Sunday, September 6, 2009

என் வாய் நாத்தமடிக்துங்கறாள்

முத்தமிழ் தவிர  ”விளம்பரத் தமிழ்” என்ற ஒன்று இருக்கிறது.எண்பதுகளில்ஆங்கிலம் அல்லது இந்தியில் தயாரிக்கப்பட்ட பற்பசை(tooth paste)விளம்பரம் ஒன்று தமிழில் டப் செய்யப்படும்போது எப்படி நாறுகிறது பாருங்கள்!தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.


மழுங்க ஷேவ் செய்யப்பட்ட வட இந்திய காதலன் தன் காதலியின் முகத்திற்கு  அருகே சென்று ஆசையாகப் பேசுவான்.சட்டென காதலி முகத்தைத் திருப்பிக்
கொள்வாள்.அடுத்த ஷாட்டில் காதலியின் தோழி “என்னாச்சு” என்பாள்.


காதலியின் பதில்: “அவர் வாய் நாறுது” .


வேறொரு விளம்பரப் படம்.அதே சீன். ஆனால அடுத்த ஷாட்டில் காதலியின் தோழிக்கு பதில் காதலனின் தோழன்  “என்னாச்சு!? ஏன் முகத்தைத்திருப்பிக்
கொள்கிறாள்” என்பான்.


காதலன் பதில்:“என் வாய் நாத்தமடிக்துங்கறாள்”


இதன் ஆங்கில உரையாடல்களை உங்களால் ஊகிக்க முடிகிறதா?மொழிபெயர்ப்பு அவ்வளவு மணக்கிறது!கொஞ்ச காலம் கழித்து  காதலி டப்பிங்கைத் திருத்திக்கொண்டாள் “அவர் வாய் துர்நாற்றம் வீசுது”





இப்போதெல்லாம் இந்த ”விளம்பரத் தமிழ்” நிறைய முன்னேறி விட்டது.நல்ல மொழி பெயர்ப்பு.சரியான  டப்பிங் தமிழ் பேசும் ஆட்கள்.அடுத்து நேரடி தமிழ் விளம்பரங்கள்.


அதிக ”போஷாக்கு”  என்பது மாறி அதிக “சக்தி”(அ)”ஊட்டச் சத்து”


ஆனாலும் குழந்தைகள் பேசும் (ஆங்கிலம் அல்லது இந்தியில் எடுக்கப்பட்ட) விளம்பரப் படங்களில்  டப்பிங் தமிழைக் கேளுங்கள்.உணர்ச்சியற்று ஒப்பிப்பதுப் போல இருக்கும். ஏன் அது? synchronisation?


எல்லா தலைமுறையும் கேட்டு வளர்ந்த விளம்பரப் படம் “ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைஃப் பாய்.......லைஃப் பாய் எவ்விடமோ.......”


யூ டியூபில் ஒரு டூத் பேஸ்ட் விளம்பரம் பாருங்கள். சூப்பர்!

சிறுகதையின் கடைசி டிவிஸ்ட்?


4 comments:

  1. விக்கோ வஜ்ரதந்திக்கு வர்ற பாடலை விட்டுட்டீங்க...??
    இப்பல்லாம் தமிழ்லயே நல்ல விளம்பரங்கள் எல்லாம் வருதே...
    சன் டைரக்ட்டோட ‘டண்டணாடன்’ எனக்குப் பிடிச்சது.
    விளம்பர ரீச்லயும் ஏ,பி,சின்னு மூணு செண்டர் இருக்குதே...
    தமிழக ஜவுளிக்கடை விளம்ப்ரங்கள் வட இந்திய நங்கைகளால் அரங்கேறும் கொடூரமுமுண்டு.
    சேலை கட்டி போஸ் கொடுக்கக்கூட தமிழ்நாட்டில ஆள் இல்லையே...(சினேகாவைத் தவிர)
    டூத்பேஸ்ட் விளம்பரம் பார்த்தேன்.. இதில் கூடவா?

    ReplyDelete
  2. //விக்கோ வஜ்ரதந்திக்கு வர்ற பாடலை விட்டுட்டீங்க...??
    இப்பல்லாம் தமிழ்லயே நல்ல விளம்பரங்கள் எல்லாம் வருதே...//

    பதிவு பெரி்சா ஆயிடும்னு விட்டுட்ேன்.

    ந்ன்றி.

    ReplyDelete
  3. சூப்பர்?

    This is one of the most racist ad that I have ever seen. Pity, you think this is a great ad.

    ReplyDelete
  4. வாங்க இலவசக்கொத்தனார்.கருத்துக்கு நன்றி.

    //Pity, you think this is a great ad.//

    I agree this ad is a racist one. Since I am a short story writer and fond of short stories my word "super" said on momentary enjoyment
    (சிறுகதையின் கடைசி டிவிஸ்ட்?) of the twist of the ad at the end ignorant of racist content.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!