Thursday, October 31, 2013

பொறியியல் படிப்பு,கேங் ரேப்,மாணிக்கம்,மாராப்பு

பொறியியல் கல்லூரிகள் மொபைல் ரீசார்ஜ் பொட்டிக்கடைகள் போல திறந்து வைத்துக்கொண்டு பொறியியல் பட்டத்தை சுண்டல் கொடுப்பது போல கொடுக்கிறது.இதனால் நல்ல(???) நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளும் பாதிக்கப்படுகிறது.கட்டுக்கட்டாக பணமும் மெரிட்டும் கலந்து கல்வி வியாபாரம் ஆகி பலவருடம் ஆகிவிட்டது.

மேலே பழைய கதை.புது கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


விளைவு சப்ளை (இன்ஜினியர்கள்)அதிகமாகி தரம் குறைந்து டிமாண்ட்(வேலை)குறைந்துவிட்டது.பி.இ. வெறும் ”பீ” அல்லது அந்தக்கால பி.ஏ.ஆகிவிட்டது.

இப்போது பி.இ.படித்தவர்கள் ரயில்வே-வங்கி-பிபிஓ கிளார்க் வேலைக்கெல்லாம் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.காரணம் வேலைக்கிடைப்பதில்லை.அடி வயிறைக் கலக்கும் படிப்புக் கடனை வேறு அடைக்கவேண்டும்.கிராமம் சார்ந்த பி இ க்கள் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தரம் பாதிக்கப்பட்டதால் பிளேஸ்மெண்ட் கம்பெனிகள் பலவித டெஸ்ட் வைத்துதான் வடிகட்டி எடுக்கிறார்கள்.ஆங்கிலமீடியமே தடுமாறுகிறது.இதில் தமிழ்மீடியம் வேறு.கொடுமைடா சாமி...!

கடுமையான போட்டியில் மீண்டு எப்படி ஜெயிப்பது?இதுதான் இப்போதைய  நிதர்சனம் அல்லது  யதார்த்தம் அல்லது ground reality. கருப்பு எழுத்தில் இருப்பவைகள செய்தே ஆக வேண்டும்.இது வழக்கமான பரம்பரை பரம்பரையான பெரிசு புலம்பல் இல்லை.பின்னால் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.

1.படிக்கும்போதே சைட்பை சைட் தன் பிரிவுக்குண்டான (EEE,MECH,CSE,E&I,ECE etc.,etc.,) (job skill) விவரங்களைத் தெரிந்துகொள்வது

2.கடைசி வருடத்தில் தான் படிக்கும் பிரிவின் வேலையை தினமும் செய்வது மாதிரி அணுகி கற்றுக்கொள்வது.


3.CommnicationSkill(verbal/writing),Aptitudeசத்தியமாக
வளர்த்துக்கொள்ளவேண்டும் பிளேஸ்மெண்ட்டில் தடுமாற்றம் இருக்காது.செல்,பேஸ்புக்,டிவிட்டர்,பிளாக்கில் எழுதும் கொத்துபரோட்டா எழுத்துவகைகள் எங்கும் உதவாது.பள்ளி, கல்லூரியின் சுகமான நினைவுகளாக மனதில் இருத்திக்கொண்டு மறந்துவிட வேண்டும்.

இந்தத் திறமையை எல்லாம் சொல்லிக்கொடுக்க கம்பெனிக்கு ஆளும் இல்லை நேரமும் இல்லை.

4.நாலாவது வருடம் எந்தவித அரியர்ஸ் இல்லாமல் முதல் இருபது இடத்தில் இருப்பது.

5.ஒவ்வொரு வருடமும் படிக்கும் பிரிவின் வேலை டிரெண்ட் எப்படி போகிறது என்று கவனிக்க வேண்டும்.

5.வேலைக்கு சேர்ந்த பிறகோ அல்லது முன்னமோ சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதுகலை அல்லது எம்பிஏ படிப்பது.இதுஅடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவிப்போக முடியும்.
_________________________________________________சரி ஜே ஜே  மாணிக்கத்திற்கு வருவோம்.யார் இவர்?திரைப்பட ஒலிப்பதிவாளர்.சவுண்ட் இன்ஜினியர்.

இவர் பெயரை  முக்கால்வாசி சினிமா டைட்டில்களில் கிட்டத்தட்ட 50 வருடமாக பார்த்து வந்திருக்கிறேன். 1990-95க்கு பிறகு அவ்வளவாக காணப்படுவதில்லை. இவர் தனி ஒரு ஆளாக கொடிக்கட்டி பறந்திருக்கிறார்.அப்போது இந்தத் துறையில் ஆட்கள் குறைவா?

இவர் பி.இ. சவுண்ட் இன் ஜினியரிங்?_________________________________________________


மெய்நிகர் ஆடை வெள்ளோட்ட அறை(virtual trial dressing room)சென்னையில் சில ரெடிமேட் கடைகள் வாங்கும் துணி அளவு சரியாக இருக்கிறதா என்று அணிந்துப் பார்க்க  அனுமதிக்கிறார்கள்.அதுவும் ஒரு கடையில் கொத்துகொத்தாக trial room எடுத்துக்கொண்டுபோய் சரிபார்க்கலாம்.வெளியே வரும் போது வதங்கி கசங்கி சுருங்கி gang raped லெவலுக்கு வரும்.பிடிக்கவிட்டால் மடித்துவைக்கப்படுகிறது.

அடுத்த  கஸ்டமர் அதை  வதங்கி கசங்கி சுருங்கி gang rape..........வெள்ளாவியில் வேகவைத்து  ரின் - சர்ப்- நிர்மா-பொன்வண்டு சோப்பில் தோய்த்து பிறகு அணிந்துகொள்வது  நலம்.ஆனால் நான் எதுவும் செய்யாமல்தான் அணிந்துக்கொள்கிறேன்.

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?

 _________________________________________________

மவனே .... அடி  பின்றண்டா இன்னிக்கு....!

ரொம்ப நாளைக்கு  பிறகு  நான் பார்க்கும் உள்ளே ஒரு  killer instinct (வெறி) டோடு விளையாடும் வீரர் விராட் கோலி.பீமன் போல் கடாயுதத்தை (மட்டையை) சுற்றியபடி பந்தை துவம்சம் செய்து  ரன் அடித்துக்குவிக்க எப்போதும் முனையும் போக்கு. இப்படி இல்லாமல் சாதாரண மூடுக்கும் வருவார். மேற்கந்திய தீவுகள் அணியில் இப்படி ஒரு காலத்தில் பெளலிங் செய்வார்கள்.

dashing batsman.
 _________________________________________________

முந்தானை... மாராப்பு...பல்லு...!

இனிமேதான் கட்டிக்கபோறாங்க

புடவை அழகு பாஷன் போட்டிகளில் புடவை அணிந்து நடந்து நடந்து நடந்து போவார்கள்.ஆனால் பாதி போட்டிகளில் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு புடவைக்குப் பதிலாக வேறு எதையோ  பாஷனாக காட்டியவாறு புடவையின் மகத்துவத்தையே கலைப்பார்கள்.அச்சுபிச்சுத்தனமாக சுற்றிக்கொண்டு ”பேஷனாக” நடப்பார்கள்.நடுவர்கள் நோக்கர்கள் கிழே குழியில் உட்கார்ந்தவாறு கலைக்கண்ணுடன் நோக்குவார்கள். மார்க் போடுவார்கள்.

இதெல்லாம் பல வருடமாக நடந்து வருகிறது.இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை இது அவர்களின் பிசினஸ் நுணுக்கம்-அணுகுமுறை-ரூல்...


இவங்க கச்சிதமா கவர்ச்சியா இருக்காங்க.எல்லாம் மூடி இருக்கிற இந்த பேஷன் புடிச்சிருக்கு.
இவங்க  புடவையை அணிந்து இருக்காங்க

ஏம்பா... அதுக்காக இழுத்துபோர்த்திக்கொண்டு “மணமகளே மணமகளே வா.... வா’ ன்னு நடக்க முடியுமா.ஹல்லோ.... இது பேசன் சோப்பா....! ஊர் நாட்டானா இருக்க.

1 comment:

  1. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!