் புரசலாக தெரிந்தது.தலையில் கோணல்மானலாக மல்லிகைப்பூவைச் சொருகி இருந்தாள்.ஒரு ஆணை கணத்தில் விழ்த்தக்கூடிய நிலையில் தோற்றமளித்தாள்.

இப்படியா  ஒரு விருந்தாளியை சந்திப்பாள்?அதுவும் ஹவுஸ்கோட் கணுக்காலுக்கு மேல்தான் இருநதது. இட் இஸ் டூ பேட் உமா...!

புன்னைகைத்தபடியே ஹாண்ட் பேக்கில் கைவிட்டு செல்லை எடுத்தாள். தன் கணவனின் நம்பரை அழுத்த ரெடியாக செட் செய்து உள்ளம் கையில் வைத்துக்கொண்டாள்.

வேறு சில அறிமுகத்திற்கு பின் லெமன் ஜூஸ் குடித்து பேச்சு ஆரம்பம் ஆனாது.பக்குவமாகத்தான் பேசுகிறாள்.தெளிவும் இருந்தது.நார்மல்தான்.

தீபாவுக்கு  பயம் போய் சகஜமானாள்.

”நாந்தான் அரவிந்த்....”உமா சிரித்தபடி சொன்னாள்.

”அப்படியா?” சற்று அதிர்ச்சியாகி அவளைப் உற்றுப்பார்த்தாள்,

“சாரி..டு ஆஸ்க் யூ..! ஆர் யூ  அ டிரான்ஸ்ஜெண்டர்?(திருநங்கை)

“இல்ல தீபா. நா ஒரு நார்மல் பொண்ணுதான்” மெலிதாக சிரித்தாள்.

“ஜஸ்ட் தெரிஞ்சுகலாம்னுதான்...சாரி”

தான் கேட்டதை உமா ரொம்ப அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

"நாந்தான் அரவிந்தன்ர பேர்ல எழுதினேன்.ஆனா காதல்ல ஏமாந்துபோனது நான்”

”ஓ.. ரியல்லி உமா! அன்பிலிவபுள்!.....ஏன் அப்படி?”

”அவன் ஏமாந்தான்னா எப்படி நொந்து எழுதுவான்னு ஒரு பீலிங்.ஒரு பொண்ணு புலம்பினா ரொட்டீனா போய்டும.அதான்...ரொமப சாரி தீபா.குழந்தத்தனமா பண்ணிட்டேனோ...ஒரு வேகம்தான் ரீசன்”

ஒரு  மணி நேரம் பேச்சு ஓடியது. தீபா தன் வழக்கமான FM சினேக குரலில்  ஆறுதல் சொன்னாள்.

”தீபா...உன்னோட குரல் ....so cute.... I love it...தீபா.நைண்டி பர்செண்ட் ரிலிவுட்”

”தாங்கஸ் உமா” சொல்லி தொடர்ந்தாள் “இப்ப ஓகேதானே...அதுலேந்து வெளில வந்திட்ட இல்ல.இது மாதிரி ஏமாந்தா யாராலேயும் தாங்க முடியாது.இட் இஸ் ட்ரூ.எனக்கு  இதோட வலி தெரியும் ”

“ஆல் மோஸ்ட் வந்தாச்சு. அவன பாத்து ”ஏண்டா இப்படின்னு”டீசண்டா கேட்கணும்னு ஆச. ஆனா முடியல..”

”ஆனது ஆகிவிட்டது.நீ பழச மறந்துட்டு மேரேஜ் பண்ணிட்டு சந்தோஷமா லைஃபல செட்டில் ஆயிடு.”

”அந்த முடிவுக்கு வந்து ஒரு வாரம் ஆயிடுச்சி.சீக்கிரம் மேரேஜ்.டும்..டும்..டும்”

“ஓ கிரேட்..!.மேரேஜ்ஜுக்கு கட்டாயம் வருவேன்.கிளம்பரேன்.”

 “கட்டாயம் வாங்க.இப்ப நீங்க தனியா வரலைன்னு தெரியும்.கார்ல.....?”

“எஸ்...என் ஹஸ்பெண்டுதான் வெயிட் பண்றாரு”

“எதுக்கு அவ்வளவு தூரம் நடக்கனும். அவரு செல்லுல கூப்பிடுங்க?’

“வேணாங்க.... நான் நடந்தே போய்டுரேன்....”

”தீபா ...ப்ளீஸ்... கால் ஹிம்”

”உமா....அவரு வந்த இன்னும்  உன்னோட டைம்தான் வேஸ்ட் ஆகும்”

“தீபா ...ப்ளீஸ்... கால் ஹிம்”

எப்படி இந்த கவர்ச்சி உடையில்?அதுவும் தன் கணவனை பார்க்கத் துடிக்கிறாள்?சரியான லூசா?இட் இஸ் டூ பேட் உமா...!வேண்டா வெறுப்பாக செல்லில் அழைக்க மணிவண்ணனும்  வந்தான்.தீபா அறிமுகப்படுத்தினாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு கிளம்பினார்கள்.உமாவின் மேல் சொல்ல முடியாத மனத்தாங்களுடன்தான் தீபா வெளியேறினாள்.

ஆறு மாதம் கழித்து உமாவின் திருமண அழைப்பிதழ் தீபாவுக்கு வந்தது. தீபா பிரித்தாள். ஆர்வமுடன் மணமகன் பெயரைப் பார்த்தாள்.

 Uma  Weds Aravind

"உமா...கில்லாடியா இருப்பா போல!அவனேயே கண்டுபிடிச்சு கைப்பிடிச்சுட்டாளே” மணிவண்ணன்

”காதல்ன்னு விழுந்துட்டான்.அவளை ஒர் அளவுக்கு இப்படியும் அப்படியுமாக அனுபவித்து இருக்கிறான். ஒவரா ”காட்ட” ஆரம்பிச்சுவுடனே இது நமக்கு சரி வராதுன்னு தலை மறைவா ஆயிட்டு  மறுபடியும் மாட்டிக்கிட்டான்” தீபா

“ஒரு வேள  நாம உமாவை அன்னிக்குப் பாத்த போஸ்லயே போய் அரவிந்த மடக்கி இருப்பாளோ?” மணிவண்ணன்

                                         முற்றும்
 ______________________________________________________________

 இந்த கதைக்கு இன்னொரு முடிவு.

ஆறு மாதம் கழித்து உமாவின் திருமண அழைப்பிதழ் தீபாவுக்கு வந்தது. தீபா பிரித்தாள். ஆர்வமுடன் மணமகன் பெயரைப் பார்த்தாள்.

Uma  Weds Kishore

கிஷோர்! பலவாறு உறுதி செய்துக்கொண்டாள்.அதே கிஷோர்தான். விடுவிடுவென்று ஓடி தன் கணவனிடம் காட்டினாள்.

“உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணாத ஏமாத்தின கிஷோரா?”

”ஆமாம் ..!அதே கிஷோர்தான்”

                                                               முற்றும்

பிடிச்சுருக்கா..! தமிலிஷ்ல ஒட்டப் போட்டு ஆதரிங்க. நன்றி.

Monday, April 26, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் சிங்கிள் சிங்ம்டா..

MGM சினிமா லோகோவில் வரும் சிங்கம் மாதிரி கர்ஜித்து ஐபில் கோப்பையைக் கைப்பற்றினார்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ். “நம்ம தல” சச்சின்.”நம்ம ஊரு” மும்பாய்.”மேட்ச் முடிஞ்சு கொண்டாட்டம்தான்”என்று வந்தவர்கள் நொந்து நூடூல்ஸ்.எல்லாம் சுக்கு நூறாகியது.மும்பை நகரம் சோகத்தில் முழுகியது.

Chennai Super Kings royally screwed Mumbai Indians party.


"மஞ்ச குளிச்சு...அள்ளி முடிச்சு...மெட்டி ஒலிக்க........”

இதெல்லாம் சகஜம்ப்பா என்று சவக்களையுடன் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ஜெண்டிலாகக் களைந்தார்கள்.இவங்க நல்லவங்கப்பா...!

முதலில் ஆடிய செ.சூ.கி 168. பதில் ஆடிய மு.இ.146. 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

Catches win Matches என்று சொல்வார்கள்.

”நீ முந்திண்டா நோக்கு.. நான் முந்திண்டா நேக்கு” என்ற பாணியில்அபிஷேக்கும் தில்ஹாராவும் ஓடி வந்து இருவருமே பிடிக்காமல் ரெய்னா கிளப்பிய பானாவை பூமிக்கு வார்த்தார்கள்.பெளலிங் செய்த ஜாஹீர் முறைத்தார்.ஈயத்தைப் பார்த்து ஈளித்ததாம் பித்தளை என்ற கணக்காக ஜாஹீரும் மற்றொரு ரெய்னா கிளப்பிய பானாவை பூமிக்கு வார்த்தார்.

இதே ரெய்னா திவாரி அடித்த பந்தை அற்புதமாக பிடித்தார்.இதை ஸ்லோ மோஷனில் பார்த்தபோது தரையில் இருந்து எடுத்தமாதிரி தெரிந்தது.ரன் அவுட்டுக்கு ரூம் போட்டு replay போடுவது மாதிரி ரூம் போட்டு replay கிடையாதா? கீரென் போல்லர்ட்டு கேட்ச்சை மாத்யூ ஹைடன் பிடித்தது அட்டகாசம்.

எல்லாம் இனிதே முடியும் என்ற கட்டத்தில் ஸ்லாக் ஓவர்களில் கீரன் போல்லர்ட்டு வந்து பொளுந்துக் கட்டினார்.இவர் நம்ம ஆள் போல் வூடுகட்டி பில்டப் கொடுத்து சிக்ஸ் அடிப்பதில்லை.அலட்சியமாக அடிக்கிறார்.இவரு நாட்டுக்கட்டை மாம்ஸ்.அதே மாதிரி அபிஷேக் நய்யார் அடித்த இரண்டு சிக்சும் சூப்பர்.

நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி,டக் போளிங்கர் பாலாஜியே மிஞ்சும்படி பெளலிங் செய்தார். அடி வயிற்றிபுளி கரைத்தது.”பூட்ட கேஸ்” கிரிகெட்டும் வேணா ஒண்ணும் வேணாம் என முடிவு செய்து டீவியை ஆஃப் செய்து  நாளைக்கு நம்ம பொழப்ப பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தேன்.நல்ல வேளை மாத்யூ ஹைடன் அற்புதமாக பிடித்து அவுட் ஆக்கினார்.

டக் போளிங்கரின் பந்து வீச்சு, மாத்யூவின் தடவல்,மு.இ.காட்ச் விட்டது, அற்ப ரன் அவுட் இதெல்லாம் பார்க்கும்போது ”match fixing”கோ என்ற சநதேகம் அடிக்கடி சியா லீடர்ஸ் போல்”ஹே..ஹே” என்று ஆர்பரிக்கிறது மனதில்.காலம் அப்படி இருக்கிறது.

சச்சின் கையில் கட்டுக்களோடு வந்து பொறுப்பாக ஆடினார்.எப்படியாவது முமபைகாரர்களைகுஷிப்படுத்தி விடவேண்டும் என்ற முயற்சி வீணாகியது.
வீணாக்கியது இவரின் வீரர்களின் கச்சா முச்சா ஆட்டம் பீல்ட்டிங்... அவர் ஆட்டத்தையும் ரசித்தேன்.ஜெயித்திற்க வேண்டியதை தோற்றது.

சுரேஷ் ரெய்னாவின் 57 ரன் ஜெயித்ததில் ஒரு முக்கிய  பங்களிப்பு. தொடர் முழுவதும் இவர் ”கரக்காட்டக்காரன்” .அட்டகாசம் தல.

மு.இ. விளையாட்டு வீரர் ஒருவர் ஒரு பந்தை அடித்தார்.பவுண்டரியை நோக்கிப் போனது. கடவுளே...!சிக்சா ஆகுமா  இல்லாட்டி கேட்சா..... பதறிய ஒருவரின் முக (சுருங்கி) பாவம் குளோசப்பில் காட்டப்பட்டது. அவர் முகேஷ் அம்பானி.அதே மாதிரி தன்னை ரன் அவுட் ஆக்கிய சச்சினை பாட்டால் தரையில் அடித்து முறைப்பு காட்டினார் அபிஷேக்.

அறுபத்து மூவர்  திருவிழா போல் கோலாகலமாக  ரொமப பக்தியுடன் நடந்து முடிந்தது ஐபில். விழா முடிவில் லலித மோடி “ஹிட் அவுட்”.

 டெயில் பீஸ்:
ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் பெயர்களை தமிழில் எழுதுவதே மலிங்கவின் ஓவரில் பேட் செய்வது மாதிரி கஷ்டமாக இருக்கிறது.

Saturday, April 24, 2010

எதுவோ...ஓ ..மோ.ஓ..கம் -வீணை-ராஜேஷ் வைத்யா

சிருங்கார ரசம் சொட்டும் கிடார் தீற்றல்களோடு ஆரம்பிக்கும் பாட்டு “என்னுள்ளே... என்னுள்ளே..பல மின்னல் ”. It is mind blowing & mesmerizing music.(படம்: வள்ளி-(1993).மயக்கும் பெண் குரல் ஹம்மிங்குகள்..வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில்  கீரவாணி ராகம் பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.


காற்றில் அலைப்பாயும்  ”காமத்தீ”க்கு ஏற்றர்போல் கிடார் தீற்றல்களோ?


0.56 -1.01க்கு  இடையில் வருகிறது ”எதுவோ மோகம்” வரிகள்.இதை மேஸ்ட்ரோ  மூன்று ஸ்வரங்களாக பிரித்து அழகுப்படுத்தி,ஸ்வர்ணலதாவை    பாட வைத்துள்ளார். மொன்னையாக ”எதுவோ மோகம்” என்று பாடாமல் கற்பனை வளம் சேர்த்துள்ளார். 

1.எதுவோஓ...... 2.ஓ.....  3. மோ..ஒ...கம்

இந்தப் பாட்டைப் பற்றி தனி பதிவே போடலாம்.சரி விஷயத்திற்கு வருவோம்.

இதே பாட்டு  வீணையில் மீட்டப்படும்போது எப்படி  இன்னும் கிறங்கடிக்கிறது என்பதைப் பார்ப்போம்.( படத்தில் இருப்பவர் ராஜேஷ் வைத்யா.வீணை கலைஞர்)

ராஜேஷ் வைத்யா என்ற வீணை கலைஞர் .இவர்தான் மெய் சிலிர்க்க வீணையில் வாசித்துள்ளார் பாட்டின் ஸ்வரங்களை அழமாக உள் வாங்கி உருக்க மீட்டியுள்ளார்.

”என்னுள்ளே “என்ற பல்லவியில் ஆரம்பிக்காமல் ”கண்ணிரெண்டில் நூறு”சரணத்தின் வரிகளிலேயே மீட்டி எடுப்பது அட்டகாசம்.பின்னால் பல்லவிக்கு வருகிறார்.பாட்டின் வரிகள் கடைசியில் பார்க்க.

”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது  பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.சற்று ஆழமாக கேட்கவும்.3.13

கிழ் வரும் வரிகளை மீட்டும்போது  It is soul stirring!
1.எதுவோஓ...... 2.ஓ.....  3. மோ..ஒ...கம்

சரணம் -1

கண்ணிரெண்டில் நூறு 
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன  தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டேன்
ஏங்கினேன் நான்

பல்லவி -1

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல்  எழும் நேரம்
எங்கெங்கோ  எங்கெங்கோ
என்  எண்ணம்  போகும்  தூரம்
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ...ஓ.... மோ.......கம்


சரணம் -2

கூடு விட்டு கூடு  ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட த்யானம்
ஆலிலையில் அரங்கேற
காலம்  என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்


ஒரிஜினல் ஆடியோ:
என்னுள்ளே...என்னுள்ளே..

இந்த லிங்கில் 1.என்னுள்ளே பாட்டு 2.என்னுள்ளே instrumental   இரண்டும் இருக்கிறது.

பாட்டுக்கும் instrumentalக்கும் ஆரம்ப கிடார் தீற்றல் வேறுபடுகிறது.instrumentalல் வரும் ஹம்மிங்கைக் (0.23 - 0.33) கேளுங்கள் சிலிர்க்க வைக்கிறார்.Heavenly humming!

Stunning maestro!

இதில் வரும் ”என்ன என்ன கனவு கண்டாயோ” என்ற பாட்டும் அருமை.


ராஜேஷ் வைதயாவின் வலை http://www.rajheshvaidhya.com/

Saturday, April 17, 2010

அனானிவாலா,தொகுப்பாளினி,கொலை,சுஜாதா

அசோக் நகர் கொலை மர்மம் விடுபட்டுவிட்டது.”நிஜங்கள், புனைவுகளை விட வினோதமானவை”என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

”டாமின்” அதிகாரி,அவர் மனைவி,பணிப்பெண் மூன்று பேரையும் கொன்றவர்களில்(நவம்பர்-2008) ஒருவர் ஒரு வருடம் அமுக்காக போலீஸ் கூடவே இருந்திருக்கிறார்.அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கம்புயூட்டர் சர்வீஸ் டெக்னிஷியனாக.


சொந்த கார் இருந்தும் கொலையாளி நடத்திய டிராவல்சில்தான் கார் வாடகைக்கு அந்த அதிகாரி எடுப்பாராம்.அவருடன் நட்பாகி அவரின் பணம்,நகை விவரங்களை தெரிந்துக்கொண்டு இந்த கொலையை நடத்தி இருக்கிறார்கள்.

நீதி: வெளியாட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவும்.
_________________________

கிரிக்கெட்டில் பாரூக் ”என்ஜினியர்”, நாரி “காண்டராக்டர்” போன்ற பெயர்கள்  சிறு வயதில் கேட்கும்போது வினோதமாக இருக்கும்.ஏன் தொழில் சார்ந்த பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள் என்று. பிறகாலத்தில்தான் தெரிந்தது இவர்கள் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் என்று. இவர்களுக்கு பெரிய வரலாறே இருக்கிறது.தங்கள் முப்பாட்டனார் செய்த தொழிலை பெயரோடு சேர்த்துக்கொள்வது.

டாட்டா,காத்ரெஜ்,வாடியா,ஹோமி பாபா,சூபின் மேத்தா போன்றவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

சில சுவராஸ்யமானபார்சி பெயர்கள்; காஸ்வாலா,கீதா டாக்டர்,டயர்வாலா,காண்டீன்வாலா,ரோன்னி ஸ்குரூவாலா,சோடா-மூடி-ஒப்பனர்வாலா,
டாரூவாலா,ஒயின்வாலா. இதில தவுசண்ட் வாலா சேருமா?

இவர்களின் மூப்பாட்டனர் காலத்தில் பிளாக் இருந்திருந்தால் “பிளாக்வாலா” “பின்னூட்டம்வாலா” “அனானிவாலா” இருந்திருப்பார்கள்.
_________________________

தொலைக்காட்சிகளில் ஆளுமைகளைப் பேட்டி எடுக்கும் தொகுப்பாளினிகள் எடுக்கப்போகும்
துறையைப் பற்றி ”ஹோம் வொர்க்” செய்வது மாதிரி தெரியவில்லை.ஆளுமையை பார்த்து”கெக்கே பிக்கே” என்று இளித்துக்கொண்டு அல்லது கையை ஆட்டிக்கொண்டு ‘ஏனோதானோ” என்று எதையாவது கேட்டுக்கொண்டு எதற்கும் உதவாமல் வேஸ்ட் செய்கி்றார்கள்.

“ கேள்வி கேட்பவர்கள்(பேட்டியில்)  என் பதிலைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படுவதில்லை.அதன் சடுதியில்,விரலின் நகப்பூச்சை வருடியபடியே  அடுத்த கேள்வியை யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்”.
-  சுஜாதா

Friday, April 16, 2010

பூபாளம் இசைக்கும் -இளையராஜா-BGM

மேஸ்ட்ரோ கிராமம்,மாந்தோப்பு,குடத்துடன் தாவணிப் பெண்,காதல் அரும்பும் தருணம்,காலில் முள் எடுத்தல்,ஸ்லோ மோஷன்,பூக்கள்,வயல், மண்டபம் ஒளிந்து ஒளிந்து தலை நீட்டுதல்போன்ற திரையில் தெரியும் காட்சிப் படிமங்களுக்கென்றே ஒரு ஸ்பெஷல்(வெரைட்டியான) பின்னணி இசைப்பார்.

அது  ”தூறல் நின்னு போச்சு”லும் உண்டு.

”தூறல் நின்னு போச்சு”படம் (1982) ரிலீசாகி கிட்டதட்ட 28 வருடம் ஆகிவிட்டது.படத்தில் வரும் ஒரு அற்புத மெலடி “பூபாளம் இசைக்கும்” பாடல்.இன்னும் பிரஷ்ஷாக காதில் /மனதில் இசைப்படுகிறது. காரணம் கிளாசிகல் மெலடி டச். கிளாசிகலாகப் பாடியவர்கள் ஜேசுதாஸ்-சுனந்தா.

அடுத்து முக்கியமான காரணம் (எனக்கு) பாட்டுக்கு முன் வரும் இன்னதென்று அறியமுடியாத எல்லா இசை மணமும் கலந்து வருடும் இசை.மேஸ்ட்ரோவை தவிர யாரால் கொடுக்க முடியும்.

இதில் நடித்த நடிகை சுலக்‌ஷணா அப்போதைய த்ரிஷாவாக இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். பாக்யராஜ்ஜைப் பார்த்து ”மச்சம்டா” என்று வெம்பி வெதும்பி(னான்)னார்கள்.

பின் வரும் வீடியோ“பூபாளம் இசைக்கும்”பாடலுக்கு முன் வரும் வருடும் பின்னணியோடு கொடுக்கப்பட்டிருக்கிறது.sharanKayக்கு நன்றி.

முதலில்  0.24-0.33 சிலிர்க்கும் இசைத் துளிகள். அடுத்து 0.38 - 0.55 லீடில் சிந்த்ஸைசர் அதைத்தொடரும் கிளாசிகல் மிருதங்கம்.பொதுவாகதோல் கருவிகள் ரொமான்ஸூக்கு இசைக்க மாட்டார்கள். மேஸ்ட்ரோ அதிலேயே காதலை குமுறுகிறார். அட்டகாசம். 1.38ல் புல்லாங்குழல் ரொமான்ஸைக் கூட்டுவது அருமை.

பாட்டின் 2.56 -3.03 ராஜாவின் வழக்கமான பிரமிக்க வைக்கும் இசை.பிறகு வருவது பாக்கியராஜுக்கு.

”நெஞ்சத்தைக் கிள்ளாதே” வரும் ஒரு BGM.Yowan 1977 நன்றி.”தூ.நி.போ”கொடுத்தவர்தான் இதையும் கொடுக்கிறார்.
இதற்கு ( you tube)வந்த கமெண்டை கிழே கொடுத்துள்ளேன்.

Comment - 1

krishnbimanagar Brush rhythm is good in the first half...And of course, lovely Pizzicato of the Double Bass making...Lovely Bass for the flute in the start of this BGM...
There is a Guitar(is it a Classical Guitar? Its difficult to make out the difference between Classical and the conventional metal stringed Acoustic guitar) at 00:12 which reminds me of one of Bach's fugue works...This guitar plays parallel to the flute..
from 00:38 onwards, there are Counterpoints between the Double Bass..
9 months ago

 Comment -2
 krishnbimanagar The second half, along with the piano, the Phaser effect pedal is used to bring about the Wah Wah effect on the guitar...01:17, another Phaser effect Guitar replies to the piano with the wah effect as rhythm!Funk music! 01:22 to 01:34, I simply love that Phaser effect lead and I can mimic that guitar sound!
 

All good things in music and Good music comes from Maestro's studio only!

 

Wednesday, April 7, 2010

அங்காடித் தெரு - விமர்சனம்

எப்படித்தான்  அவ்வளவு ரகத்துணிகளையும் காட்டி, கஸ்டமர்களுக்கு எதுவும் பிடிக்காமல் போய்,மீண்டும்  பொறுமையாக (திட்டிக்கொண்டே)அழகாக அடுக்கி வைத்து , மறுபடியும் அடுத்த கஸ்டமருக்கு......? என்று பல முறை யோசித்ததுண்டு.

இதுக்குத்தான் சம்பளம் கொடுக்கிறாங்க என்று கஸ்டமர்கள் சொல்வதுண்டு.ஆனால் இந்த குத்தலுக்கு மேல்  இவர்களுக்கு சொல்ல முடியாத ரணங்கள் இருக்கிறது.

நடிகைகளின் விளம்பர சிரிப்பில் பளபளக்கும் பிரம்மாண்ட அடுக்குமாடி துணி கடைகளில் வேலைப் பார்க்கும்(நீல காலர் தொழிலாளர்கள்?) விற்பனைப் பெண்/ஆண் வர்க்கத்தின் வேலையில் சந்திக்கும் அவலங்களை நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளாக அண்ணாச்(சீ)ங்காடித் தெருவில் (ஆவணத்)திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.

இங்கு வேலை பார்க்கும் சேல்ஸ்பிரிவு பெண்/ஆண்களை ஒரு முறையாவது  உற்று பார்க்க வைத்துவிட்டா இயக்குனர்.

ஆரம்பத்தில் ஒரு அண்ணாச்சி கடைக்கு நன்றி சொல்லிவிட்டு,அண்ணாச்சி வட்டாரவழக்கே பேசவிட்டு, மெயின் அண்ணாச்சி அங்காடித் தெருவிலே நடப்பதாகக் காட்டி,ஒரு அண்ணாச்சியே நடிக்க விட்டு, அண்ணாச்சி வட்டரா பெயர்களேயே சூட்டி“இதில் வரும் நிகழ்ச்சிகளும், கதா பாத்திரங்களும் கற்பனையே” என்கிறார் இயக்குனர்.படம் முழுவதும் அண்ணாச்சிகள்,அக்காச்சிகள்தான்.

நெம்ப தெகிரியம் ஜாஸ்தி அண்ணாச்சி.இந்த மாதிரி சென்னையில் அடுக்கு மாடி செந்தில் முருகன் துணிக்கடையில் கவுண்டர் சேல்ஸ் வேலைப் பார்க்க்கிறார்கள் ஜோதிலிங்கம், கனி. இங்கு இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் முதலாளிகளால் நடக்கும் தொல்லைகள் ஒரு(பல?) பக்கம்.இந்த தொல்லைக்ளுனூடே ஜோதிலிங்கம், கனிக்கும் காதல் மலர்கிறது.

பிறகு காதலுக்கும் கடையே எதிரியாகி பல வித ரணங்களுக்கு பிறகு  கடையை விட்டு வெளியேறுகிறார்கள்.இந்த மெயின் கதையோடு சில கிளை கதைகளூம்.

வழக்கமான காதலாக சொல்லாமல் பணியிட தொல்லைச்சார்ந்து  அதனுடன் பின்னிப்பிணைந்து love-hate ஆகச் சொல்லி இருப்பது அற்புதம்..எல்லா காட்சிகளுமே இப்படி ஒட்டி வரும்படி செய்த இயக்கனருக்கு பாராட்டுக்கள்.
குழப்பமில்லாமல் தெளிவாகப் போகும் திரைக்கதை.யதார்த்தமான வசனங்கள்.சென்னையில் கதை நடந்தாலும் முக்கால்வாசி “அண்ணாச்சி” மொழிதான்.

அச்சு அசலாக காட்சியின்  பின்னணிகளூம்.

அஞ்சலி(கனி), மகேஷ் (ஜோதிலிங்கம்) ரொம்ப யதார்த்தமாக வந்து தாக்குகிறார்கள். மகேஷுக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்.அஞ்சலியும் அச்சு அசலாக அப்படியே இருக்கிறார்.இதில் வரும் அஃறிணை உயர்திணை எல்லாமே உயிரோட்டத்துடன் உலாவ விடுகிறார் கேமரா மேன் ரிச்சர்ட் நாதன்.நண்பனாக வரும் பாண்டி,சூப்பர்வைசர் வெங்கடேஷ் இருவரும் மனதில் நிற்கிறார்கள்.

முதலில் வரும் சென்னை இரவு காட்சிகள் ரொம்ப யதார்த்தம்.

நடுவில் ”காதல்” படம் நினைவு வருகிறது.மகேஷின் முகம் நடிகர் பரத்தை வேறு நினைவுப்படுத்துகிறது.இந்த மாதிரி  ரெண்டு அல்லது மூன்று நாள் தாடி “பாண்டிபயல்கள்’ படத்திற்கு படம் தோன்ற ஆரம்பித்துவிட்டதால் ஸ்டிரியோடைப் ஆகி விட வாய்ப்பு இருக்கிறது. இனி வரும் படங்களில் தவிர்க்க வேண்டும்.

சரி... இவ்வளவு யதார்த்தமாக இருக்கும் படம்  நிறைவு  தருகிறதா?

படத்தின் நீள............ம்.வேண்டாத  ஒரு பக்க கதைச் சொருகல்கள் பல. முதலில் நெஞ்சில் அறைந்த வந்த பணியிட அவலக்காட்சிகள் ஒரு கட்டத்தில் ஓவர் டோசாகி நீர்க்கிறது. ஒரு கட்டத்தில் இயக்குனருக்கும் அண்ணாச்சிக்கும் ” பெர்சனல் வெஞ்சன்ஸ் போல” என்றும் எண்ணும்படி வைக்கிறார்

அடுத்து பழைய கால படம் போல ஓடினார்கள்,ஓடினார்கள் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினார்கள் என்றபடி சோகத்தைப் ரெடிமேட் பீஸ் போல் அடுக்கித் தாக்குகுகிறார் வசந்தபாலன்.ஓவர் மெலோடிராமா. யதார்த்தம் நீர்க்கிறது. “நறுக்” என்று சொல்லி அறைந்திருக்கலாம்.

வெட்டி ஒட்டி இருந்தால் படத்திற்குப் படமும் அவர்களின் அவலங்ளைச் சொன்ன மாதிரியும் பளிச்சென்று இருந்திருக்கும்.

இப்படத்தில் இரண்டு பேர் இசையமைத்திருக்கிறார்கள்.விஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ்.

”அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்ற கல்யாணி ராகத்தில் போடப்பட்டமெலடி இனிமை."உன் பெயரை சொல்லும்” ஓகே ரகம்.”கண்ணில் தெரியும்” அப்பட்டமான ரஹுமான் சாயல் பாட்டு.

பின்னணி இசை: விஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ். இரண்டு பேரையும் அதே அண்ணாச்சி கடையில் சேல்ஸ் பிரிவில் ஒரு வருடம் வேலை பார்க்கச் செய்ய வேண்டும். பின்னணி படு மட்டம்.காட்சியின் உணர்ச்சிகளைப் வெளிப்படுத்தாமல் ”“டொட்டொய்ங் டொட்டொய்ங்”வாசிக்கிறார்கள்.அற்புதமாக மூட் லைட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சியின் செத்து சவமாகிறது.

உதாரணமாக கடை முதலாளி பிள்ளையாரை கும்பிடும் காட்சிப்பின்னணியில்,வயலினில் வெஸ்டர்ன் கிளாசிகல்.பொருந்தவே இல்லை.

படத்தில் கும்பல் கும்பலாக கேரக்டர்கள் வருவதால் இசைக்கும் கும்பலா?நான் வலது பக்கம் நீ இடது பக்கம் என்று பிரித்து அடித்திருக்கிறார்கள்.


டெயில் பீஸ்:

படத்தின் இடைவேளையில் “நந்தலாலா” வின் முன்னோட்டம் காட்டப்பட்டது.அதில் ஒரு லாங்க் ஷாட் காட்சியில், highwayல் மோட்டாபைக் ஒன்று வருகிறது.அதன் பின்னணி இசையை கேட்க வேண்டிவிஜய் ஆண்டனி,ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

உடனே சங்கம் தியேட்டர் செல்லவும்.

இசை யார் ??????????

Monday, April 5, 2010

வலைத் திரை விமர்சனங்கள்....படிப்பதில்லை?!

வலைத் திரை விமர்சனங்கள்....படிப்பதில்லை ஆனால் படிக்கிறேன்.(????)பொதுவாக ரொம்ப ரொம்ப ரொம்ப ஊன்றிப் படிப்பதில்லை.தொலைக்காட்சியும் அஃதே.

பத்திரிக்கைகளிலும் இதேயே பின்பற்றுகிறேன்.காரணங்கள் பல இருக்கின்றன.படம் பார்க்கும்போது பின் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்(ஏற்கனவே பார்த்துவிட்டு இப்போது அல்டுபவர்) முன்னோட்டம் விட்டுக்கொண்டே வந்தால் எப்படி இருக்கும்.அதே பீலிங்தான்.

1.கதைத் தெரிந்து பார்க்கும்போது சுவராஸ்யம் போய்விடும்
2.விமர்சகரின் பார்வை மண்டையில் தேங்கி சொந்தப்புத்தி மழுங்கும்
3.பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவரும் படங்களின் விமர்சனத்தை தொடுவதில்லை
4.வேண்டாத விஷயங்கள் பொழுதுபோக்கு வால்யூவைக் குறைக்கும்
5.வேண்டாத விஷயங்கள், பார்க்கும்போது ஹைலைட் ஆகும்.
6.என் சொந்த ரசனையில் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம்தான் முக்கிய காரணம்.

”ஆனால் படிக்கிறேன்” எப்படி? அதற்கு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறேன்.ஒரு பறவைப் பார்வை(bird"s eyeview)பார்ப்பது.கதை விவரித்தலோ,நுண்ணரசியலோ,காட்சி விவரித்தலோ,படத்தின் மெயின் பாயிண்ட் பற்றியோ,குறை நிறைகள் பற்றியோவரும் வரிகளை மாஸ்க்(mask)அல்லது மைம்(mute/mime) செய்து படிப்பது.அதாவது ”சர்ரென்று தாவி” அடுத்த அல்லது கடைசிக்கு வந்துவிட வேண்டும்.

எல்லா விமர்சனமும் இது மாதிரி படித்து சக்கையாக பிழிந்தால் “ஓகே அல்லது நாட் ஓகே” தெரிந்துக் கொள்ளலாம்.

இதற்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

விமர்சனம் படிக்கமாலேயே சில படங்களைசுலபமாக நாடி பிடித்துவிடலாம்.அதிக அளவில் வரும் விமர்சனம்.”சர்ரென்று தாவி”படிக்கும் டெக்னிக்லிலும் கண்டுகொண்டேன்.

(ஈரம்,ஆ.ஒ.,வி.தா.வ,உ.போ.ஒ).உதாரணமாக ”ஈரம்” படத்திற்கு நிறைய விமர்சனங்கள். படம் ”சங்கர் தயாரிப்பு” என்ற பில்ட் அப் தவிர அதற்கு வேறு ஒன்றும் இருந்தார் போல் தெரியவில்லை.ஆனால் படம் சூப்பர்.

தீராத விளையாட்டு பிள்ளை,ஜக்குபாய்,போர்களம்,மாத்தியோசி,தம்பிக்கு இந்த ஊரு,அசல்,மற்றும் கேபிள் சங்கர் மட்டும் பார்க்கும் படங்கள்.இதெல்லாம் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை என்பது  விமர்சன எண்ணிக்கையில் தெரிந்தது.

சில படங்களின் விமர்சனங்களை தொடுவது கூட இல்லை.

சினிமா தவிர மற்ற பதிவுகளையும் ஒரு ஸ்பீட் ஸ்கேன் செய்தால் சிலது “வெத்து” பதிவு என்று தெரிந்துவிடும்.எஸ்கேப் ஆகிவிடலாம்.சில பதிவுகள் முதல் இரண்டு வரிகளிலேயே சாயம் வெளுக்கும்.

படம் பார்த்தவுடன் ”சில” விமர்சனங்கள் மட்டும் ”ஊன்றி” படிப்பதுண்டு.பார்வையை மேம்படுத்திக்கொள்ள.

படிக்க திரை விமர்சனம்:நாகேஷ்-சோப்பு, சீப்பு,கண்ணாடி-சிரிப்பு

Sunday, April 4, 2010

நாகேஷ்-சோப்பு-சீப்பு-கண்ணாடி-சிரிப்பு

பூட்டிய தனி விட்டில்(நெ.101) “மங்கி மார்க் டாய்லெட்” அயிட்டம் சேல்ஸ்மேன் (தன் சேல்ஸ்பேக்குடன்) மாட்டிக்கொண்டு முழிப்பதுதான் கதை.இந்த “மங்கி மார்க் டாய்லெட்” அயிட்டம் சேல்ஸ்மேன் நாகேஷ்.பின்னி எடுக்கிறார்.

நாகேஷின் ஒல்லி உடல்மொழி பெரிய பலம்.

இந்த மாதிரி வித்தியாசமான கதை பார்த்ததுண்டா தமிழில்?வித்தியாசமான டைட்டில்.ஆரோக்கியமான காமெடி,டைமிங் சென்ஸ்.பூட்டிய விட்டிற்குள்ளேயே காதலும் உண்டு.லாஜிக்  சற்று உதைத்தாலும் மிகவும் ரசிக்கக்கூடிய காமெடி.பாலசந்தரின்  டிராமா நெடி அடிக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது.அடுத்து இதில் injected comedy இல்லை.இயல்பாய் இருக்கிறது.

படம் பெயர் “சோப்பு, சீப்பு,கண்ணாடி”.1968ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது நம் தமிழகத்தில் தம்மை அழகுப்படுத்திக்கொண்டு ஸ்டைல் காட்டும் டிரெண்ட்பெண்களிடம்  ஆரம்பித்தது.கதாநாயகன் நாகேஷ் கதாநாயகி விஜய் நிர்மலா.

இது பிளாக் அண்ட் ஒயிட்டில் வெளி வந்தஉண்மையிலேயே “முழு நீள நகைச்சுவைத் திரைப்படம்”.டைரக்‌ஷன் திருமலை மகாலிங்கம் என்பவர்.இவர் சமையல்காரன்,மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சாதுமிரண்டால்,நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கியவர்.

 நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் சோ புகுந்து விளையாடுவார்.

”எதிர் நீச்சல்””தில்லான மோகனாம்பாள்””கலாட்டா கல்யாணம்”படங்கள் வந்தது அதே 1968ல்.இதிலெல்லாம் நாகேஷ் காமெடி ரகளைதான்.எதிர் நீச்சல் கொஞ்சம் சீரியஸ் கம் காமெடி.


 ஆரம்ப ரயிலில் நடக்கும் காமெடி அட்டகாசம்.உச்சம்.இந்த படத்தில் இன்னொரு விசேஷம் நாகேஷ் தவிர மற்ற நடிகர்களும்  தூள் கிளப்புவார்கள்.இதில் உன்னிப்பாய் கவனிக்க வேண்டியவர் மற்றொருவர்.அவர் ஏ.கருணாநிதி.நாகேஷுடன் இருப்பவர் ஏ.கருணாநிதி.சமையல்காரராக வருபவர்.இவரின் பாத்திரப்படைப்பு கன்னாபின்னாவென்று சிரிப்பு வரும்.

இதில் அவரின்  ”அதிகார புலம்பல்” நடிப்பு அபாரம்.வீட்டின் ஒரு சாவி இவரிடம் இருப்பதால் இவர் “ஹைகிரேடாக”நடந்துக்கொள்ளும் குணச்சித்திரம்.சில இடங்களில் நாகேஷேயே மிஞ்சுவார். இவரின் உடல் மொழி அட்டகாசம். இவருக்கும் இவர் முதலாளிக்கும் இருக்கும் ” கெமிஸ்ட்ரி” புதுசு.இவரேதான் “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” படத்தில் டிரைவராக வருவார்.இவருக்கு சார்லி சாப்லின் ஜாடை அடிக்கும்.(அடர்த்தியான புருவம்?)

டைப்பிஸ்ட் கோபு.எஸ்.வி.சகஸ்ரநாமம்,ஏ.வீரப்பன்,உசிலை மணி, போன்றவர்களும் சிரிப்பாக வந்து போவார்கள்.இசை டி.கே.ராமூர்த்தி.

இந்த படம் ராஜ் அல்லது ராஜ்பிளஸ்ஸில்  போடுவார்கள். மிஸ்ஸே செய்ததில்லை.One of the classic film of Master Blaster Nagesh.விவரம் தெரியாத வயதில் தியேட்டரில் பார்த்து ரசித்தது.

ரயிலில் நாகேஷூம் வீரப்பனும் அடிக்கும் கூத்து மறக்கவே முடியாது.(யூ டூபில் இல்லை).படத்தின் கிளைமாக்சும் செம்ம காமெடி.சார்லி சாப்ளின் படத்தின் சாயல்.முக்கால் படம் முழுவதும் நாகேஷூக்கு வெள்ளை சட்டை,கருப்பு பேண்ட்,கருப்பு டை காஸ்ட்யூம்தான்.

நாகேஷ் எப்படி பின்னுகிறார் பாருங்கள்:

13/30 சோப்பு சீப்பு-நாகேஷ்-விஜய்நிர்மலா

17/30 ஏ.கருணாநிதி காமெடி
 
24/30 நாகேஷ -கண்ணாடி காமெடி

26/30- திருடன் நாகேஷ் காமெடி

நாகேஷின் மற்ற காமெடிப் படங்களுக்கு இணையாக இருக்கும் இந்த படம் அந்த படங்கள் போல் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

அதான் சோப்பு,சீப்பு, கண்ணாடியின் சோகம்.