Wednesday, November 30, 2011

ஹாலில் பெய்த மழை -கவிதை



நடு ஹாலில் கொட்டும் மழைக்கு
குடை விரித்த குழந்தை
விரித்துப்போட்டபடி தூங்கிவிடுகிறது

அம்மா அப்பா அண்ணன் தாத்தா பாட்டி
அத்தை மாமா சித்தி சித்தப்பா
பெரியம்மா பெரியப்பா பொம்மைகள்
எதிர்வீடு பக்கத்து வீட்டு குழந்தைகள்
கை நீட்டிப் பார்க்கிறார்கள்

மழை நின்று விட்டது

ஒருவர் பின் ஒருவராக
சத்தம் போடாமல்
குடைக்குள் இருந்து கிளம்புகிறார்கள்

10 comments:

  1. நல்லா இருக்கு. பல perspectives உள்ளடக்கி இருக்கு. நட்சத்திர பதிப்புக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி ஷக்திபிரபா.

    ReplyDelete
  3. //அம்மா அப்பா அண்ணன் தாத்தா பாட்டி
    அத்தை மாமா சித்தி சித்தப்பா
    பெரியம்மா பெரியப்பா பொம்மைகள்// classic!

    ReplyDelete
  4. நன்றி மிடில் கிளாஸ்மாதவி. பிளாக் அண்ட் ஒயிட் அம்மா சிறுகதைப் படித்தீர்களா?

    ReplyDelete
  5. நன்றி துரைடேனியல்.

    ReplyDelete
  6. "..நடு ஹாலில் கொட்டும் மழைக்கு
    குடை விரித்த குழந்தை.."

    அழகான ஆரம்பம்.
    சிந்திக்க வைக்கும் இறுதி வரிகள்.

    ReplyDelete
  7. மிக அருமை. ரசித்தேன்:)!

    ReplyDelete
  8. அன்புள்ள ரவிஆதித்யா,
    மனமார்ந்த நட்சத்திர வார சிறப்புக்கு வாழ்த்துகள்!
    நட்சத்திரப் பதிப்புகளுக்கும் என் பாராட்டுகள்!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!