நேற்று டிவி ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே வரும்போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு சற்று அசந்துவிட்டேன். எனக்காகவே காத்திருந்தவர் போல் பாட ஆரம்பித்தார்.பாடி சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்துவிட்டது.
அந்த நிகழ்ச்சி “முப்பொழுதும் கற்பனைகள்” படத்தின் இசை வெளியிட்டு விழா. ஜெயா டிவி.
மேடையில் பாடிக்கொண்டிருந்தவர் சித்தாரா கிருஷ்ணகுமார் என்பது நெட்டில் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன்.அந்தப் பாடல் “கண்கள் நீயே... கடலும் நீயே”.இசை: ஜி.வி.பிரகாஷ்.படத்திலும் இவரேதான் பாடி இருக்கிறார்.
பாம்பேஜெயஸ்ரீ, சித்ரா குரலையும் மிக்சியில் போட்டு அடித்துக்
கலந்தாற் போல் இனிமையான ஜீவனுள்ள குரல்.ஹைபிட்ச்சில் மழலை/கீச் தட்டாமல் அற்புதமாக வழுக்கியபடி பாடுகிறார்.கிளாசிகல் டச்.நல்ல தமிழ் உச்சரிப்பு.
ரொம்ப நாளைக்குப் பிறகு தமிங்க்லிஷ் இல்லாமல் பாடும் பெண்ணின் மெலடியோடு உயிர்துடிப்பானப் பாட்டு கேட்டேன்.ரொம்ப சந்தோஷ் ஆனேன்.
தமிழில் இவருக்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.மலையாளத்தில் சாஜன் மாதவ் இசையில் ”யாக்ஷியும் நிஜனும்” படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.இன்னும் நிறைய மலையாள படப் பாடல்கள் பாடி உள்ளதாக தெரிகிறது. இக்குட்டி கேரளாவின்னு வந்துன்னூ.
தாமரையின் வரிகள் பாடலுக்கு மிகப் பெரிய பலம்.இப்பாடல் தெய்வம் தந்த பூவேவின் சாயல் வருகிறது.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான மெலடி வாசனை.
இவர் கேரளா ஜீவன் டிவியில் பாட்டுப் போட்டியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்கி உள்ளாராம். கிழ் உள்ள வீடியோவில் ஜானகி அம்மாவின் மலையாளப் பாட்டு ஒன்று பாடுகிறார்.
அந்த நிகழ்ச்சி “முப்பொழுதும் கற்பனைகள்” படத்தின் இசை வெளியிட்டு விழா. ஜெயா டிவி.
மேடையில் பாடிக்கொண்டிருந்தவர் சித்தாரா கிருஷ்ணகுமார் என்பது நெட்டில் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன்.அந்தப் பாடல் “கண்கள் நீயே... கடலும் நீயே”.இசை: ஜி.வி.பிரகாஷ்.படத்திலும் இவரேதான் பாடி இருக்கிறார்.
சித்தாரா |
கலந்தாற் போல் இனிமையான ஜீவனுள்ள குரல்.ஹைபிட்ச்சில் மழலை/கீச் தட்டாமல் அற்புதமாக வழுக்கியபடி பாடுகிறார்.கிளாசிகல் டச்.நல்ல தமிழ் உச்சரிப்பு.
ரொம்ப நாளைக்குப் பிறகு தமிங்க்லிஷ் இல்லாமல் பாடும் பெண்ணின் மெலடியோடு உயிர்துடிப்பானப் பாட்டு கேட்டேன்.ரொம்ப சந்தோஷ் ஆனேன்.
தமிழில் இவருக்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.மலையாளத்தில் சாஜன் மாதவ் இசையில் ”யாக்ஷியும் நிஜனும்” படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.இன்னும் நிறைய மலையாள படப் பாடல்கள் பாடி உள்ளதாக தெரிகிறது. இக்குட்டி கேரளாவின்னு வந்துன்னூ.
தாமரையின் வரிகள் பாடலுக்கு மிகப் பெரிய பலம்.இப்பாடல் தெய்வம் தந்த பூவேவின் சாயல் வருகிறது.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான மெலடி வாசனை.
இவர் கேரளா ஜீவன் டிவியில் பாட்டுப் போட்டியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்கி உள்ளாராம். கிழ் உள்ள வீடியோவில் ஜானகி அம்மாவின் மலையாளப் பாட்டு ஒன்று பாடுகிறார்.
சித்தாரா என்றால் வட மொழியில் காலை நட்சத்திரம்.மின்னுங்கள் சித்தாரா.வாழ்த்துக்கள்!
நானும் இந்தப் பாடலைக் கேட்டேன். கேட்டவுடன் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. நல்ல மெலடி.
ReplyDeleteNalla orticle. keep it up..
ReplyDeleteazifair-sirkali.blog
இனிமையான பாடல்.
ReplyDeleteநன்றி வெண்புரவி,அனானி.
ReplyDeleteதிரைக்கு நான் எழுதிய முதல் பாடலை இவர்தான் பாடினார். ரெக்கார்டிங்கில் உட்கார்ந்து இவர் பாடுவதை நேரிலேயே கேட்கும் (பார்க்கும்) வாய்ப்பு கிடைத்தது. அதன் ரிலீஸ் கொஞ்சம் தாமதமானதால் இவரை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் முப்பொழுதும் உன் கற்பனைகள் முந்திக்கொண்டது.
ReplyDeleteசித்ரன்
ReplyDeleteஆஹா.. ரொம்ப சந்தோஷம்!என்ன பாடல் படம்?
நன்றி.
ரொம்ப சூப்பரான பாட்டு சார். அர்த்தமுள்ள வரிகள். அருமையான உச்சரிப்பு. சில இடங்களில் பாம்பே ஜெயஸ்ரீ போலவும் சில இடங்களில் நேஹா பசின் போலவும் சில இடங்களில் "கரிகாலன் காலபோல " சங்கீதா ராஜேஸ்வரன் போலவும் இருந்தது. அதிலும் அந்த ராவணன் பற்றி வரும் வரிகள் (02:30 to 02:42) ரொம்ப ரொம்ப அருமை. தாமரை மறுபடியும் தன்னை ஒரு நல்ல கவிஞர் என்று நிருபித்து உள்ளார்.
ReplyDelete//சில இடங்களில் பாம்பே ஜெயஸ்ரீ போலவும் சில இடங்களில் நேஹா பசின் போலவும் சில இடங்களில் "கரிகாலன் காலபோல " சங்கீதா ராஜேஸ்வரன் போலவும் இருந்தது.//
ReplyDeleteரொம்ப சரி.
//அதிலும் அந்த ராவணன் பற்றி வரும் வரிகள் (02:30 to 02:42) ரொம்ப ரொம்ப அருமை. //
நானும் இங்கு சிலாகித்தேன். எழுத மறந்துவிட்டேன்.
நன்றி ரெண்டு.
good voice
ReplyDeletewell said.good voice mix of Bombay jaysree and Neha basin
ReplyDeleteThanks Srikanth Umashiv
ReplyDelete