Thursday, December 5, 2013

நீயா நானா நீலம் ரகசிய ராத்திரி குரல் டைரி பலன்கள் இளையராஜா

வருடா வருடம்  உலகம் உருண்டு புதுபுது வருடம் வந்து முன்னேறினாலும் டைரிகளில்  இன்னும் சில அவசியமற்ற தகவல்களை சம்பிரதாயமாக பிரசுரிக்கிறார்கள்.அதுவும்  லோகல் இன்ஜினியரிங் கம்பெனிகளில்.

அவை: இண்டர்நேஷனல் பேப்பர் சைஸ்,பல நாட்டின் நேரங்கள், உஷ்ண நிலை,டயர் பிரஷர், பலநாட்டின் கரன்சி பெயர்கள்,விமான தூரங்கள்,மெட்ரிக் அளவு கன்வெர்ஷன்கள்,உணவுகளில் கலோரி கணக்கு,அமெரிக்க,பிரிட்டிஷ்,ஆஸ்திரேலிய கோட்/சர்ட்/பேண்ட்/ஷூ சைசுகள்.


தேவையா?

நல்லவேளை போஸ்டல் பின்கோடு,இன்காம்டாக்ஸ் ரேட்ஸ்,வாழ்த்து தந்தி விவரங்கள்,இன்லெண்ட் கவர்,கார்டு, ரிஜிஸ்டர்டு தபால் விவரங்கள்,ரோமன் நம்பர்கள் வேறு வழி இல்லாமல் தவிர்த்திருக்கிறார்கள்.




ஒரு சிறுகதை:  Guest Role


தன் பெயரை டைப் செய்தாலே நெட் முழுவதும் தன்னைப்பற்றிய செய்திகள் போட்டோக்கள் சினிமா ஸ்டில்கள் போட்டோக்கள் மீண்டும் சினிமா ஸ்டில்கள் குடும்ப போட்டோக்கள்.அதிலும் இவள்தான்.ரொம்ப அலுப்பாகவும் கூடவே திகட்டவும் செய்தது.

வித்தியாசமாக ஒன்றும் இல்லை முகத்தைச் சுருக்கினாள் இன்றைய சினிமா ரசிகர்களின் 22 வயது கனவுகன்னி.

நொந்துக் கொண்டே லேப்டாப்பை மடியிலிருந்து சரிக்கையில் குறுகுறுப்பாக ஒரு எண்ணம் மின்னல் போல் தோன்ற தன் பெயரையும் அதனுடன் சில ஆபாச சொற்களை சேர்த்து டைப் செய்தாள்.

கூகுள் அட்ரஸ்களை கொட்டியது.முதலில் அதிர்ந்து பிறகு ஆர்வத்துடன் கிளிக்கினாள்.கண்கள் விரிந்தது.வெட்கம் பிடுங்கித்தின்றது. சீ.... போ...புன்னகை கலந்த லஜ்ஜையுடன் முறைத்தாள்’.பச்சையான ஆபாச உடல் உறவு காட்சிப்படங்கள்.

எல்லாவற்றிலும் இவள்தான் கதாநாயகி.

மிகவும் கட்டுமஸ்தான எட்டு கருப்பு இளைஞர்களும் ஒரு வெள்ளை ஆணும்.அவன் பின் ஒரு கருப்பு டீன் வயது பெண். எல்லோரும் பச்சை நிர்வாணம்.இவர்களின் நடுவில் இவளும் நிர்வாணமாக படுத்திருந்தாள்.வேறு ஒரு மேல் நாட்டின் பெண்ணின் முகத்தில் தன் முகம் நேர்த்தியாக மார்ப் செய்யப்பட்டிருந்தது.

வெரி நைஸ்... குறுகுறுப்பு கலந்த லஜ்ஜையுடன் தொடர்ந்து பக்கங்களை பிரவுஸ் செய்ய ஆரம்பித்தாள்.

                                       முற்றும்

ராத்திரி நேரத்து ரகசிய குரல்:

கடந்த பத்து ஆண்டுகளாக  பல தமிழ்த் திரைப்பாடல்கள் டூயட்டோ சோலோவோ “பாப்” அல்லது ”கிளப்டான்ஸ்” பாடல்கள் போல் போதை கலந்த அல்லது ராத்திரி நேரத்து ரகசிய குரலில் பாடப்படுகிறது.ஆங்கிலத்தில் husky voice என்று சொல்லலாம்.இதை ஆரம்பித்து வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்? தொடர்பவர்கள் விஜய் ஆண்டனி,ஜிவி பிரகாஷ் மற்றும் பலர்.

தமிழ்ப்பட விதிகள்படி விரகதாபப் பாடலுக்குத்தான் இப்படிப் பாடுவார்கள்.வி.தாபம் இல்லாமலேயே நிறைய பாடல்கள் வருகிறது.

உதாரணம் 1. காக்க காக்க “ தூது வருமா”  2. உன்னாலே உன்னாலே “ஜூன் போனால் ஜுலை” 3. காதலி விழுந்தேன் “உன் தலை முடி உதிர்வதை இப்போது லேட்டஸ்ட்டாக 4. என்றென்றும் புன்னகை ”கடல் நான் தான்”

தூது வருமா

ஜூன் போனால்

உன் தலைமுடி

கடல் நான்தான்

இளையராஜாவின் நீஎபொ  “சாய்ந்து” “ சற்று முன்பு” “முதல் முறை” பாடல்களை ராத்திரி நேரத்து ரகசிய குரலுக்கு மாற்றிவிட்டார்.”அந்தப்புரத்தில் ஒரு மகாராணி அவன் அன்புக்கரங்களில்” என்கிற ரேன்ஞக்கெல்லாம் பாடமுடியாது.

ஏன்?


கதாநாயகன் - நாயகிகள் மாறிவிட்டார்கள்.உடைகள் மாறிவிட்டது.புடவை ஜாக்கெட் இல்லை.தலைவாரி பின்னல் இல்லை பொட்டு இல்லை. நாயகன் கடுக்கன்போட்டு தலைமுடியில் சாயம் அடித்து எண்ணெய் அப்பி குச்சிகுச்சியாய் நிற்கவைத்தபடி தோன்றுகிறான்.திருமணத்தில் தாலிகட்டும் நேரத்தில் மட்டும் புடவை-வேஷ்டி.மொததத்தில் சினிமா மாறிவிட்டது.அதனால் டிரெண்ட் மாறிவிட்டது.

 கிழே சேட் ரேவதிதான் இப்போதைய கதாநாயகி பேஷன் டிரெண்ட்

ஆனால் அவ்வப்போது ரகசிய குரல் இல்லாமுலும் பாடுகிறார்கள்.

இளையராஜாவும் ஆத்மாவும்

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....பூத்திருச்சு  வெட்கத்தவிட்டு...

ஹாப்பி

”பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....வாடுதடி வாசனை கெட்டு..
ரொம்ப சேட்(தேங்க்ஸ் த்ரிஷா)
இது சோகத்தில் பாடும் பாட்டு (மண்வாசனை).மகிழ்ச்சியான தருணத்தை அப்படியே உல்டாவாக சோகமாக்க வேண்டும்.

ஆக்கிவிட்டார். ஆனால் இதில் என்ன ஸ்பெஷல்? 

உதாரணமா பாண்டியன் ரேவதியை கயிற்றில் இழுப்பது (0.18-0.33) எப்படி சோகமாக இசைக்கப்படுகிறது.0.18-0.28 வரை பெரிய  விஷயம் இல்லை.


 0.29-0.33ல்  ஒரு வித்தியாசமான உணர்ச்சி உந்தப்படுகிறது. இது தமிழ்சினிமாவிற்கு புதுசு.




தலைமுறை இடை.............................வெளி் (generation......gap):

01-12-13  விஜய் டிவி நீயா நானாவில் “ எழுபதுகளின் (1970)  திரைஇசையை இப்போதைய இளையதலைமுறையுடன் பகிர்தல்”.ஒரு பக்கம்  அந்தக்கால இசைப்பிரியர்கள்.பிரியைகளே கிடையாது. மறுபக்கம் நவீன இசைப்பிரி(யை)யர்கள்..

 நாங்க டி எம் எஸ் மட்டும்தான்

கோட் கோபிநாத்தும் இவர்களுடன்(70) இடைவெளி இருந்தது.இசை  ஜாம்பவான் ஜி.ராமநாதன்பற்றிக் குறிப்பிடவே இல்லை.

இரண்டாம் உலகம் படம் ரெண்டாவது தடவை போயிருக்கலாமோ?

மூத்த குடிமகன்கள் இவர்களுக்காகவே போட்டுவைத்த நீண்டகால வைப்பு நிதி மாதிரியான  டி எம் எஸ் பாடல்களைப் பாடினார்கள்.பெண்குரல் பாடல்கள் 99% இல்லை.இவர்களே நிறைய நேரம் பாடிக்கொண்டிருந்தார்கள்.

கேட்ட நவீன இசைப்பிரியர்களிடம் விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகபாவம்.மயான அமைதி.இன்னும் கேப் ஜாஸ்தியாயிற்று.திடீரென்று ஒரு  பெண் “ நான் பார்த்ததிலே உன்” பாடலைப் பாடி போர்ரைக் குறைத்தார்.ஆறுதலாக இருந்தது.இன்னொரு பெண்ணும் “ இலந்தபயம்” பாடலைப் பாடி அசத்தினார்.

அந்தக்கால சுதர்சன்,கோவர்தன்,சலபதிராவ்,குமார்,விஜயபாஸ்கர்,
சங்கர்-கணேஷ்,எஸ்.தக்‌ஷிணாமூர்த்தி  பாடல்களைப் பற்றி அந்தக்கால இசைப்பிரியர்கள் ஏன் பாடவில்லை. 

இவர்களுக்கும் இந்தக்கால இசையைப்பற்றி தெரியவில்லை. தெரிந்துக்கொள்ளவும் ஆர்வம் இல்லை.எப்போதுமே எந்தக்காலத்திலுமே தலைமுறை இடைவெளி இருந்துக்கொண்டேதான் இருக்கும்.இல்லாவிட்டால் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது.

இப்போதைய தலைமுறை இவர்கள் மாதிரி இருந்தால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

ஹைலைட்: 
கோவை முரளி
மூச்சு விடாமல் பாடுவதை(அம்பிகாவதி-1957) படத்தில் வரும் “வடிவேலும் மயிலும் துணை”) பற்றி டி எம் எஸ் சொன்னதாக இவர் சொன்னது: 

“மூச்சு பிடிச்செல்லாம் பாடல.தமிழ்ல நமக்கு சில வசதிகள் இருக்கு. ச், ப் த், ன், ட், க்  இதிலெல்லாம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்படியே ஜெர்க் பண்ணி போயிடலாம்”

மூச்சு விடாம நான் பாடலீங்க..பின்னாடி(playback)தான் டி எம் எஸ் பாடி அசத்திட்டாரு

 அந்தப்பாடல்:







2 comments:

  1. வணக்கம்
    பதிவை அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!