வீடியோவில் நடந்த சாவிற்க்கு காரணம் ஆயிரம் சொல்லலாம். ஆனால் முக்கியமான காரணம் “முன் திட்டம் இல்லாமை”(planning).ஒரு ஆழ்துளை ஆராய்ச்சி(drill down analysis).
இடம்: மைசூர் ரயில்வே ஸ்டேஷன்.வண்டி:சாமுண்டி
எக்ஸ்பிரஸ்.அம்மா இறந்துவிட்டார்.பெண் படுகாயம்(?)
எந்த பிரச்சனைக்கும் Why-Why analysis? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என்று ஐந்து கேள்விகள் கேட்டு பிரச்சனையில் வேருக்குச் சென்று அதைக் களைய வேண்டும்.மேலோட்டமாக பிரச்சனையை அணுகக் கூடாது.
நிகழ்வின்(effect) உண்மையானக் காரணத்தை(cause) அறியவேண்டும்.”விதி” “அவன் செயல்” ”மங்கு சனி”எல்லாம் ஒரு நம்பிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் யதார்த்தம் வேறு.
மேற்கண்ட நிகழ்வு ஏன் நடந்தது.அதன் அடிவேர் என்ன?
ஐந்து ஏன்கள் கேட்டு அடிவேரைப் பிடிப்போம்.
இது சும்மா மொக்கையோ டமாஸ்ஸோ அல்ல.நிதர்சனம்.விஞ்ஞான பூர்வமானது.அந்த அம்மாவை நம் சொந்த அம்மா போல் கற்பனைச் செய்து பாருங்கள்.
ஓடும் ரயிலில் ஏறினார்
2.ஏன் ஓடும் ரயிலில் ஏறினார்?
சரியான நேரத்திற்கு ஸ்டேஷனுக்கு போகவில்லை
3.ஏன் போகவில்லை?
வீட்டிலிருந்துப் புறப்பட தாமதம் ஆகிவிட்டது.
4.ஏன் தாமதம்?
அது இது என்று பல வேலைகள்
5. ஏன் அது இது என்று பல வேலைகள்?
எதுமே, முக்கியமாக பிரயாணம் உட்பட சரியாக திட்டமிடவில்லை.
”அவசர எமர்ஜென்சி பிரயாணம்”என்று தப்பிக்க முடியாது.இதற்கும் ஒரு அவசர திட்டமிட்டுதான்(emergency plan) கிளம்ப வேண்டும்.
இந்த whyயை தலைகிழாக திட்டமிட்டு கிளம்புவதாக போட்டுப்பாருங்கள்.மகள் டாட்டா காட்ட அம்மா பதிலுக்கு சிரித்தபடி டாட்டா காட்டிக்கொண்டே போயிருப்பார்.
"பிளான் பண்ணா எதுவும் நடக்கிறதில்ல.டக்குன்னு திங்க் பண்ணுவேன் டக்குன்னு கிளம்பிடுவேன் “ இப்படி ஒரு கோஷ்டி எப்போதும் சொல்லிக்கொண்டு திரியும்.
திங்க் பண்ணிட்டு டக்குன்னு வாயு (திங்க் பண்ணாமலும்)விடலாம்.பாத்ரூம் போகலாம்.
சொறிந்துக்கொள்ளலாம்.கொட்டாவி விடலாம்.சாமுண்டி எக்ஸ்பிரஸ்ஸைப் பிடிக்க முடியாது.
(டக்குன்னு இப்படி ஒண்ணு ( நண்பர்) வண்டியில்
கிளம்பிப்போய் வாரிக்கொண்டு விழுந்தது.சைடு ஸ்டாண்டு மடக்கப்படவில்லை.இவரு “டக்குன்னு” திங்க் பண்ணிட்டாரு.அதான் காரணம்)
_____________________________________
கிழ் உள்ளவர் தப்பித்துவிட்டார்.ஆனால் பைக்.ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்? படம் வரைந்து பாகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
பைக்கின் தலைவிதி அப்படி இருந்தா யாரால மாத்த முடியும்?
அம்மா மரணம் ரொம்பவே கனத்து விட்டது. வண்டி கிளம்பியபடியால் அப்படியென்ன அவசரம் என்று ஏறுவதை கைவிட்டிருக்கலாம்.
ReplyDeleteஏன் தோன்றவில்லை?
அவசரமா? ப்ளானிங் இல்லையா? அல்லது..விதியா?
எனக்கு கொஞ்சமே கொஞ்சம் விதியின் மீதும் பழி போட தோன்றுகிறது.
நன்றி ஷக்திபிரபா.
ReplyDeleteமிக மிக சிறிதளவு ரிஸ்க் என நினைத்தாலும் அதை செய்யாமல் இருப்பதே நல்லது !
ReplyDeleteஎங்க கிளம்பினாலும் தாமதம் ஏற்படக் காரணங்கள் உண்டா என யோசித்து, அதற்கான நேரத்தையும் ஒதுக்கிவிட்டு கிளம்புவது என் வழக்கம். திட்டமிடாத அந்த அம்மாவைப் பார்க்கையின் மனம் கனத்தது. அவசியமான விஷயத்தைச் சொல்லியதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி யூர்கன் க்ருகியர்
ReplyDeleteநன்றி கணேஷ்
மிகப் பல விபத்துகளை தவிர்த்திருக்கலாம் என்பது உண்மை.
ReplyDeleteஆனால், இவற்றை மீறி, ரயிலில் ஏற்றி விடப் போனவர் தவறி விழுந்து கையை இழந்த நிகழ்வும் எனக்குத் தெரியும்..:-((
ஏன் ஏன் ஏன் எனும் கேள்விகளை எல்லோரையும் கேட்டுக் கொள்ள வைக்கும் இந்த விழிப்புணர்வுப் பகிர்வு.
ReplyDeleteayyo parkave kodumaia irrukuthu
ReplyDelete