ஒவ்வொரு தடவையும் கொல்கொத்தா(Kolkata) செல்லும்போது அது ஒவ்வொரு மாதிரி இன்னதென்று புரியாமல் என்னை வசீகரிக்கிறது.இந்த தடவை மனதின் ஒரு மூலையில் சொந்த சோகம் ஒன்று உறுத்தியபடிதான் ஊர் சுற்ற முடிந்தது.அது என்ன?கடைசி பாராவில்.
நாங்கள் பிரயாணம் செய்த கோரமண்டல் கம்பார்ட்மெண்ட்(ஏசி 2 டயர்) மட்டமான கண்டிஷன்.டமால் டிமீல் என்று இணைப்பில் அதிர்வு.குட்டி கரப்பான்கள்.அதே வழக்கமாக டிடிஇயை சுற்றி வளைத்தபடி அலையும் பிரயாணிகள்.திரும்பும்போது ஹெரா மெயில் பிரயாணம் நன்றாக இருந்தது.
அங்கு கால் வைத்தவுடன் முதல் உணர்வு “சுதந்திர இந்தியாவிற்கு முன்” இருப்பது போல்தான்.காரணம் இன்னும் மாறாத கிழக்கு இந்தியா கம்பெனி ஆட்சித் தோற்றங்கள்.ஹவுரா பாலம்,ஊரும் ட்ராம்கள்,மினி பஸகள்,மஞ்சள் பூத்த வீடுகள்,பச்சை ஷட்டர் ஜன்னல்கள்,கை ரிக்ஷாக்கள்,புழுதி,ஏழைகள்.
பூஜா கொண்டாட்டங்கள் முடிந்து உதரியாக அங்கும் இங்குமாக தெரு மூலைப் பந்தல்களில் கொள்ளை அழகாக துர்கா காட்சியளிக்கிறாள். ஒரு மாதிரி fancy dress பொம்மை அலங்காரங்கள்.அருமை.
நம்ம ஊர் மாதிரி வானாளவிய புத்தம் புது சாப்டுவேர்
கட்டிடங்கள்,தனி வீடை இடித்துவிட்டு பல அடுக்கு மாடி கட்டடங்களும் குறைவுதான்.
கொல்கொத்தா இந்தியாவின் தலை நகரமாய் இருந்தது ஒரு காலத்தில்.ஒரு முறை ராஜீவ் காந்தி “இறந்துகொண்டிருக்கும் நகரம்” என்று சொன்னார்.அவ்வளவு பிரச்சனைகள் அந்த ஊரில் முன்னொரு காலத்தில்.
மெளலி ஏதோ ஒரு படத்தில் சொல்லுவார் “உங்க ஊருக்கு கப்பலை தவிர எல்லா வாகனங்களிலும் பிரயாணம் செய்யனம்”.ஆனால் இங்கு கப்பலும் (ferry service)இருக்கிறது.எதிலும் எங்கும் எல்லோரும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்கள்.அதனால் பைக், ஸ்கூட்டர்,கார் எல்லாம் ரொம்ப அரிதாக தென்படுகிறது.அடுத்து இங்கு வாங்கும் திறமை(purchasing power) குறைவு என்கிறார்கள்.
பெங்காலிகளில் நிறைய(90%) மிடில் கிளாஸ் மாதவன்கள்?
இப்போது கை ரிக்ஷாக்கள் மற்றும் மினி பஸ்கள் குறைந்துவிட்டன.ஆனால்ஆட்டோக்கள் அதிகமாகி விட்டன.இங்கு மாதிரி ஆட்டோ பகல் கொள்ளை கிடையாது. மெட்ரோ ரயில் ரொம்ப வருஷமாக ஓடுகிறது.அதிலும் பிரயாணம் செய்தாகிவிட்டது. டிக்கெட் கிடையாது. அதற்கு பதிலாக ஒரு கருப்பு கலர் கேரம்போர்ட் காயின் மாதிரி ஒன்றை கொடுக்கிறார்கள். ஸ்டேஷன் உள்ளே போகவும் வெளியே வரவும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும்.
பிரயாணிகள் தவிர நிறைய சுற்றலா பயணிகளும் இதில் பயணிக்கிறார்கள்.
நம்ம ஊர் போல் பளபளவென்று டியூப் லைட் போட்டு வசந்தா/சங்கீதா/சரவண போன்ற சைவம் மற்றும் அசைவ உணவகங்கள் ரொம்ப ரொம்ப குறைவு.
நிறைய ரோட் சைட் கையேந்தி அசைவ பவன்கள்தான்.விதவிதமான அசைவ உணவுகள் ரொமப ஸ்டைலாக கொடுக்கிறார்கள்.மூலைக்கு மூலை நிறைய இனிப்பு பலகாரக் கடைகள். வித விதமான இனிப்புகள்.
பெங்காலிகள் நம்மூர் மசால்தோசையும்,வடையையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நான் சாப்பிட்டது மிஷ்டி தொய்,சந்தேஷ்,வர்த்தமான் வாழைப் பழம்,ரசகுல்லா,சிங்காரா,கச்சோரி,ராஜ்போக் மற்றும் பெயர் மறந்துபோன இனிப்புக்கள்.
அங்கு ஏதோ ஒரு தியேட்டரின் சினிமா போஸ்டர் சின்னதாக.உற்றுப் பார்த்தால் அதில் Seventh Sence morning show.
சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகள் கிடையாது. ரொமப அபூர்வமாகத்தான் தென்படுகிறது.கிரில் போட்டு இடைவெளி வழியாகத்தான் எல்லாம் சப்ளை. கியூவில் நிற்க வேண்டும்.
காளி கோவில் (பூசாரி) பண்டாக்கள் கையில் 500,100,50 கை விரல்களில் சொருகிக்கொண்டு,(இது பிச்சைகாரர்கள் டெக்னிக்.மினிமம் இவ்வளவுதான் ஏற்றுக்கொள்வோம் என்று காட்டுவது)கையை மேல் நோக்கி நீட்டியபடி கியூவில் வரும் பகதர்களுக்கு பூஜை மற்றும் தொட்டு ஆசிர்வாதம் செய்து பணம் வாங்கிக்கொள்கிறார்கள்.காளி நாக்கை வெளியே நீளமாக துருத்தியபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
காளியிடம் வேண்டியபடி நானும் நகர எனக்கும் நெற்றியில் குங்கும் இட்டு ஆசிர்வதித்து பணத்திற்காக உள்ளங்கையை பண்டா சொரண்டினார்.”காளிட்ட வாங்கிக்கோ என்றேன்” அதற்கு அவர் “கீ போல்சா” என்றார்.
அங்கு சங்கு ஊதும் ஒலி கேட்டால் காளி. நம்மூரில் காலி.
டோவர் லேன் மார்க்கெட் அருகே லெதர் பேக் (travel bag) விலை 650/- என்றார். நான் 325/- கேட்டேன்.கடைசியில் 350க்கு கொடுத்தார்.”ஆப் தமில் ஹை” பேக் செய்துக்கொண்டே கேட்டார்.பதிலுக்கு நான் "ஹான்”.
_________________________________________
சோகம்:
என் மைத்துனி (மனைவியின் தங்கை) கழுத்திற்கு கிழ் எந்த இயக்கமும் (அவ்வப்போது சுமாரான இயக்கம்) இல்லாமல் படுத்தப் படுக்கை.எல்லாம் படுக்கையில்தான்.சுவாசம் வெண்டிலேட்டர் மெஷின் வழியாகத்தான்.
கழுத்திற்கு மேல் எல்லாம் நார்மல்.பேசுகிறாள்.சாப்பிடுகிறாள். டிவி பார்க்கிறாள்.சிரிக்கிறாள்.எல்லோருடனும் கலந்து பேசுகிறாள்.எல்லாம் ஓகே.
ப்ளஸ் ஒன் படிக்கும் ஒரு பையன் மற்றும் கணவர் மொத்தம் மூன்று பேர்தான்.
1991ல் நடுமண்டையில் ஏற்பட்ட விபத்து(வாசல் நிலைப் படி இடித்து) சிகிச்சை எடுத்து 2005 வரை நன்றாக இருந்து மீண்டும் தடுக்கி விழுந்து கொல்கொத்தா மருத்துவமனை சிகிச்சையில் ஏதோ கோளாறாகி படுத்தப்படுக்கையாகிவிட்டாள்.
கொல்கத்தா துர்காவும் காளியும்தான் நம்பிக்கை.எங்கள் பிரார்த்தனை வீண் போகாது.

nichayama kappathuva.....
ReplyDeleteஅங்கு சங்கு ஊதும் ஒலி கேட்டால் காளி. நம்மூரில் காலி.
ReplyDelete-பிரமாதம். மிக நன்றாக இருக்குமென்று மிஷ்டிதொய் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. ஆஹா... டாஸ்மாக் கடைகள் அபூர்வமாகத் தான் தென்படுகிறதா... இதற்காகவே கல்கத்தாவுக்குக் குடிபோய் விடலாம் போலிருக்கிறதே... உங்கள் சிஸ்டர் இன் லா சீக்கிரமே மீண்டுவர நானும் அன்னை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்.
//பெங்காலிகளில் நிறைய(90%) மிடில் கிளாஸ் மாதவன்கள்?// :-))
ReplyDeleteபகிர்ந்துள்ள சோகம் வருத்தம். இறைவன் அருளால் சீக்கிரம் குணமாகட்டும்!
//கொல்கத்தா துர்காவும் காளியும்தான் நம்பிக்கை.எங்கள் பிரார்த்தனை வீண் போகாது.//
ReplyDeleteவிரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்...
http://anubhudhi.blogspot.com/
நன்றி வெற்றி
ReplyDeleteநன்றி கணேஷ்
மிடில் கிளாஸ் பெங்காலி மாதவிகளும்?
ReplyDeleteநன்றி மாதவி.
நன்றி சங்கர்குருசாமி
ரவி தாங்கள் மைத்துனியின் பெயர் தெரிவிக்கவில்லை இருந்தாலும் நாங்கள் அனைவரும் தங்கள் மைத்துனி கல்கத்தா காளியின் அருளினாலும் எங்களை போன்றவர்களின் வேண்டுதலும் ஏற்று விரைவில் குணமடைய எல்லாம் வல்ல திருப்பதி வேங்கடச்சலபத்யின் அருளினால் அதிவிரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்
ReplyDeletelicsundaramurthy@gmail.com
www.salemscooby.blogspot.com
நன்றி சுந்தரமூர்த்தி.
ReplyDeleteI will pray for your sister-in -law to get well very soon, Mr. Ravi,
ReplyDeleteSundar Raj.G ,Bangalore
I will pray for your sister-in -law to get well very soon, Mr. Ravi,
ReplyDeleteSundar Raj.G ,Bangalore